கடிதம் மூன்று

NIT பாலிடெக்னிக் நண்பர்களே,
உங்களிடம் ஒரு கசப்பான உண்மையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். அது நம்முடன், ஆண்டு மெக்கானிகல் துறையில் படித்த நண்பன் ரங்கராஜன், தற்சமயம் மனநிலை பாதிக்கபட்டிருகிறார் என்பதுதான். நாம் அடிக்கடி சந்தித்துகொள்ளும்போது பேசுகிற விஷயம் " பரவாயில்லைடா மச்சான், நம்ம எல்லா நண்பர்களும் நல்ல வேலை, நல்ல சம்பளம்ன்னு ஓரளவுக்கு செட்டில் ஆகிட்டாங்க" என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இப்படி ஒருத்தன் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்ப்பான் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம். அவன் இரண்டு வருடங்களாக இந்த நிலையிலேயே இருந்திருக்கிறான் என்று நம் யாருக்குமே தெரியாமல் போனது, மிகவும் துரதிஷ்டமானது.

நாங்கள் அவன் பற்றி கடைசியாக அறிந்த செய்தி, அவன் படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக மலேசியா சென்றிருக்கிறான் என்பதுதான். அவனுடைய தற்சமய நிலைமை தெரியவரும் வரை, எங்கள் அனைவரின் நினைவும், இன்னமும் அவன் அங்கேயே இருக்கிறான் என்பதுதான். அங்கே அவனுக்கு என்ன நடந்தது என்பது இன்னமும் புதிராகவே இருக்கிறது. அவனுடைய இந்த நிலைமைக்கு குடும்ப சிக்கல்கள் ஏதும் காரணமா? அல்லது போதை சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு காரணமா? என்பது இன்னமும் சரிவர பிடிபடவில்லை. ஆனால் அவனுடன் மலேசியா சென்ற இன்னொரு நபரும் இதே போன்ற நிலையில் இருக்கிறார் என்பதுதான், அவர்களுக்கு அங்கே எதோ நடந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. தற்சமயம் அந்த மற்றொரு நபர் சரியான சிகிச்சைக்கு பிறகு நலமாக இருக்கிறார் என்பதை அவரை சந்தித்து பேசி தெரிந்துகொண்டோம். இதில் சொன்ன சில விஷயங்கள் கூட அவர்களின் உரையாடல்களில் பகிர்ந்துகொள்ள பட்டவைதான்.

நண்பரின் குடும்பத்தில் அவனுக்கு சிகிச்சை செய்யும் அளவிற்கு பொருளாதார நிலைமை இல்லை மற்றும் நண்பரின் ஒத்துழைப்பு இல்லாததாலும் இதுவரை சிகிச்சை செய்யாமல் இருந்திருக்கின்றனர். இப்பொழுது கல்லூரி நண்பர்கள் முன்வந்து அவரது சிகிச்சைக்கு செலவு செய்ய முற்ப்பட்டது அவர்களுக்கு மிக்கவும்மகிழ்ச்சி.

அவனுடைய மருத்துவ சிகிச்சைக்கு தேவையான எல்லா ஏற்ப்பாடுகளையும் செய்தாகி விட்டடது இப்போதைய தேவை கொஞ்சம் பணம். அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள சிகிச்சைக்கான காலம் மூன்று மாதங்கள். ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் வீதம், மூன்று மாதங்களுக்கு ரூ.45,000.00 - மும் பதிவுதொகை ரூ.10,000.00-மும் உடனடியாக தேவை படுகிறது. மொத்தமாக ரூ. 65,000.00 முதல் ரூ.75,000.00 வரை செலவுபிடிக்கும் என்பது தெரிகிறது. முதற்கட்டமாக ரூ. 25,000.00 சேகரிக்கப்பட்டுள்ளது மீதமுள்ள தொகையை வரும் பிப்ரவரி இறுதிக்குள் சேகரிக்கவேண்டும்.
எனவே தங்களால் முடிந்தவரை பொருளுதவி செய்யுமாறு கேட்டுகொள்கிறோம். நண்பன் என்ற உரிமையில் எந்த முன்னறிவிப்புமின்றி வந்ததற்காக மன்னிக்கவும். எது எப்படியோ அவனுக்கு தேவை நல்ல உறக்கமும், உணவும், சிகிச்சையும் அதை இப்போதைக்கு கொடுப்போம் பிறகு என்ன தேவையோ அதையும் கொடுக்க முயற்சி செய்வோம். நண்பா! நீ விரைவில் குணமடைய எங்கள் அனைவரின் வாழ்த்துகளும் பிராத்தனைகளையும் உரித்தாக்குகிறோம். விரைவில் உன்னையும் எங்களோடு சக மனிதராக சமுதாயமா அடையாளம் காண வேண்டும் என்பதுதான் எங்கள் அனைவரின் விருப்பம். பிராத்திக்கும் உதடுகளைவிட சேவை செய்யும் கரங்களே சிறந்தது, இதை உண்மையாக்க உங்கள் அனைவரின் கரங்களும் வேண்டும்.
நண்பர்கள்,
NIT பாலிடெக்னிக்
கருமத்தம்பட்டி.

0 கருத்துரைகள்:

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.