ஜெய் ஹோ!

இயல்பாக தான் விடிந்தது நேற்றும், அப்பா, எப்போதும் போல கையில் காபியுடன் பேப்பர் படித்து கொண்டிருந்தார். அம்மா காய்கறி நறுக்கி கொண்டிருந்தார்கள். என்னடா இவ்வளோ சீக்கிரம் முழிசிட்ட? தூங்கலையா? நைட்டு லேட்டதான வந்த, பேசாம தூங்க வேண்டியதுதானே என்கிற தினசரி அர்ச்சனைகளோடு வெகு சாதாரணமாகத்தான் விடிந்தது நேற்றும். இரண்டாவது ஆட்டம் சினிமாவிற்கு சென்று சென்ற வந்த களைப்பிலும் ஆறுமணிக்கு டிவி முன்பாக அமர்ந்து விட்டேன். ஆஸ்கார் விருது வழங்கும் விழா.

ஒவ்வொரு விருதாக வழங்கப்பட்டு வருகிறது சிறந்த ஒலி கலவைக்கான (Sound Mixing) இறுதிகட்ட போட்டியாளர்களில் ஒருவர் ரசூல் பூக்குட்டி (இந்த மலையாளிகள்தான் எவ்வளவு அழகான பெயர்களை சூட்டிகொள்கிறார்கள் - நன்றி எஸ்.ராமகிருஷ்ணன்). மற்றபோட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் போது எனக்கு சற்று பயம் வந்தது உண்மை. ஏனெனில் WALL-E படத்திற்கான ஒலிசேர்க்கை உண்மையிலேயே மிகவும் அமைந்திருந்தது. அந்த குட்டி ரோபோட்டின்ஒவ்வொரு அசைவுகளுக்கும் பிரமாதமாக ஒலியமைத்திருப்பார்கள். அதே போல THE DARK KNIGHT படத்திலும் பின்னணி இசையில் மிரட்டி எடுத்திருப்பார்கள். என்னை கேட்டால் எனக்கு THE DARK KNIGHT படத்தில் மிகவும் பிடித்த விஷயம் அதன் மிரட்டும் இசைத்தான். அதற்க்கு பிறகுதான் மற்ற அனைத்துமே என்பேன். ஆக இந்த இரண்டு படங்களுமே எங்கள் பூக்குட்டியுடன் போட்டிக்கு நின்று கொண்டிருந்தபோது எனக்கு சற்று பயம் வந்தது உண்மை. ஆனால் யார் ஜெயித்தார்கள் என்று சொன்னபோது என்னால் அந்த நிமிடத்தை நம்ப முடியவில்லை. மேடைக்கு வந்து மூச்சிரைக்க நின்று பிறகு ஆசுவாசப்படுத்திக்கொண்டு கண்ணில் நீரோடு ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அங்கே ஆயிரம் ஆயிரம் வசதிகளும் புது புது தொழில்நுட்பங்களும் வந்து விட்டன. அவர்கள் இதைசெய்வதை விட இந்த வசதிகள் இல்லாமலேயே இதை சாதித்து காட்டிய எங்கள் ரசூல் பூக்குட்டி அவர்களே, இத்துணை வருட இந்தியகன்வை மெய்ப்பித்த உனக்கல்லவா நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். நன்றி ரசூல் பூக்குட்டி அவர்களே. உங்கள் பயணம் தொடரட்டும்.ஒருசமயம் நண்பர் சிவாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது "ஆஸ்கார் விருது, தற்சமயம் கமர்ஷியல் ஆகிவிட்டது. சின்ன ஆஸ்கார் என்கிற கோல்டன் குலோப் விருதுதான் தற்ச்சமயம் மிகவும் கௌரவமான விருதாக கருதப்படுகிறது" என்று சொன்னார். கோல்டன் குலோப் விருது மிகவும் பெருமைக்குரிய விசயம்தான் ஆனால் ஆஸ்கார் என்பது கமர்ஷியல் ஆகிவிட்டது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அதுபற்றி நான் எதுவும் விவாதம் செய்யவில்லை. இதை ஏதற்காக சொல்கிறேன் என்றால், நேற்று ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஒவ்வொரு துறையின் இறுதி பட்டியலுக்கு தெரிவு செய்யபட்டிருந்த படங்கள் நான் நினைத்தது சரிதான் என்று ஊர்ஜிதப்படுத்தியது. தி குயுரியஷ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன், மில்க், தி ரீடர் மற்றும் ப்ரோச்ட்/நிக்ஸ்ன் இதில் பிரோஷ்ட் /நிக்ஸ்ன் தவிர மாற்ற படங்களை பார்த்துவிட்டேன். நியாயமான சிபாரிசுகள்தான். நிச்சயம் ஆஸ்கார் விருதுக்கு தகுதியுள்ள படங்கள்தான்.ஏ. ஆர் . ரஹ்மான் - ஜீனியஸ், மொசார்ட் ஆப் மெட்ராஸ், இசைப்புயல், லிட்டில் மாஸ்டர் இன்னும் என்ன வேணும்னாலும் சொல்லுங்க. முதலில் ரஹ்மான் ஒரு நல்ல மனிதர். அமைதியானவர். நிரம்ப தன்னடக்கம் கொண்டவர்,எனக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு, வெற்றியடைந்தவர்கள் பற்றற்று இருக்கிறார்களா? அல்லது பற்றற்றிருப்பவர்களை வெற்றி வந்தடைகிறதா என்று. விருது வாங்கியவுடன் அவர் பேசியவிதம் நிச்சயம் அவரின் இசை பிடிக்காதவரிகளிடமும் அவரை கொண்டு சேர்த்திருக்கும். i'm nothing but i have mother. "நான் ஒன்றும் இல்லை எனக்கு அம்மா இல்லாவிட்டால்" எவ்வளவு அழகான நன்றியுரை. நான் கடவுள் படம் பார்த்ததற்கு பிறகு ரஹ்மான் பேச்சை கேட்டவுடன், நான் எந்த குறையும் இல்லாமல் பிறந்ததையும் ஒரு நல்ல பெற்றோர் அமைந்ததையும் மீண்டும் நினைத்துபார்கிறேன். எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும்விதமாக நூறு கோடி இந்தியர்களின் ஆஸ்கர் கனவை மெய்பித்த ரஹ்மான் அழகாக தமிழில் பேசியது, அப்படியே சிலிர்க்க வைத்து விட்டது. எவாளவு ஆசை பட்டிருப்போம், எவ்வளவு பெரிய மேடை, திரை உலகின் அனைத்து ஜாம்பவான்களும் அமர்ந்திருக்கும் மேடை அங்கே தமிழை கேட்டபது என்பது எவ்வளவு அறிய விஷயம். அதை அழகாக அமைதியாக செய்து காட்டியிருக்கும் ரஹ்மான். அற்புதம்.


நான் எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை, மாறாக என்னால் முடிந்தவரை நல்ல இசையை கொடுக்குகவே முயற்சி செய்கிறேன். என்கிற ரஹ்மான், எனது இந்த வெற்றியை இந்தியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்கிற ரசூல் பூக்குட்டி, ஜெய் ஹோ பாடலை எழுதி ஆஸ்கார் பெற்றிருக்கும் கவிஞர் குல்சார், என ஆஸ்கார் விருதுபட்டியலில் இந்திய கணக்கை துவங்கி வைத்திருக்கும் இவர்கள் மூவருக்கும் நாம் அவசியம் நமது நன்றிகளை உரித்தாக்க வேண்டும்.


கொண்டாட்டம் என்பதை நாம் பெரும்பாலும் மறந்தே போய்விட்டோம். .
நாம் நிச்சயம் கொண்டாட வேண்டிய நல்ல தருணம் இது. நாம் எதை எதையோ கொண்டாட்டம் என்கிற பெயரில் செய்துகொண்டிருக்கும்போது இது நாம் நிச்சயம் கொண்டாட வேண்டிய நல்ல தருணம். 81 வருட ஆஸ்கார் சரித்திரத்தில் அந்த மேடையில் ஒலித்த முதல் தமில்குரலுக்காக கொண்டாடுங்கள். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று விருதுகளை ஒரு நேரத்தில் பெற்று சினிமாவில் இந்தியாவின் ஆளுமையை நிருபித்ததற்காக கொண்டாடுங்கள். ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!

4 கருத்துரைகள்:

peri said...

Nice writings budddy..you are right..after Naan-kadavul nothing seems great than having a healthy life..which no body other than out parents are to be thanked.

And yes..even I was really happy to the extreme when Rahman says in Tamil - ella pugalum iraivanukae -
You are 100% right..Iam not a agreat fan of Rahman's music...but yes his down-to-earth, humbleness and greatfullness moved me.

Nice writing sir !!!

Karthikeyan G said...

//i'm nothing but i have mother//

I THINK HE SAID AS "I have nothing but my mother"

Murali said...

really? if it is right, please confirm it for me. i will edit in my blog. and i am really sorry for this mistake. thank you karthi

where are u from?

Karthikeyan G said...

Yes . He said so.. (Googled to confirm this) :)

I m from Kangayam, Currently in Chennai.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.