கட்டிபிடி வைத்தியம்

இங்க்லீஷ் காரன் நமக்கு கற்று கொடுத்த சில பல நல்ல விசயங்களில் நான் உண்மையிலேயே நல்ல விஷயம் என்று நினைப்பதில் ஒன்று நன்றி சொல்வது (THANKS GIVING). நான் சில பல இடங்களில் இந்த நன்றி சொல்லுதல் என்பதை உபயோகப்படுத்தி இருக்கிறேன், இருப்பேன். அதன் பலனை கூட அநேக முறை அனுபவித்தது உண்டு. சும்மா நாளை காலை அம்மா அல்லது மனைவி காபி கொடுக்கும்போது தேங்க்யூ என்று சொல்லிபாருங்கள். வேண்டாம் சொல்லுங்கள், அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை நாம் ஆராயத்தேவயில்லை. எதிர்பார்ப்பு இல்லாமல் சொல்லிகொள்வதில்தானே இந்த நன்றிகளின் அர்த்தமே இருக்கிறது. பல நேரங்களில் நல்ல காபி கிடைக்கும்போது அதை பாராட்ட தவறிவிடுகிறோம். காபியில் சர்க்கரை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்துவிட்டால் அதை ஒரு குறையாக சொல்வதைவிட நல்ல காபி கிடைக்கும்போது அதை பாராட்டி பாருங்கள்.

வசூல்ராஜா படத்தில் கமல் ஒரு மருத்துவமனையை சுத்தம் செய்யும் தொழிலாளியை கட்டிபிடித்து "நீ செய்யும் வேலைக்கு தனியாக நேரம் ஒதுக்கி உன்னை யாரும் பாராட்ட மாட்டார்கள். நேரம் கிடைக்கும்போது நாமதான் இப்படி" என்று சொல்லி அவரை கட்டிபிடித்து பாராட்டுவார். அதை தொடர்ந்து அந்த தொழிலாளியின் மனமாறுதலையும் காட்டியிருப்பார்கள். அருமை. படத்தில் பார்த்த காட்சி அப்படியே நடந்தாக வேண்டுமெண்டு எந்த அவசியமுமில்லை. ஆனால் அத்தகைய சிறிய பாராட்டுகளை நாம் பரிமாறிகொண்டேதான் இருக்க வேண்டும். அதற்கான அவசியம் நிச்சயம் உண்டு. என்னுடைய அப்பா அடிக்கடி சொல்லுவார். "உன்னால் செய்ய முடியாததை செய்கிற எவரும் உன்னைவிட ஒருவகையில் உயர்ந்தர்வர்தான். ஆக உன்னால் முடிந்தவரை அவருக்குரிய மரியாதையை கொடு, முடிந்தால் அவர்களை பாராட்டி பேசு.இதனால் உனக்கு என்ன லாபம் என்பதைவிட உனக்கு என்ன கேடு வந்துவிடபோகிறது" என்று. அவர் எனக்கு சொல்லி கொடுத்த எல்லா விசயங்களும் மிகவும் சரியானதாகவே இருந்திருக்கிறது. ஆனால் என்னுடைய ஒவ்வொரு வயதிலும் நான் தான் அதன் கருத்தைஒவ்வொருமாதிரியாக மாதிரியாக புரிந்திருக்கிறேன்.ஏற்க்கனவே ஒருமுறை புத்தகத்தில் படித்தலிருந்து பழகும் யாரிடமும் அவர்களின் பெயர்களை சொல்லி அழைப்பதையே தொடர்ந்து வருகிறேன். முன்பே இதை பற்றி எழுதியிருக்கிறேன், முதலில் பெயரை சொல்லி அதன் பிறகு அவர்களின் உறவுகளையோ (முரளி அண்ணா, சேகர் மாமா) அல்லது நம்மை விட பொருளாதாரத்தில் குறைந்த, நமக்கு சேவகம் செய்கிறவர்களை உரிமையுடன் பெயர்சொல்லி அழைக்கும்போது அவர்களுக்கு அதில் ஓரி சிறிய சந்தோசம் கிடைக்கும். சம்பளம் கொடுப்பது என்பது எல்லோரும் செய்யக்கூடியதுதான், அதை கொடுக்கும்போது ஒரு சிறிய புன்னகையுடன் கொடுப்பதைபோல நம்மால் முடிந்தவரை மற்றவர்களிடம் சிறிய சிறிய சந்தோசங்களை பரிமாறிக்கொண்டே இருக்க வேண்டும்.

நான் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை சின்ன சின்ன சந்தோசங்களின் தோரணம்தான் வாழ்க்கை. இந்த வினாடியின் ஒற்றை சிரிப்புதான் உன்னை அடுத்த வினாடிக்கு ஆயத்தமாக்குகிறது. நான் இந்த பதிவை எழுதுவதற்கு கூட அதுபோன்ற சில காரணம்தான். ஒன்று நேற்று எங்களால் பணம் கொடுக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நண்பனை பார்க்க மருத்துவமனைக்கு சென்றிருந்தேன் அங்கே அந்த மருத்துவர் எங்களை மிகவும் பாராட்டினார். உண்மையிலேயே மிகவும் நல்ல விசயத்தை செய்துகொண்டிருக்கிறீர்கள், உங்களுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள், நீங்களும் உங்களது குடும்பமும் நலமாக அமைதியாக வாழ எனது வாழ்த்துகள் என்று சொன்னார். முதுகு தண்டு சில்லென்று ஆகி ஒரு நிமிடம் பறப்பதை போல உணர்ந்தேன். சரி நானும் இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்க இன்னொரு காரணம் கிடைத்து விட்டது. நான் அந்த அளவிற்கு சந்தோசப்பட்டேன், அவரின் அந்த ஓரிரு வார்த்தைக்காக.


இன்னொன்று நேற்று என்னுடைய பதிவை படித்து விட்டு (அனேகமாக அனைத்து பதிவையும் ) உடனே தொலைபேசியில் அழைத்து என்னை பாராட்டிய நண்பர் செல்வம். நான் இவ்வாறு ஒரு பதிவு எழுத தொடங்கியிருக்கிறேன், அதை படித்து விட்டு உங்களின் கருத்துகளை தெரிவியுங்கள் உங்களுடைய விமர்சங்கள் என்னை தொடர்ந்து எழுத செய்யும் உற்சாகத்தை கொடுக்கும் என்று என்னுடைய பல நண்பர்களுக்கு தெரிவித்திருந்தேன். இதுவரை அவர்கள் ஒரு பதிவையாவது படித்திருபார்களா என்பது சந்தேகம்தான். அப்படியிருக்க எதேட்ச்யாக எனது பதிவை படித்து உடனே கருத்தும் கொடுத்த நண்பர் செல்வத்திற்கு நன்றி. கட்டி அணைப்போம் சக மனிதர்களை, பாராட்டுவோம் அவர்களின் நற்செயலுக்காக, மன்னிப்போம் அவர்களின் தவறுகளை, நன்றி சொல்வோம் அவர்களின் உதவிக்காக. ஒவ்வொரு நொடிக்காகவும் வாழ பழகுங்கள், எனென்றால் வாழ்க்கை அவ்வளவு அழகானது.

6 கருத்துரைகள்:

RAJ said...

திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து... என்று அடிக்கடி புலம்புகிறீர்களா?

கவலையே வேண்டாம். இந்த சின்ன ட்ரீட்மென்ட் மட்டும் போதும். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு!

அது என்ன ட்ரீட்மென்ட்? கட்டிப்பிடி வைத்தியம் தாங்க அது.

“ CLICK “ அட கட்டிபிடி கட்டிபிடிடா. ‘கட்டிப்பிடி வைத்தியம்’ திருமணம் ஆனவர்களுக்கு மட்டும்..... “CLICK”

Cable Sankar said...

சின்ன சின்ன சந்தோசங்களின் தோரணம்தான் வாழ்க்கை.

மிக அற்புதமான வரிகள் முரளி.. அருமையான் பதிவு.

Murali said...

நன்றி சங்கர், உங்களுடைய பாராட்டு எனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுக்கிறது. ஏதோ எழுதுகிறேன் என்று நினைத்துதான் எழுதுவேன். உங்களை போன்ற சக பதிவர்களின் பாராட்டுகள்தான் உருபடியாகத்தான் எழுதுகிறேன் என்று நினைக்கவைக்கிறது. நன்றி

ரங்கன் said...

எனக்கு இந்த பதிவு மிகவும் பிடித்திருந்தது.

மேலும் தொடருங்கள்.
வாழ்த்துக்கள்.

Murali said...

நன்றி ரங்கன்,
நிச்சயம் தொடர்கிறேன் உங்களின் நட்புடன். தொடந்து படியுங்கள் விமர்சங்களை எழுதுங்கள். புதிதாக எழுத தொடங்கியிருக்கும் எனக்கு உங்களின் வாழ்த்துகள் மிகுந்த சந்தோசத்தை அளிக்கின்றது. நன்றி மீண்டும் ஒருமுறை.

cheena (சீனா) said...

அன்பின் முரளி

நல்ல சிந்தனை - பெயர்களை நினவில் வைத்து - சந்திக்கும் போதெல்லாம் பெயர் சொல்லி அழைத்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் - உண்மை உண்மை

நன்று - இதயங்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.