வெயிலோடு விளையாடி ....

சென்ற வருடம் ஜூன் மாதம் நான் எழுதிய வெயிலும் மழையும் என்ற பதிவில் எழுதியது. " எந்த வருடத்தையும் போல் இல்லாமல் இந்த வருடம் வெயில் மிகவும் அதிகம். (வெயிலின் சூடு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம் ஆனால் இனி இந்த செய்தி மிகவும் பழக்கமானதொன்றாக ஆகிப்போகும்). அதே போல இந்தவருடமும் வெயில் கொஞ்சம் அல்ல ரொம்பவே அதிகம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரலின் பிற்ப்பாதிகளில் தலையெடுக்கும் கோடைகாலம் இந்தவருடம் எங்கள் ஊரில் அல்லது அநேக தென்னிந்திய மாவட்டங்களிலும் பிப்ரவரி இறுதியிலிருந்தே ஆட்டிப்படைக்க ஆரம்பித்து விட்டது.சிறுவயதில் தேடித்திரிந்த வெயில் எங்கே? அதன் மீது ஏனிந்த வெறுப்பு? எப்போதிலிருந்து வெயிலை வெறுக்க ஆரம்பித்தேன்? ம்ம்ம்ம்.. எனக்கு தெரியவில்லை. வெயில்..... குழந்தைகளின் நண்பன். எனக்கு இன்னமும் நியாபகமிருக்கிறது என்னுடைய சிறு வயதில் தொட்டாமுட்டா ராயிக்கால் என்று ஒரு விளையாட்டு, ஒரு சிறிய குச்சியை எங்களின் கைகளில் உள்ள பெரிய கம்புகளால் தள்ளிக்கொண்டே ஓடுவோம். சாட் பூட் திரியில் தோற்றவன் எங்களை தொட வேண்டும். அப்படி அவன் தொட வரும்போது நாங்கள் எங்களின் கொம்புகளை ஏதாவதொரு கல்லின் மீது வைத்திருந்தால் நாங்கள் அவுட் இல்லை. இப்படியே அவுட் ஆகியிருப்பவனை ஆட்டம் துவங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக்கொண்டே போவோம். இதில் உச்சகட்டம் என்னவென்றால் ஆட்டத்தின் ஏதாவதொரு நிலையில் யாரவது அவுட் ஆகிவிட்டால் அந்த இடத்திலிருந்து ஆட்டம் ஆரம்பித்த இடத்திற்கு நொண்டியடித்து கொண்டே வரவேண்டும். இதற்க்கு "வாட் எடுப்பது" என்று பெயர். சில நேரங்களில் நாங்கள் ஐந்து கிலோமீட்டர் தூரம் வரையில் கூட வாட் எடுத்திருக்கிறோம். பாவம் அந்த சமயங்களில் பரமசிவம்தான் எங்களில் அதிகம் நோன்டியடித்திருக்கிறான். பல சமயங்களில் அழுதுகொண்டே நொண்டுவான், துவங்கிய இடம் வந்தவுடன் இன்னும் சப்தமாக அழுதபடியே திரும்பிப்பார்க்காமல் ஓடுவான். நாங்கள் அனைவரும் கைகொட்டி சிரித்தபடியே மறுபடியும் விளையாடுவோம்.மறுபடியும் அவனை எங்களோடு விளையாட வைக்க நாங்கள் படாதபாடு பட வேண்டியிருக்கும். ஆனாலும் சளைக்காமல் மீண்டும் மீண்டும் நொண்டியடித்த பரமா! நீ எங்கடா இருக்க... நியாபகம் இருக்கா? ஓனான் பிடிச்சது, உண்டிவில் வைத்து குரிவியடித்து கூட்டஞ்சோறு செய்தது எல்லாமே இந்த வெயிலின் துணையோடுதானே.. அப்படிப்பட்ட வெயிலை நான் எப்போது வெறுக்க துவங்கினேன்?அதற்க்கு பிந்திய வயதுகளில் கிரிகெட் கிரிகெட் என்று விளையாடி தீர்த்த காலமும் வெயிலோடுதான் போனது. ஒரு நாளைக்கு குறைந்தது ஆறிலிருந்து ஏழு மணிநேரம் வரை விளையாடிகொண்டே இருப்போம். ஆறுமணிக்கெல்லாம் இருட்ட தொடங்கிவிடும் இன்னும் எனக்கு பேட்டிங் கிடைக்கவில்லை இன்னும் கொஞ்சநேரம் வெயில் இருந்தால் நாளா இருக்குமேன்னு ஏங்கின காலம்போய் வெயில் என்றாலே வெறுத்து ஒதுங்கிக்கொள்ளும் மனபக்குவம் எப்போது வந்தது?


எந்த கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை, உடல்தான் வெயிலை வெறுத்து ஒதுக்குகிறது. ஆனால் மனம் இன்னும் வெயிலை விரும்பத்தான் செய்கிறது. சிறுவயதில் எனக்கும் வெயிலுக்கும் இருந்த உறவில் என்னை ஒருமுறை கூட சுட்டதை தெரியவில்லை. அல்லது சுட்டதே தெரியவில்ல. உனக்கு நான் வேண்டாமென்றால் எனக்கு நீ வேண்டாமென்று சொல்வது போல இன்று வெயில் சுட்டெரிக்கிறது அதை என்னால் உணரவும் முடிகிறது.குழந்தை பருவம்தான் எத்தனை அழகானது. நமக்கு யாரோடும் பகையில்லை வெயிலோடும் விளையாடித்தானே போயிருக்கிறோம்.ஆயிரம் கரங்கள் நீட்டி,


அணைக்கின்ற தாயே போற்றி...
10 கருத்துரைகள்:

செல்வம் said...

முரளி..நீங்கள் சொன்ன அந்த குச்சி விளையாட்டில் மிக அதிக தூரம் நொண்டியடித்து எங்கள் தெருவில் சாதனை புரிந்தவன் நாந்தான். இருந்தாலும் வடிவேலு பாணியில் நானும் மிகப் பெரிய ரவுடி என்று காட்டுவதற்காக எல்லா
விளையாட்டுகளிலும் ஈடுபட்டு அதைக் கொடுமைப் படுத்தியுள்ளேன்.

Karthikeyan G said...

Wow.. Super!!

me too has the similar story.. Same 2 games.. Stick game at start then skipped to cricket till now. :)

Murali said...

நன்றி கார்த்திக் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
அனேகமாக நீங்கள் சொல்லுவது கிட்டிபுல்லாக இருக்கலாம். இது தொட்டா முட்டா ராயிக்கள். :-)

Murali said...

செல்வம் ஒருவேளை நீங்கள் எங்களோடு விளையாடியிருந்தால் இன்னும் இளைத்திருப்பீர்கள். ஹா ஹா ஹா

Karthikeyan G said...

not the kittypull. :)

the same thotta mutta.

Murali said...

அப்ப சரி

வெயிலான் said...

நம்ம பேர்ல பதிவு எழுதியிருக்கீங்க. அதான் எட்டிப் பாத்துட்டு போகலான்னு வந்தேன் முரளி!

இளமைப்பருவ தொலைக்கப்பட்ட விளையாட்டுகள் - நல்ல பதிவு.

திருப்பூர்ல எங்கே இருக்கீங்க? என்ன பண்றீங்க? தனி மெயில் அனுப்புங்க.
veyilaan.ramesh@gmail.com

காமராஜ் said...

கார்த்திகேயன் வனக்கம்,
இந்த வெயில் நமக்கு
எவ்வளவு நெருக்கமானது தெரியுமா ?.
ஏதாவது குறைசொல்லிக்கொண்டே அதோடு
காலம் தள்ளிவிடுகிறோம். ஒரே ஒரு சொட்டு
மழைவிழுந்தால்கூட அலறியடித்து மறைவு
தேடி ஓடுகிறோம்.
நாம் வெயில் மனிதர்கள்.

வண்ணத்துபூச்சியார் said...

சூப்பர்...

கனிமொழி said...

"சிறுவயதில் எனக்கும் வெயிலுக்கும் இருந்த உறவில் என்னை ஒருமுறை கூட சுட்டதை தெரியவில்லை. அல்லது சுட்டதே தெரியவில்ல. உனக்கு நான் வேண்டாமென்றால் எனக்கு நீ வேண்டாமென்று சொல்வது போல இன்று வெயில் சுட்டெரிக்கிறது "....

அருமை நண்பா...

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.