ஐயோ ராமா!

சென்ற வாரம் நண்பன் சக்திவேலிடமிருந்து ஒரு போன், "நண்பா உன்னிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும்"
எனக்கு ஒன்னும் புரியவில்லை இருந்தாலும் "இதுக்கு என்னடா போன் பண்ணி அனுமதியெல்லாம் கேட்டுகிட்டு வாடான்னு சொன்னேன்"
"இல்லடா நீ சனிகிழமை பிருந்தாவன் பாருக்கு வந்திடு அங்க பேசிக்கலாம்"
"சரிடா எதுக்கும் நீ வரதுக்கு முன்னால எனக்கு ஒரு போன் பண்ணிடு. மறந்தாலும் மறந்திடுவேன்."
சக்தி, என்னுடைய பள்ளிபருவ நண்பன். ரொம்பவே மென்மையான மனம் கொண்டவன். அதிர்ந்து பேசக்கூட தெரியாதவன். அப்பொழுது எங்களோடு படித்தவர்களில் அவன்தான் நாள் நிறமாகவும் அழகாகவும் இருப்பான். சனிக்கிழமை அவன் கூப்பிடாமலே சரியாக சென்று விட்டேன். அழகா ஓராம சீட்ட புடிச்சு உட்காதிருந்தான்.
"மச்சான், மனசு சரியில்லை டா, உன்கிட்ட கொஞ்சம் பேசனும்ன்னு சொல்லிட்டு என்கிட்டே கேட்காமலேயே ரெண்டு பீர் ஆர்டர் பண்ணிட்ட்டு கேட்டான், "நீ சாப்டுவதான? "
"இல்லடா சக்தி இப்போ இல்லை. நீ சாப்பிடு"
இதுதான் நான் பண்ண தப்பு, எதோ பிரச்சனையில இருக்கான், பாவம், எதோ அவன் என்கிட்டே பேசினா கொஞ்சம் ஆறுதலா இருக்குன்னு எதோ பேசிகிட்டு இருக்கான், அவன தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு அப்படீனு நினச்சு விட்டுட்டேன். ஆனா உலகத்திலேயே ரொம்ப கொடுமையான விஷயம், நாம தண்ணி போடாம தண்ணியடிச்சவன் பேசுறத கேட்க்குறதுதான்னு அன்னைக்குதான் தெரிஞ்சிக்கிட்டேன்.
வேற என்ன காதல் பிரச்சனைதான். அவ சரியில்ல, இப்படி சொன்னா, அப்படி சொன்னா, அப்படீன்னு ஒரே மாதிரி குறையா சொல்லிகிட்டு இருந்தான். அவனுக்கும் சரி அந்த பெண்ணுக்கும் சரி ஒருவரை ஒருவர் நிச்சயம் பிடித்திருந்ததாகவும், இனி ஒருபோதும் தன்னால் பொருளாதாரத்தில் அடுத்த நிலைக்கு முன்னேற முடியாது என்று அவள் நினைப்பதாகவும் அதனால் இதுவரை என்னை காதலிக்கவே இல்லை என்று மறுப்பதாகவும் சொன்னான்.
"அதுசரி நீ நினைப்பது கிடக்கட்டும் அவள் உன்னிடம் எப்பொழுதாவது அப்படி சொன்னாளா"
"இல்லை"
" உண்மையில் உன்னை விரும்பியிருந்தால் அவள் இதை உன்னிடம்தான் முதலில் சொல்லியிருப்பாள். கவலைப்படாதே, அதெப்படிடா பழகும்போது இந்த குறைகள்ள ஒன்னு கூடவா உனக்கு தெரியாம போச்சு"
"மனசு விட்டு பழகும்போது, நமக்கு ரொம்ப நெருக்கமானவங்க கிட்ட இருக்கிற குறை நமக்கு தெரியறது இல்லை"
"சரி, இப்போ என்ன ஆச்சு? உங்க நெருக்கத்துக்கு?"
"அவதான ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டலேடா"
"ஏன்? என்னவாம் திடீர்ன்னு"
"எனக்கென்ன தெரியும், போன் பண்ணி தரேன் நீயே கேளுன்னு சொல்லி உடனே அந்த பெண்ணுக்கு போன் பண்ணிட்டான். இது என்னடா வம்பா போச்சுன்னு நான் சிங்கிளா பீல் பண்ணி முடிக்கிறதுக்குள்ள போன என் கைல குடுத்துட்டான்.
சரி, இரு நான் பேசிட்டு வரேன்னு சொல்லி, போன எடுத்துட்டு வெளியில வந்தேன்.
"என்ன சுபா பிரச்சனை உங்களுக்குள்ள?"
"ஒ, இன்னைக்கு நீங்களோ? பாவம்ன்னா நீங்க. அந்த லூசுக்கு இதே வேலையா போச்சு, நான் பண்ண வேண்டியதஎல்லாம் அவன் பண்ணிக்கிட்டு இருக்கான் னா, ஆ ஊன்னா கோவிச்சிகிறான், எதுவும் சொல்ல கூடாது, அப்படி சொன்னா, இந்த பொண்ணுகளே இப்பிடித்தான்னு சினிமா வசனமெல்லாம் பேசுறான், எப்படின்னா இதெயெல்லாம் சமாளிக்கிறீங்க? உண்மையிலேயே நீங்க கிரேட் னா"
"அட பாவிகளா! உங்க பஞ்சாயத்துக்கு என்ன ஊருகாயாக்கி விளையாடறீங்களா?""என்னமோ பண்ணுங்க, நல்ல இருந்தா சரி" சொல்லி போனை வச்சிட்டு உள்ளே போனேன்.
இன்னும் ரெண்டு பீரை ஆர்டர் பண்ணிவைத்துவிட்டு, ரெண்டு பீரையும் காலி பண்ணிட்டு நல்ல புள்ளமாதிரி உக்காந்திருந்தான்.
"பேசினியா? "
"பேசிட்டேன்"
"என்ன சொன்னா?"
".... ... ..."
" என்னடா சொன்னா?"
"ம்ம்ம் ...."
"ஏண்டா சக்தி இது உனக்கே நியாமா? சனிக்கிழமையும் அதுவுமா, இருக்கிற ஆயிரத்தெட்டு வேலைய உட்டுட்டு என்னமோ நீ கூப்பிட்டியேன்னு வந்தா, நீஎன்னடான்ன ஊத்திகித்த உளறிக்கிட்டு இருக்க, அவ என்னடானா போன்னா, போயி வேல ஏதாவது இருந்தா பாருங்கன்ரா"
"என்ன பார்த்தா எப்படிடா இருக்கு"
"அப்படியா சொன்னா"
ஒருவழியா எல்லா கருமத்தையும் குடிச்சிட்டு கிட்டத்தட்ட அவனை தூக்கிகிட்டு வராத குறையா வெளிய வந்திட்டு இருந்தேன். நல்ல நேரமா பார்த்து என்னுடைய கஸ்டமர் ஒருவர் அங்கே வர " என்ன சார் இந்நேரத்திலயேவான்னு கேட்டார். சக்திய மனசுல திட்டிகிட்டே அவரை பார்த்தது ஹி ன்னு அசிங்கமா ஒரு சிரிப்பு சிரிச்சிகிட்டு வெளிய வரேன்.

சொன்ன நம்ப மாட்டிங்க, பக்கத்துல ஒரு பையனோட மொபைல வந்த ரிங் டோன் "ஐயோ ராமா, இந்தமாதிரி கழிசட பசங்களோட என்ன ஏன் கூட்டு சேர வைக்குற"
என்னால அடக்க முடியாம சிரிச்சிட்டேன்.

13 கருத்துரைகள்:

veyilaan said...

// உலகத்திலேயே ரொம்ப கொடுமையான விஷயம், நாம தண்ணி போடாம தண்ணியடிச்சவன் பேசுறத கேட்க்குறதுதான்னு அன்னைக்குதான் தெரிஞ்சிக்கிட்டேன் //

:)

நெஜமா நடந்ததா?

Suresh said...

:-) ஐயோ ராமா, இந்தமாதிரி கழிசட பசங்களோட என்ன ஏன் கூட்டு சேர வைக்குற சரியான ரிங் டோன் தான்

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்களைப் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு.. ஹி ஹி ஹி..:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

// நெஜமா நடந்ததா? //
அட ஏங்க, வெயிலான் நீங்க வேற. நெசமாத்தாங்க. இந்த வாரம் பஞ்சாயத்துக்கு அவங்க வீட்டுக்கு வேற போகணும். அத நெனச்சாலே .......

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கார்த்திகை பாண்டியன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்,
// உங்களைப் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு.. ஹி ஹி ஹி..:-) //
நிசமாத்தான் சொல்லறிங்களா? :-)

Karthikeyan G said...

:))))))

முரளிகுமார் பத்மநாபன் said...

வாங்க கார்த்தி, உங்களுக்கு நூறு ஆயுசு.

முரளிகுமார் பத்மநாபன் said...

சுரேஷ், மச்சான் வா, வா. எப்படி இருக்க? சரத்துக்காக ஐந்து ஒட்டு தயார் பண்ணியிருக்கேன், தென் சென்னையில.

ஆதவா said...

ஹா.... அருமையான எழுத்து!!! ரசிக்கும்படியான பதிவு!!! நான் திருப்பூரில் 90 சதவிகிதம் பாருக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இதுவரையிலும் குடித்ததில்லை...

இந்தமாதிரி உளறல்களையும் பல காதல் சேர்ப்புகளையும், பிளவுகளையும் புரிந்திருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியோடு... (ரொம்ப ஓவராக) சொல்லிக் கொள்கிறேன்!!

Karthikeyan G said...

//சரத்துக்காக ஐந்து ஒட்டு தயார் பண்ணியிருக்கேன், தென் சென்னையில.
//

வேண்டம் இந்த கொலைவெறி... :-)

அவர் தன் ஹோட்டல் பிஸினசுக்கு Election-ல ப்ரீ விளம்பரம் பண்ணிக்க பாக்குறாரு..

முரளிகுமார் பத்மநாபன் said...

அப்படி இல்ல கார்த்தி, கருணாநிதிக்கோ ஜெயலலிதாவிர்க்கோ ஓட்டு போட்டா அவங்களும் இதத்தான் பண்ணபோறாங்க. இந்த விசயத்த negative - ஆ பார்க்காதீங்க Please. இளைஞர்களை நாம் ஆதரிக்கவில்லை என்றால் யார் ஆதரிக்க போகிறார்கள்.

சூரியன் said...

அட பாவிகளா! உங்க பஞ்சாயத்துக்கு என்ன ஊருகாயாக்கி விளையாடறீங்களா..

நீங்க ஊருகாய் ஆனது அருமை.. எனக்கும் ஊருகாய்க்கு பற்றாக்குறை.. தோழா வந்து உதவுங்க....

முரளிகுமார் பத்மநாபன் said...

ஒரு வரிதான் எழுதினேன். அதவச்சு எப்படி கண்டுபிடிக்கிரனுகான்னே தெரியலை. ம்ம்ம் ம்ம் ... என்னபண்றது. நண்பா சூரியன், கூப்பிடீங்களா?

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.