காலை ராகம்

மூன்று வருடங்களுக்கு முன்பு எதேட்சசயாக சேனலை திருப்பிகொண்டிருந்தபோது ஸ்டார் மூவீஸ் சேனலில் ஷபானா ஆஷ்மி மைக்கை பிடித்துக்கொண்டு "தாயே யசோதா" என்று பாடிக்கொண்டு இருந்தார். என்னையும் அறியாமல் எனது விரல்கள் ரிமொட்டிலிருந்து விலகிக்கொண்டன. ஓரிரு நிமிடங்களில் பாடலும் முடிந்தது படமும் முடிந்தது. மகாகனபதி என்று ஒரு பெண்குரல் ஒலிக்கஎழுத்துக்கள் மேல் நோக்கி நகரத்தொடங்கின. அருமையான இசையமைப்பு மற்றும் குரல் இன்னும் கேட்க்கவேண்டும் என்பதுபோல.


அது நான் உலகத்திரைப்படங்களை பார்க்க ஆரம்பித்த ஒரு சமயம். என்னுடைய நண்பர்கள் பலரிடம் தொடர்பு கொண்டு கேட்டேன் ஆனால் ஒருவரிடமும் ஓரு வழியாக தெளிவான தகவலே இல்லை. Torrent, Rapidshare இப்படி எந்த தல அறிமுகமும் இல்லாத சமயமாதலால் என்னால் அது என்ன திரைப்படம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கொஞ்சம் சினிமா இசை அறிவு உள்ளவர்களிடம் பேசும்போது தாயே யசோதா படலை பாடிக்காட்டி கேட்டதும் உண்டு. ஒரு வழியாக நண்பன் பெரி மூலமாக அது Morning Raaga என்கிற திரைப்படம் என்பதை அறிந்தேன். திரைப்படத்தை பார்த்துவிட வேண்டும் என்று எனக்கிருந்த ஆவல் அது கிடைக்காதபோது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துபோனது, அனால் எப்பொழுது எந்த கேசட் கடைக்கு சென்றாலும் ஆடியோ கேசட் கிடைக்குமா என்று தேடிப்பார்ப்பது உண்டு. கடைசியாய் அருண் மூலமாக எனக்கு கிடைத்தது. அருமை.
கர்நாடக சங்கீதம் கேட்ப்பவர்களுக்கு கொஞ்சம் புதிதாக இருக்கும், கர்நாடக இசையையும் மேற்க்கத்திய இசையையும் கலந்து "Fusion" இசையாக கொடுத்திருப்பார்கள் இசையமைப்பாளர்கள் மனிசர்மாவும்,


அமித்தும். பாடல்கள் கைக்கு கிடைத்த பலமாதங்களுக்கு என்னுடைய அலுவலகத்தை திறந்தவுடன் "காலைராகம்" தான். அதன் பிறகு அந்த படத்தை பார்க்கவேண்டும் என்று எனக்கு தோன்றவே இல்லை.

நேற்று என் நண்பருக்காக "On the Water Front" என்ற திரைப்படத்தை தேடிக்கொண்டிருந்தபோது தற்ச்செயலாக இந்த படத்தை பார்த்தேன். உடனே தரவிறக்கம் செய்து நேற்றுத்தான் முழுமையாக பார்த்தேன். நல்ல படமும் கூட. ராஜீவ் மேனனின் கேமரா அந்தகால ஆசியன் பெயின்ட், ஓல்ட் சிந்தால் விளம்பரங்களை நியாபகப்படுத்தின. சிவந்த மண்ணும் பச்சை பயிர்களும் நீல வானமும் அவரது கேமராவின் மூலமாக இன்னும் அழகாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.

அதிலும் top angle ஷாட்டில் காண்பிக்கும்அந்த வீடு அப்படியே எங்களது பூர்வீக வீட்டை நியாபகப்படுத்தியது. சுற்றிலும் ஓடுகள் வேயப்பட்ட சதுரவடிவ கூரையின் நடுவில் முத்தம், முத்தத்தின் நடுவே ஒரு துளசிமாடம் அதை ஒட்டிய ஒரு வேப்பமரம். சிறுவயதில் என்னுடைய இருகைகளாலும் கட்டி பிடிக்க முடியாதபடி பருத்திருக்கும் மரத்தூண்கள், மடக்கு கைகளோடு கூடிய நாற்காலிகள், பூஜை அறையின் முன்பாக நிமிர்த்தி வைக்கப்பட்டிருக்கும் தம்புரா என எனது பால்ய நியாபகங்கள் அனைத்தையும் பசுமையாய் நினைவுகூர செய்த Morning Raaga.
பெருசா கதையெல்லாம் எதிர்பார்த்து போக வேண்டாம் அல்லது பார்க்க வேண்டாம். குளுமையான காட்சியமைப்பு இனிமையான இசை இப்படி மற்ற எந்த விசயமும் உங்களை ஏமாற்றாது, அவசியம் பாருங்கள் அல்லது கேளுங்கள்.


மற்ற சில டெக்னிக்கல சமாச்சாரங்கள்:

எடிட்டிங் - ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவு - ராஜீவ் மேனன் இயக்கம் - மகேஷ் தட்டாணி இசை - மணி சர்மா, "மாதே" மற்றும் "தாயே யசோதா" என இரண்டு பாடல்களையும் சுதா ரகுநாதன் பாடியிருக்கிறார்.

3 கருத்துரைகள்:

ஆதவா said...

இந்த படத்தின் சில காட்சிகளை மட்டுமே அதே ஸ்டாரில் பார்த்திருக்கிறேன். அந்த பாடலையும்... பொதுவாக, ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட இந்தியக் கதைகள் எல்லாமே மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.. இதுவும் அப்படி இருந்ததில் ஆச்சரியமில்லை.

உங்களது பின்னூட்ட முறையை வேறுமாதிரி மாற்றிக் கொள்ளுங்களேன்...

Krishna Prabhu said...

இசையை மையமாக வைத்து எடுக்கப் பட்ட நல்ல சினிமா 'Morning ராக'. நான் கூட பார்த்திருக்கிறேன். தலை வாசல் விஜயும் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

சுதா ரகுநாதனின் 'அலைபாயுதே கண்ணா' இசை ஆல்பம் வாங்கிக் கேட்டுப் பாருங்கள். அனைத்துப் பாடல்களுமே அருமையாக இருக்கும். அதில் வரும் ஒரு பாடல் தான் 'தாயே யசோதா' பாடல். 'அசைந்தாடும் மயில்' என்று ஒரு பாடல் வரும் அதுவும் அருமையாக இருக்கும். மிகவும் பிரபலம். இரண்டுமே ஊத்தகாடு வேங்கட சுப்பையை பாடல்கள்.

/--ஒரு கட்டத்தில் கொஞ்சம் சினிமா இசை அறிவு உள்ளவர்களிடம் பேசும்போது தாயே யசோதா படலை பாடிக்காட்டி கேட்டதும் உண்டு.--/

நீங்கள் பாடுவீர்களா முரளி. முறைப்படி இசை பயின்றவரா என்ன?

முரளிகுமார் பத்மநாபன் said...

நிச்சயமாக இல்லை கிருஷ்ணா, ஆனால் இசை மீது அதீத ஆர்வம் உண்டு. என்னுடைய தாத்தா அழகப்பா பல்கழைகழகத்தில் இசை ஆசிரியாராக இருந்தவர்

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.