குளிர் 100 டிகிரி

வெள்ளிகிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் எப்படியும் ஏதாவதொரு படத்தை பார்த்தே ஆவனும்ன்கிறது எங்களை பொறுத்தமட்டிலும் எழுதப்படாத விதி. இதுவரை கேபிள் சங்கரே பார்த்திடாத அல்லது கேபிளாரிடமிருந்தே விமர்சனம் வராத "ஆடாத ஆட்டமெல்லாம்" போன்ற காவியங்களெல்லாம் நாங்கள் பார்த்திருக்கிறோம். விதி என்ன செய்யிறது, எங்களுக்கு பொழுதுபோக்குன்னா சினிமாவைத்தவிர வேற ஒன்னும் தெரியாது, இதுவும் முழுக்க முழுக்க எங்க தப்பு இல்ல. ஊரு அப்புடி.

அப்படி எப்பொழுதும்போல போஸ்டரை பார்த்து சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட இன்னொரு திரைக்காவியம் தான் இந்த குளிர், இந்த குளிரின் அனுபவம்.

முதலில் படத்தின் பிளஸ் பாயின்ட்
குளிர் 100 டிகிரி, அருமையான கேமரா, ஒளிப்பதிவு. ஒரு சில கோணங்களும் ஒளிப்பதிவும் கண்ணைவிட்டு அகல மறுக்கிறது. கேமிரா யாரென்று தெரியவில்லை ஆனாலும் சுற்றி போட்டுக்கொள்ளுங்கள். கண்பட போகிறது.

இனி மைனஸ் பாயின்ட்
அனேகமாக ஒளிப்பதிவைத்தவிட அனைத்தும்

இனி கதை
காதல் திருமணம் செய்துகொண்டு மனக்சப்பில் பிரிந்து வாழும் I.A.S. படிக்கும் தாயுடன் வாழும் ஹீரோ. ஒரு ஒரு பதினோராவது படிக்கும்பையன், தன்னுடைய ஆசிரியர் தப்பு செய்தாலே அவரை கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கு நல்லவன்!.அவனுக்கு ஒரு ரௌடி தந்தை, இவரிடமிருந்துதான் தனக்கு இந்த கொலைக்குகூட முயலும் தைரியம் வந்ததாக சுய அறிமுகத்தோடு Hero Introduction. ஹீரோவின் முகத்தை போரடிக்காமல் பார்க்க முடிகிறது மற்றபடி நடிக்கவும் முயற்சி செய்கிறார்.
அதனால் தன கணவன் பார்வையிலிருந்து மகனை விலகியிருக்க செய்ய மகனை ஒரு மலைபிரதேச கான்வென்ட் பள்ளியில் சேர்த்து விடுகிறார்.


அங்கே ஒரு அழகான ஆங்கிலேயர் காலத்து கட்டிடம், பள்ளிக்கூடம். சீனியர்கள் ஸ்டுடண்ட் கவுன்சில் என்கிற பேரில் செய்கிற ராகிங், அதை பிடிக்காத ஹீரோ, துணைக்கு அப்பாவியாய் வந்து செத்து போகும் ஒரு குண்டு நண்பன், எதற்கு என்று தெரியாமலேயே உலாவும் ஒரு பிரின்சிபால், அவரது அப்பாவி மனைவி. இப்படி ஒரு பத்து பேரை வைத்துக்கொண்டு கதை சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர்.


ஹீரோ ஹீரோயின் சேர்ந்திருக்கும் காட்சியை பார்க்கும்பொழுது படத்தில் வரும் குண்டுப்பையன் சொல்லுவான் "எப்படிடா நீ...... அவளோட.... நான் வேணா நல்ல நாட்டுக்கட்டையை பார்த்து இன்ட்ரோ குடுக்குறேன், அவளோட உன்னை சேர்ந்து பார்த்தா உவ்வே எனக்கு வாமிட்டா வருது" என்று. படம் பார்க்கும் நமக்கும் அதே கதிதான். எல்லா தமிழ் படங்களிலும் ஹீரோயினை கிட்டத்தட்ட "லூசு" மாதிரியே சித்தரித்திருப்பார்கள். இந்த படத்திலும் இது விதிவிலக்கல்ல, ஆனால் என்ன வித்தியாசம் என்றால் இதில் படம் முழுக்க அவளை அனைவரும் "லூசு" என்றே சொல்கிறார்கள். இறுதியாய் அந்த பெண்ணே "லூசுதான்" என்று இயக்குனரும் certificate கொடுக்கிறார்.


அதே போல பாடல்கள் என்கிற பெயரில் ஒரே சப்த்தம். இரைச்சல். "போபோ" சசி -. ஹிப் ஹாப் இசையில் தேர்ந்தவர் போலும் அதற்காவே எல்லா பாடல்களின் இடையிலும் முரட்டு குரலில் தொனதொனவென ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எந்த பாடலும் ஒரு வரியைத்தவிர மனதில் பதியவில்லை.

மூன்று சீனியர் மாணவர்களை அவர்களின் கொட்டத்தை அடக்க ஹீரோவை அசிஸ்டன்ட் ஸ்கூல் லீடராக தேர்தலில் வெற்றிபெற செய்த்த குண்டுப்பையன் பப்லுவை கொலை செய்கிறார்கள், அந்த மூவரும். அதை தற்செயலாக தெரிந்து கொண்ட ஹீரோ அவர்களை மூவரையும் கொலை செய்கிறான். நண்பனை கொன்ற மூவரையும் ஆதாரம் இல்லாமல் தீர்த்துகட்டிவிட்டு வெற்றியோடு வீடு திரும்பும் ஹீரோவிற்கு அதிர்ச்சியாய் அவனது அம்மா இறந்த செய்தி காத்திருக்கிறது. அவ்வளவுதான் படமும் முடிந்தது.


இதனால் இயக்குனர் சொல்ல வருகிற கதை என்னவென்றால், தன்னுடைய தாய் ஆக்சிடெண்டில் இறந்து போக வேண்டுமென்றால் மகன் மூன்று கொலை செய்ய வேண்டும்.அல்லது, தந்தையின் ஆத்திரத்தை ரத்தத்திலேயே கொண்ட மகன் திருந்த வேண்டுமென்றால் I.A.S படிக்கும் தாய் செத்தே ஆக வேண்டும்.
அல்லது, ஒரு வேலை இப்படி இருக்கலாமோ? இல்லை ஒரு வேலை அப்படி இருக்கலாமோ?

வேற என்ன பண்றது இல்லாத கதையை எங்க போயி தேடுறது.
குளிர் மொத்தத்தில் மொக்கை வெயில்

15 கருத்துரைகள்:

ஜெட்லி said...

வணக்கம் நண்பர் முரளி குமார்,
என்னை பொறுத்த வரையில் படம் சுமார் ரகத்தை சேர்ந்தது.
நீங்க என் விமர்சனத்தை படிச்சிங்களா?

http://nee-kelen.blogspot.com/2009/06/100.html

//
இதனால் இயக்குனர் சொல்ல வருகிற கதை என்னவென்றால், தன்னுடைய தாய் ஆக்சிடெண்டில் இறந்து போக வேண்டுமென்றால் மகன் மூன்று கொலை செய்ய வேண்டும்.
அல்லது, தந்தையின் ஆத்திரத்தை ரத்தத்திலேயே கொண்ட மகன் திருந்த வேண்டுமென்றால் I.A.S படிக்கும் தாய் செத்தே ஆக வேண்டும்.
அல்லது, ஒரு வேலை இப்படி இருக்கலாமோ? இல்லை ஒரு வேலை அப்படி இருக்கலாமோ?
//

க்யாஸ் தியரி அப்படின்னு சொல்வாங்க...
அதை தான் டைரக்டர் கடைசியில் செய்து இருக்கிறார்.
படத்தை ஒரு டச்சிங் ஆகா முடிக்க எண்ணி நன்றாகவே
முடித்து இருக்கிறார்.

Anonymous said...

this movie's done by Mayaajal's owner's daughter...ipdithaan irukkum...kaaasu velaiyaaduthu..

this movie's associate director is my classmate..that's how i know how the movie was made...it was full party in the studio and shooting site.

மங்களூர் சிவா said...

/
இதில் படம் முழுக்க அவளை அனைவரும் "லூசு" என்றே சொல்கிறார்கள். இறுதியாய் அந்த பெண்ணே "லூசுதான்" என்று இயக்குனரும் certificate கொடுக்கிறார்.
/
:))

/
வேற என்ன பண்றது இல்லாத கதையை எங்க போயி தேடுறது.
குளிர் மொத்தத்தில் மொக்கை வெயில்
/

ரைட்டு

ஒரு மோசமான படத்தை பார்ப்பதிலிருந்து அனைவரையும் காப்பாற்றியதற்கு நன்றி.

Sindhan R said...

... சார் ... மொக்க படமா இருந்தா அத torrent ல மட்டும்தான் பார்ப்போம்னு ஒரு கொள்க வெச்சு படம் பாருங்க சார் .. இவ்வளவு அறிவோட படம் பார்த்தா நாங்கெல்லாம் எப்பிடித்தான் படம் எடுக்கறது?

முரளிகுமார் பத்மநாபன் said...

அன்புள்ள ஜெட்லி, நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், தொடர்ந்து படியுங்கள்.

இல்லை தலைவரே! ரொம்ப எதிர் பார்த்து போய் ஏமாந்ததுதான் இந்த அசுர கடுப்புக்கு காரணம். மத்தபடி நீங்க சொன்ன சுமார் போடலாம்தான்.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி அனானி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும், தொடர்ந்து படியுங்கள். Keep in touch and keep mailing my Email ID is murli03@gmail.com

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி சிவா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும், தொடர்ந்து படியுங்கள். ஏதோ என்னால் முடிந்தது தப்பிச்சிட்டிங்கன்னா சந்தோசம்தான்

கார்த்திகைப் பாண்டியன் said...

opinions do differ nanbaa..;-)

முரளிகுமார் பத்மநாபன் said...

Nanbaa... Agree, Agree

Cable Sankar said...

/இதுவரை கேபிள் சங்கரே பார்த்திடாத அல்லது கேபிளாரிடமிருந்தே விமர்சனம் வராத "ஆடாத ஆட்டமெல்லாம்" போன்ற காவியங்களெல்லாம் நாங்கள் பார்த்திருக்கிறோம்//

அட அவனா நீயீ..:)

No said...

அன்பான நண்பர் திரு முரளிகுமார் பத்மநாபன் அவர்களே,

உங்கள் தளத்திற்கு அன்பே சிவம் என்று பெயர் இட்டுருக்கிறீர்கள். அது போதாது என்று இனி ஒரு விதியும் செய்வோம் என்று வாக்கியம் வேறு!

Subject என்னவென்று பார்த்தல், சினிமா!

ஐயா திரு முரளி, உங்கட்க்கு வேறு வேலை கிடயாதா??

ஒரு தளம், அதில் அட்டுப்போன ஒரு குப்பை சினிமாவைப்பற்றி முக்கால் பக்கம் முனகல்! இதுதான் உங்கள் இனி ஒரு விதியா?

ஒன்றும் தெரியவில்லை என்றால் இருக்கவே இருக்கு, சினமா விமர்சனம். அதை வந்து படியுங்கள் என்று ஒரு அரை கூவல் வேறு!

அத்தோடு என் நிறுத்திவிட்டீர்கள்???

எங்கள் வீட்டுப்பக்கம் நிறய மாடுகளை எப்போதும் மேய்ந்து கொண்டிருக்கும். அதை பற்றி ஒரு ஆறு பக்கம் போடலாமே!

இந்த முட்டாள்தனத்தை படித்து ஒரு நாலு அன்பர்கள் பின்னுட்டம் வேறு!

திரு மங்களூர் சிவா என்பவர் அள்ளிவிடுகிறார் - அவரை நீங்கள் காப்பாற்றி விட்டீர்களாம்! அதை தவிர, திரு ஸ்ரீதரன், திரு கார்த்திகை பாண்டியன் போன்று சில வேலை இல்லா பட்டதாரிகள் முட்டை இட்டு போயிருக்கிறார்கள்!

பாவம்....நீங்களோ அவர்களோ இல்லை ---- வேறு யார்? தமிழ் வலையுலகம்!

தயவுசெய்து இந்த " இனி ஒரு விதி........" என்பதை எடுத்துவிட்டு கீழ்கண்டதை போடவும்!

" சினமா எங்கள் உயிர் முச்சு....உளறுவதே எங்கள் பொழுதுபோக்கு...வெட்டிப்பேச்சு எங்கள் வீர வரலாறு! "

பிகு: Height of comedy என்னவென்றால் அண்ணன் சொல்கிறார், இந்த படம் மொக்கயாம்..இவரு கண்டு பிடிச்சாராம் .....இருக்கட்டும்....அப்போ நீங்கள் எழுதி கிழிப்பது என்ன ஐயா?????

நன்றி
வாழ்க அரைகுறைகள் ....வளர்க உங்கள் தொண்டு!

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் நண்பா, யார் நீங்க இவ்வளவு வெளிப்படையாக மனதில பட்டதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. இதுதான் என்னுடையஇரண்டாவது தமிழ் சினிமா பதிவு, சினிமா பற்றி அதிகம் எழுதுவதில்லை என்றுதான் இருந்தேன். இருக்கிறேன். இந்த படத்தை பற்றி எழுதியதற்கு கூட காரணம் உண்டு.

"தயவுசெய்து இந்த " இனி ஒரு விதி........" என்பதை எடுத்துவிட்டு கீழ்கண்டதை போடவும்!
" சினமா எங்கள் உயிர் முச்சு....உளறுவதே எங்கள் பொழுதுபோக்கு...வெட்டிப்பேச்சு எங்கள் வீர வரலாறு! "

இங்குதான் எனக்கு உடன்பாடு இல்லை, விதி என்பது எதிலும் உண்டு சினிமா அதற்க்கு விதிவிலக்கல்ல. சினிமா பற்றி எழுதுவதால் எதுவும் தவறு இருப்பதாக தெரியவில்லை.

"பிகு: Height of comedy என்னவென்றால் அண்ணன் சொல்கிறார், இந்த படம் மொக்கயாம்..இவரு கண்டு பிடிச்சாராம் .....இருக்கட்டும்....அப்போ நீங்கள் எழுதி கிழிப்பது என்ன ஐயா????? "

நீங்க இங்க என்ன செய்திருக்கிறீர்களோ, அதையேதான் நானும் செய்திருக்கிறேன். இப்படி உங்கள மாதிரி நாலு பேர் சொன்னாதானே நமக்கும் புரியும், நான் நிச்சயம் திருத்திக்கொள்ள முயல்கிறேன்.

நன்றி உங்கள் கருத்துக்கு, ஏதும் விவாதிக்க விரும்பினால் ஈமெயிலில் தொடர்பு கொள்ளவும்
mulri03@gmail.com

YES said...

எனக்கென்னவோ என் தம்பி நோ சொல்வது சரியென்றே படுகிறது!

அதற்காக என் தம்பி நோவிற்கு பைத்தியம் இல்லை என்றெல்லாம் நான் வாதிடப் போதில்லை உங்களிடம்!

அவர் கொஞ்சம் அப்படித்தான்! அதற்காக என் தம்பி நோவை மன நோயாளி என்றெல்லாம் எவரேனும் எழுதுவீர்களேயானால் சும்மா விடமாட்டேன்!

YES said...

என் தம்பி "நோ" வலைப்பூ ஒன்றைத் தொடங்கி சில பதிவுகள் உருப்படியாக (அவரது பாணியில் உருப்படியாக) எழுதிக் கொண்டிருந்தார்.

ஆனால் அவை மொக்கை போடவோ/கும்மியடிக்கவோ சிறிதளவும் தகுதியின்றி இருந்ததால் அவை பிற பதிவர்களால் படித்தாலும் பின்னூட்டங்கள் இடப்படாமல் நிராகரித்தே வந்தனர்!

அந்த மன உளைச்சலும், கோபமும், இயலாமையுமே என் தம்பி "நோ" விற்கு ஒரு வித மன நோயை ஏற்படுத்தி இவ்வாறெல்லாம் ஒவ்வொரு பதிவாகச் சென்று பின்னூட்டங்கள் இட்டுச் செல்லத் தூண்டுகிறது!

தயை கூர்ந்து என் தம்பியால் ஏற்பட்ட இடைச் சிரமத்தை பெரிது படுத்தாது அவரது பின்னூட்டங்களைப் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

OFF COURSE said...

என் ஒண்ணு விட்ட சித்தப்பா பையன் நோ வின் கமெண்ட்களை அண்ணன் யெஸ் சொல்லிபடி புறக்கணிப்பதோடு பிரசுரிக்கவே வேண்டாம் அல்லது அழித்தும் விடவும்!
இல்லையெனில் அவரைப் பர்ரி மென்மேலும் பல்வேறு பதிவர்கள் அறியக் கூடும்!

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.