பூனைகள் இல்லாத வீடு


பூனைகளை இல்லாத வீடு
ஆசிரியர் - சந்திரா
உயிர்மை பதிப்பகம்.
விலை - ரூ.60/-


அனேகமாக இது ஆசிரியரின் முதல் சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பில் உள்ள கதைகள் காலச்சுவடு, அணங்கு, அம்ருதா, அவள் விகடன், ஆனந்த விகடன் மற்றும் சண்டே இந்தியன் ஆகிய இதழ்களில் முன்னமே வெளிவந்ததவை. அவற்றை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் வரிசைப்படுத்தலோடு உயிர்மை பதிப்பகம் ஒரு தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது. புளியம்பூ, திறக்கப்படாத பள்ளிக்கூடத்தின் கதவுகள், பூனைகள் இல்லாத வீடு, கிழவி நாச்சி, அத்துவானகாட்டு எருமைகளும் அசிஸ்டன்ட் டைரக்டரும், பூச்சி, தோழர்கள் கடத்தல்காரர்கள் ஆன கதை மற்றும் ராஜா, ராணி, ஜோக்கர் ஆகிய பதினோரு சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.ஆசிரியர் சந்திரா, 1
977 ஆம் ஆண்டு, தேனீ மாவட்டம் கூடலூரில் பிறந்தவர். 1999 திலிருந்து 2003 ஆம் ஆண்டு வரை ஆறாம் திணை, குமுதம், அவள்விகடன் ஆகிய இதழ்களில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார், தற்ப்போது இயக்குனர் அமீர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.


இவருடைய
கதைகள் பெரும்பாலும் கிராமத்தையும் கிராமத்து சிறார்களையும் அவர்கள் சுற்றியலைந்த கிராம வீதிகளியே பின்தொடர்கிறது. ஆசிரியர் அவரது அணிந்துரையில் கூட இது கற்ப்பனைக் கதைகள் அல்ல பெரும்பாலும் சிறுவயதில் கேட்ட பார்த்த மனிதர்களின் கதை என்று குறிப்பிடுகிறார். மனிதர்களின் வாசனைகள், காட்ச்சிகள், உரையாடல்கள் என விரியும் இக்கதைகள் துல்லியமான புறவுலகச் சித்தரிப்புகள் கொண்டவை.இந்த தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளும் அருமை. இதில் என்னை மிகவும் கவர்ந்த சில கதைகளை பற்றி ஒரு சிறிய பகிர்வுடன் எழுதியிருக்கிறேன்.

புளியம்பூ - எவ்வளவு பேசினாலும், சொன்னாலும், கேட்டாலும், படித்தாலும், எழுதினாலும் அழுக்காது அப்பா வாசனை, இந்த கதையில் வரும் அப்பாவின் சுவாசத்தில் புளியம்பூ வாசனை. இதுதான் தான் எழுதிய முதல் கதை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். முதல் கதை என்று நம்ப முடியாத அளவிற்கு அருமையான எழுத்துநடை.

திறக்கப்படாத பள்ளிக்கூடத்தின் கதவுகள் - ஏழாவது முடித்து எட்டாவது செல்லும் சிறுமியின் பார்வையில் சொல்லப்பட்ட கதை. எப்போது படித்தாலும் அழகிய வாசிப்பனுபவத்தை கொடுப்பது பள்ளிபருவம் பற்றிய கதைகள். அப்படிப்பட்ட கதையை படிக்கும்போது நாம் வேகமாக கடந்துவந்துவிட்ட அந்த வாழ்வின் அழகான பக்கங்களை நிதானமாக திரும்ப படித்த அனுபவத்தை கொடுப்பது எழுத்தாளர்களின் வெற்றி. இதில் சந்திரா வெற்றி பெற்றிருக்கிறார்.

பூச்சி - உயர உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகாது, ஆனால் பருந்தின் உயரத்தை இலக்கை அடைந்திருக்க வேண்டிய ஒரு குருவியின் அவலமான கதை. பசங்க படத்தில் வருகிற "கைதட்டல்" என்கிற அழகான ஒருவிசயம் நினைவில் வருகிறது. எத்துனை பேர் எத்தனை இடங்களில் மனமுவந்து கைதட்டியிருக்கிறோம், கைதட்டுவது என்பது வெறும் இரு கைகளிலிருந்து வெளிவரும் ஓசை மட்டுமல்ல, இருகை கொடுத்து ஒருவரை மேலே ஏற்றிவிடுவது, நான் உன்னை கவனித்டுகொண்டுதான் இருக்கிறேன் என்று அவர்களுக்கு புரியவைப்பது. அப்படிப்பட்ட ஒரு கவனிப்பற்ற பாராட்டுக்கு ஏங்கி மனமுடைந்த பூச்சி என்கிற சிறுவனின் கதை. நான் சுமார் 12 வருடங்களாக பார்த்து வரும் போரிவிர்க்கும் கிழவி நினைவில் வந்து போனார்கள்.

பூனைகள் இல்லாத வீடு - ஒரு சிறுவன் இளைஞனாகும் வரை வெவ்வேறு காலகட்டங்களில் நகரும் கதை. ரெண்டு அக்கா, அண்ணன், நன்றாக வாழ்ந்து கேட்ட குடும்பத்தில் வேலைக்கு போகாவிட்டாலும் நல்ல அப்பா, அன்பின் வடிவமாய் அம்மா, என இக்கதையின் பாத்திரங்கள் எல்லாமே மிகவும் பாசிட்டிவான கதாபத்திரங்கள். எல்லாமே நல்லா நடந்தாலும் ஒரு மெல்லிய சோகம் கதை முழுவதும் விரவியிருக்கிறது. ஆண்பிள்ளைக்கும் அம்மாவிற்கும் இடையிலான அதிகம் சொல்லப்படாத அன்பு இந்த கதை முழுவது இழையோடுகிறது.

இன்னும் இந்த தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளும் பால்ய நினைவுகளையும் அதில் நாம் சந்தித்த சின்ன சின்ன சந்தோசகளையும் சோகங்களையும் நம் இதயத்தில் இதமாக மீட்டி விடுகின்றன. நன்றி சந்திரா.

5 கருத்துரைகள்:

Krishna Prabhu said...

உடனே வாங்கி விடுகிறேன். இன்று புத்தக கடைக்கு செல்லும் போது கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் கிருஷ்ணா,
நன்றி நண்பா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்பு படித்த புத்தகம், உங்களிடம் பேசுவதற்கு முன்பு உயிர்மையில் புத்தகம் தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது, நினைவுகளை தேடி எழுதியது.

வண்ணத்துபூச்சியார் said...

அருமையான அறிமுகத்திற்கு நன்றி..

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் வண்ணத்துபூச்சியாரே, மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும். தொடர்ந்து படியுங்கள், நன்றி

butterfly Surya said...

முரளி, படித்து விட்டேன். அருமை.

இந்த பதிவை முக நூலில் பதிகிறேன்.

நன்றி..

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.