மைக்கேல் ஜாக்சன் - கிங் ஆப் பாப்

மைக்கேல் ஜாக்சன் - கிங் ஆப் பாப்


சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதி செல்கிறது.....

இசை எப்படி நாடு, மொழி, இனம் அப்பாற்ப்பட்ட விசயமாகஇருக்கிறதோ அதுபோலவே இருந்தார் மைக்கேலும். இயேசு கிருஸ்த்துவைவிட நாங்கள பிரபலமானவர்கள் என்று பீட்டில்ஸ் இசைக்குழு தம்பட்டம்அடித்துகொன்டார்கள் என்று படித்திருக்கிறேன். ஆனால் மைக்கேல்கிட்டத்தட்ட அப்படித்தான். இன்னமும் நான் முடி வெட்டிக்கொள்ள செல்லும்சலூனில் இவரது போஸ்டர் ஓட்டபட்டிருக்கும். யார் இவர் என்று கேட்டால்இவர்தான்னா மைக்கேல் ஜாக்சன், இவரு உடம்ப பார்ட் பார்ட்டாஆட்டுவாராம்" என்று சொல்லுவான். இவருடைய பாட்டு பார்த்திருகிறாயா? என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். ஆனால் தெரியும். இங்குமட்டுமல்ல உலகெங்கிலும் இப்படி நிறைய அறிமுகத்திகுட்பட்டவர்தான்மைக்கேல் ஜாக்சன்.
அனேகமாக அமேரிக்காவில் கறுப்பின மக்களில் முதன்முதலின் புகழ்பெற்ற இசைகலைஞர் மைகேல்தான். முதலில் பாடல்களை மட்டுமே எழுதி பாடிவந்த இவர் தனது நடனத்திறமையால் பாப் இசை பாடல்களில் விடியோவையும் இணைத்து அதில் வெற்றியும் பெற்றார். கிட்டத்தட்ட இவரது எல்லா விடியோ ஆல்பங்களும் ஒரு சிறிய கதையைக் கொண்டிருக்கும். ஆரம்பம், கதை மற்றும் கிளைமாக்ஸ் என ஒரு மினி சினிமாவைப் போலவே இருக்கும். பாடல் ஆரம்பிக்கும் முன்னதாக குறைந்தது ஒரு ஐந்து நிமிடங்களாவது காட்சிகள் இருக்கும், பாடல்களில் ஜாக்சனின் நடிப்புத் திறமையையும் பார்க்க முடிகிறது. அவரது திறமைதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சேர்த்தது. மைக்கில் ஜோர்டான், ஸ்பீல்பெர்க், மடோனா, கிரிஸ் டக்கர் என பலபல முக்கியஸ்தர்களும் அவரது அல்பங்களில் நடித்திருப்பது அவருடனான நடப்பில் காரணமாக மட்டுமல்ல என்பது அந்த விடியோக்களை பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும்.


1980
களின் ஆரம்பத்தில் பாப் இசை உலகில் மிகவும் புகழ் பெற்ற பாடகரானார். அவரது ஆல்பங்களை பல முன்னணி டி.வி. நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பு செய்து வந்தது. மைகேலின் வசீகரமான குரல், தேர்ந்த நடனம், அருமையான காட்ச்சியமைப்பு, கேமெரா மற்றும் அதை மக்களிடம் கொண்டு சேர்த்த விதம் இவையனைத்தும் அவரது ஒவ்வொரு படைப்புக்களையும் விற்ப்பனை சாதனையாகியது. இது ஜாக்சனின் அர்பணிப்பு இல்லாமல் நடந்துவிடவில்லை. அவரது இத்தனை சாதனைகளும் aவெறும் நாற்ப்பதுகுட்பட்ட பாடல்களில் கிடைத்திருக்கிறது என்பதன் மூலம் அவர் ஒவ்வொரு பாடலுக்கும் எடுத்துக்கொள்ளும் தனிப்பட்ட கவனம் பிடிபடும்.


டோ டாப், ரோபோ மூவ் மற்றும் மூன் வாக், இவை அனைத்தும் மைக்கேல்ஜாக்சனின் நடன கண்டுபிடிப்புகள். அதிலும் இவர்
அறிமுகப்படுத்திய மூன்வாக் நடனம் உலக பிரச்சி பெற்றது. இவரின் இசையை, நடனத்தை, காட்சியமைப்பை எத்தனையோ நாடுகள் பிரதிபலித்தது. அதுவும் இந்தியாவில் என்பதுக்கு பிறகு வந்த எத்தனையோ திரைப்பாடள்களில் மைகேலின் தாக்கம் தெரியும்.

பாடகர், நடனக்காரர் என்பதுபோக மைகேல் ஜாக்சனின் பொதுசேவை அவரை அடுத்த பரிமாணத்திற்கு எடுத்து சென்றது. அவரது பெரும்பாலான பாடல்கள் எயிட்ஸ் விழிப்புணர்வு, அணுஆயுத சோதனை எதிர்ப்பு, பசிப்பிணி எதிர்ப்பு, வன்முறை எதிர்ப்பு மற்றும் சுற்றுப்புற சுகாதாரம், குளோபல் வார்மிங் போன்ற சமுதாய அக்கறைமிக்க வரிகளியே கொண்டிருக்கும்.

இவரது இசையில், பாடல்களில் என்னை ரொம்பவும் பாதித்த சிலபாடல்களை இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இந்த மண்ணின் பாடல் Earth Song, இன்றிரவு நாம் எல்லோரும் சேர்ந்து அழுவோம் Cry, உண்மையில், அவர்களுக்கு நம்மை பற்றி எந்த கவலயும் இல்லை. They Don't really care about us,கருப்போ! வெள்ளையோ! Black or White மற்றும் பீட் இட் (இதை எப்படி தமிழாக்கம் செய்வது என்று தெரியவில்லை. சிறுவயதில் அர்த்தம் புரியாமலேயே beat it, beat it என்று கத்திகொண்டிருப்பேன். இன்னமும் அதே பீட்இட் ) , BEAT IT

இசையில் எவ்வளவோ சாதனைகள் செய்தும், புகழின் உச்சியில் இருந்த மைக்கேலின் தனிப்பட்ட வாழக்கை அவ்வளவு சந்தோசமாக இருந்துவிடவில்லை. அவரைபற்றிய எத்தனையோ கருத்துக்கள், விமர்சனங்கள் வந்தாலும் என்னை பொறுத்தவரை MJ மனதளவிலும் ஒரு மிகசிறந்த மனிதர். இசை இருக்கும் வரை அவருடைய பாடல்கள் அவரை நிருபித்துகொண்டே இருக்கும்.


http://myplay.com/video-player/michael-jackson

MJ வின் எந்த பாடல்களை பார்க்க விரும்பினாலும் மேலே குறிப்பிட்டுள்ள வலைதளத்தில் பார்க்க முடியும்.

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதி செல்கிறது.....


எது எப்படியோ உலக இன்னும் ஒரு உன்னதமான கலைஞனைஇழந்துவிட்டது. இவரது மறைவு என்னை போன்ற ரசிகர்களுக்கு மிகப்பெரியஇழப்பு. பிரமிளின் இந்த கவிதை வரிகளை மைக்கேலின் ரசிகனாக அவருக்கு சமர்பிக்கிறேன்.

மைக்கேல் ஜாக்சனின் மறைவு, என்னை போன்ற ஏராளமான இசை ரசிகர்களுக்கு பெரிய இழப்பு. என்னால் முடிந்த ஒரு சிறிய செய்திகளோடு அவரைப்பற்றி ஒரு பதிவிட இருந்தேன். நண்பர் கார்க்கி உட்ப்பட ஏற்க்கனவே பல பதிவர்கள் மைக்கேல் பற்றி நிறைய எழுதிவிட்ட பின்னும் என்னால் முடிந்த ஒரு பதிவாக ”மைக்கேல் ஜாக்சன் - கிங் ஆப் பாப்” என்கிற பதிவை எழுதியிருந்தேன். அந்த பதிவிலேயே எழுத நினைத்து எழுதாமல் விட்ட மொழிபெயர்ப்பு பாடல் இது. அவருடைய பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த "Earth Song" என்ற பாடலின் தமிழ் மொழிபெயற்ப்புதான் இந்த பதிவு.


முந்தய பதிவிலேயே எழுத நினைத்து, சரியான வார்த்தைகள் கிடைக்காததாலும், எனக்கு மொழி பெயர்ப்பு பழக்கமில்லை என்பதாலும் ஏற்ப்பட்ட தாமதத்தால் நண்பர் சிந்தனிடம் கொடுத்து இந்த பாடலை மொழிபெயர்க்க சொல்லியிருக்கிறேன். இதற்கிடையில் என் முயற்ச்சியில் சிறிது முன்னேற்றம் இருப்பதை உணர்ந்து இரண்டாவது பதிவாக இதை பதிந்திருக்கிறேன். என்னிடம் கேட்டுவிட்டு நீங்களே பதிவாக போட்டுவிட்டீர்களே? என்று சகா.சிந்தன் கோவித்துகொள்ளாமல் இருக்கவேண்டும்.இனி மைக்கேலின் மீதிருந்த பார்வையை மாற்றிய அந்த பாடலின் வரிகள்.

இதுவரை நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துவந்த
சூரியன் அஸ்த்தமித்தே போனது? மழைக்கு என்ன ஆனது? 

இதுவரை நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துவந்த இவற்றிற்கு என்ன ஆனது?

நீ நானென்று போட்டிபோட்டு சீர் செய்த உழுநிலம் எங்கே?
அதை யோசிக்க முடிகிறதா?

மனிதா! உன் கண்ணில் படாமலேயே போனதா?
இதுவரை நாம் சிந்திய ரத்தங்கள்.
 
மனிதா! உன் காதில் விழாமலேயே போனதா?
இந்த பூமியின் அழுகையும் விசும்பலும்.
 

உன் குழந்தையின் 
எதிர்காலத்திற்க்கென சேர்த்து வைத்த
அமைதி எங்கே? என்ன ஆனது?
நாம் இந்த பூமியை என்ன செய்தோம்?
செய்து கொண்டிருக்கிறோம்.
 

உனது எனதென்று கனவுகண்டுகொண்டிருந்த பூஞ்சோலை எங்கே?
அதை யோசிக்க முடிகிறதா?

மனிதா! உன் கண்ணில் படாமலேயே போனதா?
நம் குழந்தைகள் கொல்லப்படுவது. 

மனிதா! உன் காதில் விழாமலேயே போனதா?
இந்த பூமியின் அழுகையும் விசும்பலும்.
 

முன்பு, நான் கனவு காண்பேன், நட்சத்திரங்கலூடே பிரயானப்பட்டிருப்பேன்.
 
இன்று, எங்கிருக்கிறேன் என அறியாதவாறு அத்துவான காட்டிலிருப்பதாய் உணர்கிறேன்.
கடந்தகாலம் திரும்புமா? 
கடல்கள் சுத்தமாகுமா?
 
சொர்கங்கள் கிழே விழுந்து நொறுங்குகிறது.
 
நம்மால் சுவாசிக்கக்கூட முடிவதில்லை.


ரத்தம் கசியும் பூமியின் வழியை நாம் இதுவரை உணர வில்லை. 
விலைமதிப்பற்ற இயற்க்கையை நாம் அழிவின் பாதையில் செலுத்துகிறோம்.

மிருகங்கள்
 உலாவிய சாம்ராஜியத்தை புழுதிக்குள் இருத்தினோம். 
தந்தங்களை அறுத்து யானைகளை நம்பிக்கை இழக்க செய்தோம்.
 
கடலையும் கெடுத்து திமிங்கிலங்களை கதறச் செய்தோம்.
 
மரங்களை அழித்து, காடுகளை எரித்தோம்.
 
புனித பூமியை சண்டையிட்டு பிளந்தோம்.

தனிமனிதனின் சுதந்திரத்தை பறித்தோம். 
பச்சிழம் குழந்தைகளைக்கூட கொன்று குவித்தோம்.
 
மனிதா! அவற்றின் ஓலம் உன் காதில் விழவில்லையா?

இத்தனை அழிவுகளையும் நாம் ஏன் செய்கிறோம்?
 
யாரவது எனக்கு சொல்லுங்கள்.

குழந்தைகளுக்காக,
கவலை தோய்ந்த அவற்றின் பெற்றோர்களுக்காக,
 
மனிதர்களுக்காக,
அவர்களின் சந்தோசமான நாட்களுக்காக - என்று
யாரவது எனக்கு சொல்லுங்கள். 
இத்தனை அழிவுகளையும் நாம் ஏன் செய்கிறோம்?

இந்த பாடலின் வீடியோவை பார்க்க இங்கே 
க்ளிக்கவும் .
http://www.youtube.com/watch?v=pYSoZPuPmNw&feature=related


நண்பர்களே! இது வெரும் முயற்ச்சிதான். தவறுகள் இருந்தால் மன்னித்தது போக திருத்திக்கொடுங்கள்.என்னுடைய பதின்ம வயதுகளில் பள்ளியில் ஆண்டுவிழாவில் ஆடுவதற்க்கென எனக்கு என் சித்தப்பா வாங்கிகொடுத்த மைக்கேலின் ஆடியோ கேசட் மற்றும் Boney M ஆடியோ கேசட் இன்னமும் இருக்கிறது, என்னிடம். மைக்கேலின் பாடல்களை எனக்கு அறிமுகம் செய்ததும் அவர்தான். நான் என் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வேன். அவர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு, அவர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு .......................
11 கருத்துரைகள்:

ICQ said...

சூப்பர்.. நானும் ஜாக்ஸன் ரசிகன் தான். முதன் முதலிழ் டேஞ்சுரஸ் ஆல்பத்தை கேசட்டாக வாங்கி கேட்ட நாள் முதல் தீவிர ரசிகன். அவர் இன்னும் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்.

பேரரசன் said...

They Don't really care about us,கருப்போ! வெள்ளையோ! Black or White மற்றும் பீட் இட் (இதை எப்படி தமிழாக்கம் செய்வது என்று தெரியவில்லை. சிறுவயதில் அர்த்தம் புரியாமலேயே beat it, beat it என்று கத்திகொண்டிருப்பேன். இன்னமும் அதே பீட்இட் ) , BEAT IT


எனக்கும் அதே டோண்ட் கேர் அபவுட் அஸ்.. மற்றும் தோற்கடி...()ரொம்ப பிடிக்கும்...

அப்புறம் ரிமம்பர் த டைம்... மிக ரொம்ப ரொம்ப பிடிக்கும்...என்னிடம் திரில்லர் முழு விடியோ உள்ளது...

கார்க்கி said...

long live the legend..

நான் அவரின் ரசிகன் என்பதை அறிவீர்கள்..

நல்ல தொகுப்பு.. சில வீடியோக்கள் சேர்த்திருக்கலாம் சகா

Karthikeyan G said...

ஆம்.. He is a king

நல்ல கட்டுரை, பல புதிய தகவல்களுடன்..

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி சஞ்சய், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். என்னுடைய நான்காம் வகுப்பில் பள்ளியில் டான்ஸ் ஆட என்னுடைய சித்தப்பா வாங்கிகொடுத்த திரில்லர் ஆல்பம்தான் என்னுடைய முதல் MJஅறிமுகம் .

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி பேரரசன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். விரைவில் அந்த பாடலை தமிழில் பதிவு செய்கிறேன். அவசியம் படியுஙகள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

சகா, கார்க்கி, நீங்க எழுதியபின் நான் என்ன எழுத. அதான் நல்லா புல்லா எழுதிட்டிங்களே!

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி, கார்த்தி. எஙக வராம பொயிடுவிங்களோன்னு நினைச்சேன். வாங்க வாங்க......
:-)

kartin said...

luvly tribute with pramil's lines!
long live de king in hearts!

one thing!
moonwalk became the signature move of MJ but he is not the one who invented it.. it was performed before too!

முரளிகுமார் பத்மநாபன் said...

Karthi, Thanks for coming and your comment.
//one thing!
moonwalk became the signature move of MJ but he is not the one who invented it.. it was performed before too!//
Its true...

Keep reading and thank you again

த‌மிழ் said...

பிரமிளின் வரிகள் நல்ல பொருத்தம்!

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.