ஒரு தேவதை பார்க்கும் நேரமிது

வாமணன் படத்தில் வரும் பாடல், "ஒரு தேவதை பார்க்கும் நேரமிது". இன்றைய தேதியில் அனேகமாக நிறைய பேரின் ஐபாட் பாடல் மற்றும் அதிகம் முனுமுனுக்கும்பாடல் இதுவாகத்தான் இருக்கும். "வெண்மேகம் பெண்ணாக உருவானதோ" பாடலுக்கு பிறகு யுவனிடமிருந்து வெளிவந்த மிக அருமையான மெலடி இந்த பாடல். நிறைய பதிவர்கல்கூட இந்த பாடலின் நிறைகுறைகளை எழுதியவண்ணம் இருக்கின்றனர். சமீபத்தில் படித்தேன் (மன்னிக்கவும் யாருடைய பதிவென்று மறந்துவிட்டேன்) இன்னும் இதை ஹரிஹரனே பாடியிருந்தால் நமக்கு இன்னொரு "வெண்மேகம் பெண்ணாக உருவானதோ" கிடைத்திருக்கும் என்று.

என்னை பொறுத்தமட்டிலும் இந்த பாடல் அதன் உச்சபச்ச நிலையில்தானினுக்கிறது. அருமையான மெலடி டியூன். மிகச்சரியான இசை சேர்ப்பு. இதுபோக இன்னமும் குரல் மூலமாக இந்த பாடலை மேருகேற்றிவிட முடியாது என்று நினைக்கிறேன். மேலும் இந்த பாடலை பாடிய ரூப் குமார் ரதோட் மிகவும் அனுபவித்து பாடியிருப்பார். சில வருடங்களாக அவரது பாடல்கள் சிலவற்றை கேட்டுக்கொண்டுதான் வருகிறேன். ஒவ்வொரு பாடல்களிலும் வியக்கத்தக்க முன்னேற்றம் இருக்கின்றன அவரது பாடல்கள். அனேகமாக அவரது பாடல்கள் நல்ல மெலடியாகத்தான் இருந்திருக்கிறது. இவரது மனைவிகூட ஒரு பாடகிதான், சோனாலி ரத்தோட். அவர்களை பற்றி அதிகம் தெரியவில்லை. இவர்கள் இருவரும் இணைந்து நிறைய பாடல்கள் ஆல்பங்கள் செய்திருக்கிறார்கள். ஹிந்தியில் சமீபத்திய வெளியான சூபி பாடல் ஆல்பங்களில் ஒன்றான TERI JUSTAJOO என்ற ஆல்பத்தில் இவர் பாடிய "சாவரே" என்ற பாடல் அவசியம் கேட்டுபாருங்கள். அதற்கான வீடியோ சுட்டியை இங்கே இணைத்துள்ளேன். http://www.youtube.com/watch?v=7KxdpDpOQKU


மேலும் ஹிந்தியில் அன்வர் என்ற படத்தில் இவர்பாடிய "மோலா மேரி மோலா" என்ற பாடல் வடக்கே ஏக பிரசித்தம், அந்த பாடலுக்கான சுட்டி இங்கே, http://www.youtube.com/watch?v=7KxdpDpOQKU

இந்த இரண்டு பாடல்களும் சூபி இசை வகையை சேர்ந்தது. நமக்கு கர்நாடக சங்கீதம் போல பாகிஸ்தானின் முஸ்லிம்களின் இசைவடிவம் சூபி. என்று நண்பர் சிவா அடிக்கடி சொல்லுவார். விரைவில் சூபி இசை குறித்து ஒரு பதிவெழுத இருக்கிறேன்.

அப்புறம் ஒரு சந்தேகம்: இந்த பாடல்தான் இவருக்கு தமிழில் அறிமுகப்பாடலா? இதுகுறித்து எனக்கும் எண் நண்பனுக்கும் நிறைய வாக்குவாதம் நடந்துவிட்டது. அவன் விக்கிபீடியாவின் உதவியுடன், ரத்தோட் ஏற்க்கனவே மின்னலே படத்தில் "வெண்மதி வெண்மதியே நில்லு" என்ற பாடலை பாடியிருக்கிறார் என்கிறான். நான் அந்த தகவலை பார்த்தபின்னும் அந்த பாடலை ஹரிஹரன்தான் பாடியிருக்கிறார் என்று உறுதியோடு சொல்லிகொண்டிருக்கிறேன். விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் கொடுங்கள் .

14 கருத்துரைகள்:

பேரரசன் said...

எப்படீங்க ,1 1/2 மாசமா நான் முனுமுனுக்கும் பாடல்...அது..அந்த பாட்டுக்காகவே , எல்லாரும் படம் நல்லா இல்லைன்னு சொன்ன போதும் பார்த்தேன்...
படம் பரவாயில்லை , பார்க்கலாம்..ஆனா அந்த இரண்டு பாடல்களும்...சூப்பர் , நீங்க பார்த்தாச்சா..

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி பேரரசன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும். நானும் பார்த்துவிட்டேன். அந்த சுட்டிகளில் குறிப்பிட்ட பாடல்களை பார்த்தீர்களா?

மின்னுது மின்னல் said...

+ve

கருத்து அப்புறம்

:)

ஜோசப் பால்ராஜ் said...

மெலடி பாட்டுன்னா தேடித் தேடி கேட்பேன். மிஸ் ஆயிருச்சு. இன்னமும் கேட்கல. கேட்டுட்டு வந்து கருத்து சொல்றேன்.

கார்க்கி said...

வெண்மதி வெண்மதியே நில்லு ஹரிஹரன் அல்ல, ரூப்குமார் ராத்தோடதான்.. ஹரிஹரன் பாடியும் ரெக்கார்ட் செய்யப்பட்டது. ஆனால் படத்தில் வருவது ரூப்குமாரின் குரல்..

அது மட்டுமின்றி, நினைத்தாலே என்ற படத்தில் இரு பாடல்கள் பாடி இருக்கிறார்.இசை விஜய் ஆண்டனி.

தெய்வம் said...

வெண்மதியே பாடலை பாடியவர் ரூப்குமார் அவர்களே. அவரை தமிழுக்கு அறிமுகம் செய்தது ஏ.ஆர்.ரஹ்மான். எந்தப் பாடல் என்று நினைவில்லை.


said...

உங்கள் நண்பர் சரியான தகவலைத் தான் கொடுத்திருக்கிறார். ரூப் தமிழில் பாடிய முதல் பாடல் மின்னலே படத்தில் இடம் பெற்ற வெண்மதி பாடல்தான். திப்புவோடு பாடி இருந்தார்.

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் மின்னுது மின்னல், பாசிடிவ் கருத்துக்கள் அப்புறம்ன்னா, என்னை சொல்றீங்களா? இல்ல அப்புறமா சொல்லறேன்னு சொல்லறீங்களா? :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் ஜோ, நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், நான் பாட்டை மெயில்ல அனுப்பி பார்த்தேன், ஆனா போகலை. வீட்ல ட்ரை பண்ணுங்க. ரொம்ப நல்ல பாட்டு அவசியம் கேளுங்க

முரளிகுமார் பத்மநாபன் said...

கார்க்கி, வணக்கம் சகா, நன்றி சகா கடைசியா நான் சொன்னது தப்புன்னு எல்லோரும் சொல்லிடிங்கள்ளே!:-(

முரளிகுமார் பத்மநாபன் said...

தெய்வமே வணக்கம், நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி விமலா , உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். கார்க்கிக்கும் உங்களுக்கும் நன்றி, சரியான தகவலை கொடுத்தமைக்காக

பரிசல்காரன் said...

//(மன்னிக்கவும் யாருடைய பதிவென்று மறந்துவிட்டேன்//

:-(((

எனை மறந்ததேன்.. நெஞ்சமே..நெஞ்சமே...

முரளிகுமார் பத்மநாபன் said...

ஐயோ தல உங்களையா மறந்தேன்? மன்னிச்சிகோங்க :-(

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.