வாழ்க்கை மிகவும் அழகானது, அதை உணரும்போது


இது நான் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை "வாழ்க்கை மிகவும் அழகானது, அதை உணரும்போது, சின்ன சின்ன சந்தோசங்களின் தோரணம்தான் வாழ்க்கை. இந்த வினாடியின் ஒற்றை சிரிப்புதான் உன்னை அடுத்த வினாடிக்கு ஆயத்தமாக்குகிறது."

ஏற்க்கனவே இது என்னுடைய கட்டிபிடி வைத்தியம் என்ற பதிவில் எழுதியதுதான். இப்பொழுது, என்னுடைய எழுத்தையும் படித்து, அதற்கென "ரசிக்கக்கூடிய பதிவுதான்" என்று விருது கொடுத்திருக்கும்
நண்பர் ஜெகனுக்காக ( http://jaganathank.blogspot.com/2009/07/blog-post_20.html ) இதை மறுபடியும் எழுதுவதை சந்தோசமாக உணருகிறேன்.

ஏனென்றால் நான் சுமார் ஒன்னரை வருடங்களாக பதிவெழுதி வருகிறேன். முதலில் எனக்கு இதன் வீரியம் தெரியாமல் நானும் எதோ எழுதுவேன், போஸ்ட் செய்வேன். நானே அதை படித்துகொள்வேன். நண்பர்களிடம் கூட இதைப்பற்றி அதிகம் சொன்னதில்லை. ஒருமுறை நண்பர் செல்வம் (கடலையூர்) என்னுடைய மின்னஞ்சல் கிடைக்கபெற்று அதில் கையெழுத்து பகுதியில் குறிப்பிட்டிருந்த அன்னுடைய பதிவ்னை படித்துவிட்டு, "முரளி உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது, ஏன் அதிகம் வெளிப்படுத்தாமல் இருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் தமிழ்மணத்தில் இணையக்கூடாது?" என்று சொன்னார்.(எனக்கு கிடைத்த முதல் பாராட்டு அதுதான்).

உண்மையில் எனக்கு வலைப்பதிவின் அடிப்படை எதுவும் தெரியாது.அதுவே காரணம். செல்வத்தின் அறிமுகம் மூலமாக தமிழ்மணம், தமிழிஷ் போன்ற பதிவுதிரட்டிகளில் பதிந்துகொண்டேன். முதல் காரணம் விளம்பரம்தான். இதை சொல்லவதில் எனக்கு எந்த மாற்றுகருத்தும் இல்லை. ஆனால் பிறகு இதன் மூலமாக ஒரு நல்ல நடப்பு வட்டம் கிடைக்கபெற்றேன். ஒத்த சிந்தனைகளுடன், ஒரே அலைவரிசையுடன் நண்பர்களை தேடிக்கொண்டிருக்க முடியாது. தேடவும் கூடாது. ஆனால இங்கே எல்லாம் அதுவாக கிடைக்கபெற்றேன்.

இதுவரையில் நான் எழுதுவதையும் படித்து, என்னை தொடர்ந்து என்னுடன் வந்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டு வந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும், இனி என்னை தொடரப்போகிறவர்களுக்கும், என்னுடன் வரபோகிரவர்களுக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றிகள்.இதையே ஒரு தொடர் பதிவாக, எழுதசெய்த "செந்தழழ் ரவி" அவர்களுக்கும் எனது நன்றிகள். உண்மையிலேயே இது நல்ல விஷயம். எனக்கு கொடுக்கப்பட்ட இந்த சந்தோசத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில்தானே, உண்மையான சந்தோசம் இருக்கிறது.இதோ இவர்கள்தான் அவர்கள்.

கிருஷ்ணபிரபு: http://online-tamil-books.blogspot.com/
புத்தகப்பிரியர், இவரது பதிவில் நல்ல புத்தகங்களுக்கு அறிமுகமும், சிலசமயங்களில் விமர்சனமும் செய்து வருகிறார். வெறும் புத்தக அறிமுகம் மட்டுமின்றி அதன் விலை, எந்த பதிப்பகம், ஆசிரியர் பற்றிய குறிப்புகள் என அந்த புத்தகம் சார்ந்த விசயங்ககளையும் எழுதுவது இவரது தனித்தன்மை. பதிவுலகத்திற்கு வந்த பிறகு இவருடைய பரிந்துரையின் பேரில்தான் புத்தகங்கள் படிக்கிறேன். எல்லோருக்கும் பிடித்துபோகக்கூடிய புத்தகங்களையே அறிமுகம் செய்வது இவரது பலம். கிருஷ்ணா மறுக்காமல் வாங்கிகொள்ளுங்கள், உங்கள் நண்பனின் இந்தவிருதை.


அன்புடன் அருணா : http://naanirakkappokiraen-aruna.blogspot.com/
அருணா மேடம், இவங்களிடம் பெரிய அறிமுகம் இல்லை. என்றாலும் எங்கு நல்ல பதிவைப் பார்த்தாலும் ஓடிவந்து பூங்கொத்து கொடுத்து பாராட்டும், அழகிற்காகவே இவர்களுக்கு இந்த விருது. தேடிச்சோறு நிதம் தின்று ... எனத்தொடங்கும் இந்த பாடலை என்னுடைய எல்லா நாட்குறிப்புகளிலும் முதல் பக்கத்தில் எழுதிவைதிருப்பேன். மேடத்தோட பதிவிலும் இதைத்தான் முதலில் நான் பார்த்தேன், என்பது கூடுதல் விஷேசம். டீச்சர் இந்தாங்க என்னோட விருதும், பூங்கொத்தும்.


வண்ணத்துபூச்சியார் : http://butterflysurya.blogspot.com/
புத்தகத்திற்கு கிருஷ்ணா என்றால் உலக சினிமாவிற்கு, சூர்யாதான். இவருடைய விமர்சனங்களுக்கு பிறகு நான் பார்த்த நல்ல படங்கள் எத்தனையோ சொல்லலாம். குறிப்பாக White Ballon விமர்சனத்தை படித்தபின் அந்த படத்தை எப்படியாவது பார்த்தே தீரவேண்டுமென்று அலைந்திருக்கிறேன். (இன்னும் பார்க்கவில்லை, சூர்யா DVD ஏற்ப்பாடு பண்ணுங்க). எப்படி இவ்வளவு பொறுமையுடனும், நேர்த்தியாகவும் ஒரு திரைப்படத்தை பார்க்கமுடிகிறது என்று நான் பலமுறை பொறாமையோடு படித்தவர்தான் வண்ணத்துபூச்சியார். சூர்யா, நண்பனின் இந்த விருதை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளவும்.


சிந்தனிடமிருந்து , http://www.sindhan.info/
சிந்தன், கம்யூனிச சிந்தனைவாதி. அரசியல் ஆர்வம் கொண்டவர். இத்துனை இளம் வயதில் இவ்வளவு கொள்கைகளுடனும் குறிக்கோளுடனும் எழுதிவருகிறார். பத்திரிகை துறையில் இருப்பதால் அதிகம் எழுதமுடிவதில்லை என்று நினைக்கிறேன். இவருடைய இன்னொரு தனித்தன்மை புகைப்படம் எடுத்தல், அதைக்கூட இன்னொரு பதிவாக தொடரலாம் என்பது என் விருப்பம். தம்பி நிறைய எழுத வேண்டும், நிறைய பயனுள்ள அரசியல் பதிவுகளை எழுதவேண்டும் என்கிற கட்டளையுடன் இந்த விருதை கொடுக்கிறேன்.

சக்கரை http://www.sakkarai.com/
சுரேஷ், மச்சான். ஒருமுறைதான் பேசியிருக்கிறேன். பேசிய முதல் நாளே நன்கு அறிமுகம் ஆனதுபோல மிகுந்த நட்புடன் பேசியது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். எனக்கு இவருடைய POSITIVE ATTITUDE மிகவும் பிடிக்கும். பேச்சிலும் சரி எழுத்திலும் சரி. இவருடைய எழுத்தில் நக்கலும் நையாண்டியும் அதிகம் இருந்தாலும், ஒருவித சமுதாயபொறுப்புணர்வு இழையோடும் எழுத்துக்கள். நண்பா, இந்தாபிடி என்னோட விருதை.


அப்புறம் ஸ்பெசலா கார்க்கி : www.karkibava.com
கார்க்கி : இதை நான் இவருக்கு கொடுக்க காரணம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் நானே சொல்லேறேன். கார்க்கியின் நன்கைச்சுவை உணர்வு. எதையுமே சீரியஸா யோசிக்கவே மாட்டானா இந்த மனுசன்னு குழம்படிக்கிற எழுத்துக்கள், இவருடையது. தப்பா சொல்லல, இப்படியே இருங்க சகா. அப்புறம் குறிப்பாக இவரின் "புட்டிகதைகளுக்கு" நான் அடிமை. சகா Have it, My Small Gift.
இன்னும் நிறைய பேர்,
இருக்கிறார்கள் எனக்கு பிடித்த பதிவர்கள் வரிசையில். பெரும்பாலான பதிவர்களுக்கு ஏற்க்கனவே இந்த விருது கொடுக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் ஒருவழியாக, நானும் எனக்கு பிடித்த பதிவுகளுக்கு விருதுகளை கொடுத்துவிட்டேன்.


நண்பர்களே, எனக்கு விருதுகொடுக்கும் அளவிற்கு எந்த பெருமையும் இல்லாவிட்டாலும். என்னுடைய சந்தோசங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த விருதையும் உங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன். சிலருக்கு இது உந்துசக்தியாக இருக்கலாம், சிலருக்கு வாழ்த்தாக இருக்கலாம் அல்லது சிலருக்கு கௌரவமாக இருக்கலாம். எது எப்படியோ?


தொடரந்து எழுதுங்கள்,
நிச்சயம் உங்களுடைய பதிவு
"ரசனைக்குரிய பதிவு" .


இது உங்கள் நண்பன் உங்களுக்காக கொடுத்த விருது.
மறக்காம இந்த படத்தை வெட்டி உங்க பதிவுல ஒட்டிகொள்ளுங்கள்.17 கருத்துரைகள்:

கார்க்கி said...

விருதை விட, என்னைப் பற்றி எழுதிய வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி சகா..

Krishna Prabhu said...

உங்களுடைய மின்னஞ்சலைப் பார்த்தேன் முரளி. மிக்க மகிழ்ச்சி. என்னை நினைவில் இருத்தி உங்களுடைய பதிவில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

முரளிகுமார் பத்மநாபன் said...

கார்க்கி, நன்றி எல்லாம் வேண்டாம் சகா, தொடர்ந்து சிரிக்க வையுங்கள். அது போதும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

கிருஷ்ணா, நன்றி வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன் அருணா said...

அட....அழகான ஆச்சரியம்.....நன்றி...நன்றி
//வாழ்க்கை மிகவும் அழகானதுதான், அதை உணரும்போது//.....இந்த வினாடியின் ஒற்றை சிரிப்புதான் என்னை அடுத்த வினாடிக்கு ஆயத்தமாக்குகிறது........

முரளிகுமார் பத்மநாபன் said...

நோ தேங்க்ஸ் டீச்சர். கீப் ரைட்டிங், கீப் ஆன் ரைட்டிங்....
:-)

ஆதவா said...

வாழ்த்துக்கள்!!
விருது பெற்றவர்கள் அனைவரும் நல்ல எழுத்தர்கள்!!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

பதிவர்களை அறிமுகம் செய்த விதம் ரொம்ப அருமை ,குறித்துக் கொண்டேன்.
நல்ல பதிவு .
ஒட்டு போட்டாச்சு

சந்ரு said...

உங்களுக்கும் உங்களால் விருது பெறும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.....

முரளிகுமார் பத்மநாபன் said...

வாங்க ஆதவா, எங்க ரொம்ப நாளா கானோம், நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்


கார்த்தி, வணககம். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். தொடர்ந்து படியுங்கள்.

நன்றி, சந்ரு. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

ஆதவா said...

கொஞ்சம் பிஸிதான் நண்பரே!!! வேலைப்பளு மிக்க சமயங்களில் வரமுடிவதில்லை!!!

Suresh said...

நண்பா விருதை விட உங்க அன்பும் பாசமும் நேசமும் நட்பும் அதிகம் தெரிந்தது ... நன்றி சகா...

என்னை பற்றிய உங்க பார்வை மிக சரியாக இருக்கிறது ;) நான் ஒருவரிடம் பேசும் போது பார்பவர்கள் அவர் உங்க காலேஜ் பிரண்டா என்பார்கள் இல்லை இப்போ தான் பழக்கம் என்றால் ;) நம்பமாட்டார்கள்

நன்றி என்னும் சொல் செரியா இருக்காது ;) மச்சான் சந்தோசமா இருக்கேன் ;) விருதை மனமார எற்கிறேன் கொடுக்குற மனசுல நீ கர்ணன் ;)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி, ஆதவா. இரண்டுமுறை நடந்த சந்திப்பிலும் உங்களை பார்க்க முடியவில்லை

முரளிகுமார் பத்மநாபன் said...

மச்சான், நான் கர்ணன் இல்ல, வெறும் கைப்புள்ளதான், ஆனா என்ன குடுக்குறதுன்னு முடிவு பண்ணிட்டா, இந்த கைப்புள்ள கர்ணனா மாறிடுவான்.
:-)ஹி ஹி

SanjaiGandhi said...

எல்லாருக்கும் வாழ்த்துகள்.. :)

வண்ணத்துபூச்சியார் said...

நன்றி முரளி.


அன்பின் மிகுதியால் பல நண்பர்கள் இதை எனக்கு பரிந்துரைத்து விட்டாலும் நீங்கள் சிலாகித்து எழுதியது மிக மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

தொடர்ந்து கடந்த வாரம் வேலை பளுவாலும் சனியன்று ஆஹா FM ஒலிப்பதிவு என்று கொஞ்சம் பிஸியாகிவிட்டேன்.

ஒரு மெயில் தட்டியிருக்க கூடாதா?? இப்போதாவது தட்டுங்கள்.

DVD தானே.. இந்த வாரமே வந்து சேரும்.

மேலும் மேலும் பொறுப்புடன் எழுத தூண்டுகிறது உங்கள் வார்த்தை.

நன்றி என்பது சிறிய வார்த்தை.

வேறு என்ன சொல்ல முடியும் என்னால்??

மிக்க மகிழ்ச்சி முரளி.

அனைவருக்கும் வாழ்த்துகள்.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.