சுஃபி இசை ஒரு அறிமுகம்

ஏற்க்கனவே ரொம்ப நாளாக எழுத வேண்டுமென்று நினைத்த பதிவு, கடைசியாக ரூப் குமார் ரதோட் பற்றிய பதிவிலேயே எழுத நினைத்து பதிவுன் நீளம் கருதி தனிப்பதிவாக எழுதுகிறேன்.
எல்லா மதத்திலும், இசை - ஒரு வழிபாட்டின் கருவியாகவே இருந்து வருகிறது. கூட்டு வழிபாட்டிற்கு இசையை பயன்படுத்துவது, அனேகமாக எல்லா மதங்களிலும் எல்லா காலகட்டங்களிலும் இருந்துவந்திருக்கிறது. கடவுளை வாழ்த்தவும் வணங்கவும், நமதுமுன்னோர்கள் இசையையே பயன்படுத்தியிருக்கின்றனர். தென்னிந்தியாவில், (தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில்) கர்நாடக , இசை பரவலாகஎல்லாராலும் பின்பற்றப்படுவதைபோல, சுஃபி இசையானது பாகிஸ்தான், துருக்கி, உஸ்பெகிஸ்தான், என பொதுவாக எல்லா முஸ்லீம் நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.


சுஃபி - பொதுவாக இது முஸ்லிம்களின் இசை. இன்றைக்கும் மசூதிகளில் திரு குரானை ஓதும் முறைகூட ஒருவகையில் சுஃபி இசையின் ஒரு வடிவம்தான் என்று பட்டிருக்கிறேன். (தவறு என்றால் தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும்.)சுபி இசை பெரும்பாலும் கவாலி (Qawwali) இசை என்றே அதிகம் அறியப்படுகிறது. சுபியின் மற்றுமொரு வடிவம்தான் கவாலி இசை.முதலில் மெல்லிய ஹார்மோனியமும் அதனை தொடர்ந்து மிருதுவான தபேலா அல்லது டோலக், பிறகு உச்சஸ்தாயில் ஆலாப், அதன்பின் தேவைப்பட்டால் கவிதை அல்லது பாடல். இதுதான் சுஃபி இசையின் வடிவம். பெரும்பாலும் ஹார்மோனியமும் தபேலாவுமே இதன் இசைக்கருவிகளாக செயல்படுகிறது.இந்தியாவில் மொகலாயர்களின் வருகைக்கு பின்னர் இந்திய பாரம்பரிய இசையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்ப்பட்டு இன்றைக்கு இந்தியாவின் தொன்மையான இசையாக அறியப்பட்டு வரும் "ஹிந்துஸ்தானி" இசை கிடைத்தது. அனேகமாக, அது வரையில் இந்தியாவில் பயன்பாட்டிலிருந்த மெலடி என்று அறியப்படுகிற தனியிசை மருகி ஹார்மோனி அல்லது ஆர்கெஸ்ட்ரா என்று அறியப்படுகிற கூட்டிசையோடு இணைந்து "ஹிந்துஸ்தானி இசை"யாக உருமாறியது. இந்த "ஹிந்துஸ்தானி" இசையை பாடும் ஹிந்துக்கள் "பண்டிட்"என்றும் முஸ்லிம்கள் "உஸ்தாத்" என்றும் அழைக்கபடுவதாய் படித்திருக்கிறேன். இந்த கலவைக்கு முந்திய் இசைவடிவம்தான் சுஃபி.முன்பெப்போதும் இல்லாத அளவில் தற்பொழுது, இந்தியாவில் பாகிஸ்தானி முஸ்லீம் இசைக்கலைஞர்களின் இசை பெரிதும் அங்கீகரிக்கப்பட்டிருப்பதற்க்கு "நுஸ்ரத் பதே அலி கான்", உஸ்தாத் சுல்தான் கான்" மற்றும் இளைய தலைமுறை இசைகலைஞரான "அதிப் அஸ்லாம்" என நிறைய உதாரணம் சொல்ல முடியும். இவர்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு ஒற்றுமை, சுஃபி இசை. மற்றும் எந்த கலப்படமும் இல்லாமல், நல்ல இசையை கொடுத்ததால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கிறது.ஆனால் சுஃபி, கசல், க்கவ்வாளி என பல இசை வடிவங்கள் துருக்கி மற்றும் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதியானவையே. அதலால் இந்தியாவில் கிடைக்கும் இந்த இசைவடிவங்கள் சிற்ச்சில கலப்புக்களை கொண்டிருப்பது தவிர்க்க இயலாதது. இசைக்கு இன, மொழி, மத வேறுபாடுகள் கிடையாது. ஆகவே சுஃபி இசை, இசையை விரும்பும் நம் எல்லோருக்கும் பொதுவானது.


பொதுவாக மனிதனுக்கு இசையின் தேவை அவனது தனிமையை அகற்றுவதற்காக தேவைப்படலாம், மென்சோகத்தை வெளிப்படுத்த தேவைப்படலாம், அதீத பகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருக்கலாம் அல்லது இறைவனை அடைவதை இருக்கலாம். ஆக இசை, மனிதனுக்கு இந்த மூன்றையும் கொடுப்பதியிருக்க வேண்டியது அவசியம். சுஃபி இசையை பொறுத்தமட்டிலும், அதன் சிறப்பு என்னவென்றால் அது தனக்குள்ளேயே ஒரு தனிமையை கொண்டிருக்கும், மெல்லிய சோகம் ஒளிந்திருக்கும், ஒரு சாதுவின் மகிழ்ச்சியை பெற்றிருக்கும் இந்த மூன்றுமே சரிவர இணையபெற்றதுதான் சுஃபி இசை.


நமது இந்திய இசையமைப்பாளர்களில் தற்சமயம் சுஃபி இசையை கையாள்வது, ஏ.ஆர்.ரகுமான். அவரது "ரோஜா", "பம்பாய்", தற்பொழுது "குரு", "ஜோதா அக்பர்", "தில்லி 6" என்று பல படங்களில் சுஃபி இசையை லாவகமாக கையாண்டிருப்பார்.அவருடைய சமீபத்திய ஆல்பங்களில் அதிகமாக சுபி, கவாலி இசையையே உபயோகப்படுத்தியிருப்பார்.


(என்னை பொறுத்தவரை தற்பொழுது, இன்றைய தேதியில் இசையமைத்திருக்க வேண்டிய முக்காலா போன்ற பாடல்களை பத்து வருடங்களுக்கு முன்பே இசையமைத்த ரகுமானின் இசைதேடல் தற்சமயம் சுபி இசை சார்ந்ததாக இருக்கிறது. இது அவருடைய விரிந்த தேடலை குருக்குவதாய் உணர்கிறேன். இந்தியன் , காதலன் மற்றும் அவரின் முந்தய படங்களில் ஐந்து பாடல்கள் ஐந்து விதமாக இருக்கும். இந்தியன் போன்ற ஒரு அல்பத்தை ரகுமானால் இப்பொழுதும் கொடுக்க முடியுமா? என்ற சந்தேகம் வருகிறது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து)


ஆக இதயங்களை இணைக்கும் இசையை ரசிப்போம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளில் மனதை கிறங்கடிக்கும் சுபி இசையை கேளுங்கள், பாருங்கள்.கீழ்கண்ட சுட்டிகளை சொடுக்கி வீடியோவை பார்க்கத்தவரியவர்கள் நல்ல இசையை காணத்தவறியவர்கள் ஆவீர்கள்.
நமது சின்னகுயில் சித்ராவும், உஸ்தாத் சுல்தான் கான் இருவரும் இணைந்து பாடிய "பியா பசந்தீ ரே என்ற பாடல்
http://www.youtube.com/watch?v=ZpRnItjT4noஹிந்தியில் சமீபத்திய வெளியான சூபி பாடல் ஆல்பங்களில் ஒன்றான TERI JUSTAJOO என்ற ஆல்பத்தில் "சாவரே" என்ற பாடல்
http://www.youtube.com/watch?v=7KxdpDpOQKU


ஹிந்தியில் அன்வர் என்ற படத்தில் "மோலா மேரி மோலா" என்ற பாடல் http://www.youtube.com/watch?v=7KxdpDpOQKU


ஜோதா அக்பர் படத்திலிருந்து க்வாஜா மேரே க்வாஜா பாடல் http://www.youtube.com/watch?v=0smj7l-nlaA&feature=related


பம்பாய் படத்திலிருந்து கண்ணாளனே பாடல்
http://www.youtube.com/watch?v=q8dac0QRn8k


வெறும் சுஃபி இசை மாத்திரம்
http://www.youtube.com/watch?v=z10JD59W1w4


குரு படத்திலிருந்து தேரே பினா பாடல்
http://www.youtube.com/watch?v=BhB92yZ-jLo


--------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவில் எனக்கு தெரிந்தவற்றையே எழுதியிருக்கிறேன்.
இதில் தவறான செய்திகள் எதுவும் இருந்தால்,
தயவு செய்து தவறாக நினைக்காமல் திருத்தி தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
--------------------------------------------------------------------------------------------------

16 கருத்துரைகள்:

cheena (சீனா) said...

கஃபி இசை பற்றி ஒரு நல்லதொரு அறிமுகம் - நல்வாழ்த்துகள் முரளி

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி சீனா சார், தொடர்ந்து படியுங்கள்

வெயிலான் said...

எளிய முறையில் தெளிவா புரியற மாதிரி சொல்லியிருக்கீங்க!

நல்லாருக்கு முரளி!

வண்ணத்துபூச்சியார் said...

பகிர்விற்கு நன்றி முரளி.

VSK said...

நல்ல தேர்வுகள்! நல்ல இசை! நல்ல பதிவு! கேட்டிட இனிமை!நன்றி!

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி வெயிலான்,நன்றி சூர்யா, நன்றி VSK,தொடர்ந்து படியுங்கள். கருத்துக்கள்
தெரிவியுங்கள்.

கார்க்கி said...

நல்ல அறிமுகம் சகா.. சூஃபி என்ற பதிவில் கைலாஷ் கேர் பற்றி சொல்லாதது எனக்கு கொஞ்சம் வருத்தம்.

அலைபாயுதேவில் வரும் சினேகிதனே பாட்டின் மூலம் ஒரு சூஃபி பாடல். உஸ்தாத் என்ரே நினைக்கிரேன். குறிப்பாக பாடலுக்கு முன்பு வரும் “நேற்று முன்னிரவில்” என்ர வரிக்கு பதில் உஸ்தாதின் குரலே பதிவு செய்யப்பட்ட சிடிக்களும் உண்டு. ரகுமான் ஒரு இஸ்லாமியர் என்பதால் அவருக்கு சூஃபி இசை மீதும், அந்த கலைஞர்கள் மீதும் பேரன்பு உண்டு.

Karthikeyan G said...

Ji, இருவர் படத்தில் வரும் "பூ கொடியின் புன்னகை" சுஃபியா? கஜலா?

that was a superb song..

முரளிகுமார் பத்மநாபன் said...

சகா, எனக்கும் கைலாஸை விட்டுட்டோமேன்னு தோனுச்சு, விடுங்க அடுத்தபதிவுல எழுதிடுவோம்

முரளிகுமார் பத்மநாபன் said...

வாங்க கார்த்தி, அது சுத்த கர்னாடகம். ராகம் தெரியலை கர்னாடக சங்கீதம் அவ்வளவு பரிட்ச்சயம் இல்லை

எம்.எம்.அப்துல்லா said...

//அலைபாயுதேவில் வரும் சினேகிதனே பாட்டின் மூலம் ஒரு சூஃபி பாடல்

//

இல்லை.அது சூஃபி மூலம் அல்ல. அது “சுபஹபந்துரவாலி” ராகத்தின் மேல் அமைக்கப்பட்டது.

எம்.எம்.அப்துல்லா said...

//இன்றைக்கும் மசூதிகளில் திரு குரானை ஓதும் முறைகூட ஒருவகையில் சுஃபி இசையின் ஒரு வடிவம்தான் என்று பட்டிருக்கிறேன். (தவறு என்றால் தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும்.)

//

இல்லையண்ணா. புனித குரானின் ஓலிவடிவம் சூஃபி இசை அல்ல. இரண்டும் முற்றிலும் வெவ்வேறு. குரான் இசைவடிவில் ஓதப்படுவது அல்ல.


முரளி அண்ணே சூஃபி பாடல்கள் சொல்லவருவது வேறு ஓன்றுமில்லை...நீங்கள் (மொக்கை மெயிலில்) மெயில் அனுப்பும்போது அடியில் ஒரு வார்த்தை சேர்க்கின்றீர்களே “அன்பே சிவம்” அப்பிடின்னு... அதேதான்.

அளவுகடந்த வேலையால் விரிவாக எழுத முடியவில்லை. பிரிதொரு சந்தர்பத்தில் விரிவாக பேசுவோம்.
கர்நாடக இசை ராகங்களில்
ஏதேனும் சந்தேகம் எனில் மெயில் பண்ணுங்க.

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம், அப்துல்லா அண்ணே, ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
கார்த்தியின் இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் //இருவர் படத்தில் வரும் "பூ கொடியின் புன்னகை" சுஃபியா? கஜலா?//
//நீங்கள் (மொக்கை மெயிலில்) மெயில் அனுப்பும்போது அடியில் ஒரு வார்த்தை சேர்க்கின்றீர்களே “அன்பே சிவம்” அப்பிடின்னு... அதேதான்// அது என்னோட சிங்னேச்சர் மெசேஜ்ண்ணா...
அவசியம் தொடர்புகொள்கிறேன். மிக்க நன்றி.

Anonymous said...

//இருவர் படத்தில் வரும் "பூ கொடியின் புன்னகை" சுஃபியா? கஜலா?//


அது கஜல்.

எம்.எம்.அப்துல்லா

Prakash said...

நான் பாகிஸ்தானிய இசையை பற்றி எழுதும் முன் யாரேனும் எழுதியிருக்கிறார்களா என்று பார்த்தேன் , எழுதியிருக்கிறீர்கள்.

சூஃபியின் ஒரு பிரிவு கவ்வாலி என்று வைத்து கொள்ளலாம் போல , வெவ்வேறு texture அதற்க்கு இன்றளவில் இருக்கின்றன.

நாஞ்சில் பிரதாப் said...

அருமையான அலசர் முரளி... அன்வர் படத்தில் வரும் மோலா மேரே மோலா... சூஃபி இசை பாடல்தான் என்ற கருத்தை எனது நண்பர் மறுத்தார். இப்போது தெளிவாகிவிட்டது.... நன்றி

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.