Akon - எகோன்

வெகு சமீபத்தில் அறிமுகப்பட்டு நான் மிகவும் ரசிக்கும் இன்னுமொரு இசை வடிவம்தான் ஹிப்-ஹாப். இன்றைய தமிழ் திரைப்படங்களில் அதிகம் உபயோகப்படுத்தப்படும் இசை வடிவம்தான் ராப் மற்றும் ஹிப்-ஹாப். ராப் என்பது சரியான இசைகோர்ப்புடன் பாடல் வரிகளை வசனங்களைப் போல படிப்பதுதான். காதலன் படத்தில் ஏ.ஆர். ரகுமான் "பேட்டை ராப்" என்ற பாடலில் செய்திருப்பாரே அதுதான். இப்பொழுது தமிழிலேயே நிறைய ராப் பாடகர்கள் வந்துவிட்டனர். "யோகி பி", "நட்சத்ரா" இப்பொழுது "கவிதை குண்டர்" என பல ராப் பாடகர்கள் நல்லமுறையில் பாடிவருகின்றனர். ஹிப்-ஹாப் என்பது அமெரிக்க ஆப்பிரிக்க இசையின் கலவை வடிவம்தான். இதில் ஒரு நல்ல மெலடியும் இருக்கும், அதே சமயம் வெஸ்டர்ன் மியூசிக் என்று சொல்லக்கூடிய அமெரிக்க இசையும் கலந்திருக்கும். வெகு இனிமையான பேளட் டிரம்ஸும், இன்னபிற வெஸ்டர்ன் சங்கதிகளும் சரிவர இணைந்த ஒரு வடிவம்தான் ஹிப்-ஹாப்.

இன்றைய தேதியில் அனேகம் பேரால் ரசிக்கபடுகிற ஒரு ஹிப்-ஹாப் பாடகர்தான் எகோன்।அகோன் என்று அறியப்படுகிற இவரது இயற்பெயர் அலியவுன் பதரா அகோன் தியாம். முஸ்லிம். மதத்தைசேர்ந்த அமெரிக்க கறுப்பினத்தவர். எகோனுக்கு அவரது குரல் ஒரு வரபிரசாதம், அப்படி ஒரு பெக்குலியர் வாய்ஸ் அவருக்கு. அகோன் என்ற பெயரில் பாடல்களை பாடி வருகிறார். இதுவரை மூன்று ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். 2004 லில் “டிரபில்” (
Trouble ) 2006ல் ”கன்விக்டட்” ( Konvicted ) மற்றும் 2008ல் “பிரீடம்” ( Freedom ). முன்றுமே அருமையான பல பாடல்களைக் கொண்டது, மேலும் நல்ல ஹிட் ஆல்பங்கள்.

”வாய்ஸ் மிக்ஸிங்” எனப்படுகிற ஒரு முறையை இவரது இசையில் அதிகம் பார்க்க முடியும். இதற்க்காகவே இவர் சில விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.மேலும் இரண்டு முறை கிராமி விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். இவரது அனேகப் பாடல்கள் தமிழ் திரையிசைக்கு பொருத்தமானதாக இருக்கும். இவரது பாதிப்பை “ஹாரிஸ் ஜெயராஜ்” மற்றும் “யுவன்” பாடல்களில் அதிகம் உணரமுடியும். மேலும் நமது பெரும்பாலான பாடல்கள் “வாய்ஸ் மிக்ஸிங்” முறையைக்கூட இவரது ஸ்டைலிலேயே பின்பற்றியிருக்கின்றன. தமிழில் நல்லமுறையில் வாய்ஸ் மிக்ஸிங் செய்த பாடல்கள், சட்டென்று நினைவிற்கு வரவில்லை. அதனால் அதை இங்கே குறிப்பிடவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.


பாடுவது தவிர இவருக்கு சொந்தமாக ஆப்ரிக்காவில் ஒரு வைர சுரங்கம் ஒன்று இருக்கிறது. இதில் வரும் வருமானத்தில் பெரும்பகுதியை அவரது தொண்டு நிருவனமான ”கான்பிடன்ஸ் பவுண்டேசன்” மூலமாக பல சேவைகளை செய்து வருகிறார்.


இசைதுறைக்கு வருவதற்க்கு முன்பு இவர் போதை மருந்துகளை விற்றுவந்ததாகவும், இவருக்கு மூன்று மனைவிகள் என்றும் நிறைய வதந்திகள் உண்டு. மெலும் இவரது பாடல் வரிகள் வன்மையாகவும் காட்சியமைப்புகள் ஆபாசமாகவும் இருப்பதாக இவர் மீது குற்றசாட்டு உண்டு. அதை தொடந்த இவரது சமீபத்திய பேட்டியில் “ நான் இதற்குமுன் என்னுடைய பாடல்வரிகளில் அதிகம் கவனம் செலுத்தியதில்லை, தற்சமயம் என்னை பல குழந்தைகளும் பார்க்கின்றனர், நான் அவர்களையும் கவனிக்கவேண்டியிருக்கிறது. எனவே இனி என் பாடல் வரிகளிலும், காட்சியமைப்பிலும் அவசியம் கவனமாக இருப்பேன்” என்கிறார்.


ஆக இவற்றை தாராளமாக ஒதுக்கிவைத்துவிடலாம், இவரது இசைக்காக. நல்ல இசை எங்கிருந்தாலும் அதை ரசிப்போம்.இவரது பாடல்களில் எனக்கு பிடித்த ஒரு சில பாடல்களை கீழே குறிப்பிட்டுள்ளேன். சொடுக்கிகளை சொடுக்கி பாருங்கள், கேளுங்கள்.


ஒரு கொசுறுத் தகவல், நம்ம ஏ.ஆர்.ரஹுமானுக்கும் இவருக்கும் நல்ல நட்புவட்டம் இருக்கிறது. இவரது சமீபத்திய ஹிட்டான யூ சோ பியூட்டிஃபுல் பாடலில் நட்பிற்க்காக தலையை காட்டியிருக்கிறார், நம்ம ஏ.ஆர்.ரஹுமான். சரியாக பாடலின் 2.30 நிமிடத்தில் சின்னதாய் ஒரு கெஸ்ட் அப்பியரென்ஸ்.
Beautiful (பியூட்டிபுல்)
http://www.youtube.com/watch?v=8dq9g7soIDo&feature=fvst

Smack that (ஸ்மேக் தட்)
http://www.youtube.com/watch?v=cZHx6-skK7kDon't Matter (டோண்ட் மேட்டர்) http://www.youtube.com/watch?v=HiBcQeIax4g&feature=channel


Right now (ரைட் நவ்) http://www.youtube.com/watch?v=b-Qr9t_lDUE


இதுபோக எகோனின் மற்ற அனைத்து பாடல்களையும் பார்க்க அவரது தளத்திற்க்கு செல்லவும்।
http://www.akononline.com/

8 கருத்துரைகள்:

Kamal said...

செம பாட்டு பாஸ் எல்லாம்....
அந்த smack that பாட்ட பொல்லாதவன் படத்துல ஜி.வீ.பிரகாஷ் கும்ம்னு காப்பி அடிச்சிறுப்பாரு....
இன்னும் ஹிப் ஹாப் ஆல்பம் அறிமுகபடுத்துங்க பாஸ்...

mayil said...

அப்பிடியே எழுத்த கொஞ்சம் பெருசா போடுங்க, இல்லன ஒரு கண்ணாடி வாங்கி தாங்க. :)

ஆதவா said...

Lonely பாடல்தான் எனக்கு Akon இன் அறிமுகம்.. மிகப்பெரிய ஹிட் பாடல் அது. அப்பாடல் முழுக்க வழிந்து கிடக்கும் மென்மையை, வேறெந்த பாடல்களிலும் குறிப்பாக ஹிப்ஹாப் களில் கண்டதில்லை (ஒருசில முறை எமினம் பாதித்ததுண்டு) பின் வரவர அகோனை ரசிக்க ஆரம்பித்தேன்.... நீங்கள் சொன்னது போல, அவருடைய குரல்வளம் உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது!!

எனக்கு மிகப்பிடித்த ராப் பாடகர் எமினமுடன் இணைந்து பாடியது இன்னும் ரசிக்க வைக்கிறது இவரை!

குறிப்பிட்டவற்றில் Right Now (with humming.... nananana), Lonely, Smack that போன்றவை என்னுடைய Favorite..!!

ஆதவா said...

@ கமல்,..

Eminem, Snoop Dog, முக்கியமாக 50 Cent,

Jay-Z, LL Cool J, போன்றவர்களைக் கேளுங்கள்...

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கமல், கண்டிப்பாக நல்ல இசையை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதாகத்தான் இருக்கிறேன். தொடர்ந்து படியுங்கள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

அண்ணி, இப்போ சரிபண்ணிட்டேன்னு நினைக்கிறேன். செக் பண்ணுங்க (கண்ணை இல்ல)
:-))

முரளிகுமார் பத்மநாபன் said...

ஆதவா, ஒரே ஊர்ல இருந்தும் சந்திக்கவே முடியறதில்லை. ரொம்பபிசியா? நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு. மெயிலில் பேசுவோம். :-)

Jeeves said...

ஹ்ம்ம்... தொர இங்கிலீசு பாட்டெல்லாம் கேக்குது ..

to be frank... இதெல்லாம் கேட்டதே இல்லை :) இனி ஆரம்பிச்சுக்க வேண்டியது தான்

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.