பிரையன் ஆடம்ஸ் ஒரு அறிமுகம்


பிரையன் ஆடம்ஸ், என்றவுடன் நினைவிற்கு வருவது கொஞ்சம் தொண்டை கட்டினாற்போல இருக்கும் அவரது குரல்தான். மிக விஷேசமான குரல் அவருடையது. ஏழு கட்டையை விட்டு எட்டாவது கட்டையில் பாடுவதைபோல உச்சஸ்தாயில் பாடுவது இவரின் சிறப்பம்சம். ஆடம்ஸ் ஒரு தலை சிறந்த ரக் இசைப்பாடகர், Stirng Guitar மற்றும் Electrical Guitar வாசிப்பதில் கைதேர்ந்தவர்.

என்னுடைய கல்லூரி காலங்களில் MTV- யில் அடிக்கடி இவரது பாடல்களை ஒளிபரப்புவார்கள். அவ்வப்போது அதை பார்த்தாலும் அதற்கு முன் பிரையன் ஆடம்ஸ் பாடல்கள் அவ்வளவாக அறிமுகமில்லை, அதிகம் கேட்டதுமில்லை. ஆனாலும் அவரது வசீகரிக்கும் குரல் சேனலை மாற்ற அனுமதித்ததேயில்லை. "யார்ட இது? இப்படி தொண்டை கிழிய கத்தி பாடுறதுன்னு தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.அதுவும் கிடாரையும் வாசித்துக்கொண்டு அவ்வப்போது நடனமும் ஆடியபடி ஏழாவது கட்டையில் பட்டும் பாடியபடி இருந்த மேடை கச்சேரிகளை பார்த்தேன். (என்னுடைய நண்பனுக்கு ராக் இசையே பிடிக்காது, அவன் Aero Smith என்கிற பாடகரின் பாடல்களை கேட்டுவிட்டு இது என்னடா பாட்டு, என்று சண்டைக்கே வந்து விட்டான்) . ஏரோ ஸ்மித் பாடுவதும் ராக்தான், ஆனால் எனக்கும் அது பிடித்தமானதாய் இருந்ததில்லை.

பிறகு பிரையன் ஆடம்ஸ் பாடல்கள் ஒவ்வொன்றாக கேட்க ஆரம்பித்த பின்னர்தான் அவரது குரலிலும் பாடலிலும் இருந்த மெலடியை அனுபவிக்க முடிந்தது. அன்று முதல் அவரது பாடல்களை விரும்பி கேட்க்க ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்து நான் ரசித்த, முதல் ராக் இசைபாடகர் பிரையன் ஆடம்ஸ். இவருடைய பாடல்களை கேட்ட பின்னர்தான் இவரது முந்தைய தலைமுறை பாடர்கர்களின் பாடல்களை கேட்க ஆரம்பித்தேன்.

"அடியே கொள்ளுதே" பாடலின் முடிவில் சூர்யா வெறும் கையில் கிடாரை வாசிப்பது போல செய்துகொண்டு ஒரு காலை தூக்குவாரே , அது பிரையன் ஆடம்ஸின் ஸ்டைல். அவரது பெரும்பாலான பாடல்களின் முடிவில் இசை முடியும் பொழுது ஒரு காலை மட்டும் இசைக்கு ஏற்றவாறு காலை அசைப்பது அவரது ஸ்டைல்.

பிரையன் ஆடம்ஸ், உலகம் முழுவதும் பலபல சேவை அமைப்புக்களுக்கும்,குழந்தைகளுக்கும்,இளம்வயதினருக்கும் அவர்களுக்கான உயர்படிப்புகளுக்கும், வேலைவாயப்புக்களுக்கும், பெருமளவிக்கு தன்னாலான உதவிகளை "தி பிரையன் ஆடம்ஸ் பவுண்டேசன்" என்கிற பெயரில் ஒரு அறக்கட்டளை அமைத்து அதன் மூலம் செய்து வருகிறார். மேலும் இயற்கை பேரழிவுகள், போர் போன்ற அழிவுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று கலைநிகச்சிகள் நடத்தி அதன் வருமானத்தை அந்த நாட்டின் வளரச்சிக்காக செலவிடுவார். அனேகமாக பல வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானில் கலைநிகழ்ச்சி நடத்திய முதல் ஒரே மேற்கத்திய இசைகலைஞர் இவராகத்தான் இருப்பார். அங்கு நடந்த பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கே நிகழ்ச்சிநடத்தினார்.

இசை தவிர பிரையன் ஆடம்ஸின் மற்றொரு திறமை புகைப்படம் எடுத்தல். புகைப்படம் எடுப்பது என்பது இவரது பொழுதுபோக்கு, இதில் நல்ல அனுபவமும் தேர்ந்த அறிவும் இவருக்கு உண்டு. 2008-ல் ஜெர்மனியை சேர்ந்த லீட் என்கிற அச்சுகலை நிறுவனம் இவரது புகைப்படக்கலையை பாராட்டி "லீட் அவார்ட்" என்ற விருதை கொடுத்தது.

இவரது பெரும்பாலான பாடல்கள், ஒரிவித மென்சோகம் கொண்டதாக இருக்கும். "ஸ்பிரிட்: தி ஸ்டாலின் ஆப் காமரான்" என்ற அனிமேசன் படத்தில் பின்னணியில் வரும் ஆறு பாடல்களுமே பிரையன் ஆடம்ஸ் இயற்றி பாடியதுதான். அதற்காகவே அந்த படத்தை தேடி தேடி பார்த்தேன். படமும் அருமை. இந்த படத்தின் இறுதியில் வரும் (End Tiltle) "Here I Am" என்ற பாடல் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல்.

அந்த படத்தில் வரும் பாடல்களுக்கான வீடியோ சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.

"Here I am"

http://www.youtube.com/watch?v=R2U9GA-1QX4&feature=related

"This is where I belong"

http://www.youtube.com/watch?v=vaYrEqsmMqg&feature=related

"I will always return"

http://www.youtube.com/watch?v=FB8QeHILXJQ&feature=related

"You can't take me"

http://www.youtube.com/watch?v=hxeIWBECZpU&feature=related

"Get off my back"

http://www.youtube.com/watch?v=G6MmbDhjXLM&feature=related

"Sound the Bulge"

http://www.youtube.com/watch?v=BKh8cTzN8Lc

இதுபோக ஆடம்ஸின் எனது விருப்பப் பாடல்கள் சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன். அவசியம் பாருங்கள்.

சம்மர் 69 (Summer 69)
அனேகமாக நான் முதலில் மிகவும் விரும்பி கேட்ட ராக் இசைப்பாடல் இதுவாகத்தானிருக்கும். எலக்ட்ரிகல் கிடாரும் மெட்டல் ட்ரம்ஸுமாக அதிர அதிர ஒரு ராக் பாடல்.
http://www.youtube.com/watch?v=9f06QZCVUHg&feature=channel

தயவு செய்து என்னை மன்னித்து விடு. (Please Forgive Me)
இந்த பாடலும் ஈகிள்சின் "ஹோட்டல் கலிபோர்னியாவும்" என்னுடைய சோனி ஆடியோ பிளேயரில் "All Time Favorites" என்ற பிரிவில் முதலில் இருக்கும்பாடல்கள்.
http://www.youtube.com/watch?v=9EHAo6rEuas&feature=channel


எல்லாமே காதலுக்காகத்தான் (All for Love)
இந்த பாடல் பிரையன் ஆடம்ஸ், ரோட் ஸ்டுவர்ட் மற்றும் என்னுடைய மிகவிருப்பதிர்ககுறிய மற்றொரு ராகிசை பாடகர் ஸ்டிங், இவர்கள் மூவரும் இணைந்து பாடியது. இந்த பாடல் ஆடம்ஸ் மட்டுமே தனித்து பாடிய பதிப்பும் கிடைக்கிறது, இருந்தும் இந்த பதிப்பை இங்கே குறிப்பிடக்காரணம் இந்த பாடலின் ஆரம்பத்தில் ஸ்டிங், ஆடம்ஸ் போல உச்சஸ்தாயில் பாட முயன்றிருப்பார். ஆனால் அவரால் அவ்வாறு பாட முடியாது, அதன்பின் அதே வரிகளை ஆடம்ஸ் வெகு சுலபமாக பாடியிருப்பார். அவசியம்பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=n-AB7RJpOjY&feature=channel

நான் இங்கேதான் இருக்கிறேன் (HERE I AM)

இந்த பாடலும் ஸ்பிரிட்: தி ஸ்டாலின் ஆப் காமரான்" என்ற அனிமேசன் படத்தில் பின்னணியில் வரும் பாடல்தான் ஆனால் இது ஆடம்ஸ் நடித்து அவரது விடியோ ஆல்பத்திற்காக வெளியிட்ட பிரத்தியேக விடியோ இணைந்த பாடல்.

http://www.youtube.com/watch?v=G6xr6VKg7sE11 கருத்துரைகள்:

ஜோசப் பால்ராஜ் said...

ஹோட்டல் காலிஃபோர்னியா என் பேவரைட் பாடல்.
ரொம்ப நல்லா எழுதுறீங்க. வாழ்த்துக்கள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி, ஜோ. It's My all time favorite. தொடர்ந்து படியுங்கள்.

தஸ்லீம் said...

ஹலோ பாஸ் Have you ever loved a woman பாட்டு கேற்றுகீங்களா....அருமையான பாடல்....எனக்கு அவரோட எல்லா பாட்டுமே ரொம்ப புடிக்கும்...என்னோட பாவோரிட் ராக் ஸ்டார்.....அவரோட லிரிக்ஸ் எல்லாமே ரொம்ப டச்சிங்கா இருக்கும்....Really great post

முரளிகுமார் பத்மநாபன் said...

நிச்சயமாக பார்த்திருக்கிறேன்.... அவருடைய அனேக பாடல்களை கேட்டிருக்கிறேன். இந்த பாடலும் ஒரு படத்தின் சவுண்ட் டிராக் என்றுதான் நினைக்கிறேன். இல்லையா?

பரிசல்காரன் said...

Hv u ever luvd a women என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட்!

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி தலைவரே, Have you ever REALLY loved a women.

ஜெகநாதன் said...

Here I am... எனக்கு நீண்ட நாள் காலை துயில் எழுப்பு பாடலாக இருந்தது. மிகவும் வசீகரிக்கும் குரலின் தெளிவான வரிகள் - எப்போதும் ரீங்கரிக்கின்றன ​நெஞ்சில்! நல்ல இடுகை முரளி!

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி ஜெகன். Its a New Day, Its a New start........... very positive words இல்லையா?

ஜெகநாதன் said...

// Its a New Day, Its a New start........... very positive words இல்லையா?
//
அதனாலதான் காலையில எழுந்திருக்கும்​போது​பெட்லேயே இந்த பாட்டை சாப்பிட்டறது.. ஸாரி.. ​கேட்டறது! நீங்க குறிப்பிட்டிருக்கிற மத்த பாடல்களையும் கேக்க ஆரம்பிச்சுட்டேன். நன்றி முரளி!

சங்கா said...

தம்பி ஜெகநாதன்தான் என் ஒரு இடுகையில் போட்ட பின்னூட்டத்தில் பிரையன் ஆடம்ஸை அறிமுகப்படுத்தினார். (ஃபில் காலின்ஸ் பற்றிய பதிவில்). நீங்கள் விலாவாரியாக அவரைப் பற்றி எழுதியுள்ளீர்கள்.உங்கள் தேர்வைக் கேட்டுப் பார்க்கிறேன்! நன்றி!

முரளிகுமார் பத்மநாபன் said...

//உங்கள் தேர்வைக் கேட்டுப் பார்க்கிறேன்! நன்றி!//
நன்றி சங்கா, அவசியம் கேட்டுபாருங்கள், பிடித்திருந்தால் சொல்லுங்கள், இன்னும் சில பாடல்களை அறிமுகப்படுத்துகிறேன்.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.