கண்ணாடி பார்க்கும் வரையில்


கண்ணாடி பார்க்கும் வரையிலும்
(நவீன மலையாள சிறுகதைகள்)
மொழிபெயர்ப்பும் தொகுப்பும்: உதய சங்கர்
வம்சி பதிப்பகம், விலை: ரூ.60.00இந்த புத்தகத்தின் அறிமுக உரையாக குறிஞ்சிவேலன் அவர்கள், மலையாள சிறுகதை வளர்ச்சி, ஓர் தூரப் பார்வை - என்கிற பெயரில்ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். நல்ல கட்டுரை. மலையாள சிறுகதைகள் படிக்க விரும்புவோர், அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை. இதில் அவர் மலையாள சிறுகதை உலகை ஐந்து பாகங்களாக, ஐந்து காலகட்டங்களாக பிரித்திருக்கிறார். மேலும் அந்தந்த காலகட்டங்களுக்கு பொருத்தும் ஆசிரியர்களையும், அவர்களின் எழுத்தின் போக்கையும் மிக சுருக்கமாக மற்றும் எளிதில் விளங்கும் படியாகவும் எழுதியிருக்கிறார்.

"இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பதிமூன்று கதைகளின் மூலம் மலையாள சிறுகதை உலகையே நம் முன் சிறப்பாகத் தொகுத்து தந்துள்ளார், உதயசங்கர். சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியரான அவர், இத்தொகுப்பின் மூலம் தம் கொள்கையை விட்டுகொடுக்காமல் மலையாள சிறுகதை வரலாற்றிலுள்ள தலைமுறை இடைவெளிகளையும் திறம்பட ஒருங்கினைத்து, வாசகர்களை மிரட்டாத மொழியாக்கத் தன்மையையும் அளித்துள்ளதால் அழமான சிறந்த சிறுகதைகள் தமிழ் இலக்கிய உலகிற்கு கிடைத்துள்ளன என்பதில் சந்தேகமில்லை".

- குறிஞ்சிவேலன் -
பத்து வருடங்களுக்கு மேலாக புத்தகங்கள் வாசித்து வந்தாலும், வெகு சமீபமாகத்தான் நல்ல புத்தகங்களையும், எழுத்தாளர்களையும் தேடி படித்து வருகிறேன். புத்தக வாசிப்பில் நானாக தேடி தேடி சிலபல புத்தகங்களை வாசித்ததுண்டு. பிறகு எஸ்.ராவின் கதாவிலாசம் மூலம் பல நல்ல எழுத்தாளர்களை வாசிக்க முடிந்தது. மேலும் என்னுடைய புத்தக வாசிப்பில் நண்பர் கிருஷ்ணபிரபுவின் பங்கு நிறையவே இருக்கிறது. இவரது அறிமுகங்கள் என்றைக்குமே ஏமாற்றியதில்லை. இவரது அண்மைய பதிவுகளில் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் எழுத்தை மிகவும் சிலாகித்து எழுதியிருந்தார். அவற்றை படித்ததிலிருந்து பஷீர் மற்றும் இன்னபிற மொழிபெயர்ப்பு புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது.

இந்த தேடலின்போது, எந்த புத்தகம் வாங்குவது என்ற குழப்பம் இருந்தது, தோழர்.ராஜாமணி அவர்கள் பரிந்துரைத்ததன் பெயரில் சிலபுத்தகங்களை வாங்க நேர்ந்தது. இதில் வைக்கம் முகமதுபஷிர்அவர்களின் "மதிலுகள்" நகுலனின் "வாக்குமூலம்" மற்றும் .... உதய சங்கர் அவர்கள்தொகுத்த "கண்ணாடி பார்க்கும் வரையில்" தகளி சுந்தரம்பிள்ளை அவர்களின் "தோட்டியின்மகன்" நான்கு புத்தகங்களை வாங்கினேன். நேரம் கருதி முதலில் படித்த புத்தகம்தான் "கண்ணாடி பார்க்கும் வரையிலும்".

வைக்கம் முகமது பஷீர் அவர்களின் "கொசுவை கொள்ளலாமோ", "ஒரு மனிதன்", "மரங்கள்",தகழி சுந்தரம் பிள்ளை அவர்களின் "பட்டாலத்துக்காரன்", ஜான் அப்ரகாம் அவர்களின் "ஒரு காத்திருப்பு", "ஒரு கழுதையின் மண்டைஓடு தேடி", ஸக்கரியா அவர்களின் "இரண்டு நாடகக்கதைகள்", "கண்ணாடி பார்க்கும் வரையில்", கிரேஸி அவர்களின் "பாஞ்சாலி", "ஒரு ஜனரஞ்சகக் கதையின் மரபு", "தேவி மகாத்மியம்", டி. பத்மநாபன் அவர்களின் "உயிரின் வழி"மற்றும் என்.எஸ். மாதவன் அவர்களின் "பெரிய மரங்கள் விழுகின்ற போது.." இந்த ஐந்து எழுத்தாளர்களின் பதிமூன்று கதைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம்.

இதில் என்னை மிகவும் கவர்ந்த கதைகள், “ஒரு மனிதன்”,
"ஒரு கழுதையின் மண்டைஓடு தேடி" "கண்ணாடி பார்க்கும் வரையில்", "பெரிய மரங்கள் விழுகின்ற போது.." . இந்த நான்கு கதைகளும் படித்தவுடனே சட்ட்டென்று விளங்கி விட்டன. மற்ற கதைகளை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தியிருக்கிறேன்.

கதைகளை பற்றி எதுவும் சொல்லவில்லை அவசியம் படியுங்கள். இந்த புத்தகம் மலையாள சிறுகதை வாசிக்கதுவங்கும் என்னை போன்ற எவர்க்கும் ஒரு நல்ல அறிமுகம்.

5 கருத்துரைகள்:

ஷிஜூசிதம்பரம் said...

வணக்கம் நண்பரே. முதல் அறிமுகமே தவறை திருத்திக்கொள்ள சொல்லும் ஒரு மடலாக இருப்பதற்க்காக வருந்துகிறேன்.
ஆனாலும் கூட..
மலையாளத்தில் தகழி சிவசங்கரன் பிள்ளை உண்டு. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தகளிசுந்தரம் பிள்ளை நான் கேள்விப்பட்டதில்லை. ஒரு வேளை அப்படி யாரவது இருந்தால் அவரை பற்றி அறிய விரும்புகிறேன்.
நன்றி நண்பரே..

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் நண்பரே. மிக்க நன்றி. தவறுக்கு வருந்துகிறேன். தகழி சிவசங்கரன் பிள்ளைதான் சரி. பதிவிலும் திருத்திகொள்கிறேன். தொடர்ந்து படியுங்கள். விமர்சியுங்கள். நன்றி

Krishna Prabhu said...

உதய சங்கர் அவர்கள் தொகுத்த "கண்ணாடி பார்க்கும் வரையில்" இந்தப் புத்தகம் என் கண்ணிலிருந்து தப்பிவிட்டது. உடனே வாங்கிவிடுகிறேன் முரளி. மேலும் என்னைப் பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி முரளி.

எவ்வளவு முறை சொல்லி இருக்கிறேன். கூடுமான வரை Proof Read பண்ணிவிடுங்கள் என்று.

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் கிருஷ்ணா, பதிவெழுத அமரும்பொதெல்லாம் உங்களை அதிகம் நினைத்துகொண்டுதான் இருக்கிறேன். ஆக, என் பதிவில் உங்கள் பெயர் வருவதர்க்கெல்லாம் நன்றி சொல்லாதீர்கள், அப்படி சொல்வதாயின் அடிக்கடி சொல்ல வேண்டியிருக்கும்.

(அப்புறம் நானும் A simple man with his lots of mistakes. அட அதான்பா எழுத்துப் பிழை)

ஹா ஹா ஹா :-)

Krishna Prabhu said...

அஹா...(வடிவேல் மாதிரி), நல்ல டைமிங் முரளி.

ஷிஜூ - நல்ல வாசிப்பனுபவம் உள்ளவர். அவருடைய எதோ ஒரு பதிவில் நிறைய மலையாள எழுத்தாளர்களை குறிப்பிட்டிருப்பார். படித்துப் பாருங்கள்.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.