அப்பா என்கிற மனிதன்


          குழந்தை பிறந்தவுடன், அது ஆணோ பெண்ணோ எந்த தாய்க்கும் தந்தைக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு விசயமாகத்தான் இருக்கும். இதில் தாயின் நிலைப்பாட்டைப் பற்றி நான் பேசவில்லை. ஒரு தந்தையின் நிலைப்பாட்டை பார்க்கிறேன். பிறக்கப்போகும் குழந்தை பெண்ணாக இருக்கவேணுமென்பதே பெரும்பாலான அப்பாக்களின் விருப்பமாயிருக்கிறது. அப்படி அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பெண் குழந்தை பிறந்தால், அளவில்லா மகிழ்ச்சிகொள்கிறான். தன குழந்தையை தேவதையாகப் பார்க்கிறான். அவளது இரண்டாம் வயதிலிருந்தே அவளை என்னை படிக்க வைப்பது, அவளின் திருமணத்தை எப்படி நடத்துவது எனப் பலதரப்பட்ட யோசனைகளை நெற்றி முடி நரைக்கும் வரை அவன் விடுவதில்லை.

சிறுவயதில் தன் மகளை குழந்தையாகப் பார்க்கிறான், பிறகு பதின்ம வயதில் மகளாக, பருவ வயதில் தோழியாக பாவிக்க முயல்கிறான், ஆனால் எப்போதும் அவனுக்குள் இருக்கும் அப்பா கதாபாத்திரம் அவனை ஒரு பொறுப்புள்ள தந்தையாகவே காட்டிக்கொள்ள முயல்கிறது. எந்தெந்த இடத்திலெல்லாம் அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவம் குறைகிறதோ அல்லது அதன் தேவை இல்லாமல் போகிறதோ அப்போதெல்லாம் அவன் தன்னைத்தானே ஒருவித தாழ்வுமனப்பான்மைக்கு அடிபணியச் செய்கிறான். அதுவே அவனை மகளிடமிருந்து கொஞ்சமாய் தள்ளி நிற்கச் செய்கிறது. திருமண வயதில் அவளிடமிருந்து கொஞ்சமாய் விலகச்செய்யும் அது நாளைடைவில் பெரிய இடைவெளியை உண்டாக்குகிறது. கணவன் வீட்டிலிருந்து வரும் மகளின் சுக துக்கங்களை தன் மனைவி மூலமாக மட்டுமே அறிந்துகொள்கிறான். எந்நேரமும் தன் மகளின் நல்வாழ்வையே சிந்தித்து வரும் அவன் தன் மனதில் தேக்கிவைத்த ஆசைகளை, தன் மகளிடம் பேச வேண்டுமென்று சேர்த்துவைத்த வார்த்தைகளின் எண்ணிக்கை கூடிகொண்டே போகிறது, கூடவே அதன் கணமும். இறக்கும் தருவாயிலும் தன் மகளின் தலையில் கைவைத்து வாஞ்சையோடு தடவிக்கொடுப்பதோடு அவனின் எல்லாமே முடிந்துபோகிறது.

மகள்களும், தங்களது சிறுவயதில் தந்தையை ஒரு கதாநாயகனாக பார்க்கிறார்கள். பருவ வயதை அடைந்தவுடன், பெண்ணுக்கே உரிய சிலவிசயங்களை பகிரங்கமாக தந்தையுடன் பகிர்ந்துகொள்ள முடியாத அவள், தன் தாயை தோழியாக பாவிக்கிறாள். அங்கு தொடங்கும் அவர்களின் நெருக்கம் திருமணம், முதலிரவு, குழந்தை, குழந்தை வளர்ப்பு என ஒவ்வொரு நிலையிலும் கூடிக்கொண்டே போகிறது. இதனால் தன் தந்தையோடு ஏற்பட்ட இடைவெளிக்கு இன்னொரு சமாதானமும் அவள் யோசிப்பதே இல்லை. அதனால் ஏற்படும் ஒரு தந்தையின் வலிக்கு மாற்றையும் அவளால் தேட முடிவதேயில்லை. மகளின் திருமணத்திற்கு பிறகு அவளின் உறவுக்கொடி அவள், அவள் மகன், மகள், கணவன், மாமனார், மாமியார் என்று நீண்டுகொண்டே போகிறது. அண்ணனோ, தம்பியோ அப்பாவை தன்னோடு வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் மனமிருந்தாலும் வழியில்லாமல் இருக்கும் அவள், என்றோ ஒருநாள் அப்பா இறந்து விட்டார் என்ற செய்திகேட்டு தூரத்திலிருந்து அழுதுகொண்டு, பிணத்தை எடுப்பதற்குள் வந்துசேர வேண்டுமென்பதிலேயே முடிந்துபோகிறது, ஒரு மகளின் விதி.


அதேபோல தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவும், அப்படியே. எண்ணற்ற சிக்கல்களையும், விசித்திர புரிதல்களுக்கும் உட்பட்டது. எல்லா அப்பவுமே இப்படித்தானோ என்று நினைக்கும்படியான பெரும்பான்மையான அப்பாக்களும், எல்லா மகன்களும் இப்படித்தானோ என்று நினைக்கும்படியான பெரும்பான்மையான மகன்களும் ஒருவித குறிப்பிட்ட மனநிலையிலேயே இருக்கின்றனர்.

தன்னால் வாழமுடியாத வாழ்க்கையை தன் மகனுக்கு அமைத்துக்கொடுக்கும், என்னால் மருத்துவராக முடியவில்லை, என் மகனை மருத்துவராக படிக்கவைத்துக் கொண்டிருக்கிறேன் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் சராசரி தகப்பனாகி போகிறான். தன் மகனின் கனவுகள் தனது கனவுகளோடு ஒத்துபோகாதபோது ஏற்ப்படும் இடைவெளி பெரிதாகி தலைமுறை இடைவெளி என்னுமிடத்தில் போய் நிற்கிறது.

மகன் தனது கல்லூரியில், தனது தேவைகளுக்கான பணத்தை ஒருபோதும் அப்பாவிடம் கேட்பதேயில்லை. அம்மாவின் மூலமாக தூதுவிடுகிறான். தன்னுடைய முதல மாத சம்பளத்தை தாயிடமே கொடுக்கிறான். தனக்கு பிடித்த அல்லது காதலிக்கிற பெண்ணை தாயிடமே அறிமுகம் செய்கிறான். இப்படி அவனது ஒவ்வொரு தேவைகளும், ஒவ்வொரு சந்தோசங்களும் தாயின் மூலமாகவே தந்தையின் காதுகளுக்கு வந்து சேர்கிறது.

          எந்த ஒரு தந்தையும் தனக்கு திருமணமாகும்வரை மட்டுமே அவனுக்காக வாழ முடிகிறது.பிறகு அவனது சுக துக்கங்கள் பெரும்பாலும் குடும்பத்தை சார்ந்தே இருக்கிறது. முதலில் மனைவிக்காக, பிறகு குழந்தைகளுக்காக அவர்களின் கல்விக்காக, திருமணத்திற்காக என்று சகலத்தையும் ஒப்படைத்துவிட்டு எஞ்சிய காலங்களில் அன்பையும் அரவணைப்பையும் அனுசரணையான சொற்களையும் வேண்டி நிற்கும் அவனது கண்களில் காலத்தை விஞ்சிய ஏமாற்றமே எஞ்சியிருக்கிறது. மெல்லிய நடுக்கத்தோடும் சன்னமான குரலின் முனகலோடும் இறந்துபோகிறது, அப்பாவின் கடைசி காலம்.

       எனது வீட்டினருகே ஒரு வயதான தந்தை இருக்கிறார். அவருக்கு "ஏன்தான் இப்படி என்னோட உயிரை எடுக்குற?அதான் உன்னோட மவ வீடு இருக்குல்ல, அங்க போயிதொலைய வேண்டியதுதானே? இல்ல எங்கயாவது போயி தொலை... " இதுபோக இன்னும் கேவலமாக என்னென்னவோ சொல்லி திட்டித்தீர்க்கும் ஒரு மருமகள், இது எங்கேயோ,யார் வீட்டிலேயோ நடக்கிறது என்பதுபோல ஒரு முகபாவத்துடன் அவரது மகன். என்னுடைய அநேகமான காலைநேரம் இவர்களின் பெருத்த கூச்சல்களுக்கிடையேதான் விடிகிறது. சில நேரங்ககளில் அந்த தந்தையின் மகன் "அப்படியே ஒண்ணு விட்டேன்னா....... தெரியுமா? கிழட்டு......." என்று திட்டுவதை கேட்டிருக்கிறேன். என்ன தவறு செய்திருப்பார் அந்த அப்பா? எதற்காக இப்படி அவரை நோகடிக்கின்றனர்? என்று யோசித்துக் கொண்டிருப்பேன்.சரிபோகட்டும் என்ன செய்துவிட்டால்தான் என்ன?

       சிறுவயது முதலே தாயுடன் ஏற்படும் நெருக்கம் கடைசி காலங்களிலும் தாய்க்கு சில சன்மானங்களை பெற்றுத்தந்து விடுகிறது. ஆனால் தந்தை என்றுமே ஒரு பணம் காய்க்கும் மரம்தான், பணம் காய்க்கும்வரை அதுவும் செழிப்பாகத்தான் இருக்கும். காய்ப்பது குறையும்போது கிளைகளற்ற மொட்டை பனைமரமாய் நின்று போகிறது.

       என்னுடைய சிறுவயதில், சர்க்கஸ் பார்ப்பதற்காக, சைக்கிளில் அம்மா, அக்கா மற்றும் என்னையும் உட்காரவைத்துக்கொண்டு பனிரெண்டு கிலோமீட்டர் மிதித்துக்கொண்டு வந்த என் அப்பாவை எனக்கு அப்படியே நியாபகம் இருக்கிறது. கால்வலிக்கிறது என்று இடையே சைக்கிளை நிறுத்தினால், சீக்கிரம் போகணுமென்று அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் என்னையும் சமாளித்துக்கொண்டு சைக்கிளை ஓட்டியபடி வருவார்.

      இன்றோ ஏதோஒரு மதிய வேளைகளில் எங்காவது சென்றுவிட்டு திரும்பும்போது "பஸ் ஸ்டாப்புல நிக்குறேன்,கொஞ்சம் வீட்டுல கொண்டுபோய் விட்டுறியாடா,தம்பி?" என்று கேட்க்கும் அப்பாவிற்கு "ஏதாவது ஆட்டோபிடித்து போயிடுங்கலேம்ப்பா, கொஞ்சம் வேலையா இருக்கேன்" என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.என் அப்பாவின் அந்த கால்வலிக்கு, இன்று என்ன செய்தால் சரிப்படும்? என்ன செய்து அவர் கால்வலியை போக்குவது. ஏதாவது செய்துதான் ஆக வேண்டும்.

       நான் இந்த பதிவை எழுதிக்கொண்டிருந்தபோது, நண்பர் ரங்கனிடமிருந்து வந்த மின்னஞ்சலில் ஒரு விடியோ என் பதிவிற்கு பொருத்தமாக, அவருடைய அனுமதியுடன் இங்கே இணைத்துள்ளேன்.
         தந்தையின் உணர்வுகள் மிகவும் மெல்லியது. அதிர்ந்த கனமான வார்த்தைகளால் கூட கிழிந்து போகுமளவிற்கு மெல்லிய அந்த உணர்வுகளை புரிந்துகொள்வோம்.

32 கருத்துரைகள்:

லோகு said...

நிழலின் அருமை, மரத்தடியில் இருக்கும் வரை தெரியாது..

நெகிழ்ச்சியான பதிவு..

Rad said...

Really a very superb Article abt Father and father's affection towards their kid. But, when they are unable to take care of them self, they will 100% believe in their kids. In my own experience, i realized this. i am unfortunate, and my father died before even i get married.One thing, i can say for sure, he believed me a lot and i never disappointed him.

Nagangudiyan said...

very good blog nanbare... Shafi.

இராகவன் நைஜிரியா said...

மிக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள் நண்பரே.

// தந்தை என்றுமே ஒரு பணம் காய்க்கும் மரம்தான், பணம் காய்க்கும்வரை அதுவும் செழிப்பாகத்தான் இருக்கும். காய்ப்பது குறையும்போது கிளைகளற்ற மொட்டை பனமரமாய் நின்று போகிறது.//

சரியாகச் சொன்னீர்கள். கறவை நின்று போன மாட்டுக்கு என்ன மரியாதை உண்டோ அந்த மரியாதைத்தான் சம்பாதிப்பது நின்று போன தந்தைக்கும்.

கோபிநாத் said...

\\அதேபோல தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவும், அப்படியே. எண்ணற்ற சிக்கல்களையும், விசித்திர புரிதல்களுக்கும் உட்பட்டது\\

உண்மை தான் தல..மிக நெகிழ்ச்சியாக எழுதியிருக்கிங்க. ஒவ்வொரு வரிக்கும் வழிமொழிக்கிறேன். !

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி லோகு, அந்த வீடியோ எப்படி?

முரளிகுமார் பத்மநாபன் said...

//i can say for sure, he believed me a lot and i never disappointed him//

அவர் இருந்தவரையில் அவருக்கு நல்ல மகனாக இருந்திருக்கிரீர்கள். வாழ்த்துக்கள். என்னுடைய அப்பா என்னிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை, ஆனால் அப்பவை இப்படி வைத்துக்கொள்ள வேண்டுமென்பதில் எனக்கு நிறையவே கனவிருக்கிறது.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி ஷாஃபி, பதிவை வாசித்தற்க்கும், தொடர்ந்தமைக்கும், பின்னூட்டத்திற்க்கும்.
தொடர்ந்து படியுங்கள்.
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

பெரியண்ணன் ராகவனுக்கு நன்றிகள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

வழிமொழிட்ந்தமக்கு நன்றி கோபி, ஆமா... எங்க ரொம்ப நாளா காணோம்?
அதீத ஆணிகளா?:-)

Rangs said...

Very touching, my dear friend.

I remembered my Dad.

Love,

Rangs

Krishna Prabhu said...

நல்லா எழுதி இருக்கீங்க முரளி. தொடருங்கள்...

Jai said...

நான் எழுதிய பதிவின் பிற்பாதியை நிங்கள் அருமையாக எழுதி உள்ளிர்கள்
(கருவை சொல்கிறேன்)
அருமை
வாழ்த்துக்கள்

முரளிகுமார் பத்மநாபன் said...

தேங்க்ஸ் ரங்கா, உண்மையில் என் பதிவு அப்பவின் நியாபகங்களை கிளர்ந்திருந்தால் எனக்கும் மிக்க மகிழ்ச்சிதான் நண்பா.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கிருஷ்ணா, தொடர்ந்து படியுங்கள்

முரளிகுமார் பத்மநாபன் said...

ஜெய் வணக்கம், நீங்க எந்த ஊருங்க? உங்க ப்ரொஃபைல் எதையும் சொல்ல மாட்ட்டேங்குதே?
என்னுடைய மின்னஞ்சல் முகவரி murli03@gmail.com, னெரம் கிடைப்பின் தொடர்பு கொள்ளவும், பிந்தொடர்ந்தமைக்கு நன்றி. தொடர்ந்து படியுங்கள்

Pradeep said...

ஹ்ம்ம்.... ... தொடரட்டும்..... கிறுக்கல்கள்

வாழ்த்துக்கள்

பிரியமுடன் பிரபு said...

நல்ல பதிவு

என் அப்பா பற்றிய பதிவு
http://priyamudan-prabu.blogspot.com/2009/03/blog-post_22.html

கனிமொழி said...

ஒவ்வொரு வரியும் உணர்வுபூர்வமானவை நண்பா...
வீடியோவும் நல்லா இருக்கு...

kasbaby said...

very nice......in a mechanized machine life,still i could see some kind of humanism in your letters........very good.

Sathishkumar said...

Hi Murali,
I came to know this site through my friend Chandru.. and i must say..it's really nice. Kadhaihal, kavithaihal.. ellame atputham..

Anonymous said...

very gud article everyone read this article

Yanamalai said...

after reading and watch the video I really understand the my father's feelings. I understand the feelings of my father's death

செல்வம் said...

ச்சே...எப்படி தவற விட்டேன் இந்த பதிவை...அற்புதம், அட்டகாசம் என்ற பாராட்டு வார்த்தைகளில் அடக்கி விட முடியாத ப்டி விஸ்வரூபமாக நிற்கும் பதிவு.

அம்மா பற்றிய நிகழ்வுகளை, செய்திகளை,உண்ர்வுகளை மட்டுமே அதிகமாக பதிவு செய்யும் நம் சமூகத்தில் தந்தை குறித்த பதிவுகள் காற்றோடே கலந்து விடுகின்றன.

அது மட்டுமில்லாமல் நம் குழந்தை வளர்ப்பையும் மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.

பரிசல்காரன் said...

அற்புதமான பதிவு. நெகிழ்ச்சியான தருணங்களை நினைவுபடுத்தியது.

அப்பாவுக்கு என் நமஸ்காரங்கள்...

அகல்விளக்கு said...

:)

கார்த்திக் said...

அப்பாவுக்கு என் வாழ்த்துக்கள் :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ செல்வம், பரிசல்காரன், அகல்விளக்கு, கார்த்திக் அனைவருக்கும் நன்றி, இப்பொழுதுதான் அப்பா என் ஆபீஸ் வந்துவிட்டு சென்றார். இதுதான் அவரது பிறந்தநாட்களிலேயே அதிகம் வாழ்த்துபெற்ற நாள் என்று சந்தோசமாக சொல்லிவிட்டுப்போனார். நன்றி மக்களே!

ஆதிமூலகிருஷ்ணன் said...

சொல்ல வந்த விஷயம் அழகானது, நெகிழ்ச்சியானது. நன்று முரளி.

ஆனாலும் இன்னும் அழகாக, நடையை நேர்த்தியாக்கி சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது. என்னாச்சு? வழக்கமாக இருக்கும் கவர்ச்சி கூட கொஞ்சம் மிஸ்ஸிங் என்று தோன்றியது. ஒரு வேளை டாப்பிக்கின் அழுத்தம் இன்னும் எதிர்பார்க்கச்செய்ததோ தெரியவில்லை. அதுவும் குறிப்பாக துவக்க ‘அப்பா-மகள்’ பாரகிராப்கள் ஒரே ’கடமுடா’.

அணிமா said...

நெகிழ்வான பதிவு..

பல நியாபகங்களை கிளறி பார்க்க வைத்துவிட்டது!!!!

manjoorraja said...

மிகவும் நெகிழவைத்த பதிவு. ஏற்கனவே ஒரு முறை படித்திருக்கிறேன் இன்று ஜ்யோவ்ராம் பஸ்ஸில் (Buzz) அன்பு வேல் என்பவர் உங்கள் பதிவின் சுட்டியை இட்டதன் மூலம் மீண்டும் வந்து படிக்கவைத்து விட்டீர்கள். அப்பாவாகவும், மகனாகவும் இருந்து இரண்டையும் அனுபவிக்கும் நிலையில் உங்கள் பதிவு

முரளிகுமார் பத்மநாபன் said...

@மன்சூர்ராஜா
//அப்பாவாகவும், மகனாகவும் இருந்து இரண்டையும் அனுபவிக்கும் நிலையில் உங்கள் பதிவு//
மிக்க நன்றி தலைவரே! :-)

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.