இதுவும் ஒருவகையில் கிறுக்கல்கள்தான் 2

என்னமோ தெரியவில்லை. இந்த மாதம் முழுவதும் ஒரே கிறுக்கல்களாகவே இருக்கிறது. சரி விடுங்க அது உங்க விதி, நான் ஏன் காரணம் சொல்ல வேண்டும் அல்லது கவலைப்பட வேண்டும். (எல்லாம் நேரம்தான்)

வெகுஜனபத்திரிக்கைகளில் வரும் பெரும்பாலான ஓவியங்களை பார்த்த்தும் அதை வரைந்தவரை கண்டுபிடிக்குமளவிற்க்குதான் என்னுடைய ஓவிய அறிவு. இருந்தும் ஓவியத்தை பற்றி பதிவெழுத தைரியம், எனக்கு ம.செவை பிடிக்கும். எனக்கு மிகவும் பிடித்த அல்லது கவர்ந்த ஓவியர் ம.செ என்கிற மணியம் செல்வன். இவரது ஓவியங்களை பார்க்கும்போது, ஒருவித எதார்த்தம் தெரியும்.வெகு அலட்சியமாக கிறுக்கப்பட்ட கோடுகள் போல இருக்கும் இவரது கோட்டோவியங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

இவரது ஓவியஙகளில் பெரும்பாலும் பெண்கள் ஜிமிக்கி அணிந்திருப்பார்கள், நெற்றியில் ஒற்றையாய் அல்லது கற்றையாய் முடியை தொங்க விட்டிருப்பார்கள். பெரும்பாலான பெண்கள் புடவையோ தாவணியோ அணிந்திருப்பார்கள். இவர்களின் கண்கள் படு அழகாக இருக்கும். பொதுவாக
பெண்களுக்கான எல்லா இலக்கணங்களோடு இருப்பாள், இவரது ஓவியப் பெண்.

இவர் வரைவதை பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமென்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. மெல்லிய சோகத்தை சிந்தும் கண்களோடுகூடிய பெண்கள், ரெளத்திரமான கண்களோடு கூடிய பெண்கள், புன்னைகை, அழுகை, சிரிப்பு என எல்லா உணர்ச்சிகளையும் வெகு அற்புதமாக ஓவியத்தில் கொண்டுவந்துவிடும் அதிசய கலைஞன், ம.செ.

எனது ஓவியங்களை நன்றாக இருக்கிறது, தொடர்ந்து வரையுங்கள் என்று என்னை மறுபடியும் பென்சிலை கயிலெடுக்க வைத்த ராமலக்‌ஷ்மி அவர்களுக்கு எனது நன்றிகள். என் கல்லூரி காலங்களில் இவரை பார்த்து நான் வரைந்த சில ஓவியங்களை இங்கே பதிவிடுகிறேன். இப்பொழுது வரைந்துகொண்டிருக்கும் சில படங்களை பிறகு பதிவிடுகிறேன்.
அனேகமாக இதில் எழுதப்பட்டுள்ள கவிதை வரிகள், தபூ சங்கருக்கோ அல்லது அறிவுமதிக்கோ சொந்தமானவை.
போட்டொஷாப்பின் மூலம் கொஞ்சம் வர்ணம் சேர்த்தியிருக்கிறேன்.


அனேகமாக இதில் எழுதப்பட்டுள்ள கவிதை வரிகள், தபூ சங்கருக்கோ அல்லது அறிவுமதிக்கோ சொந்தமானவை.


அனேகமாக இதில் எழுதப்பட்டுள்ள கவிதை வரிகள், தபூ சங்கருக்கோ அல்லது அறிவுமதிக்கோ சொந்தமானவை.(ரங்ஸ் இந்த வரிகள் நியாபகம் இருக்கிறதா?)

இது நடிகை ஷோபனாவை மனதில் வைத்து வரைந்தது.


அனேகமாக இதில் எழுதப்பட்டுள்ள கவிதை வரிகள், தபூ சங்கருக்கோ அல்லது அறிவுமதிக்கோ சொந்தமானவை.


ரெளத்திரம் தெரிகிறதா கண்களில்? அவரது ஓவியத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அனேகமாக இதில் எழுதப்பட்டுள்ள கவிதை வரிகள், தபூ சங்கருக்கோ அல்லது அறிவுமதிக்கோ சொந்தமானவை.

13 கருத்துரைகள்:

லோகு said...

ரொம்ப நல்லா இருக்குண்ணா.. வரைந்து வைத்திருப்பதைஎல்லாம் வெளியிடுங்கள்.. நிறைய வரையுங்கள்..

கோபிநாத் said...

கலக்கல் தல...ம.செ வேற சொல்லிட்டிங்க...அவர் கள்ளிக்காட்டு இதிகாச கதைக்கு வரைந்த படங்கள் அப்போது புத்தகமாக வெளியிடும் போது இல்லை. அதற்காகவே அந்த தொகுப்பை தனியாக எடுத்துவைத்து புத்தகமாக போட்டுயிருக்கிறேன்.

அவர் மனிதர்கள் மிகவும் அழகாக கூர் முக்குடன் இருப்பார்கள்.

உங்கள் படங்களும் கலக்கல் தல..மனமார்ந்த பாராட்டுகள் வாழ்த்துக்கள் ;)

அகல் விளக்கு said...

இரண்டு கண்களை மட்டும் வரைந்து உணர்வுகளை காட்டுவது மிகவும் கடினமானது.

அருமையாக உள்ளது...

தற்போது வரைபவைகளையும் எதிர்பார்க்கின்றேன்..

முரளிகுமார் பத்மநாபன் said...

லோகு நன்றி, எப்போதும் போல முதலில் வாழ்த்தியதற்க்கு, நிச்சயம் நிறைய வரைவேன். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

கோபி, நன்றி. ம.செ பற்றி ஒரு பதிவே எழுத வேண்டும். பாதி எழுதி டிராஃப்ட்டில் வைத்திருக்கிறேன். விரைவில் போஸ்ட் செய்கிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

அகல்விளக்கு, நன்றி நண்பா, அவசியம் விரைவில் போஸ்ட் செய்கிறேன்.
:-)
பேரை சொல்லவே மாட்டேன்ங்கிறீங்க?

அகல் விளக்கு said...

//அகல்விளக்கு, நன்றி நண்பா, அவசியம் விரைவில் போஸ்ட் செய்கிறேன்.
:-)
பேரை சொல்லவே மாட்டேன்ங்கிறீங்க?//

மன்னிக்கவும்!
நீங்கள் ஏற்கனவே கேட்டீர்கள். நான்தான் மறந்துவிட்டேன்...

ஜெய்சிங் ராஜா - ஈரோட்டிலிருந்து.

Anbarasan said...

நல்லாயிருக்கு அன்பரே.

முரளிகுமார் பத்மநாபன் said...

நண்பா (அகல் விளக்கு), ஜெய் என்று அழைக்கலாமா? பெயர் சொல்லி கூப்பிடும்போது ஒரு அன்யோன்யம் இருக்குமென்பது என் கருத்து.

முரளிகுமார் பத்மநாபன் said...

நண்பா (அகல் விளக்கு), ஜெய் என்று அழைக்கலாமா? பெயர் சொல்லி கூப்பிடும்போது ஒரு அன்யோன்யம் இருக்குமென்பது என் கருத்து.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி அன்பரசன், தொடர்ந்து படியுங்கள்
:-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

பதிவைக் காணுமுன்பே படங்களைக்கண்டேன். ம.செவின் படங்களின் மோசமான காப்பி என்பது தெரிந்தது. முயற்சிக்கு வாழ்த்துகள்.! சித்திரம் கைப்பழக்கம், ரசனை வாழ்த்துக்குரியது.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி ஆதிமூலகிருஷ்ணன் அவ்ர்களே! இது கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு வரைந்தது, இப்போ நல்லாவரைவேன்(அப்ப்டீன்னு சொல்லலை)முயர்ச்சி பண்ணிகிட்டு இருக்கேன். முக்கியமா இப்போ யாரையும் காப்பி பண்றதில்லை, நானாகவேதான் வரைகிறேன். :-)

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.