இதுவும் கிறுக்கல்கள்தான்

என்னுடைய சமீபத்திய பதிவான விழுதுகள் என்கிற சிறுகதையில் ஏதாவது படம் போட்டால் நன்றாக இருக்குமே என்று கூகிளாண்டவரிடம் கேட்டுக்கொண்டிருந்தபோது, நான் எனது கல்லூரி பருவத்தில் வரைந்த கோவில் ஓவியங்கள்(? ) நியாபகத்தில் வந்துபோனது. இந்தகதைக்கு பொருத்தமாக கோவிலும் மரமும் இருக்குமென்பதால், அந்த பழைய நோட்டுக்களை தேடியெடுத்து தூசுதட்டியதில், இதெல்லாம் என்ன ஓவியங்கள் என்று எனக்கே தோன்றியது.
பின் புதிதாக வரைந்துகொள்ளாமே என்று தோன்றியது. ஆக மறுபடியும் பெரிய இன்ஜினியர் ரேஞ்சுக்கு டேபிளில் டிராஃப்டரையெல்லாம் எடுத்து மாட்டிக்கொண்டு, அம்மாவிடம் படம் காட்டியவாறு படம் வரைய ஆரம்பித்தேன். ஆனால் முன்னால் வரைந்த படங்களை 50 சதவிகிதம் கூட தாண்ட முடியவில்லை. மறுபடியும் பழைய நோட்டுக்கே வந்தபோது, அதே ஓவியங்கள், இப்போது அருமையாக தெரிந்தது.

ஆக அதிலிருந்தே ஒரு படத்தை தேர்ந்தெடுத்து அந்த கதையில் போட்டிருப்பேன். அதை பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக சொன்னார்கள். பின்னூட்டத்தில் ராமலக்‌ஷ்மி அவர்கள் “ தயங்காமல் கல்லூரி காலத்தில் வரைந்தது எல்லாவற்றையும் பொருத்தமான பதிவுகளுடன் தந்திடுங்கள்” என்று சொன்னதும் இங்க நமக்கு அப்படியே புல்லரிச்சி போச்சு.

இதுக்காக, பொருத்தமான பதிவுகளை தேடிக்கொண்டிருப்பதை காட்டிலும் இதையே ஒரு பதிவாக போடலாமே என்று தோன்றியதே, இந்த பதிவின் கதை.

எனவே பாருங்க, நல்லா இருந்தாலும் இல்லாட்டினாலும் நல்லா இருக்குன்னே சொல்லிவைங்க. இல்லைன்னா... எதிர்காலத்தில ஒரு நல்ல ஓவியனா வரவேண்டிய ஒருத்தனை “ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே முடிச்ச பாவம்” உங்களுக்கு வந்து சேரும். ஜாக்கிரதை.

இதுவும் ஒரு மரம்தான், என் பால்ய நண்பன் பாபுவின் யோசனையின் பேரில் இலைகளை வெறும் புள்ளிகளாலேயே வரைந்திருக்கிறேன்.

இதுதான் நான் விழுதுகள் கதைக்காக தேர்த்டுத்த படம். என் கதையில் வரும் சிவன் கோவிலும் அந்த பெரிய அரசமரமும் இந்த படத்தைத் தேர்தெடுக்க காரணங்களாயின.ஒரு விஷ்ணு கோவில், பெரிய தெப்பக்குளம்
அதை ஒட்டிய பரந்து விரிந்து வளர்ந்த ஒரு மரம்.இன்னும் சில படங்கள் இருக்கின்றன, அதை கொஞ்சம் சுத்தம் செய்யவும், சற்று அழகுபடுத்தவும் வேண்டியிருப்பதால் அதை இன்னொரு பதிவாக, பதிவிட நினைக்கிறேன்.

பிடிச்சா தாராளமா ஒட்டு போடுங்க.
:-)

10 கருத்துரைகள்:

Cable Sankar said...

படஙக்ள் அருமை

☼ வெயிலான் said...

படம் பெரிசா தெரியல முரளி!

லோகு said...

ரொம்ப நல்லா இருக்கு ணா... அருமையான கலை.. எல்லாராலையும் முடியாது.. (எனக்கு ஸ்கேல் வச்சு கூட நேரா கோடு வரைய தெரியாது)

நிறைய வரைங்க.. அடிக்கடி பதிவுல போடுங்க.. முடுஞ்சா இதுக்குனே தனியா ஒரு பதிவே தொடங்குங்க..

** படத்தை கிளிக் செய்தால் பெரியதாக மாட்டேங்குது..

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கேபிள் ஜீ, ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிறீர்கள். :-(

முரளிகுமார் பத்மநாபன் said...

பப்ளிஷ் பண்றதுக்கு முன்னாடி வரைக்கும் கிளிக் பண்ணா பெரிதாக, ஒரு புதிய விண்டோவில் தெரிந்தது. ஆனால் இப்பொது அப்படி இல்லை. ஏதும் வழி இருந்தால் சொல்லுங்கள். தலைவரே!

முரளிகுமார் பத்மநாபன் said...

ஆமாம் லோகு, பப்ளிஷ் பண்றதுக்கு முன்னாடி வரைக்கும் கிளிக் பண்ணா பெரிதாக, ஒரு புதிய விண்டோவில் தெரிந்தது. ஆனால் இப்பொது அப்படி இல்லை. ஏதும் வழி இருந்தால் சொல்லு லோகு.
அவசியம் வரைகிறேன் :-)

கோபிநாத் said...

தல எனக்கு படமே தெரியல ;(

முரளிகுமார் பத்மநாபன் said...

கேபிள் சங்கர், வெயிலான், லோகு, கோபி எல்லொரும் இன்னொருமுறை முயற்சி செய்து பாருங்கள். ஏகப்பட்ட சோதனைகளுக்குபிறகு கடைசி இரண்டு படங்கள் பெரிதாகிறது. முதல் படம் பெரிதாகத் தெரியவில்லை. எனக்கு அத்ற்க்கான வழியும் தெரியவில்லை.

பரிசல்காரன் said...

ச்சே... வாய்ப்பே இல்ல நண்பா.. கலக்கலா இருக்கு!

முரளிகுமார் பத்மநாபன் said...

//ச்சே... வாய்ப்பே இல்ல நண்பா.. //
தல திட்டுறிங்களா?

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.