வா... வா... என் தேவதையே!

தேவதைகள்.
வெகு அரிதாக தென்பட்டு
வெகு சில நிமிடங்களில்
காணாமலும் கரைந்தும்
போய்விடுவார்கள்.


என்ற கவிதையை பொய்யாக்கி (கவிதைன்னாலே பொய்தானே) ஒரு தேவதையை என் வீட்டிற்க்கே அனுப்பி பத்துவரம் கொடுக்க பணித்த நண்பன் ரங்காவிற்கு எனது நன்றிகள். நண்பா, எப்படியும் நீ அனுப்பிய தேவதை ஓரிரு வருடங்கள் என்னோடு இருக்க நேரிடும், எனது வரங்களை அருள. ஆக கொசுறாக ஒரு வரம் சேர்த்துகொள்கிறேன்.

கொசுறு வரம் : நீ என்னோடு இருந்து வேண்டும் வரம்தரும்வரை நான் அழைத்த நாலுபேரின் வரம் கேட்க்க ஒரு நாலு தேவதைகள் வேண்டும்.

இனி என் பத்துவரம் :
1. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர், யுவன், ஹாரிஸ் ...... இப்படி இன்னும் நிறைய எனக்கு பிடித்த இசையமப்பாளர்கள் இசையமைக்கும்போது அதிலும் பாடல்கள், பின்னணி இசை என்று தனித்தனியாக இசையமைக்கும்போது கூடவே இருந்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

2. பாரதியாரோடு ஒரு பத்துவருஷமாவது வாழ்ந்துபார்க்க வேண்டும்.

3. என் வாழ்வில் நான் ஆசைப்பட்ட எத்தனையோ விசயங்களை கொஞ்சம், கொஞ்சமாக செய்துகொண்டுதானிருக்கிறேன். நான் ஆசைப்பட்டு கிடைக்காமல் போன என் காதல் கைபெற வேண்டும். (குறிப்பாக என்னை காதலிக்கிறாயா? என்ற கேள்விக்கு பதில் சொல்லாமலேயே போய்விட்ட அவள், பிடிக்கவில்லை என்றாவது ஒரு பதில் சொல்ல வேண்டும்)

4. ”வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவேஎன்று தொடங்கும் கவிஞர். வைரமுத்துவின் வார்த்தைகள், அத்தனையும் அப்படியே நிறைவேற வேண்டும்.

5. தனிமை கெட்டுவிடாமல் உலகம் சுற்றும் தேசாந்திரிகளான எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் பெளலோ கோயல்ஹோ, இவர்கள் இருவரின் தனிமையை பாதிக்காத வண்ணம் இலக்கின்றி இவர்களின் கூட பயணிக்க வேண்டும்.

6. என்னுடைய ஆறாவது வயதில் என் ஆத்ம நண்பனாயிருந்த சசிக்குமார், உயிரோடு வேண்டும், நீ இழந்த உயிரை நான் மீட்டு தந்திருக்கிறேன், இனி எஞ்சிய நாளில் என் கூடவே வாடா என்று அவனிடம் சொல்லவேண்டும்.

7. நான் அதிகம் படிக்கவில்லை, சம்பாதிப்பதில்லை என்று வருத்தப்படும் அப்பா மனம் நிறைய படிக்க, சம்பாதிக்கவேண்டும்.

8. அப்பாவை சைக்கிளில் உட்காரவைத்து காத தூரம் ஓட்டவேண்டும். அம்மாவுக்கு கால்வலி காணாமப்போய்விட வேண்டும்.

9. இல்லைன்னு கேட்டுவரவங்களுக்கு இல்லைன்னு சொல்லாத அளவு, மக்காத செல்வமும், மனதும் வேண்டும்.

10. நல்லது நினைக்கிற யாரா இருந்தாலும் அவங்க வாழ் நாள் முழுவதும் கூடவே இருந்து கேட்கும் வரம் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

இனி என் தேவதை இவர்களைப் போய்சேர்வாள்,

ஒன்று : என்னை இன்னொரு தொடர்பதிவில் அழைத்த நண்பர் பரிசல்காரன்
இரண்டு : காதலையே காதலிக்கும் தம்பி லோகு

மூன்று :
காலங்காத்தால
காப்பி கொடுத்த
கார்க்கி (ஒரே கவிதையா வருது, சகா)

நான்கு : அப்புறம் எங்க, தங்க, சங்க தலைவர் வெயிலான்


உங்க நாலுபேரையும் அவசியம் இந்த தொடரைக் கட்டியிலுக்க சொல்லவில்லை, உங்கள் தேவைகள், வரங்கள், வேண்டுதல்கள் எப்படி என்று தெரிந்துகொள்ள ஆசையோடு காத்திருக்கிறேன். என் தேவதை உங்களை ஒருமுறையேனும் ஆசிர்வதிக்கக்கூடும். ஆதலினால் வரத்தை கேட்ப்பீர்.

15 கருத்துரைகள்:

ஆதிமூலகிருஷ்ணன் said...

மக்காத செல்வமும்// மங்காத அல்லது குன்றாத என்று வந்திருக்கவேண்டும்.

அப்புறம் உங்களை நிறைய மிஸ் பண்ணியிருக்கிறேன் என இந்த ஒரு பதிவிலிருந்தே தெரிகிறது. ஆசைகள் ரசனை.!

NIZAMUDEEN said...

//9. இல்லைன்னு கேட்டுவரவங்களுக்கு இல்லைன்னு சொல்லாத அளவு, மக்காத செல்வமும், மனதும் வேண்டும்.

10. நல்லது நினைக்கிற யாரா இருந்தாலும் அவங்க வாழ் நாள் முழுவதும் கூடவே இருந்து கேட்கும் வரம் //

மற்றவர்களுக்குக் கொடுத்து வாழ வேண்டும்
என்கிற உயர்வான உள்ளம் (வரம் 9)

நல்லவங்களை வாழ்த்துகின்ற பெருந்தன்மை
(வரம் 10)

இரண்டுமே என மனதை நெகிழ வைத்தன.

லோகு said...

எல்லா வரங்களுமே ஏதோ கவிதை படிக்கிற மாதிரி இருக்குண்ணா.. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. அட்டகாசம்..


அழைத்ததற்கு நன்றி..

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர், யுவன், ஹாரிஸ் ...... இப்படி இன்னும் நிறைய எனக்கு பிடித்த இசையமப்பாளர்கள் இசையமைக்கும்போது அதிலும் பாடல்கள், பின்னணி இசை என்று தனித்தனியாக இசையமைக்கும்போது கூடவே இருந்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

வாங்க ஆதி அவர்களே! ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்கு. முடிஞ்சா, நேரம் கிடச்சா தொடர்ந்து படிங்க. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

பின்னூட்டத்திற்க்கும் உங்கள் வருகைக்கும் எனது நன்றி, தொடர்ந்து படியுங்கள். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி லோகு, கவிதையெல்லாம் நம்க்கு சுட்டுபோட்டாலும் வராது. இதெல்லாம் ஆசை, இன்னும் நிறைய இருக்கு.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி ஜோதிஜி, தொடர்ந்து படிங்க, நேரம் இருப்பின், செல்வம் உங்கள் உலகசினிமா தேவையை சொன்னார்.
தேவை இருப்பின் சொல்லுங்கள், படமே தருகிறேன்.

☼ வெயிலான் said...

அழைப்பிற்கு நன்றி முரளி!

// எங்க, தங்க, சங்க தலைவர் //
ஆமா, இதெல்லாம் என்னாது?

வரம் தானே? கேட்டுட்டாப் போச்சு.

Krishna Prabhu said...

உங்களுடைய கடின உழைப்பில், உங்களுக்குத் தேவைப்படும் அனைத்தும் கிடைத்து மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

தலைவரே என்ன இது? உங்க பலம் உங்களுக்கு தெரியாது.

முரளிகுமார் பத்மநாபன் said...

தேவதைகள் பின்னால் போய் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று சொல்கிறீர்களா? ஆம் என்றால் அதுவும் சரிதான்.

கனிமொழி said...

தங்களுடைய வரங்கள் நான் விரும்புவது போலவே உள்ளது,
:-))
பிறர் நலம் கருதும் நீங்கள், வாழ்க...

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கனிமொழி, என்ன உள்ளே நுழைய முடியாதபடி தடுப்புசுவர் அமைத்திருக்கிறீர்கள், உங்கள் வ்லைப்பூவிற்கு.

கனிமொழி said...

மன்னிக்கவும் முத்துகுமார்...
தாங்கள் விரும்பினால் வழி விடுவேன்...

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.