என் வரலாறு (யாரு என் வரலாறு கூறுவது)


32 கேள்விகள் என்று ஒரு தொடர்பதிவு பதிவுலகத்தையே சுற்றி வந்த பொழுது யாராவது என்னை இந்த தொடர்பதிவிற்கு கூப்பிட மாட்டார்களா? என்று நினைத்திருக்கிறேன். ஏனெனில் அந்த கேள்விகள் அவ்வளவு சுவாரஸ்யமானது.சிலர் இதுபோன்ற தொடர்பதிவை வெறுப்பதாக எழுதியதை படித்திருக்கிறேன். அது அவரவர் விருப்பம். என்னை பொருத்தவரை நமக்கு விருப்பமானவற்றை எப்போதுமே எழுதிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆக அவ்வப்போது இதுபோல நண்பர்களின் விருப்பத்தின் பேரில் எழுதுவது ஒரு சுவாரஸ்யமான விசயம். அதாவது தொடர்பதிவு ஒரு சுவாரஸ்யம், சினிமாவிற்கு பாடல்கள் போல. ஒருவேளை சிலபாடல்கள் சுவாரஸ்யமில்லாமனும் போகலாம். அது விதிவிலக்கு.


இந்நிலையில் ஒரே நாளில் ரங்கா மற்றும் பரிசல்காரன் இருவரிடமிருந்தும் தொடர்பதிவு அழைப்பு வந்திருக்கிறது. ரங்காவின் அழைப்புக்கு கனவுகளும், கற்பனைகளுக்குமே தேவைப்பட்டதால் உடனே எழுதிவிட்டேன். பரிசலின் அழைப்பு நான் எழுதவந்த கதையை (உண்மையை) எழுதவேண்டியிருப்பதால், கொஞ்சம் நேரம் எடுத்து எழுதியிருக்கிறேன். வரலாறு முக்கியம் அல்லவா?


எனக்கு சின்ன வயதிலிருந்தே, ஒரு தாழ்வுமன்ப்பான்மை உண்டு. பெரிய சோடாபுட்டி கண்ணாடி, காதுவரை சுருள்சுருளாக முடி, காய்ந்த கொத்தவரங்காய் போல உடல், குதிரை மாதிரி நீளமுகம் இப்படி. (இதெல்லாமே சின்ன வயதில் என்னை மற்றவர்கள் வர்ணித்தது) இந்த வர்ணனைகளுக்கு நான் எப்படி காரணமாக முடியும். இதில் என் தவறு என்ன இருக்கிறது என்று அடிக்கடி நினைப்பேன். நண்பர்கள்கூட என்னை விலக்கி தனிமைப்படுத்திய காலம் அது. அவர்களிடமிருந்து என்னை வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்ள நிறைய படிக்க ஆரம்பித்தேன். இந்த தனிமையும், தாழ்வுமனப்பன்மையும்தான் என்னை அதிகம் படிக்கவும், உலகத்திரைப்படங்களை தேடித்தேடி பார்க்கவும் வைத்தது. பதிவெழுத வந்ததுகூட அப்படி ஒரு நிகழ்வுதான்.

அதிகம் பார்த்ததை, படித்ததை எங்கேயாவது கொட்ட வேண்டுமென்ற ஆசைக்கு தீணி போடும் விதமாக கிடைத்ததுதான் இந்த பதிவு. வலைப்பதிவு என்றால் என்னெவென்று முழுமையாகத் தெரியாமலேயே நானும் எழுதத்தொடங்கிவிட்டேன். என்ன எழுதுவது என்று தெரியாமலே. படிப்பது என்றால் சரி, எதை வேண்டுமானாலும் படித்துவிடுவேன். ஆனால் எழுத்து, மற்றவர்கள் ரசித்து படிக்குமளவிற்கு இல்லாவிட்டாலும், பார்க்குமளவிற்க்காகவாவது இருக்கவேண்டும் என்று நினைத்தேன்.


எனவே முதல் பதிவை சினிமாவிலிருந்து ஆரம்பித்தேன். அந்த பதிவை எழுதி முடித்தபோது, குறிப்பாக அதற்க்கான முதல் பின்னூட்டம் கிடைக்கும்வரை, என்னுடைய பதிவை உலகின் எதோ ஒரு மூலையிருக்கும் ஒருவரால் கூட படிக்கமுடியும் என்று தெரியாது. Dr. என்ற பெயரில் எனக்கு வந்த முதல் பின்னூட்டமே நான் எழுதியதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத கேள்வியாக இருந்தது, அவரது பின்னூட்டதிற்குப் பிறகே என்னுடைய பதிவை உலகின் எதோ ஒரு மூலையிருக்கும் ஒருவரால் கூட படிக்கமுடியும் என்பது தெரிந்தது. அதன் பிறகு வலைப்பதிவை பற்றி மெதுவாக ஆராயத்தொடங்கினேன். அப்பொழுதுதான் அதுஒரு பிரம்மாண்டமான ஆலமரமாக தன் கிளைகளையும் விழுதுகளையும் பரப்பிகொண்டிருப்பது புலப்பட்டது.


அங்கே கதை, கட்டுரை, சினிமா, இலக்கியம், கவிதை, மொக்கை என பலரும் தொகுதிவாரியாக பிரித்துக்கொண்டு கலந்துகட்டி அடித்துக்கொண்டிருப்பதை பார்த்தேன். இனி கொஞசம் கவனமாக எழுத வேண்டுமென்று எனக்கு தோண்றியது. ஆக எனெக்கென்று தனியாக ஒரு விசயத்தை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் எல்லா துறைகளிலும் எனக்கு பிடித்த, ரசித்த, தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இன்றுவரை நானும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.


நண்பர் செல்வம் மூலமாக தமிழ்மணம், தமிழிஷ் போன்ற பிளாக் அக்ரகெட்டர்ஸ் பற்றி தெரிந்துகொண்டு என்னையும் இணைத்துக்கொண்டேன்.
இன்னைக்கு நான் என்ன எழுதினாலும் ஒரு நாலு பேராவது படிக்கிறாங்க, கருத்து சொல்றாங்க, 30 பேர் தொடர்ந்து படிக்கிறாங்க. எனவே என் எழுத்தில் முன்பைவிட சற்று கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறேன். இதெல்லாம் போக எழுதுவதால் என்ன ஆதாயம் என்று என் நண்பர்கள் கேட்ப்பார்கள், அவர்களுக்கு நான் சொல்லும் பதில்.


நான் முன்பைவிட அதிக தன்னம்பிக்கயுடனும், உற்சாகத்துடனும் இருக்கிறேன், என்னுடைய எண்ண ஓட்டங்களை ஒத்த நண்பர்களை, தேடாமலே கிடைக்கப்பெற்றேன், அவன் ஒரு Blogger-டா என்று நண்பர்கள் சொல்லும்போது, கிடைக்கும் பெருமை, என்னுடைய ஒருசிறுகதை உள்ளூர் சிற்றிதழில் வந்தபொழுது கிடைத்த அம்மவின் சந்தோசம் இதெல்லாமே எனக்கு எழுதக் கிடைத்தது.

தொடர்ந்து படித்து, ஃபாலோபண்ணி, பின்னூட்டமிட்டு நிறைகுறைகளை சொல்லிவரும் அனைத்து நண்பர்களுக்கும், இந்த பதிவின் மூலமால நன்றி சொல்கிறேன்.இது நான் எழுத வந்த வரலாறு. நிறைய போரடித்தாலும் இதுதான் நிதர்சனம்.
இதைத்தொடர நான் அழைக்கும் நான்கு பேர்.

25 கருத்துரைகள்:

க.பாலாஜி said...

//நான் முன்பைவிட அதிக தன்னம்பிக்கயுடனும், உற்சாகத்துடனும் இருக்கிறேன், என்னுடைய எண்ண ஓட்டங்களை ஒத்த நண்பர்களை, தேடாமலே கிடைக்கப்பெற்றேன், அவன் ஒரு Blogger-டா என்று நண்பர்கள் சொல்லும்போது, கிடைக்கும் பெருமை//

இதே நிலையில் தான் நானும் இப்போது இருக்கிறேன்.. நீங்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளது என்னிலையுடன் ஒத்துபோகிறது...இதுபோல் நிறைய பேர் இருக்கலாம்...

நல்ல அனுபவ பகிர்வு அன்பரே...

மேலும் தங்களின் பதிவுகள் சிறக்க வாழ்த்துக்கள்....

லோகு said...

//பெரிய சோடாபுட்டி கண்ணாடி, காதுவரை சுருள்சுருளாக முடி, காய்ந்த கொத்தவரங்காய் போல உடல், குதிரை மாதிரி நீளமுகம் இப்படி. (இதெல்லாமே சின்ன வயதில் என்னை மற்றவர்கள் வர்ணித்தது) இந்த வர்ணனைகளுக்கு நான் எப்படி காரணமாக முடியும்.//

நீங்க சொன்னதுல ஒன்னு கூட நிஜம் இல்லையே...

லோகு said...

உங்கள் கதையில் பெரும்பகுதி எனக்கும் பொருந்தும்.

லோகு said...

//ன்னுடைய ஒருசிறுகதை உள்ளூர் சிற்றிதழில் வந்தபொழுது கிடைத்த அம்மவின் சந்தோசம் இதெல்லாமே எனக்கு எழுதக் கிடைத்தது.//

கூடிய சீக்கிரம் ஆவி, கல்கியில் எல்லாம் வருவீங்க..

லோகு said...

//
எனக்கு சின்ன வயதிலிருந்தே, ஒரு தாழ்வுமன்ப்பான்மை உண்டு//
அட்டகாசமா கவிதை எழுதறீங்க, கதை எழுதறீங்க, ஓவியம் வரையறீங்க, புகைப்படம் எடுக்கறீங்க..... சகலகலா வல்லவனா இருந்துட்டு இது எதுக்கு..

நாடோடி இலக்கியன் said...

அன்பின் முரளி,
உங்க வரலாற்றை எனக்கு நேரிலே சொல்லியிருக்கின்றீர்கள்,இப்போது எழுத்திலும் படிச்சாச்சு.

என்னையும் இத்தொடர் பதிவிற்கு அழைத்த உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.இதற்கு முன் சில தொடர் பதிவுகளுக்கும் நண்பர்களால் அழைக்கப்பட்டு இதுநாள் வரை எழுத முடியவில்லை. அப்படியொரு சோம்பேறி நான்.முடிந்த வரை எழுத முயற்சிக்கிறேன்.

கோபிநாத் said...

தல

அருமையாக எழுதியிருக்கிங்க..எந்த ஒரு ஒளிவுமறைவும் இல்லமால் ;)

வாழ்த்துக்கள் தல ;)

முரளிகுமார் பத்மநாபன் said...

க.பாலாஜி : நல்ல அனுபவ பகிர்வு அன்பரே... மேலும் தங்களின் பதிவுகள் சிறக்க வாழ்த்துக்கள்....

நண்பா ரொம்ப நன்றி.

முரளிகுமார் பத்மநாபன் said...

என்ன லோகு இப்படி பொசுக்குன்னு பொய்ன்னு சொல்லிட்ட? இதெல்லாம் என்னோட சின்ன வயசில் நடந்தது.

முரளிகுமார் பத்மநாபன் said...

கண்ணுக்கு லாசிக் ஆப்பரேசன் செய்து, ஜிம்முக்கு போயி, உடம்ப ஏத்தி, இப்போ ஒருமாதிரியா ஆயிட்டேன்..

ஹா ஹா ஹா

முரளிகுமார் பத்மநாபன் said...

கூடிய சீக்கிரம் ஆவி, கல்கியில் எல்லாம் வருவீங்க..///
நன்றி லோகு

முரளிகுமார் பத்மநாபன் said...

நாடோடி: நன்றி நண்பா, அவசியம் எழுத முயற்சி செய்யுங்கள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கோபி, உங்க ஓவ்வொரு வாழ்த்துமே எனக்கு உற்ச்சாக டானிக்தான். :-)
Thank you Agaain

கலகலப்ரியா said...

ஆஹா.. நம்ம பேரு அடிபடுதே இன்னான்னு பார்த்தேன்.. ஒரு வார்த்த நம்ம வீட்ல சொல்லி இருக்கலாம்ல.. ஹிஹி... ரொம்ப நன்றிங்கோ.. இது என்ன ஏதுன்னு ஒரு அலசு அலசி.. பதிவு போட்டு வந்து சொல்றேன்..

கலகலப்ரியா said...

//என்னுடைய ஒருசிறுகதை உள்ளூர் சிற்றிதழில் வந்தபொழுது//

adra sakka.. adra sakka..

கலகலப்ரியா said...

//
எனக்கு சின்ன வயதிலிருந்தே, ஒரு தாழ்வுமன்ப்பான்மை உண்டு.//

இத சொல்லி சொல்லியே கட்டி இழுத்துக்கிட்டு அலையறீங்களா... செல்லாது செல்லாது.. 'இருந்தது'ன்னு சொல்லலாம்.. சொல்லாமலும் விடலாம்.. அந்தக் கழுதைய எதுக்கு சுமந்துக்கிட்டு..

Krishna Prabhu said...

நீங்கள் எழுதியுள்ளவற்றிற்கும், நேரில் கண்டதற்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கிறது. ஆனால் அதன் பின் இருக்கும் உங்களுடைய கடின உழைப்பு தெரிகிறது முரளி.

அமாம் உள்ளூரில் இதழில் பிரசுரம் கண்ட கதை என்ன? எனக்கு சொல்லவில்லையே...!

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் கலகலப்ரியா, //.. ஒரு வார்த்த நம்ம வீட்ல சொல்லி இருக்கலாம்ல.. ஹிஹி... //

என்ன இது? எனக்கு புரியலை.
நம்ம வீடுன்னு எத சொல்றீங்க, உங்க பிளாக்கையா?

முரளிகுமார் பத்மநாபன் said...

//இத சொல்லி சொல்லியே கட்டி இழுத்துக்கிட்டு அலையறீங்களா... செல்லாது செல்லாது.. 'இருந்தது'ன்னு சொல்லலாம்.. சொல்லாமலும் விடலாம்.. அந்தக் கழுதைய எதுக்கு சுமந்துக்கிட்டு..//

கண்டிப்பா அது இன்னும் சுமக்கவேண்டிய சுமை அல்ல, நன்றி கோடிட்டு காட்டியதற்கு. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

//ஆனால் அதன் பின் இருக்கும் உங்களுடைய கடின உழைப்பு தெரிகிறது முரளி//

:-)

கிருஷ்ணா, இறக்காத இரவுகள், கதைதான் அது, இங்கே உடுமலை, பொள்ளாச்சி, திருப்பூர் பகுதிகளில் வெளிவரும் செம்மை என்ற புத்தகத்தில் வந்தது.

அன்புடன் அருணா said...

நல்லா எழுதிருக்கீங்க.....தாழ்வு மனப்பான்மையை விட்டுத் தள்ளிட்டு தன்னம்பிக்கைக் கொடி நாட்டுங்க....உலகம் உங்கள் கையில்!

முரளிகுமார் பத்மநாபன் said...

படிக்கும்போதுதான் டீச்சர் பேச்சை (அம்மா உட்பட) கேட்கலை. இப்பவாவது கேட்ப்போமே, சரிங்க டீச்சர்.
:-)
நன்றி அருணா மேடம். தொடர்ந்து படியுங்கள்.
(பூங்கொத்து கிடைக்காமபோச்சே:-( )

நாஞ்சில் நாதம் said...

// நான் முன்பைவிட அதிக தன்னம்பிக்கயுடனும், உற்சாகத்துடனும் இருக்கிறேன், என்னுடைய எண்ண ஓட்டங்களை ஒத்த நண்பர்களை, தேடாமலே கிடைக்கப்பெற்றேன்//

13 ம் தேதி நல்லாவே தெரிஞ்சது

தல இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாம்

முரளிகுமார் பத்மநாபன் said...

நாஞ்சில் நாதம், வாழ்க.


நண்பரே! வணக்கம், அன்னைக்கு ஆரம்பிச்சது, எங்க் நாஞ்சில் நாதம் என்கிற பேரைகேட்டாலும், ”வாழ்க”ன்னு சொல்லத்தோனுது.

சுயபுராணம்கிறதால கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கேன்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நல்ல பகிர்வு நண்பரே .
கடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் மீண்டும் புதிப்பிக்கப் பட்டுள்ளது .

மீண்டும் வருவான் பனித்துளி !

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.