ஆதிஃப் அஸ்லாம் - ரசனைக்குரிய பாடகன்


அத்திஃப் அஸ்லாம், இருபத்தி ஆறே வயதான பாகிஸ்தானி பாப் இசைபாடகர். பாகிஸ்தான் தவிர இந்தியாவில் அதிகம் அறியப்பட்ட பாடகர், இந்தியா மட்டுமில்லாமல் ஆசியாவின் தெற்கு பகுதி முழுவதும் பிரபலமான பாடகர். இன்றைய தேதியில் இளைஞர்கள், இளைஞிகளிடம் அதிகம் அறியப்பட்ட இளம்பாடகர், அத்திஃப்.


தனது நாட்டின் பாரம்பரிய இசையை இன்றைய மேற்கத்திய ராக் இசையின் கலப்போடு, ஒரு அழகான இசையை கொடுத்துவரும் ஒரு இளம்வயது பாடகன், Atif Aslaam என்றாலே நியாபகம் வருவது உச்சஸ்தாயில் வரும் அவரது ஹ்ம்மிங்ஸ்தான். இந்த பதிவில் நான் கொடுத்துள்ள சுட்டிகளில் குறிப்பிட்ட பாடல்களை கேளுங்கள், Atif-ன் ரசிகராக மாறிவிடுவீர்கள் என்பதில் எனக்கு எந்த மாற்றுகருத்துமில்லை.


கல்லூரி காலங்களிலேயே தனக்கு இணக்கமான நண்பர்களோடு சேர்ந்து தனியாக ஒரு குழு அமைத்து நிறைய பாடல்களை இசையமைத்து பாடிவந்தனர். அதிலும் குறிப்பாக இவர்களின் கல்லூரி காலங்களில் ஜுனூன் குழுவினர் மற்றும் ஸ்ட்ரிங்ஸ் இவர்களின் பாடல்களில் ஈர்க்கப்பட்டு இவர்களது பாடல்களை அதிகம் பாடிவந்தனர். பிறகு “ஜல்(JAL)" என்ற பெயரில் குழு அமைத்து ஒரு ஆல்பம் வெளியிட்டனர், பிறகு அதில் ஏற்ப்பட்ட சில முரண்பட்ட கருத்துக்களால் குழுவிலிருந்து வெளியேறி தனியாக சோலோ ஆல்பங்களை வெளியிட ஆரம்பித்தார்.


இப்படி சோலோவாக வெளியிட்ட முதல் ஆல்பமான “ஜல் பாரி (JAL PARI)" குறைந்த காலத்தில் அதிகம் விற்பனையான ஆல்பங்களில் ஒன்று. அதில் ஒரு குறிப்பிடதக்க பாடல்தான் Aadat (ஆதத்), எனக்கு தெரிந்து அதிக ரீமிக்ஸ் மற்றும் அதிகவெர்சனில் வெளிவந்த பாடல் இதுவாகத்தான் இருக்கமுடியும்.


இதுவரை இவர் பாடி வெளிவந்த ஆல்பங்கள் மூன்று,

1. ஜல் பாரி - JAL PARI
2. தூரி - DOORIE
3. மேரி கஹானி - MERI KAHANI
4. ப்யாஸ் - PYAAS (இந்த ஆல்பம் இன்னும் வெளிவரவில்லை, அனேகமாக 2010-இல்). இந்த ஆல்பங்களில் குறிப்பிடத்தக்க சில பாடல்களை கீழே குறிப்பிட்டுள்ளேன்.


O Lamhey இந்த பாடல் ஜல் (JAL) என்ற குழுவாக இருந்தபோது வெளிவந்த பாடல். Doorie , Hum Kis Galli, O re Piya, Ehsaas


இதுதவிர இந்தி திரைப்படங்களில் ஒருசில பாடல்கள் பாடியிருக்கிறார், அனேகமாக அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்கள், கீழே கொடுத்துள்ள சுட்டிகளில் பாருங்கள்.

பஸ் ஏக் பல் என்கிற படத்தில் வரும் பாடல் Tere Bin, இந்த படத்தில்தான் ஆல்பங்கள் தவிர்த்து Atif Aslaam முதன்முறையாக பாடல் காட்சிகளில் தோன்றினார். இளம்வயது இசை ரசிகர்களிடம் இதற்க்காகவே, அவரை பார்ப்பதற்க்காகவே இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே அதிக கவனம் பெற்றது. படத்தின் பல காட்சிகள் அரங்கு நிறைந்து கிடந்ததாக என் நண்பன் சொல்ல கேட்டிருக்கிறேன்.

கிஸ்மத் கனெக்‌ஷன் என்ற படத்தில் வரும் பாடல் Bakhuda Tumhe. நல்ல மெலடி பாடல் இது, அவசியம் கேட்டுபாருங்கள், கூடவே அழகான வித்யாபாலன்.

ரேஸ் என்ற படத்தில் வரும் பாடல் Pehli Nazar Mein. உச்சஸ்தாயில் பாடுவது என்பது தன்னை பொருத்தவரை வெகுசுலபமென்று மறுபடியும் வெளிக்காட்டிய பாடல்.

கல்யுக் என்கிற படத்தில் வருகிற பாடல் zuda hoke bhi. இந்த பாடல் அவரது முதல் பாடலான ஆதத்தின் தழுவல்தான்.


கேளுங்க, கேட்டுவிட்டு எப்படி இருந்தது என்று அவசியம் சொல்லுங்கள். ஏதாவது பாடல்கள் விடிபட்டிருந்தாலும் அவசியம் தெரியப்படுத்துங்கள். :-)

7 கருத்துரைகள்:

gayathri said...

tere bin song excellenta irukum.thank u sir.nice post.

முரளிகுமார் பத்மநாபன் said...

வாங்க காய்த்ரி, பசங்களவிட பொண்ணுங்களுக்கு அத்திஃபை நன்றாக தெரியும் என்ற என் எண்ணத்திற்கேற்ப முதல் பின்னூட்டம் உங்களிடமிருந்து. :-)
தொடரந்து படியுங்கள்

கலகலப்ரியா said...

//முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் கலகலப்ரியா, //.. ஒரு வார்த்த நம்ம வீட்ல சொல்லி இருக்கலாம்ல.. ஹிஹி... //

என்ன இது? எனக்கு புரியலை.
நம்ம வீடுன்னு எத சொல்றீங்க, உங்க பிளாக்கையா?//

அட ஆமாங்க..

கலகலப்ரியா said...

இடுகை வித்யாசமா இருக்கு.. பாட்டு கேட்டு பார்க்கறேன்.. நன்றிங்கோ..

முரளிகுமார் பத்மநாபன் said...

அட அங்கதாங்க சொன்னேன். உங்க மாடரேஷனுக்கு பிறகுதான் அந்த கமெண் பப்ளிஷ் ஆகும்ன்னு சொல்லிச்சே, உங்க வீடு.
:-)

shortfilmindia.com said...

முரளி.. அருமையான அறிமுகம்.. எனக்கு ரேஸ் பாடல் மிகவும் பிடிக்கும்..

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி, நண்பரே! எனக்கும் மிகவும் பிடித்த பாடல், எங்கெயோ யேசுதாஸை நியாபகபடுத்தும் ஒரு குரல், ஒரு பாடல். நல்ல மெலடி.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.