கோடீஸ்வரனின் முதல் காதல்


நல்லா இருக்குன்னு பார்க்கிற எந்த தமிழ் திரைப்படங்களும் ஏதாவது ஒரு உலக திரைப்படத்தை நியாபகப்படுத்துவது போய் இந்த கொரிய திரைப்படத்தை பார்க்கும்போது ஏகப்பட்ட தமிழ்படங்கள் நியாபகத்திற்க்கு வந்தது. இந்த படம் 2006ல் வெளிவந்த்தால் நாம் நம்மவர்களை சந்தேகப்படுவதில் நியாயமில்லை. தம்பிக்கு எந்த ஊரு, இதயத்தை திருடாதே, 7ஜி ரெயின்போ காலனி, இன்னும் பல படங்களின் கலவைதான் இந்த “கோடீஸ்வரனின் முதல் காதல்”.

இவான் வாங் என்கிற இளம்பெண்ணுக்கும் க்யான் உன் என்கிற இளம் வாலிபனுக்கும் இடையே வருகிற காதலும் (பெயர் உச்சரிக்க கடினமாக இருந்ததால், இனி பொண்ணு, பையன் என்றே தொடர்கிறேன்), அதைத்தொடர்ந்த சம்பவங்களுமே இந்த Millionaire’s First Love.
க்யான் உன் ஒரு இளைஞன், அழகானவன், முரடன், பணத்திமிர் அதிகம் கொண்டவன் ஆனால் கோடீஸ்வரன். உட்கார்ந்து சாப்பிட்டாலே பத்து தலைமுறைகள் சாப்பிடுமளவுக்கு இருக்கும் தாத்தாவின் சொத்தும் கேள்விகேட்க ஆள் இல்லாத்தாலும் அவனை அப்படி ஆக்கி வத்திருக்கின்றன.

இருந்தும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல அவனது 18வது பிறந்த நாளில் பார்ட்டி முடிந்து ஹோட்டல் திரும்புகையில் அவளைப்பார்க்கிறான். தன்னால் கைவிடப்பட்ட பெண்களில் ஒருத்தியாக இருக்கலாமென்று நினைப்பில் கொஞசம் பணத்தை கொடுத்துவிட்டு நகர்கிறான். அந்த பிறந்த நாளில், ஒருசெய்தி வருகிறது அவனின் குடும்ப வக்கீல் மூலமாக. அடுத்த ஒரு வருடம் அவனுடைய சொந்த ஊரில் தங்கி அங்கே உள்ள பள்ளியில் அவன் படிக்க வேண்டும், இதில் ஏதாவது முரண்பட்டாலோ அல்லது அவன் அந்த பள்ளியில் படிப்பை முடிக்காவிட்டாலோ 0.1% சதவிகித சொத்து அவனுக்கும் மீதமுல்ல அனைத்து சொத்துக்களும் தொண்டு நிறுவனங்களுக்கு போய் சேரும் என்கிறது தாத்தாவின் உயில்.

வேண்டா வெறுப்பாக கிராமத்திற்கு செல்கிறான். மிக உயர்ந்த ஸ்டார் ஹோட்டல்களில் வாழ்ந்த அவனுக்கு கிராமத்து வீட்டில் இருபது அசெளகரியமாக இருக்கிறது. அதே கிராமத்தில் மீண்டும் அவளைப் அடுத்தடுத்து சந்திக்கிறான். ஒரு கடையில் வேலை செய்யும் பெண்ணாக, பள்ளியில் சக மாணவியாக, பெட்ரோல் பங்கில் வேலை செய்பவளாக, அங்குள்ள அனாதை ஆசிரமத்தில் பணிபுரிபவளாக இருக்கிறாள்.

தொடர்ந்து அவளோடு பழக, அவளோடு நட்பு மலர்கிறது. ஒரு நாள், நடனப்பயிற்ச்சியின் போது மயங்கி விழும் அவளை முதலில் நடிக்கிறாள் என்று நினைக்கும் அவன், பிறகு அவளைத்தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறான். டாக்டர் மூலமாக அவளுக்கு இதயத்தில்பிரச்சனை இருப்பதையும், அதீத மகிழ்ச்சியும், துன்பமும் அவளுக்கு மிக எளிதில் சாவைகொடுக்கும் என்றும் அறிகிறான். இதயத்தை மாற்றிவையுங்கள், எவ்வளவு செலவானாலும் சரி என்று கதறுகிறான். ஆனால் ”இனி இதயத்தை மாற்றுவது என்பது நடக்காது, ஏற்கனவே ரொம்ப லேட்” என்கிறார் டாக்டர்.


இதுவரை மற்றவர்களிடம் சுமுகமான உறவில்லாமல் இருந்தவன், அன்று பள்ளி நண்பர்களோடு அவளுக்கு எதையாவது வாங்கிவர செல்கிறான். சந்தையில் நண்பர்களுக்கு விரும்பியதை வாங்கி கொடுக்கிறான். வெறும் 10 டாலரில் அனைவருக்கும் விரும்பியதை வாங்கிக்கொள்ள முடிந்த்தை நினைத்து ஆச்சர்யம் அடைகிறான். பிறகு அவளுக்கு கம்பளியால் ஆன ஒரு ஷாக்ஸ் ஒன்றை வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வருகிறான். அங்கு அவள் இல்லாத்தால் அங்கும் இங்குமாக அவளைத்தேடி அலைகிறான். அந்த அனாதை அசிரமத்திற்கு சென்று தேடும்போதுதான் அவனுக்கு அந்த இடமும் அவனது பால்ய நியாபகஙகளும் வருகிறது. பிறகு அவளது வளர்ப்புதந்தையை சந்தித்து அவளை தன்னோடு தங்கிகொள்ள அனுமதி பெருகிறான்.

அவளை சந்தித்து இது பற்றி சொல்கிறான். அவளுக்கும் இவன் மீது காதல் இருக்கவே சம்மதிக்கிறாள். அவள் தனது வியாதியை பற்றி அவனுக்கு தெரியாது என்று நினைக்கிறாள். அவனும் அதேபோல அவளுக்கு அந்த வியாதியை பற்றி தெரிந்தால் உடைந்துவிடுவாள் என்று நினைக்கிறான். அவள் மீது மிகுந்த அன்புசெலுத்துகிறான்.

ஒரு நாள் பள்ளியில் நாடகம் ஒத்திகை பார்த்துகொண்டிருக்கும்போது, ஒரு வசனம் வருகிறது “ நான் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வந்துவிடுவேன்” என்று காதலனும் “ நிஜமாத்தான் சொல்றியான்னு” காதலியும் பேசிக்கொள்வதுபோல ஒரு காட்சி. அதைப்பார்க்கும் அவனுக்கு அவனது பால்யக்காதல் கண்முன் வருகிறது. அவன் தாத்தாவிற்கு சொந்தமான அந்த ஆனாதை விடுதியில் இருக்கும் சிறு வயது இவான் வாங்கும் இவனும் பேசிக்கொண்ட்து நியாபகம் வருகிறது.

அவளிடம் சிறுவயதில் விடைபெற்று செல்லும்வழியில் நடந்த விபத்தில் பெற்றோரை இழந்த்தையும் அதனால் பழைய நினைவுகள் இல்லாமல் போனதையும் அவளிடம் சொல்லி வருந்துகிறான். மழையோடு கூடிய அந்த மாலை நேரத்தில் அவளிடம் தன்காதலை சொல்கிறான். நானும் உன்னை காதலிக்கிறேன் அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன், அந்த மகிழ்ச்சியால் சீக்கிரம் சாகவும் போகிறேன் என்கிறாள். அப்போதுதான் அவளுக்கும் அந்த வியாதியை பற்றி தெரிந்திருக்கிறது என்பதை அறிகிறான்.

“நீ வாங்கி கொடுத்த கம்பளி ஷாக்ஸை, பனிபொழியும் பொழுதுதான் உபயோகிக்கமுடியும், ஆனால் அதற்குள்ளாக உன் அதீத காதலால் நான் இறந்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது” என்கிறாள்.

அன்றிலிருந்து அவள் இறக்கும்வரை திகட்ட திகட்ட காதலிக்கிறார்கள். அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்கள் அத்தனையிலும் காதல் வழிகிறது. தபூ சங்கரின் வரிகளைவிட மென்மையானது இந்த காதலர்களின் உரையாடல்கள். இதைவிட அழகாக காதல் காட்சிகளையோ, வசனங்களையோ நான் வேறு எந்த திரைப்படங்களிலும் பார்த்ததுஇல்லை. இந்த அதீத பாராட்டுக்கு என் குறைந்த பட்ச சினிமா அறிவுகூட காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த படம் எனக்கு அவ்வளவு பிடித்தது.

மிக எளிய திரைக்கதை, எந்த மூக்கை சுற்றி காதைத்தொடுகிற சமாச்சாரங்களும் இல்லை. காட்சிகளும் காட்ச்சியமைப்புகளும், அருமையான இசையும், ஒளிப்பதிவும் கொண்ட மென்சோகம் கலந்த காதல் கதை அல்லது கவிதை. அவ்வளவுதான் இந்த திரைப்படம். குறிப்பாக இசையும் ஒளிப்பதிவும் காதலைக்கொண்டாடியிருக்கிறது.

உலக காதலர்களுக்கான ஒரு அழகான திரைப்படம்.

பட்த்தின் ஒரு முக்கியமான காட்சி, உங்களுக்காக
http://www.youtube.com/watch?v=3QxF9yw6H6w&feature=related

மேலும் இதே படம் பற்றிய சக பதிவர் ரசிக்கும் சீமாட்டி அவர்களின் பார்வை உங்களுக்காக.
http://enathurasanai.blogspot.com/2009/09/millionaires-first-love.html

21 கருத்துரைகள்:

ரசிக்கும் சீமாட்டி said...

me first...
படத்த பத்தி அழகா எழுதிருக்கீங்க... நான் எழுதுனதையும் மதிச்சு லிங்க் போட்டதுக்கு நன்றி தல....

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி தோழி, உங்களின் அதே பதிவில் கூட பின்னூட்டமிட்டிருந்தேன், நீங்க பார்க்கலையா? அப்படியே ஒரு ஓட்டையும் போட்டிருக்கலாமில்லையா? ஹிஹி..:-)

ரசிக்கும் சீமாட்டி said...

நீங்க கமெண்ட் ல சொல்றதுக்கு முன்னாடியே தமிலிஷ் ல பாத்து படுச்சுடோம்ல..
தமிழ்மணத்துல முதல் வோட்டு தமிலிஷ் ல மூணாவது ஓட்டு...
போட்டுடேன் பா...
உங்க ஓட்டுக்கும் நன்றி... ஹி ஹி ஹி...

ரசிக்கும் சீமாட்டி said...

//இனி நான் என்ன எழுதுவது என்று தெரியவில்லை:-)//
இப்படி சொல்லிட்டு ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க.... உங்க கிட்ட ட்ரைனிங் எடுத்துக்கணும்...
என் பதிவுல போட்டோ தான் ஜாஸ்தியா இருக்கும்... நீங்க நெறையா எழுதிருக்கீங்க...
நீங்களும் நெறையா கொரியன் படம் பார்பீங்களோ??!!

Krishna Prabhu said...

/--உலக காதலர்களுக்கான ஒரு அழகான திரைப்படம்.--/

காதல்ன்னு சொல்லி வண்டி குடை சாய்ரா மாதிரி இருக்குதே...

:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

தோழி நான் அதை சொல்லவில்லை. நீங்க இந்த படத்தைபத்தி எழுதிய பதிவிலேயே நான் பின்னூட்டமிட்டிருந்தேன். அதை சொன்னேன். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கிருஷ்ணா, இல்ல கிருஷ்ணா அப்படியெல்லாம் ஒன்ணுமில்லை. அதுக்கு வழியில்லாமத்தானே..... இப்புடி

♠ ராஜு ♠ said...

நல்லா எழுதி இருக்கீங்க தலைவா..!

லோகு said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க அண்ணா.. படம் நான் பார்த்துட்டேன்.. அந்த ஹீரோயின் ரொம்ப அழகா இருக்கும்.. படமும்..

முரளிகண்ணன் said...

நல்லா சுவையா எழுதி இருக்கீங்க

ரசிக்கும் சீமாட்டி said...

அந்த பதிவுல உங்க பின்னூட்டத்த இன்னைக்கு தான் பாத்தேன்... பதில் பின்னூட்டமும் போட்டுடேன் தோழரே ....

கோபிநாத் said...

தல

விமர்சனம் கலக்கல்...;) விரைவில் பார்த்துடுவோம். முழுப்படத்தையும் பார்க்க லிங்கு ஏதாச்சும் இருந்தால் கொடுங்களேன் ;)

அப்புறம் profile போட்டோ அழகு தல ;)

shortfilmindia.com said...

murali,, நல்லா எழுதியிருக்கீங்க..

கேபிள் சங்கர்

கார்க்கி said...

நல்ல படம் மாதிரி தெரியுதே

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி ராஜூ, தொடர்ந்து படிங்க

முரளிகுமார் பத்மநாபன் said...

ஹீரோ கூட அழகாத்தான் இருப்பான் லோகு, கேமிரா எப்படி?

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி முரளிகண்ணன், எப்படி இருக்கீங்க?

முரளிகுமார் பத்மநாபன் said...

வாங்க் கோபி ரொம்ப நாளாச்சு, எப்படி இருக்கீங்க?

முரளிகுமார் பத்மநாபன் said...

தேங்க்ஸ் கேபிள் ஜீ, படம் பார்த்திருக்கிங்களா?

முரளிகுமார் பத்மநாபன் said...

சகா, எப்ப்டி இருக்கிங்க? அவசியம் பாருங்க.....

butterfly Surya said...

நல்லாயிருக்கு முரளி. எழுத்து நடையும் விவரிப்பும் அருமை.

வாழ்த்துகள்.

Keep it up.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.