What's Eating Gilbert Grape ?

What's Eating Gilbert Grape
கில்பெர்ட் கிரேப் என்ன சாப்பிட்டான்?


இது ஒரு ஹாலிவூட் திரைப்படம் தான். 1993ல் வெளிவந்து சுமாரான வெற்றியை பெற்ற நல்ல திரைப்படங்களில் ஒன்று. Leanardo Di caprio, Johnny depp மற்றும் பலர் நடித்துள்ள ஒரு ஹாலிவூட் திரைப்படம். ஒரு முறை நண்பன் மதுவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது இந்த படத்தைப் பற்றி என்னிடம் சொன்னான். ஒரு வேளை இதை அவனை தவிர வேறு யார் சொன்னாலும் எனக்கு இந்த அளவு ஆர்வம் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். எனக்கு ஒரு விசயத்தை கோர்வையாக சொல்லுவது என்பது சுட்டு போட்டாலும் வராது, இதே எழுதுவதாக இருந்தால் கூட யோசித்து ஓர் மாதிரியாக முடித்து விடுவேன். பேசும்போது என்னால் அவ்வளவு சுவாரஸ்யமாக பேசமுடிவதில்லை. ஆனால் மதுவை பொருத்த வரை Narration என்பது அவனுக்கு ஒரு கை வந்த கலை. அதிலும் மற்றவர்களுக்கு புரியும்படி அல்லது கவரும்படி சொல்லுவதில் அவனுக்கு நிகர் அவன்தான்.
ஆக அவன் சொன்ன நிமிடம் முதலாக எனக்கு இந்த படத்தை பார்த்து விட வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம் ஏற்ப்பட்டது. எனக்கு தெரிந்த பல நண்பர்களிடமும் இதை பற்றி முக்கியமாக சென்னை, பாண்டிசேரி மற்றும் பெங்களூர் - ல் உள்ள நண்பர்களிடம் இந்த படத்தின் DVD வாங்க சொல்லி, ஒரு கட்டத்தில் அவர்களை தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டேன். ஆனால் எங்கும் கிடைக்க வில்லை.ஒரு வழியாக நீண்ட தேடுதலுக்கு பிறகு கிடைத்தே விட்டது. ஆகா! ஓஹோ! என்று புகழ வேண்டிய படம் இல்லை என்றாலும் அழகாக ஆர்ப்பாட்டமில்லாத திரைக்கதை.
இந்த படத்தில் ஒருவரி வரும் சந்தோசம் வரும் போகும், துக்கம் வரும் போகும், எது வந்தாலும் போனாலும் Life must be go on. இதுதான் இந்த படத்தின் tagline. அப்பா இல்லாத குடும்பத்தின் மூத்த மகனின் கதை. ஹாலிவுட் படங்களில் இது போல படங்களின் எண்ணிக்கை குறைவுதான் அல்லது ஒருவேளை அதைபற்றிய அறிமுகம் எனக்கு குறைவாகவே இருந்திருக்கலாம். 150 கிலோ எடைக்கு மேல் பருமனான அம்மா, திருமண வயதில் ஒரு தங்கை, குடும்ப சுமை அறியாத வயதில் ஒரு தங்கை மற்றும் மனவளம் குன்றிய தம்பி (Arnie Grape- Leonardo di Caprio), பொறுப்பான மூத்த மகன் (Gilbert Grape - Johnny Depp) என மிகவும் வித்தியாசமான பாத்திர படைப்பு.
24 மணி நேரமும் குடும்பமே நினைவாக இருக்கும் கில்பெர்ட், அவர்கள் ஒவ்வொருவரையும் கையாளும் விதம், அழகு. ஒரு நாள் இரவு வீட்டிற்கு வராததால் ஏற்ப்படும் குழப்பங்களை அவனை இன்னமும் அந்த குடும்பத்திடம் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையே அவன் காதல், அதன் தொடர்பான பிரச்சனைகள் இவற்றை சமாளிப்பதுதான் கதை. எதாவது குறும்பு செய்து எல்லோரிடமும் கோபத்தை பெறும் தம்பியிடம் அவன் காட்டும் அன்பும், ஒருகட்டத்தில் அவனது சேட்டைகளை பொருக்கமுடியாமல் திட்டிவிட, அதன் விளைவும், மிக நெகிழ்ச்சியான காட்சிகள். ஒருகட்டத்தில் அந்த பண்ணை வீட்டின் மாடியில் இருக்கும் அவனது அம்மா இறந்து விட பருத்த உடலை கொண்ட தாயை கீழே இறக்க முடியாமல் அம்மாவின் பிணத்தை உள்ளே வைத்து வீட்டையே எரிப்பது நெகிழ வைக்கும் காட்சி. அம்மா இறந்த பிறகு ஒரு தங்கை தனக்கு விருப்பபடவனுடனும் மற்றொரு தங்கை இசைக் குழுவினருடனும் சென்று விட தன் தம்பியுடன் ஒரு நாடோடியாக வாழ்க்கையை துவங்குவதாக முடிகிறது படம். குடும்பத்துக்காகவும் குடும்பத்தினருக்காகவும் தன்னையே வருத்திகொள்ளும் கில்பர்ட்டை, அவன் என்ன சாப்பிட்டான்? சாப்பிட்டானா? இல்லையா? என யாரும் கேள்வி கேட்க யாரும் இல்லாததையே படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார் இயக்குனர்.
இதில் மனவளம் இல்லாத தம்பியாக நடித்திருக்கும் Di Caprio- வின் நடிப்பு பிரமாதம். எந்தநேரமும் எதாவது குறும்பு செய்து கொண்டு, அல்லது எதாவது செய்து கொண்டே இருக்கும் அவனது துருதுருப்பு அனைவரையும் கவர்ந்து விடும். 1993 -ல் வெளிவந்த இந்த திரைப்படத்தில் உள்ள Di Caprio நமக்கு நிச்சயம் வித்தியாசமான பாத்திரம் தான். எந்த ஒருவரிடமும் மனம் கோணாதபடி நடந்து கொள்ளும் கில்பெர்டின் பாத்திர படைப்பும் அருமை.
எந்த ஒரு திரைப்படமும் சரி, புத்தகங்களும் சரி, அனுபவங்களும் சரி, நமக்கு எதாவது ஒன்றை கற்று கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. இந்த திரைப்படத்திலும் நாம் கற்று கொள்ள சில விஷயங்கள் இருக்கிறது. Handling - ஹேண்டிளிங் - கையாளுதல். முடிந்தால் ஒருமுறை இந்த திரைப்படத்தை பார்த்து விடுங்கள்.
அம்மா எழுந்திரு, இந்த காட்சி, ஒரு மன நலம் குன்றிய சிறுவன், காலையில் எழுந்துவந்து தூங்கிகொண்டிருக்கும் தன் அம்மாவை எழுப்புகிறான்,அவள் இறந்திருப்பது தெரியாமல். முதலில் கொஞ்சுகிறான், பிறகு மிரட்டுகிறான், பிறகு கெஞ்சுகிறான், தன் பேச்சை கேட்க்காமல் அம்மா எழமறுத்து படுத்தே கிடப்பதாக சொல்லி அழுதுகொண்டே ஒடுகிறான். இந்த காட்சி, டி காப்ப்ரியோவின் நடிப்பிற்கு ஒரு சோறு. இந்த வீடியோவை பார்க்க அம்மா எழுந்திரு,


இன்னொரு காட்சி, அண்ணன் பக்கத்திலுள்ளவரிடம் எதோ பேசிக்கொண்டு வருவான், அப்போது விளையாட்டுதனமாக ஒருகாலை தரையிலும் இன்னொரு காலை சுவற்றின் மீது வைத்து வழுக்கிகொண்டும் வருவான். இரண்டு மூன்று வினாடிகளே வரக்கூடிய அந்த காட்சிக்காக சீரியஸாக உழைத்திருப்பது தெரியும். இதுபோல சின்னசின்ன காட்சிகளின் மூலமாக ஒரு மனவளர்ச்சி குறைந்த சிறுவனின் செயல்பாடுகளை, டி காப்ப்ரியோ ஒரு கண்ணாடியைப்போல அப்படியே பிரதிபலித்திருப்பார். இதன் வீடியோ லின்க் இங்கே, இந்த வீடியோவின் 37வது நொடியில் பாருங்கள் .


அவசியம் படத்தை பாருங்கள், அல்லது இங்கே இந்த டிரெய்லர்களை பாருங்கள், நிச்சயம் படத்தை பார்க்கவைக்கும் அந்த இரண்டு டிரெய்லர்கள் டிரெய்லர் 1 , டிரெய்லர் 2

10 கருத்துரைகள்:

பிரசன்னா இராசன் said...

what's eating gilbert grapen தமிழாக்கம் 'கில்பெர்ட் கிரேப்பை என்ன சாப்பிடுகிறது' என்று அர்த்தம் கொள்ள வேண்டுமே தவிர 'கில்பெர்ட் கிரேப் என்ன சாப்பிடுகிறான்' என்று அர்த்தம் அல்ல. தலைப்பை உள்வாங்கி கொண்டு எழுதவும், இல்லை என்றால் அப்படியே ஆங்கிலத்திலயே போட்டு விடலாமே.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி பிரசன்னா, மாற்றிக்கொண்டேன். படத்தின் தலைப்பை இடையே கூட சொல்லியிருப்பேன், என் அர்த்ததிலே. படம் பாருஙக, அங்கயாவது நான் சொன்னது கரெக்டான்னும் சொல்லுங்க , நன்றி தலைவரே,
:-)

sivakumar said...

Hi Murali

you've made me to watch this movie. i may come to you seeking the cd if i dont get it anywhereelse. And i hope you might have seen the movie CHILDREN OF HEAVEN if not watch it. such a wonderful movie which shares the love between brother and sister.

முரளிகுமார் பத்மநாபன் said...

ஹாய் சிவா, நான் Children of Heaven படத்தை பர்த்திருக்கேன். பதிவுகூட போட்டிருக்கேன். மேலும் What's Eating Gilbert Grape ? கூட ஒரு மீள்பதிவுதான் வலைபதிவிற்கு வந்தபொழுது எழுதியது, அப்போது யாரும் படிக்கவில்லை, எனவே ஒரு நல்ல படத்தை நாலு பேருக்கு சொன்னமாதிரி இருக்குமென்னு மீள்பதிவா போட்டேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

படம் பார்க்கத்தூண்டும் பதிவு. தலைப்புக்கு பிரசன்னா சொல்வதே சரியான அர்த்தம் இல்லையா?

Toto said...

Thanks Murali for introducing a good movie.

-Toto
www.pixmonk.com

அகல் விளக்கு said...

Clippings are wonderful.

you are right!!. The trailers are push me to get the film.

Thanks Murali..

Appuram........
Tamil font work agalai. Athan Thanglish. sorry.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி ஆதிமூலகிருஷ்ணன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். ஆம், நானும் பிரசன்னாவின் அர்த்தங்களை ஒத்துகொள்கிறேன். ஆனால் நான் பாடம் பார்க்கும்பொழுது நான் சொன்ன அர்த்தங்களைக் கொண்டே படம் முழுவதும் பார்த்தேன். என்ன செய்றது எனக்கு இங்லீஷும் வரமாட்டேங்குது? :-(

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி TOTO, தொடர்ந்துபடியுங்கள். உங்கள் தளத்தை மெல்ல படித்துகொண்டிருக்கிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி நண்பா, அகல்விளக்கு. அவசியம் பாருங்க, எனக்கு ரொம்பவே பிடித்துபோனது. :-)

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.