தோழர் - ஒரு புத்தக அறிமுகம்

ஒருமுறை சென்னையில் ஒரு காபி கடையில் காபிக்காக டோக்கன் பெற்று நின்று கொண்டிருந்தேன். என் தோளில் மென்மையாக ஒரு ஸ்பரிசம், திரும்பி பார்த்தேன், ஒரு அழகான தேவதை(ஏன் தேவதை, பின்னால் சொல்கிறேன்). நீளமான கூந்தல், திருத்தமான முகம், காதில் தொங்கட்டான் மாதிரி ஒன்றை அணிந்திருந்தாள், குருவாயூரில் கொடுக்கும் சந்தனத்தின் நிறத்தில் இருந்தாள், நான் நின்றிருந்த வரிசையின் எதிர் புறத்திலிருந்து சூரியனின் இளமஞ்சள் வெளிச்சம், அவள் முகத்தை இன்னும் அழகாக காட்டிகொண்டிருந்தது.


அவளிடமிருந்து கிளம்பிய அந்த நறுமணம், என்னை எங்கெல்லாமோ கூட்டிசென்று கொண்டிருந்த்து. எங்கோ வானவீதிகளில் மிதந்து கொண்டிருந்த என்னை மீண்டும் இங்கேயே இழுத்துக்கொண்டு வந்தது அவளின் “இஸ் திஸ் க்யூ ஃபார் காபி?” என்ற குரல். நெற்றியில் புரண்டு கன்னத்தில் வழியும் முடிகளை நேர்த்தியாக காதுகளின் பின்னால் வழித்துவிட்டுக்கொண்டு முகத்தையே கேள்விகுறியாக்கி நின்றாள்.


“ஆங்..... ஆமா.......யெஸ்” என்று ஒருவழியாக சொல்லி முடித்தேன். சினேகமாக ஒரு புன்னகையை பதிலாக்கி விட்டு மெளனமாகிவிட்டாள், இன்னும் ஏதாவது பேசமட்டாளா? பதில் சொல்லும் சாக்கில் இன்னும் கொஞ்சம் அவளை நேராக பார்த்து ரசிக்க ஏதுவாக இருக்குமே என்று நினைத்தவாறு, அவளை பார்த்துகொண்டிருந்தேன். மெல்ல நேராக என் கண்ணை பார்த்தவள், எனக்கு முன்பும் பார்த்தாள், பின் ஒரு மெல்லிய புன்முறுவலுடன் சொன்னாள், “தி க்யூ இஸ் மூவிங்” .

மறுபடியும் ஒரு “ஆங்... யா... யா...” சொல்லிவிட்டு முகத்தை திரும்பிக்கொண்டேன், மனம் திரும்ப மறுத்தது. இரண்டு கைகளிலும் காபியை வாங்கிக்கொண்டு நண்பன் இருக்குமிடத்திற்கு வந்து மெல்ல திரும்பி பார்த்தேன், ம்ம்.. எங்கும் காணவில்லை, அவளை.


“வெகு அரிதாக தென்பட்டு
நிமிடங்களில் காணாமலும் கரைந்தும்
போய்விடுவார்கள், தேவதைகள்.”


‘தோழர்’ இந்த புத்தகத்தை வாசிக்கும்போது, ஷபின்னாவின் உரையாடல்களை படிக்கும்போது, பழனி முருகனின் மனஓட்டங்களை உணரும்போது, நான் சந்தித்த அந்த தேவதை எத்தனைமுறை என் நினைவில் வந்து போனாள் என்பது தெரியவில்லை.


இந்த புத்தகத்தை எனக்கு படிக்க பரிந்துரை செய்தது, என் அப்பா வயதுடைய, ஒரு கம்யூனிஸ்ட் தோழர். ராஜாமணி அவர்களின் மனைவி செம்மலர் அவர்கள். அப்பா என்றுதான் அழைப்பேன், அவரும் என்னை மற்றவர்களிடம் அறிமுகம் செய்யும்போதும் என் மூத்தமகன் என்றுதான் அறிமுகம் செய்வார். தீவிர இடதுசாரி கொள்கை பிடிப்புடையவர்கள், எப்படியும் அவர்களின் சித்தாங்களை உபதேசிக்கும் ஒரு நாவலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அது முற்றிலும் தவறில்லை.

இதை படிக்க ஆரம்பிக்கும் முன்பாக சென்னை சிறுகதை பட்டறை வந்த்தது. அங்கே முதன்முதலாக சந்திக்கும் நண்பர் கிருஷ்ணபிரபுவிற்கு ஒரு புத்தகத்தை பரிசாகக் கொடுப்பதென முடிவு செய்தபின் இந்த ’தோழர்’ புத்தகத்தை பரிசாகக் கொடுப்பதென முடிவு செய்துவிட்டேன். ஒரு நண்பருக்கு கொடுக்கும் முதல் பரிசு ‘தோழர்’ என்றிருப்பதை லாஜிக்காக விரும்பியதும், மேலும் அவர் ஒரு நல்ல வாசிப்பனுபவம் உள்ளவர், அவருடைய விமர்சனத்திற்கு பிறகு புத்தகத்தை படிப்பது இன்னும் சுவாரஸ்யத்தைக் கூட்டுமென்பதும், அதற்கான காரணங்கள்.


நான் விமர்சனம் செய்கிறேன் என்றபெயரில் எதை சொல்லியும் இந்த நாவலின் தரத்தை உயர்த்தவோ, தாழ்த்தவோ வரவில்லை. இது ஒரு நல்ல புத்தகத்தின் அறிமுகம். கம்யூனிஸ சிந்தனைகளில் பிடிப்புடையவர்கள், பிடிப்பற்றவர்கள் என இருவரையும் திருப்த்திபடுத்தும் ஒரு படைப்பு. அவசியம் படியுங்கள், சுவாரஸ்யத்திற்க்கும், நல்ல கருத்துக்கும், ஆழமான மனவியலுக்கும், மேம்பட்ட வளமான ஹாஸ்யத்திற்கும் மெல்லிய காதலுக்கும் நான் பொருப்பு. ஷபின்னாவிற்கும் பழனிமுருகனுக்குமிடையே நடக்கும் ஒவ்வொரு உரையாடல்களும், கவிதை. காதலை அனுபவித்தவர்களுக்கு இந்த கவிதையின் அர்த்தம் எளிதில் விளங்கும்.சில விஷயங்கள் ச.தமிழ் செல்வன் முன்னுறையிலிருந்து

வருமையும் பசியும் பின்னிய கரிசல்காட்டுக் கிராமத்தை, அதன் வாழ்கையை ‘வேடிக்கை’ பார்க்கவரும் பிரான்ஸ் நாட்டு கிருஸ்த்துவர் குழு ஒன்றை வழிகாட்டியாக இருந்து அழைத்துச் செல்லும் இளைஞர் ஒருவருடைய பார்வையில் கதை விரிகிறது. சாதாரணமாக – இயல்பானதாக – நாம் பழகிய, கண்களில் படும் பல விஷயங்களை ஒரு வெளிக் கண்ணுக்கு வித்தியாசமாகவும், வேதனைதரும் ஒன்றாகவும் படுவது நாவலில் பல இடங்களில் பதிவாகியிருக்கும்.அரைகுறையான இடதுசாரி பார்வையும், தன் சக மனிதர்களின்மீது நேசமும் அக்கறையும்மிக்க அந்த இளைஞனின் மனதை புரிந்துகொண்ட அக்குழுவிலிருக்கும் ‘ஷபின்னா’ என்கிற இளம்பெண்ணின் மனதிற்குள் நிகழும் மாற்றங்கள் கதையின் மையமாக அமைகிறது. தோழர் என்ற சொல்லை கேட்டாலே அலறுகிறவளாக நாவலில் அறிமுகமாகும் ஷபின்னா நாவலின் முடிவில் குழுவோடு பிரான்ஸ் நாட்டிற்கு புறப்படும் தருணத்தில் அந்த இளைஞரை ‘தோழர்’ என்று அன்போடு கண்களில் நீருடன், கூவி அழைப்பதோடு நாவல் முடிவடையும்.எப்போதும் உணர்ச்சி கொந்தளிக்கும் ஒரு படைப்பு மனதோடு வாழ்ந்தவர் தனுஷ்கோடி ராமசாமி. அவருடைய எல்லா கதைகளுமே கரிசல்காட்டு வாழ்வை சொல்லும் உணர்ச்சிமயமான குரலில் சொன்ன கதைகளே.
தவிர, இலக்கிய உலகில் உரிய இட்த்தை அவர் பெறவில்லை என்றுதான் தோன்றுகிறது. அப்பாவிக்கு எங்குதான் இடம் கிடைக்கிறது? தன்னை முன்னிருத்திகொள்ள சகல தகிடுதித்தங்களையும் செய்கிற இந்த உலகத்தில் சத்தமில்லாமல் வாழ்ந்து, வாழ்ந்த சுவடு தெரியாமல் காற்றில் கலந்த அசலான மனிதன், தனுஷ்கோடி.தோழர்
தனுஸ்கோடி ராமசாமி
முதல் பதிப்பு 1985
இரண்டாம் பதிப்பு 2005
விலை – 130/-
பாரதி பதிப்பகம்.

ஆகவே தோழர்களே! .................................................

22 கருத்துரைகள்:

மணிகண்டன் said...

ரொம்ப அழகான விமர்சனம். நிச்சயம் படித்து பார்க்கிறேன். தேங்க்ஸ்.

எம்.எம்.அப்துல்லா said...

நல்ல அறிமுகம். தேடிப் படிக்கிறேன் :)

க.பாலாசி said...

//நான் சந்தித்த அந்த தேவதை எத்தனைமுறை என் நினைவில் வந்து போனாள் என்பது தெரியவில்லை. //

இதே நினைவு இந்த கதையை படிக்கும் அனைவருக்கும் உருவாகும் என்றே எண்ணுகிறேன்.

புத்தகப்பகிர்வுக்கு நன்றி நண்பரே....இடையே சொல்லப்பட்ட கவிதை வெகு அழகு....

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி மணிகண்டன்,
அவசியம் படிங்க, நிச்சயம் பிடிக்கும்.
தொடர்ந்து படிங்க

முரளிகுமார் பத்மநாபன் said...

அப்துல்லா அண்ணா, கிடைக்கலைன்னா சொல்லுங்க, நான் அனுப்பிவைக்கிறேன்.
இப்படிக்கு உங்க கடைசி தம்பி, ஹி..ஹி..ஹி :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி பாலாஜி, அவசியம் படிங்க, இது ஏற்படுத்தும் நினைவலைகளுக்குள் யாவரும் சிக்குட போவது நிச்சயம். :-)

அகல் விளக்கு said...

உங்கள் விமர்சனம் படிக்கத்தூண்டுகிறது.

//ஆகவே தோழர்களே! //

அவசியம் படிக்கிறேன்.

ரங்கன் said...

தனுஷ்கோடி என்றொரு மனிதரின் அழகான படைப்பை அறிமுகம் செய்த உங்களை மனதார பாராட்டுகிறேன்..!!

எனக்கும் ஒரு பதிப்பு வேண்டும்..எப்போ அனுப்பி வைப்பீர்கள்?

Jeeves said...

இப்படி புத்தகத்தை அறிமுகப் படுத்திடுறீங்க சுவாரசியமா.. அப்புறம் அலைஞ்சு திரிஞ்சு நான் புக் வாங்கிடறேன். உங்க கிட்ட இருந்து படிக்க கொஞ்ச நேரம் கடன் கிடைக்குமா ?

ஆதிமூலகிருஷ்ணன் said...

மிக அழகான பதிவு. நல்ல அறிமுகம்.!

முதல் நான்கு பாராக்களில் நல்ல ஃபீலைக் கொண்டுவந்துள்ளீர்கள். ரசனை. நானே அங்கு இருப்பதாக உணர்ந்தேன்.

(எழுத்துப்பிழைகள் உள்ளன. கவனிக்கவும்)

கலகலப்ரியா said...

பாதி படிச்சேன்.. அருமை.. மீதி அப்பாலிக்க வந்து படிக்கறேன்.. =))

முரளிகுமார் பத்மநாபன் said...

படிங்க நண்பா அகல்விளக்கு, உங்களிடம் பேசியதில் மிக்க மகிழ்ச்சி, :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

இன்னா ரங்கா, இப்புடி கேட்டுபுட்டீங்கோ! உங்களுக்கு அனுப்பாம? முகவரியை சொல்லுங்கோ.....

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி ஆதி, //முதல் நான்கு பாராக்களில் நல்ல ஃபீலைக் கொண்டுவந்துள்ளீர்கள். ரசனை. நானே அங்கு இருப்பதாக உணர்ந்தேன்.//

முதன்முறையாக உங்களிடமிருந்து பாராட்டையும் பெற்றதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். :-)
தொடர்ந்து படிங்க

முரளிகுமார் பத்மநாபன் said...

//பாதி படிச்சேன்.. அருமை.. மீதி அப்பாலிக்க வந்து படிக்கறேன்.. =))//
நன்றி கலகலப்ரியா, அவசியம் படிங்க, புத்தகத்தையும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் ஜீவ்ஸ்,
//உங்க கிட்ட இருந்து படிக்க கொஞ்ச நேரம் கடன் கிடைக்குமா //
என்ன கேக்குறிங்க, புத்தகம் கொஞ்சனேரம் கிடைக்குமான்னா?
படிக்க கொஞ்சம் நேரம் கடனா கிடைக்குமான்னா?
:-)
புத்தகமா இருந்தா கண்டிப்பா கிடைக்கும்.

கனிமொழி said...

நல்ல அறிமுகம் நண்பா...

அவசியம் படிக்கிறேன்...
:-)

மாதவராஜ் said...

நல்லது நண்பா. தோழர் நாவல் குறித்து தாங்கள் எழுதி இருந்தது சந்தோஷமாக இருந்தது. அந்த நாவலைஎழுதிக்கொண்டு இருந்த காலத்தில் தனுஷ்கோடி ராமசாமி அவர்களோடு அறிமுகமானேன். கைப்ப்பிரதிகளில் சில அத்தியாயங்களை வாசித்தும் பார்த்திருக்கிறேன். அந்த அனுபவங்கள் அற்புதமானவை. தோழர் நாவலின் இரண்டாம் பதிப்பை, தனுஷ்கோடிராமசாமி அவர்களின் புதல்வர் டாக்டர் அறம் அவர்களின் அனுமதி பெற்று, பாரதி புத்தகாலயம் மூலமாக வெளியிட ஏற்பாடு செய்தோம். ஷபின்னா மறக்க முடியாத பெண்.

தோழர்.தனுஷ்கோடி ராமசாமி அவர்களைப் பற்றி நான் எழுதியது இங்கு....
http://mathavaraj.blogspot.com/2008/10/blog-post_23.html

கிருஷ்ண பிரபு said...

மன்னிக்கவும் முரளி... உன்னுடன் ஞாயிறன்று செல்பேசியில் பேசலாம் என்று இருந்தேன். வேலை பளு காரணமாக உடனடியாகத் தொடர்புகொள்ள முடியவில்லை.

கேணி நிகழ்ச்சிக்கு 'எழுத்தாளர் அசோகமித்திரன்' அடுத்த ஞாயிறு வர இருப்பதால் அவருடைய நாவல்கள் மற்றும் சிறி கதைகள் சில படித்துக் கொண்டு இருக்கிறேன்.

'தோழர்' நிச்சயம் படிக்கிறேன். பதிவு அழகாக இருக்கிறது. ஆரம்ப வர்ணிப்பு அருமை. தொடருங்கள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

நான் என்ன எழுதினாலும் உங்கள் வாசிப்பனுபவதிற்கு ஈடாகாது. எனவே நீங்கள் இந்த புத்தகம் குறித்து எழுத வேண்டுமென நினைத்தேன். அவ்வளவுதான். நிங்கள் எழுதுவதாயிருந்தால் என்னை தொடர்புகொள்ளுங்கள், நல்ல இணைப்பு கிடைத்திருக்கிறது, உங்கள் பதிவின் வடிவதிற்கேற்ப.....

முரளிகுமார் பத்மநாபன் said...

சார்.. வாங்க வாங்க.. உங்களை பற்றி தமிழ்செல்வனின் முன்னுறையிலேயே படித்தேன். உங்களிடம் பேச வேண்டும். விரைவில் தொடர்பு கொள்கிறேன்.
நன்றி ஐயா, தொடர்ந்து படியுங்கள்

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கனிமொழி, அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்தான்

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.