மகிழ்ச்சியை பங்கு போடுங்கள், இன்னும் அதிகமாகும்

எஸ்.ராமகிருஷ்ணன் என்ற பெயருக்குப்பின் என்னுடைய பதிவில் அதிகம் புழங்கிய பெயர், கிருஷ்ணபிரபு. ‘சங்கமம்- பேருந்து’ என்கிற தலைப்பில் சிறுகதைப்போட்டி நடத்திய பொழுது, அதுவரை பின்னூட்டங்களிலேயே பேசிக்கொண்டிருந்த எங்கள் நட்பின் அடுத்தகட்டமாக, கிருஷ்ணா ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.


“ நீ எதை எழுதினாலும் கதை மாதிரிதான் எழுதுற, பேசாம ஒரு கதையையே எழுதலாமில்லையா?” என்று.


நான் ”இப்போதான் படிக்கவே ஆரம்பிச்சிருக்கேன், அதுக்குள்ள எழுதுறது.....அதெல்லாம் சரிபட்டுவராது, கிருஷ்ணா” என்றேன்.
அவருடைய வற்புத்துதலின் பெயரில் மற்றும் நீயும் எழுதினால்தான் நான் எழுதுவேன் என்கிற ஒரு சமரச உடன்படிக்கையின் பெயரிலும் நான் எழுதிய முதல் கதை பேருந்து பய(ண)ம். பரிசு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் என்னால் கதை அல்லது கதைமாதிரி ஒன்றை எழுதமுடியும் என்று கண்டுபிடித்தது, கிருஷ்ணாதான். வேற என்னங்க வேணும், ஒரு மனுசனுக்கு? நம்மிடமுள்ள திறமையை எடுத்துசொல்லி ஊக்குவிச்சு நல்லதனமா பேசுற நல்ல உறவுகளை தவிற. நான் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லும் வரிகள் இது (குறிப்பு:பசங்க படத்துக்கு முன்னாடியிலிருந்தே). கை தட்ட, தட்ட வளரும் ஒரு அதிசய செடி, மனிதன்.


இப்போகூட எனக்கு Scrumptious Blod Award - ருசிகர பதிவு என்று ஒரு விருது கொடுத்திருக்கிறார். இது நிச்சயம் என் எழுத்தின் தரத்திற்க்கோ அல்லது அதை பாராட்டுவதற்காகவோ இல்லை என்பது எனக்கு தெரியும். இது என்மீதான அனபின், நட்பின் வெளிப்பாடு. கிருஷ்ணா, இந்த விருதை உன்னிடமிருந்து பெறுவதில் எனக்கு, உன்னைவிட அளவுகடந்த மகிழ்ச்சி. நன்றி.


இந்த விருதினை நான் மற்றவர்களோடு அவசியம் பகிர்ந்துகொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் உண்மையான அன்பு பகிர்ந்துகொள்வதிலேயே இருக்கிறது என்பதில் அசாத்ய நம்பிக்கைகொண்டவன் நான். கிருஷ்ணபிரபுவைப்போல என் எழுத்தில் அக்கறை கொண்டு, நிறை குறைகளை தொடர்ந்து சுட்டிகாட்டிவரும் இவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


கலகலப்ரியா

பேருதான் கலகலப்ரியா, பாரதியின் பரம விசிறி, ரெளத்திரத்தை மட்டுமே பழகுபவள். ரொம்ப தைரியமான பெண். இவரது பால்ய சிங்கள அனுபவங்களை, ரொம்பவே அழகாக, தைரியமாக, தெளிவாக, கிண்டலாக, நகைச்சுவையாக மற்றும் இவை எல்லாவற்றோடும் அவர்களின் மனதில் ஆராத ரணமாகிப்போன வேதனையான நினைவுகளை மென்சோகத்தோடு தொடர்ந்து எழுதிவருகிறார். அவரது பின்னூடங்களில் இது அழுவாச்சி காவியம் அல்ல என்றாலும் அழுவாச்சி நிச்சயம். என்னை தொடர்ந்து வாசித்துவரும் தோழி கலகலப்ரியாவின் அன்பிற்கு இந்த விருது, பரிசு.

க.பாலாஜி
கவிதை, கட்டுரை, கதைகள் என பல தளங்களிலும் இயங்கிவரும் இளைஞர். எனக்கு இவருடைய கவிதைகள், பிடிக்கும். என்னை தொடர்ந்து வாசித்தும், பின்னூட்டியும் ஊக்குவித்துவரும் நண்பர். என்மீதான இவருடைய அன்பிற்கு இந்த பரிசு. (வாழ்த்துகளை எதிர் நோக்காத நண்பனுக்கு என் வாழ்த்துகள்)

ஆதிமூலகிருஷ்ணன்
சென்னை சிறுகதை பட்டறையில் சந்தித்தோம், ஆம் அப்படித்தான் சொல்லவேண்டும், அங்கே சந்திப்பு மட்டுமெ நடந்தது. பேச்சுவார்த்தயெல்லாம், பிக்னிக் போன இடத்துலதான். நல்லாயிருக்கு, மீ த பர்ஸ்ட், போன்ற டெம்ப்ளேட் பின்னூட்டங்களிடாமல், முழுவதும் வாசித்து எழுத்துப்பிழையோ, கருத்துப்பிழையோ தயங்காமல் சொல்லிவரும் நண்பர். என் எழுத்தில் அவருடைய அக்கறைக்கு என் சிறிய பரிசு, இந்த விருது.

தோழி
அனுராதா, எங்க ஊர் பொண்ணு. தோழிங்கிற பெயரில் எழுதுகிறார்கள். கவிதைகள் இவரது பலம். இவரது கவிதையில் இருக்கும் வீரியம், நிறைய யோசிக்கவைக்கும். எது சரி, எது தவறு என்பதை அனுபவத்தினால் மட்டுமே முடிவு செய்யும் துணிச்சலான, பயணிப்பதையும், மனித உறவுகளையும் விரும்பும், பெண். வெகுசில நாட்களே பழகியிருந்தாலும், என் பதிவுகள் பற்றிய அவரது விமர்சனங்கள், வாழ்த்துகள் என்னை தொடர்ந்து எழுதச்செய்கிறது. எங்கள் நட்பின் அடையாளமாய் இந்த விருது. உங்க நாலு பேரோட பங்கிட்டதால், என் சந்தோஷம் இப்போ நாலு மடங்கா கூடிப்போச்சு. ஆகவே, நீங்களும் உங்க மகிழ்ச்சியை நாலா, ஆறா, எட்டா....... ம்ம்ம்ம், பெருக்குங்க. :-)


நண்பர்களே! இது உங்களுக்கான என் நட்பின் அடையாளம். உங்கள் மீதான என் நட்பின், அன்பின் வெளிப்பாடு. மேலும் என்னை தொடர்ந்து வாசித்தும், பின்னூட்டமிட்டும் ஊக்குவித்துவரும் மற்ற அனைத்து நண்பர்களுக்கும், எனது நன்றிகள்.

20 கருத்துரைகள்:

ராமலக்ஷ்மி said...

‘அன்பே சிவம்’ [மறக்காது:)!] தன் அன்பை அழகாய்ப் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு வாழ்த்துக்கள்!

கலகலப்ரியா said...

ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி... அப்டின்னு சொல்லி பகிர்ந்துக்கிட்ட அன்பை கொச்சைப் படுத்த விரும்பல.. =)... பகிர்ந்துக்கிட்டதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் முரளி..:)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி ராமலக்‌ஷ்மி மேடம், மறக்காது? என்னது புரியலைங்களே!

முரளிகுமார் பத்மநாபன் said...

பின்னூடங்களில் மட்டுமே கலகலப்பை தரும் ப்ரியா, நன்றிங்க. ஷேர் பண்ணிக்குங்க. சோகம் குறையும், சந்தோஷம் பெருகும். வாழ்த்துக்கள்

butterfly Surya said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

முரளி உங்களுக்கும் தான்.

ராமலக்ஷ்மி said...

முரளிகுமார் பத்மநாபன் said...

//நன்றி ராமலக்‌ஷ்மி மேடம், மறக்காது? என்னது புரியலைங்களே!//

ரெண்டு நாள் முன்னே facebook-ல் இப்படி மெசேஜ் விட்டது அதற்குள் மறந்துவிட்டதா:)?

***/hello madam,
medam vanakaam, murali. anbesivam. I hope u remember me/***

‘அன்பே சிவம்’ அழகான தத்துவம். யாருக்காவது மறக்குமா? அதைத்தான் சொன்னேன்.

வலைப்பூவுக்கு அந்த பெயரை வைத்திருப்பது அழகு.

இப்போது புரிந்து விட்டதா முரளி:)?

கதிர் - ஈரோடு said...

கலகல, பாலாஜி, ஆதி பழக்கப்பட்டவங்க...

தோழி புதியவர் எனக்கு

அனைவருக்கும் வாழ்த்துகள்

கலகலப்ரியா said...

//பின்னூடங்களில் மட்டுமே கலகலப்பை தரும் ப்ரியா,//

இதில இருந்தே நீங்க நம்ம இடுகை எல்லாம் படிக்கலைன்னு தெரியுது... இன்னொரு வாட்டி நல்ல்ல்ல்லா பார்த்துக்குங்க ... ச்சே... மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதின என்னோட நகைச்சுவை தொடர் எல்லாம் இப்டி ஆகி போச்சே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

கோபிநாத் said...

உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)

க.பாலாசி said...

//. கை தட்ட, தட்ட வளரும் ஒரு அதிசய செடி, மனிதன்.//

உங்களது கைத்தட்டலில் எனது எழுத்துச்செடியும் அழகாக வளரும் என்றே எண்ணுகிறேன். மிக்க நன்றி நண்பரே...உங்களின் அன்பிற்கு என்றுமே எனது சிரம் சாயும்.

என்னுடன் இவ்விருதினை பகிரும் அனைத்து அன்பர்கள் மற்றும் அன்பிகள் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

நன்றி நண்பா....

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் ! இந்த இடுகைக்கு தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது

தோழி said...

ரொம்ப சந்தோசம் முரளி. நிஜம்மாவே இவ்ளோ பேர் கவனிக்க கூடிய அளவுக்கு நான் எழுதறது இருக்கான்னு எனக்கு தெரியலை. ஆனா நிச்சயம் நிறைய எழுத உங்க விருது ரொம்ப உதவியா இருக்கும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி வண்ணத்து பூச்சியாரே!

முரளிகுமார் பத்மநாபன் said...

ஆங்.... இப்போ நியாபகம் வருது. மன்னிக்கவும் ராமல்க்‌ஷ்மி மேடம், தொடர்ந்து படிங்க. நன்றி

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கதிர்-ஈரோடு,
ம்ம் ஈரோடிலிருந்து இப்போ என்க்கு தெரிந்தது ஆற் பதிவர்கள். தொடர்ந்து படிங்க, நன்றி.

முரளிகுமார் பத்மநாபன் said...

உண்மைதான் கலகலப்ரியா.. படிக்கிறேன்

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கோபி நல்லா இருக்கிங்களா?

முரளிகுமார் பத்மநாபன் said...

வாழ்த்துகள் பாலாஜி, மாத்தி மாத்தி தட்டிக்க வேண்டியதுதான், எல்லோரும் வளருவோம். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா, இப்பதான் முதல் த்டவை வறீங்கன்னு நினைக்குறேன். தொடர்ந்து படிங்க, மிக்க நனறி

முரளிகுமார் பத்மநாபன் said...

வாழ்த்துகள் அனு, நிச்சயம் உங்கள் கவிதைகள் உங்களுக்கு உரிய இடத்தை பெற்றுதருமென்பதில் எனக்கு உங்களை விட நம்பிக்கை அதிகம்.
வாழ்த்துகள், தொடர்ந்து எழுதுங்கள்.
:-)

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.