எனக்கு பிடித்த பலபேர் இன்னும் இறக்க/பிறக்கவில்லை

நண்பர் பரிசல்காரன் என்னை அழைக்கும் இரண்டாவது தொடர் பதிவு இது. (தல நீங்கல்லாம் இங்க வருவீங்களா? இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் அநியாயமாத் தெரியலையா) பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து. கொஞ்சம் குண்டக்க மண்டக்க இருந்தாலும் யோசிக்காம எழுதி முடிச்சிட்டேன். ஏ.... நம்புங்கப்பா... ஆட்டோ எதும் அனுப்பிடாதீங்கோ.....


ஏங்க, எனக்கு பிடிக்கலைன்னு சொல்ற உரிமை கூட எனக்கு கிடையாதா? இதுக்கெல்லாமா ஆட்டோ அனுப்புவாங்க? புடிக்கலைன்னா சுத்தமா... புடிக்கலைன்னு இல்லை.. கொஞ்சமா... இந்தா இத்துண்னூண்டு.......

இந்தப் பதிவோட விதிகள்:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

5. இந்த விதிமுறை என்னை தொடருக்கு அழைத்த பரிசலின் எக்ஸ்ட்ரா ஒரு விதிமுறை, இது தொடருக்கு இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டுமென்பதால் நானும் அதை ஆமோதிக்கிறேன்.இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.

ரொம்பவெல்லாம் யோசிக்கலை, கேள்வியை படிச்சவுடனே டக்குன்னு மனசுக்கு தோனினதை சொல்லிட்டேன். ஏன் புடிச்சது? ஏன் புடிக்கலைன்னு சண்டைக்கு வராதிங்க, ஆமா சொல்லிட்டேன். அதையும் மீறி கேள்விகேட்பவர்களுக்கு என் பதில்கள் கொஞ்சம் முன்னதாகவே.....


பிடிச்சவங்க : அதான் பிடிச்சிருக்குன்னு சொல்லியாச்சே அப்புறமென்ன, பிடிக்கலன்னா ஆயிரம் காரணம் சொல்லாம், பிடிச்சிருக்குன்னா என்ன சொல்லறது, பிடிச்சிருக்கு...... அவ்ளோதான்.

பிடிகாதவங்க : அதான் பிடிக்கலைன்னு சொல்லியாச்சே அப்புறமென்ன, பிடிச்சிருக்குன்னா ஆயிரம் காரணம் சொல்லாம், பிடிக்கலன்னா என்ன சொல்லறது, பிடிக்கலை...... அவ்ளோதான்.

என்றோ சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பகுதியில் படித்ததாக நினைவு. இங்கே பொருத்தாமாயிருக்குமென நினைக்கிறேன்.

எனக்கு பிடித்த பலபேர் இன்னும் பிறக்கவில்லை
எனக்கு பிடித்த பலபேர் இன்னும் இறக்கவில்லை

பிடிக்காதவங்கன்னு ஒருத்தருமே இல்லைன்னு சொல்லதான் ஆசை, என்ன பண்றது, ஆக பிடிக்காதவர்களைக்காட்டிலும் பிடித்தவர்கள் அதிகம் இருக்கின்றனர் என்பதை குறிப்பால் உணர்த்தவே பிடித்தவர்(கள்) என்கிற இந்த பன்மையை பிடித்தவர்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறேன்.


1.அரசியல் தலைவர்


பிடித்தவர் : தமிழருவி மணியன், நல்ல மனிதர். அவர் இப்போ அரசியலிருந்து விலகி விட்டாராமே? அதனால இப்போ நல்லகண்ணு
பிடிக்காதவர்: வை.கோ (அவர் பேசாம (கவனிக்கனும் பேசாம) டிராமாவில நடிக்க போகலாம்)2.எழுத்தாளர்

பிடித்தவர் : எஸ்.ராமகிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி
பிடிக்காதவர் : அனுராதா ரமணன் (இந்த அன்புடன் அந்தரங்கத்தை நிறுத்துங்க மேடம்)3.கவிஞர்

பிடித்தவர் : வாலி மற்றும் வைரமுத்து
பிடிக்காதவர் : சினேகன் (யூ ட்யூபில் டைனமைட் திருமணம் என்று ஒன்றை பார்த்தேன், அதை முன்னின்று நட்த்தி வைத்தவர், சாட்சாத் நம்ம சினேகன், உவ்வே....)


4.இயக்குனர்

பிடித்தவர் : மணிரத்தினம், வெற்றிமாறன்
பிடிக்காதவர் : பேரரசு ( ஏன்னெல்லாம் கேக்காதிங்க, செம காண்டாயிடுவேன்)


5.நடிகர்

பிடித்தவர் : ரஜினிகாந்த், கமல்ஹாசன்
பிடிக்காதவர் : சேரன் ( நீங்க கேமிராவுக்கு பின்னாடிதான் சரியா இருப்பிங்க தலைவரே!)6.நடிகை

பிடித்தவர் : சினேகா, சிம்ரன்
பிடிக்காதவர் : ராதிகா (அத என் வாயால எப்ப்டீங்க சொல்லுவேன்)


7.இசையமைப்பாளர்

பிடித்தவர் : இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான்
பிடிக்காதவர் ஸ்ரீகாந்த் தேவா (எனக்கும் எல்லா இசைக்கருவிகளையும் வாசிக்க தெரியும் அல்லது வாசிக்க வைத்து ஒரு ஆர்கெஸ்ட்ரா செய்யமுடியும் என்று நிருபிக்க எல்லா வாத்தியத்தையும் ஒண்ணா அடிச்சு துவைப்பாரு பாருங்க... அக....அக....அக.....)8. அரசு அதிகாரி (காவல்துறை அதிகாரி)

பிடித்தவர் : பொன்.மாணிக்கவேல் எஸ்.பி ( என்ன மனுசங்க இவரு,.. எங்க ஊர்காரங்களுக்கு தெரியும்)
பிடிக்காதவர் : பெயர் தெரியவில்லை, எங்க ஏரியா வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும்/புரிந்த பெண் எஸ்.பி ( சீருடை அணிந்திருக்கும் ஒரே காரணத்திற்காக, அந்தம்மா பண்ணுற அட்டூளியம் இருக்கே....)


9. தொழிலதிபர்
பிடித்தவர் : இவர்கள் என் விருப்பு வெருப்புகளுக்கு அப்பாற்பட்டவர்கள், அக எல்லோரையும் பிடிக்கும்
பிடிக்காதவர் : தொழிலில் ஏமாற்றுவதென்பது தொழில்தர்மமாகிவிட்டது, இந்த தொழில் தர்மத்தை சரிவர கடைபிடிக்கும் எவரும் எனக்கு பிடிகாதவரே.


10. சின்னத்திரை நட்சத்திரம்

பிடித்தவர் : பாலாஜி (ராகமாலிகா- யார் மனதும் கோணாதபடி இவர் செய்யும் கேலி, கிண்டல்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்) கோபிநாத் ( நியா? நானா?)
பிடிக்காதவர் : லட்சுமி (கதையல்ல நிஜம்)

பின்குறிப்பு : எனக்கு உலகத்தில் பிடிக்காத ஒரு விஷயம், சண்டை. யார், எதற்க்காக என்பதெல்லாம் கிடையாது. பேசினால் சரியாகாத விஷயம் ஒன்றுமே இல்லை என்பதை திடமாக நம்புபவன் நான்.

விளையாட்டை விளையாட்டாகவே தொடர நான் அழைப்பது
கேபிள்சங்கர், அனுராதா, அகல்விளக்கு மற்றும் ரங்கன் .

17 கருத்துரைகள்:

அகல் விளக்கு said...

//நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!//

ஆஹா.... அப்படின்னா ஓக்கே...

அழைப்பிற்கு நன்றி நண்பா......

எழுதிவிடுகிறேன்.

ரங்கன் said...

அட!!

கவிஞர்கள் விசயத்தில் கச்சிதமா மேட்சிங்..!

ம்ம்..என்னை அழைத்தமைக்கும் நன்றி!!

வானம்பாடிகள் said...

வித்தியாசம இருந்தது. பல பிடித்த பிடிக்காத புதியவர்களை அறிய முடிந்தது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

பிடிக்காதவர் : பெயர் தெரியவில்லை, எங்க ஏரியா வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும்/புரிந்த பெண் எஸ்.பி ( சீருடை அணிந்திருக்கும் ஒரே காரணத்திற்காக, அந்தம்மா பண்ணுற அட்டூளியம் இருக்கே....)


9. தொழிலதிபர்
பிடித்தவர் : இவர்கள் என் விருப்பு வெருப்புகளுக்கு அப்பாற்பட்டவர்கள், அக எல்லோரையும் பிடிக்கும்
பிடிக்காதவர் : தொழிலில் ஏமாற்றுவதென்பது தொழில்தர்மமாகிவிட்டது, இந்த தொழில் தர்மத்தை சரிவர கடைபிடிக்கும் எவரும் எனக்கு பிடிகாதவரே.

//

பிடிப்பதற்கு /அல்லாததற்கு காரணம் சொல்வதோ, பொத்தாம் பொதுவாக பதில் சொல்வதோ இந்தத்தொடரை ஆரம்பித்த மாதவராஜின் நோக்கமல்ல.. இவ்வளவு விரைவிலேயே இந்தத்தொடர் நோக்கத்தை விட்டு திசைதிரும்பிவிட்டது.

ரைட்டு விடுங்க.!

கலகலப்ரியா said...

அட அட... எனக்கு பாதிக்கு மேல யாரையும் தெரியல... அதுக்காக இடுப்புக்கு மேல தெரியலையான்னு கேக்கப்டாது... ஆனாலும் உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.. =))

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி நண்பா!
படித்தும் விட்டேன்.. வாழ்த்துகள்

முரளிகுமார் பத்மநாபன் said...

ஓ அப்படியா ரங்கா!
எழுதுங்க படிப்போம்

முரளிகுமார் பத்மநாபன் said...

குறிப்பெடுத்தத பார்த்தா எதோ பாராட்டபோறிங்கன்னு நினைச்சேன். அதான பார்த்தேன். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி வானம்பாடிகள், தொடர்ந்து படிப்பதற்கு

முரளிகுமார் பத்மநாபன் said...

ப்ரியா, குசும்பு.

ரோஸ்விக் said...

நல்லகண்ணு அருமையான தேர்வு...

பிடிக்காத அரசியல் தலைவர்-ல இவரு தான் ஆட்டோ அனுப்ப மாட்டார்னு முடிவு பண்ணிட்டீங்க போல :-) உண்மை தானே? எனக்கு தெரியும் உங்க லிஸ்ட் ரொம்ப பெருசு இந்த விஷயத்துல.


http://thisaikaati.blogspot.com

தியாவின் பேனா said...

நல்ல தெரிவுகள்

Stephen said...

Hi Murli, i am using English on your tamil blog. Sorry for that ! I know you as a man of attitude. I admire your thoughts.

I pray and wish you all the best.

முரளிகுமார் பத்மநாபன் said...

ஐயையோ அபடியெல்லாம் ஒண்ணுமில்லிங்க, டக்குன்னு மனசுக்கு தோணிந்தை எழுத்ட்டேன் அவ்ளோதான். எது எப்படியோ நன்றி நண்பா ரோஸ்விக், வருகைக்கும் கருத்துக்கும்

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி தியாவின் பேனா,தொடர்ந்தமைக்கும், நன்றி.

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் கேப்டன், வாங்க யூ ஆர் வெல்கம், உங்க பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன்.
:-)

உங்கள் வாழ்த்துக்கும், வருகைக்கும் எனது நன்றிகள்

க.பாலாசி said...

பல பிடித்த பிடிக்காத விடயங்களில் நாம் ஒத்துப்போகிறோம் நண்பா....

//எனக்கு பிடித்த பலபேர் இன்னும் பிறக்கவில்லை
எனக்கு பிடித்த பலபேர் இன்னும் இறக்கவில்லை//

ஒத்துக்கிறேன்.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.