அன்பேசிவம் - சதம் மற்றும் சில குறிப்புகள்

முதன்முதலாக நான் பதிவெழுத ஒருவகையில் காரணமாகவும், ஆரம்ப கட்டத்தில் தொடர்ந்து படித்தும் பின்னூட்டமிட்டும் ஊக்கமளித்து வந்த இனிய சகோதரர் வெங்கட்ராமன் மற்றும் நான் என்ன எழுதினாலும் “நல்லா இருக்குங்க, முரளி” என்று சும்மானாச்சுக்கும் சொல்லி என்னை தொடர்ந்து எழுத செய்த நண்பர் ஷிவா இருவருக்கும் என் முதல் நன்றிகள்.


நானே எழுதி நானே படித்துக்கொண்டுமிருந்த ஆரம்பகட்டங்களில் என் பதிவை படித்துவிட்டு “ஏன் முரளி, உங்க பதிவில் ஒரு மினிமம் ஸ்டேண்ட்ர்ட் இருக்கே, நீங்க ஏன் தமிழ்மணம், தமிழிஷ் போன்ற பிளாக் அக்ரகேட்டர்களில் இணையக்கூடாது?” என்று அக்ரகேட்டர்களை அறிமுகம் செய்துவைத்த நண்பர், பதிவர் கடலையூர் செல்வமிற்கும் எனது தனிப்பட்ட நன்றிகள்.

மேலும் அண்ணாச்சி வடகரைவேலன், சகா. கார்க்கி, தல பரிசல்காரன், சங்கத்தலைவர் வெயிலான் ரமேஷ், அகநாழிகை.பொன்.வாசுதேவன், நண்பர்கள். கேபிள்சங்கர், பட்டர்பிளை சூர்யா, ஆதிமூலகிருஷ்ணன், கிருஷ்ணபிரபு, நாஞ்சில்நாதம், அகல்விலக்கு, க,.பாலாஜி, நுனிப்புல்.சந்ரு, நெஸ்ட்லே சிவகுமார், லோகு, கிர்பால் வெங்கட், நிகழ்காலத்தில், ஹாலிவுட்பாலா, தோழர் சிந்தன், சக்கரை சுரேஷ் என பதிவுலகில் எனக்கு நல்ல நண்பர்களையும், ஒத்த சிந்தனையுடைவர்களையும், என்மீதும் என் எழுத்தின்மீதும் அக்கறை கொண்டு நல்ல கருத்துக்களை, பாரட்டுகளை, விமர்சங்களை பின்னூட்டங்கள் மற்றும் தொலைபேசியிலும் தொடர்ந்து சொல்லிவரும் இவர்களை எனக்கு தந்த பதிவுலகில்,


இதுவரை முகமறியாது என்னை தொடர்ந்து படித்துவரும் நண்பர்கள் ஆதவா, அன்பு, அன்பரசன், சிவராஜ், மா.திரு, உண்மைதமிழன், நாகங்குயில், இராகவன் நைஜிரியா, உலவு.காம், ஸ்ரீ, ஷிரடி சாய்நேசன், தேவன்மாயம், சந்துரு, ஆர்.கே, பிரியமுடன் பிரபு, பித்தன், பிரபாகர் ராமசாமி, தமிழ், முத்துகுமார் கோபாலகிருஷ்ணன், விஷ்ணுகுமார், வானம்பாடிகள், ராஜாராம், ஊடகன், வெண்நிறஇரவுகள் இவர்களை எனக்கு தந்த பதிவுலகில்,


சக பதிவர் என்கிற அடிப்படையில் இதுவரையிலும் என்எழுத்தை படித்தும், விமர்சித்தும், இனிமேலும் அதையே தொடர்ந்து செய்யவிருக்கும் பெண் பதிவர்கள் மற்றும் தோழிகள் கனிமொழி, அனுராதா, கலகலப்ரியா மற்றும் அண்ணி மயில் விஜி, ரசிக்கும்சிமாட்டி, சுமஜ்லா, தியாவின் பேனா, விதூஷ் என இவர்களை எனக்கு தந்த பதிவுலகில், நான் எழுதும் 100ஆவது பதிவு இது.


எனக்கு மிகவும் பிடித்த கிரிகெட் விளையாட்டில்கூட நான் அதிகபட்சமாக 58 ரன்களுக்குமேல் அடித்தது கிடையாது. சொல்லபோனால் நான் அடிக்கும் முதல் சதம் இதுதான். எனக்கு இப்படி சொல்வதில் எனக்கு ரொம்பவே பெருமையாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.


எனக்கு வாதம் பிடிக்கும், விதண்டாவாதம் பிடிக்காது. அதனாலேயே இதுவரையிலும் என்னுடைய பதிவுகளில் தனிப்பட்டு யாரையும் தாக்கியோ, அவர்களுக்கு எதிரான கண்டன கருத்துகளை பதிவு செய்வதற்கோ பயன்படுத்தியதில்லை என்றே நினைக்கிறேன். ஒருவேளை இதுவரை நான் எழுதிய பதிவுகளில், என் எழுத்து யாருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக இருந்திருந்தால், மன்னிக்கவும். இது என்னுடைய ரசனைகளுக்கு, விருப்பங்களுக்கு, கற்பனைகளுக்கு, கனவுகளுக்கான களம்.

இதுவரை ஒண்ணும் பெருசா எழுதிவிடவில்லை என்றாலும் இனிமேல எழுதுறது உருப்படியா நல்ல விஷயங்களை எழுது என்று உங்களின் ஒவ்வொரு பின்னூட்டக்களும் எனக்கு சொல்லிக்காட்டிவதாய் எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். யாருடைய பெயரையும் விட்டிருந்தால், பிழை பொருத்தருள்க. இனியும் தொடர்ந்து படியுங்கள், நான் எழுதத்தான் போகிறேன்.

31 கருத்துரைகள்:

Anitha said...

Hi Murali,
Unnudaya nooravathu padivukku naan thaan mudal alla karutthu yeluthareenu nenikaren. Ithai parthathu nee romba santhosa paduvennu ennaku theriyum. Nee thodarnthu yelutha enn valthukal.

Karthikeyan G said...

Congrats!!

Karthikeyan G said...

Congrats!!

திருப்பூர் வலைப்பதிவர்கள் said...

திருப்பூர் வலைப்பதிவர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
☼ வெயிலான்.
http://veyilaan.wordpress.com/
http://tiruppur-bloggers.blogspot.com/

ராமலக்ஷ்மி said...

இன்னும் பல சதங்கள் காண நல்வாழ்த்துக்கள்!

Cable Sankar said...

/நான் எழுதத்தான் போகிறேன்.
//

அப்ப இதுவரை எழுதினது..:)

கலையரசன் said...

அட்டகாசம்...

லோகு said...

வாழ்த்துக்கள் அண்ணா.. டபுள், டிரிபிள் செஞ்சுரிகளுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

லோகு said...

//எனக்கு வாதம் பிடிக்கும், விதண்டாவாதம் பிடிக்காது. அதனாலேயே இதுவரையிலும் என்னுடைய பதிவுகளில் தனிப்பட்டு யாரையும் தாக்கியோ, அவர்களுக்கு எதிரான கண்டன கருத்துகளை பதிவு செய்வதற்கோ பயன்படுத்தியதில்லை என்றே நினைக்கிறேன்.//

:)

க.பாலாசி said...

முதல்ல கைகுடுங்க நண்பா...வாழ்த்துக்கள் செஞ்சுரிக்கு....உங்களது எழுத்துக்களில் யார் மனதும் இதுவரை புண்பட்டிருக்காது என்றே எண்ணுகிறேன். நல்ல இடுகைகளை தொடர்ந்து பதியுங்கள்....

ஹாலிவுட் பாலா said...

சீக்கிரம் 200 அடிக்கவும் வாழ்த்துகள்.. முரளி! :)

கலக்குங்க!

முரளிகுமார் பத்மநாபன் said...

ஹனி கண்டிப்பா, இதைவிட வேறென்ன வேண்டும். ரொம்ப தேங்க்ஸ், அதுசரி எதுக்கு தேங்க்ஸ் இல்லையா?

முரளிகுமார் பத்மநாபன் said...

கார்த்திகேயன் நன்றி நண்பா, ரொம்ப நாளைக்கு பிறகு கடைக்கு வறீங்க.. மன்னிக்கனும் உங்க பேரை விட்டுட்டேன்

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி வெயிலான், :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

ராமலஷ்மி மேடம், உங்கள் வாழ்த்துகள் நிச்சயம் என்னை தொடர்ந்து எழுத செய்யும்

முரளிகுமார் பத்மநாபன் said...

தல இனிமேலும் எழுதுவேன்னு சொல்ல வந்தேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கலையரசன், தொடர்ந்து படிங்க

முரளிகுமார் பத்மநாபன் said...

க.பாலாஜி, நன்றி நண்பா. நிச்சயம் இனியாவது நல்ல பதிவுகளை எழுதுவேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

பாலா ரொம்ப தேங்க்ஸ் ஹாலிவுட்பாலா
:-)

Toto said...

வாழ்த்துக்க‌ள் முர‌ளி.. நினைவு, வ‌ரிசைப்ப‌டுத்தி ந‌ன்றி சொன்ன‌ வித‌ம் அருமை.

-Toto
www.pixmonk.com

பேரரசன் said...

வாழ்த்துக்கள் முரளி ,
சச்சின் சதம் கண்டது போல் இருக்கு... 200 எதிர்பார்ப்புடன்

கனிமொழி said...

நண்பா ரொம்ப ரொம்ப சந்தோசம்...
வாழ்த்துக்கள்...
100 என்ன, 200 என்ன, எழுந்துங்க... எழுதுங்க...எழுதிக்கிட்டே இருங்க...
:-) :-)

பட்டிக்காட்டான்.. said...

100 க்கு வாழ்த்துகள்..

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தல ;)

முரளிகுமார் பத்மநாபன் said...

டோடோ வணக்கம், நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும். தொடர்ந்து படிங்க நண்பா.

முரளிகுமார் பத்மநாபன் said...

செந்தில் வாங்க வாங்க இப்போதான் நம்ம கடைக்கு வழி தெரிஞ்சதுபோல....இருக்கட்டும்

முரளிகுமார் பத்மநாபன் said...

கனிமொழி, நீங்க எல்லோரும் படிக்கவே தயாரா இருக்கும்போது என்க்கென்ன எழுத வேண்டியதுதானே////

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி பட்டிக்காட்டான் அவர்களே! வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி மீண்டும் வருக

முரளிகுமார் பத்மநாபன் said...

கோபி மன்னிக்கனும் உங்க பேரையும் விடுட்டேன். கடவுளே இப்போதான் ஒவ்வொருத்தர் பேரா நியாபகம் வருது.

Stephen said...

I remember the 58 you scored. You opened the innings that day morning and were hitting all good balls to all the parts of the ground. Unfortunately, your team lost that match inspite of your brilliant knock !!!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

என்ன என் பெயரை காணோம் !

மீண்டும் வருவான் பனித்துளி !

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.