தேசம் என்பது மக்களாகிய நாம்தான்

மோகன் பார்கவா, இந்தியாவின் வடகிழக்கு பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு அமெரிக்கவாழ் இந்தியன், ஒரு இளம் விஞ்ஞானி, அமெரிக்காவின் நாசாவில் செயற்கைகோள் ஆராய்ச்சி பிரிவில் ஒரு புராஜக்ட் மேனேஜராக பணிபுரிகிறான். சிறுவயதிலேயே தாய்தந்தையரை விபத்தில் இழந்து, அவனது பாட்டி காவேரியம்மாவால் வளர்கப்பட்டு இப்போது அமெரிகாவில் பணிபுரிந்து வருகிறான். தன்னுடைய புராஜக்டை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டு, இந்தியா சென்றுவர நினைக்கிறான். அப்படியே தன்னுடைய பாட்டியையும் தன்னுடன் அழைத்துவந்திடவும் நினைக்கிறான். இரண்டு மாதம் விடுப்பெடுத்துக்கொண்டு, இந்தியா வருகிறான். விமானத்தில் மோகன் வரும்போது வருகிற ரம்மியமான பின்னணி இசையும், பல வருடங்களுக்கு பிறகு இந்தியாவை மேலிருந்து மோகன் பார்க்கும்போது அவனது உணர்ச்சிகளும் ஒரு நல்ல படம் பார்க்கப்போகிறோம் என்பதை மெல்ல உணர்த்தியது.


காவேரியம்மாவிற்கு எந்த தகவலும் சொல்லாமல் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பொருட்டு இந்தியா வரும் மோகனுக்கு அவர்கள் முன்பிருந்த முகவரியில் இல்லாதது அதிர்ச்சியாக அமைகிறது. தன்னுடைய இந்திய நண்பனின் உதவியோடு அவர்களின் தற்போதைய இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் இறங்குகிறான். அப்போது நண்பனின் புத்தக்கடையில் கீதா என்கிற இளம்பெண்ணை சந்திக்கிறான். அவள் வேறு யாருமல்ல, மோகனின் பால்ய சினேகிதி. காவேரியம்மா என்று விசாரிப்பதிலிருந்தும், அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான் என்பதிலிருந்தும் இது காவெரியம்மாவின் பேரன் மோகன் பார்கவாதான் என்பதையும் வந்தால் காவேரியம்மாவையும் அமெரிக்கா அழைத்துபோய் விடுவான் என்பதையும் உணர்கிறான். அதனால் தனக்கு அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியும் என்று சொல்லி தவறான ஒரு முகவரியை கொடுக்கிறாள்.


நண்பனின் மூலமாக ஒரு குளியலறை, கழிப்பறை வசதியோடு ஒரு வாகனத்தை (கேரவன்) வாடகைக்கு எடுத்துக்கொண்டு கிளம்புகிறான். ஒருவழியாக சரியான முகவரியை கண்டுபிடித்து சரன்பூர் சென்றடைகிறான். சரண்பூர், முறையான மின்சார வசதிகூட இல்லாத ஒரு குக்கிராமம். அங்கு கேரவனில் செல்லும் மோகன், அந்த ஊரையே அதிசயமாக பார்க்க, அந்த ஊரே இவனை அதிசயமாகப் பார்க்க, ஆரம்பிக்கிறது படம்.


மோகனில் திடீர் வருகையில், மகிழ்ச்சியின் உச்சத்திலிருக்கிறார் காவேரியம்மா. அப்போது கீதா அங்கு வருகிறாள். காவேரியம்மா, கீதாவிற்கு மோகனையும் மோகனுக்கு இவள்தான் கீதா, சின்ன வயசுல நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருந்தாளே! என்கிறார். தனக்கு நியாபகம் இருப்பதாகவும், இங்கு வருவதற்கே இவள்தான் உதவிசெய்தாள் என்கிறான் கிண்டலாக. கீதா, தன்னுடைய தம்பியுடன் அந்த கிராமத்திலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாள். அவளது பெற்றோரின் இழப்பிற்கு பிறகு அவளும் காவேரியம்மாவும் ஒரே வீட்டில், ஒருவருக்கொருவர் ஆதரவாக இந்த கிராமத்திற்கு வந்து வசிக்கத்தொடங்குகிறார்கள். எங்கே காவேரியம்மாவை தன்னிடமிருந்து பிரித்து அமெரிக்கா அழைத்து சென்றுவிடுவானோ என்கிற பய உணர்ச்சியே அவளை மோகனை வெறுக்கசெய்கிறது.


மோகனைப் பொருத்தவரை, கீதாவின் மீது ஒரு முதிர்ந்த இனகவர்ச்சி ஏற்படுகிறது. அவளை கவரும்பொருட்டு அவனது தம்பி முதல் கிராமத்து பெரியவர்கள் வரை இணக்கமாகிறான். அதுவே அந்த கிராமத்தில் பொருந்திபோக உதவியாய் இருக்கிறது. ஒரு சராசரி இந்திய கிராம்ம், பஞ்சாயத்து, மற்றும் அதன் தலைவர்கள், ஊர் பெரியவர்கள், உயர்ந்த, தாழ்ந்த சாதி பிரிவுகள். அறியாமை, மூட நம்பிக்கை, யதார்த்தமான மனிதர்கள் ( மோகனுடன் அமெரிக்கா சென்று, அங்கே ரோட்டோரங்களில் ஓட்டல் தொடங்கும் எண்ணத்துடன் மோகனுக்கு சிறுசிறு உதவிகளை செய்யும் இளைஞன், போஸ்ட் மாஸ்டர், பள்ளி தலைமை ஆசிரியர், பஞ்சாயத்து தலைவர்) அவர்களிடம் கள்ளம் கபடமில்லாத மனதும், மோகனை ஊரோடு ஒன்றச்செய்கிறது.


நாட்கள் மெல்ல நகர்கிறது, அமெரிக்கா வர மறுக்கும் காவேரியம்மாவை எப்படியும் சரிசெய்துவிடலாம் என்று நினைக்கும் மோகனுக்கு நாட்கள் செல்ல செல்ல ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒருநாள் தன்னிடம் நிலத்தை குத்தகைக்கு வாங்கிய பக்கத்து கிராமத்து மனிதர், வெகு நாட்களாக குத்தகை பணம் தராமலிருப்பதால் அவரை போய் சந்தித்து பணம் வாங்கிவர மோகனை அனுப்புகிறார், கவேரியம்மா. சிறிது நேர பஸ் பிரயாணம், சிலமணிநேர ரயில் பிரயாணம், நெடிய படகுசவாரி என் நீண்ட பயணத்திற்கு பின் அந்த கிராமத்திற்கு வந்து சேர்கிறான் மோகன். அவர்களிடம் குத்தகைக்கு இடம் வாங்கிய நபர், வருமையின் உச்சத்தில் இருக்கிறார். பருவ மழை பொய்த்து, அரசு மின்சாரம் ரத்தாகி, விவசாய நிலம் முழுவது வறண்டு கிடக்க சோகமே உருவாய் தன் கதையை சொல்கிறார். அந்த மனிதர், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை அவர்களின் நிலையைப் பார்க்கும் மோகனின் மனது, ஏன் இவர்களுக்கு இப்படி ஒரு வறுமை என்று தவிக்கிறது. அந்த நிலையிலும் அவர்கள் தங்களது இரவு உணவை மோகனோடு பகிர்ந்து கொள்கின்றனர்.


அங்கே அவன் விழுங்கும் ஒவ்வொரு பிடியும் அவன் கழுத்தை நெரிப்பதாய் உணர்கிறான். இரவு அங்கேயே தங்கிவிட்டு காலையில் கிளம்பும் மோகன் தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து அவர்களிடம் கொடுக்கிறான். அதைப்பெற மறுக்கும் அவர்களிடம் வற்புறுத்தி கொடுத்துவிட்டு கனத்த மனதுடன் கிளம்புகிறான். வரும் வழியில் ரயிலில் ஒரு கோப்பை தண்ணீரை 25 பைசாவிற்கு விற்கும் சிறுவனை, இந்தியாவின் வருமையின் சின்னமாக அவனைப்பார்கிறான். இந்த படத்தின் மிக முக்கியமான காட்சிகளில் இதுவும் ஒன்று. ஏ.ஆர்.ரகுமானின் இசையை இங்கே கவனியுங்கள், மனுசன் ஜீனியஸ்ங்க விளையாடியிருப்பார். இந்த காட்சியில் ஷாருக்கானின் நடிப்பை பாராட்டியே தீரவேண்டும். சின்ன டயலாக் கூட கிடையாது, முக அசைவுகளிலேயே மனுஷன் பின்னியிருப்பார், அவசியம் பாருங்க , லின்க் இங்கே தண்ணீர் தண்ணீர்


தான் மீண்டும் அமெரிக்கா திரும்புவதற்குள் இந்த கிராமத்திற்கு தன்னால் இயன்ற ஏதாவது ஒன்றை செய்துவிட நினைக்கிறான். தன்னிடன் இருக்கும் பணத்தைகொண்டு அருகிலிருக்கும் மலையிலிருந்து வழியும் நீரை தேக்கி, வேகமாக கீழிறங்கச்செய்து, அதன் மூலம் ப்ரொப்பல்லர் ஷாப்டை சுழலசெய்து மின்சாரம் எடுக்கும் முயற்சியில் வெற்றிபெருகிறான். கிராமத்தில் நிழவும் ஜாதிபிரச்சனைக்கு சுமுகமான முறையில் தீர்வு காண்கிறான். இப்படி அவனது ஒவ்வொரு முயற்சியிலும் படிபடியாக கீதாவின் மனதும் கரைகிறது.
நாட்கள் இப்படியாக செல்ல, அவன் அமெரிக்கா திரும்பும் நேரம் வருகிறது. அந்த கிர்ரம்த்தில் ஒவ்வொரு உயிருக்கு அவன் வேண்டியவனாகிப் போகிறான். யாரும் அவனுடைய பிரிவினை தாங்குவதாயில்லை. கண்ணீர் மல்க வழிஅனுப்பி வைக்கின்றனர். கீதா அவனுக்கு இந்தியாவையும் அதன் பாரம்பரியத்தையும் நினைவுபடுத்தும் படியாக அஞ்சறைபெட்டியை கொடுக்கிறாள்.


மிக்கடினமான மன நிலையில் அமெரிக்கா திரும்பும் மோகன், அங்கும் மனம்கொள்ளாமல் தவிக்கிறான். யாருடைய போட்டோவைப் பார்த்தாலும், உலக வரைபடத்தில் இந்தியாவைப் பார்த்தாலும் அவனுக்கு அங்கே இருப்பு கொள்ளமுடியாமல் செய்கிறது, இந்திய நினைவுகள் அவனது மனதில் பசுமையாய் படர்ந்துவிடுகிறது. இங்கே பின்னணியில் ஒரு பாடல் அனேகமாக எல்லோராலும் கேட்கப்பட்ட பாடல். அயல்நாடு உந்தன் வீடல்ல விடுதியடா


“உந்தன் தேசத்தின் குரல், தொலைதூரத்தில் அதோ, செவியில் விழாதா?
சொந்தவீடுன்னை வாவென்று அழைக்குதடா, தமிழா
அந்த நாட்களை நினை, அவை நீங்குமா உனை? நிழல் போல் வராதா?
அயல்நாடு உந்தன் வீடல்ல விடுதியடா, தமிழா”


கவிஞர் வாலியின் அர்த்தம் பொதிந்த வரிகள், மிக அருமையான ட்யூன், மெல்லிய இசை, ரகுமானின் பிசிறில்லாத குரல் என இந்த மொத்தபாடலும் சொக்கவைக்கும் சுகம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவலைகளை கிளறிவிடும், வசியம் இந்த பாடலுக்கு உண்டு.

மோகன், தன் நண்பனிடம் நடந்த விஷயங்களை விளக்கிசொல்லி, தான் இந்தியாவிற்கே திரும்ப இருப்பதாகவும் சொல்கிறான். அதை கேட்ட நணபன் “இந்தியர்கள் என்றாலே எளிதில் உணர்ச்சிவசப்படும் பைத்தியங்கள், என்பதை நிருபிக்கும்படியாக இருக்கிறது உன் பேச்சு, எதோ ரெண்டுமாசம் ஊருக்கு போனமா வந்தமான்னு இல்லாம, நீ ஒருத்தன் போறதால் இந்தியா செழித்திட போவதில்லை” என்று வியாக்ஞானம் பேச “ நான், இவ்வலவு சொல்லியும் உனக்கு புரியவில்லை என்றால் நான் உன்னிடம் இனி பேசுவதில் எந்த பிரயோசனமும் இல்லை” என்று சொல்லிவிட்டு இந்தியா வருகிறான். இனி அவன் மிச்சம், இந்தியாவில். சுபம்.

இந்த படத்தின் இயக்குனர் அஸ்தோஷ் கெளரிகர், இவர் இதற்கு முன் லகான் என்ற வெற்றி படத்தை கொடுத்தவர், கதாநாயகன் ஷாருக்கானின் இளம்வயது நண்பனும் கூட, தூர்தர்ஷனில் வெளிவந்த சர்கஸ் என்கிற பிரம்மாண்டமான நாடகத்தில் ஒன்றாக நடித்தவர்கள். இந்த நாடகம்தான் ஷாருக்கான் திரைப்படங்களில் நடிக்க உதவியாய் இருந்தது. ஸ்வதெஸ், வீ த பீப்புள். SWADES, we the people. இந்த ஹிந்தி திரைப்படம், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தேசம் என்கிற பெயரில் தமிழிலும் வெளியானது. நான் தமிழில்தான் முதலில் பார்த்தேன். இந்த பதிவை படிக்கிற எவரும், யாரும் உங்களிடம் இந்த பட்த்தின் தமிழ் பிரதி இருந்தால் அல்லது கிடைத்தால் எனக்கு ஒரு காப்பி அனுப்பிவையுங்கள், உங்களுக்கு புண்ணியமா போகும்.

சிலபல நாட்கள் வெளியூர் சென்றுவிட்டோ, தாய்மொழி தெரியாத ஒரு ஊருக்கு சென்றுவிட்டோ அல்லது வேறு வெளிநாடு சென்றுவிட்டோ வீடு திரும்பும்போது, சொந்த ஊரில் நுழையும்போது அல்லது சொந்தமண்ணில் கால்வைக்கும்போது வருகிற சந்தோசத்திற்கு ஈடு, இணை ஏதும் கிடையாது. ஆம், வெயிலுக்கு வரும் வரை நிழலின் அருமை தெரிவதில்லை.

22 கருத்துரைகள்:

அகல் விளக்கு said...

ஒரு மதிப்பான படத்தை பற்றிய விமர்சனம்.

எதிர்பார்க்கவே இல்லை.. நிச்சயம் அமைவரும் பார்க்க வேண்டிய படம்.

ஈரோடு கதிர் said...

மிக அருமையான விமர்சனம்

நன்றி

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லாருக்கு முரளி... எழுதி இருக்கிற விதம்... !

கலகலப்ரியா said...

antha song superb..!

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி நண்பா அகல் விளக்கு, யுத்ஃபுல்விகடனில் வந்தமைக்கு வாழ்த்துகள். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கதிர், தொடர்ந்து படிங்க, ஆமா இப்ப நல்லா இருக்கிங்களா?

முரளிகுமார் பத்மநாபன் said...

கலகலப்ரியா, படம் பார்த்திருக்கிங்களா? பாருங்க நான் எழுதியது கொஞ்சம்தான்.

குறிப்பா அந்த பாடல் எல்லா NRI களுக்கும் மிகவும் பிடிக்கும்படியான அர்த்தம் கொண்டபாடல். இல்லையா?

sasi said...

இந்ந படம் நான் பார்க்கவேண்டும் என்று நினைத்த படம் .நன்றி.உங்கள் வர்ணனையே என்னை உடனே பார்க்க துண்டுகிறது

க.பாலாசி said...

இவ்ளோப்பெரிய விரிவான விமர்சனத்தினை இப்போதுதான் பார்க்கிறேன் நண்பா. இதன்மூலமே தெரிகிறது தாங்கள் இந்த படத்தினை எந்த அளவிற்கு ரசித்திருக்கிறீர்கள் என்று....விமர்சனம் அருமை.....

எம்.எம்.அப்துல்லா said...

அந்தப் படத்தைவிட நீங்க எழுதி இருக்கது இன்னும் நல்லாருக்குண்ணே :)

Chandramohan said...

Murali,

After reading your review, it is inspiring me to see the film at the earliest. Really the way you wrote about the film is simply superb!!

We expect more & more from you.. Keep going... :)

முரளிகுமார் பத்மநாபன் said...

சசி வாங்க பதிவுலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. நீங்கள் ஃபாலோ செய்யும் முதல் பதிவு என்னுடையது. மகிழ்ச்சி

முரளிகுமார் பத்மநாபன் said...

நண்பா பாலாஜி, உண்மை தான் மிகவும் ரசித்த அதிகம் பார்க்கப்பட்ட படத்தில் ஒன்று

Chandramohan said...

Murali,

After reading your review, it is inspiring me to see the film at the earliest. Really the way you wrote about the film is simply superb!!

We expect more & more from you.. Keep going... :)

ganesh said...

எனக்கு இந்த படத்தின் தமிழ் பதிப்பு வேண்டும். எங்கு பதிவிறக்கம் செய்வது?

முரளிகுமார் பத்மநாபன் said...

அப்துல்லா அண்ணா, அஸ்தோஷ் கெளரிகர் கோச்சுக்கபோறார், நீங்க சொல்றத கேட்டு. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

ஆம், சந்த்ரு, அவசியம் பார்க்க வேண்டிய படம். மெல்லிய உணர்வலைகளை எழுப்பும் இந்த படம்.

கனிமொழி said...

விடுமுறையில் பார்க்க முதல் படம்,
சரியான நேரத்தில் பதிவை போட்டு இருக்கீங்க...
இப்பவே பாதி பார்த்த மாதிரி தான் இருக்கு, மீதியையும் பார்த்து விடலாம்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

உந்தன் தேசத்தின் குரல்' நல்ல அழகான பாடல்.!

படம் ரிலீஸான போதே பார்த்துவிட்டேன்.

கும்க்கி said...

என்னங்கய்யா...ஹிந்தியில் பேரை போட்டுவிட்டு ..அச்சு பிசகாமல் கதை சொல்லிருக்கீங்களே...டெல்லி பக்கம் போவச்சொல்லோ கூட்டிட்டு போவலாம்னு பாத்தேன்....டமில்லதான் பார்த்தீங்களா?

சரி விடுங்க....விமர்சனம் அருமை.

ஆனா பாருங்க இந்த மாதிரி போலியான தேசியம் பற்றி பாடம் நடத்திவிட்டு கல்லாப்பெட்டியை ரெப்பிட்டு போயிட்டேயிருப்பாங்க....
நாமதான் அப்பப்போ உஷாராகிக்கனும்.

சுரேகா.. said...

மிக அருமையாக எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள்.

உங்கள் எழுத்துத்திறமை பளிச்சிடுகிறது.

உங்களை எழுதவைத்த எஸ்.ராவுக்கும் நன்றி!

வாழ்த்துக்கள் ஜி!

Right Angle said...

தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு கும்பலாகத்தான் இந்த சினிமாக்காரர்களை நான் பார்க்கிறேன்.. இந்திய வறுமையின் காரண காரியத்தை ஆராயாமல், வெறும் உணர்ச்சியை தூண்டி எந்த பிரயோஜனமில்லை..

அந்த வகையில், சங்கரின் முதல்வன் படமும், ஜென்டில்மேன் படமும் பரவாயில்லை என்று தோன்றுகிறது..

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.