விடை தேடும் பயணம்

நவம்பர் 26,2008.
ஒருவருடம் ஓடி விட்டது. இன்னும் நமது அரசாங்கம் கசாபை விசாரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்றைய நாளிதழில்கூட இந்த போராட்டத்தில் உயிர் நீத்த ஹேமந்த் கர்கரே மற்றும் விஜய் சாலேஸ்கரின் அவர்களின் மனைவிகள் கசாபை தூக்கிலிட மனுகொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். என்னை பொருத்தவரை இதில் தயவு தாட்சன்யமே கூடாது. அந்த கொடிய நிகழ்வை எந்த காரணத்திற்காகவும் மன்னிக்கவும்கூடாது, மறந்துவிடவும் கூடாது. உன்னைப்போல் ஒருவன் படத்தில் கமல் பேசுகிற ஒருவசனம், “மறதி, இந்தியாவின் தேசிய வியாதி. தவறுகளை மன்னிக்கிறோமோ இல்லையோ மறந்துவிடுகிறோம்” எவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள். ஆனால் நமக்கு இங்கே அந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட மறந்தேபோய் விட்டது. இனி இந்த நவம்பர் 26க்கு ஒரு நிமிட அஞ்சலியை உட்க்கார்ந்த இடத்திலிருந்தே செலுத்திவிட்டு அடுத்தகட்ட வேலைக்கு ஆயத்தமாகிவிடுவோம்.இன்னொருமுறை நமது தேசபக்தியை காட்ட இன்னொரு குண்டோவெடிப்போ, சுனாமியோ, போரோ நடந்தேற வேண்டும். இதுக்காகவாவது அவ்வப்போது குண்டுகள் வெடித்தவண்ணம் இருக்கவேண்டுமென்று ஒரு தேர்ந்த அரசியல்வாதி சொல்லியிருக்கிறார். நமது பாதுகாப்புத்துறையின் முக்கியமான கோப்புகள் களவாடப்பட்டு பிரபல நாளிதழில் வெளியிடப்படுகிறது. ஹோம்மினிஸ்டர் இதற்காக வருந்துவதாகவும் இந்த தவறுக்கு வருந்துவதாகவும் அறிக்கை வெளியிடுகிறார். என்ன ஒரு சாபக்கேடு. இந்தமாதிரியான ஒரு சூழ்நிலைக்காக நான் அனைவரும் வெட்கிதலைகுனிய வேண்டும். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் போதிய நிதிஒதுக்கியும் தேசிய பதுகாப்பில் ஏன் இத்தனை ஓட்டைகள்?


எனக்கு அரசியல்வாதிகள் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. சொல்லப்போனால் எனது கோவம், என் மீதுதான் என்னை போன்ற உங்கள் மீதுதான். என் நண்பர் அடிக்கடி சொல்லுவார் “ All the politician’s should educate peoples. But they don’t Nor all the peoples should educate our politicians, but they also don’t “ என்று. எங்கே மக்கள் விழித்துக்கொண்டால் நாம் பிழைக்க முடியாதோ என்கிற அரசியவாதிகளின் நினைப்பும், படிக்காத மக்களின் அறியாமையும், படித்தவர்களின் ”சீ இந்த பழம் புளிக்கும் என்கிற நினைப்புமே இந்தியாவை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்றும் அடிக்கடி சொல்லுவார்.


இங்கே ஒவ்வொரு அரசியல் கூட்டத்திலும் ”யாழ்ப்பாணம் இங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, உன் சகோதரன் அங்கே கொல்லப்படுகிறான், இன்னும் நாலுபேர் சேர்ந்து அழுதால் உன் வீட்டிற்கே கேட்க்கும் தொலைவில் உன்னைப்போலவே தமிழ்பேசும் உன் சகோதரன் துடித்துக்கொண்டிருக்கிறான், உன்னால் எப்படி இங்கே நிம்மதியாய் உறங்க முடிகிறது” என்று உணர்ச்சி பிளம்பாக கதறிக்கொண்டிருப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் அழுவதை கூட பார்த்திருக்கிறேன். காவிரி பிரச்சனையையும், ஈழப்பிரச்சனையும் இவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வருவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. இலங்கை, தமிழ் நாட்டிலிருந்து எவ்வளவு தூரமோ அதைவிட கொஞ்சமே அதிக தூரம்தான் கேரளாவிலிருந்து. ஏன் அங்கே இதுபோல எந்த ஒரு அரசியல்வாதிகளும் பேசுவதில்லை. இன்னும் கொஞ்சம் தூரம் அதிகம் ஆந்திராவும் கர்நாடகாவும், ஏன் அங்கு சட்டசபையில் கூட இது ஒரு விவாதப்பொருளாகக்கூட எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. என்னுடைய அஸ்ஸாமில் வசிக்கும் நண்பனுக்கு இது பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை.


ஏனென்றால் இது தமிழர்கள் பிரச்சனை. சகோதரனின் தண்ணீர் தாகத்தை தீர்க்க மறுக்கும் அண்டை மாநிலம், தேர்தல் நேர அரசியல்வாதிகளின் தனிதமிழ்நாடு முழக்கம், தாக்ரே சகோதரர்களின் தனி மஹாராஸ்ட்ரா என எங்கு பார்த்தாலும் இனக்கலவரம். இதையெல்லாம் பார்க்கும்போது ஈழத்தமிழர்களின் பிரச்சனையை எப்படி தேசிய பிரச்சனையாக கருத முடியும். என்னைப்பொருத்தவரை ஈழப்பிரச்சனைகூட எப்பொழுது எரிய ஆரம்பித்தாலும் உடனே அணைந்துபோக ஒருகாரணம் அதற்கு பூசப்பட்ட தமிழ்முலாம். 20000 மைல்களுக்கு அப்பாலிருந்து வந்து ஒருவரால் நம்மை 50 ஆண்டுகாலம் ஆள முடிந்திருக்கிறது என்றால், 25000 மைல்கள் தொலைவிலிருந்து பெரியண்ணா அமெரிக்காவால் இங்கே இருக்கிற ஈரானில் பஞ்சாயத்து பண்ணமுடிகிறதென்றால், இது முடியாதா என்ன?


என் முன்னோர் எனக்கு இந்தியா என் தாய் நாடு, இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள் என்று அல்லவா சொல்லிகொடுத்து வளர்த்தார்கள். இனி என் குழந்தைகளுக்கு நான் என்ன சொல்லி வளர்ப்பேன்? இந்தியா என் தாய் நாடு என்றா? அல்லது இந்தியர்கள் என் உடன்பிறந்தவர்கள் என்றா? அப்படி சொன்னால் என் மன்சாட்சிக்கு நான் பொய் சொன்னவனகிப்போவேனே? இனி என் செய்வேன்?


விடைகளற்ற இந்த கேள்விகளுக்கு நம் வாழ்வின் எஞ்சிய நாட்களிலும் ஓடியபடியே தேடிக்கொண்டுதானிருக்கப்போகிறோம். சிலருக்கு இந்த கேள்வியின் வீரியம் புரியாமல் இருக்கலாம், சிலருக்கு விடைகளின் அவசியம் இல்லாமலிருக்கலாம் ஆனால் இதன் பதில்கள் தரும் உஸ்ணதகிப்பு அனைவராலும் உணரக்கூடியதாகவே இருக்கும்.


ஊதி எரிய வைக்கும் உதடாய் இரு, என்று சொன்னார் பாரதியார். அவர் சொன்னது அறத்தீ, அறிவுத்தீ, உயிர்த்தீ போன்றவைகளை கனன்று கொண்டிருக்க விடாமல் ஊதி எரிய வைக்கும் உதடுகளாய் இருக்க வேண்டுமென்று. ஓவ்வொருவருக்குள்ளேயும் எரியும் அந்த தீயை அணைய விடாமல் தொடர்ந்து ஊதி எரியசெய்யுங்கள். இன்றில்லையென்றாலும் என்றாவது ஒருநாள் வெந்து தணியும் இந்த காடு.


தீ எரிக!

அதனிடையே தசை பொழிகின்றோம்

தீ எரிக!

அதனிடையே செந்நீர் பொழிகின்றோம்

தீ எரிக!

அறத்தீ, அறிவுத்தீ, உயிர்த்தீ,

இவையனைத்தையும் தொழுகின்றோம்!

தீயே!

நின்னைபோல் எமதுள்ளம் சுடர் விடுக!

தீயே!

நின்னைபோல் எமறிவு கனழுக!

-மகாகவி பாரதியார்-

19 கருத்துரைகள்:

க.பாலாசி said...

காலையில் செய்தித்தாளை புரட்டும்போது எனக்கு ஏற்பட்ட அதே மனநிலை உங்களுக்கும் இருக்கிறது. ஆதங்கம் துக்கமுமே மிஞ்சி நிற்கிறது.

நல்ல இடுகை நண்பா....

அகல்விளக்கு said...

ரத்த நாளங்களை வீரியமாக்குகிறது உன் பதிவு நண்பா.

தீமையை எரிக்க தீ மூட்டுவோம்.

கனிமொழி said...

சிவப்பு நிற எழுத்துக்களே எல்லாத்தையும் சொல்லிவிட்டது...

எரியட்டும் தீ...

ஈரோடு கதிர் said...

சொரணை கெட்டுத்தானே கிடக்கிறோம்

கலகலப்ரியா said...

:)...

ஆதங்கம் நல்லாருக்கு...!

கோபிநாத் said...

தல

இதை பார்த்திங்களா...

http://vivasaayi.blogspot.com/2009/11/2611.html

;(

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி பாலாசி, பதிவிட்ட பத்தாவது நிமிடம் உங்கள் பின்னூட்டம் கிடைக்கப்பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. உங்கள் தொடர் ஊக்குவிப்பு ஆச்சர்யப்படுத்துகிறது, நண்பா கோபி சொன்ன லிங்கையும் ஒருமுறை பாருங்க.

முரளிகுமார் பத்மநாபன் said...

அகல்விளக்கு, நன்றி நண்பா பதிவிட்ட பத்தாவது நிமிடம் உங்களின் பின்னூட்டமும் கிடைக்கப்பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. உங்கள் (க.பாலாசி மற்றும் நீ) தொடர் ஊக்குவிப்பு ஆச்சர்யப்படுத்துகிறது, நண்பா.

கோபி சொன்ன லிங்கையும் ஒருமுறை பாருங்க.

முரளிகுமார் பத்மநாபன் said...

சிவப்பு நிற எழுத்துக்களே எல்லாத்தையும் சொல்லிவிட்டது...///

நன்றி கனி

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கதிர், நீங்கள் சொல்வது உண்மைதான். வெட்கத்துடன் ஒத்துகொள்ளதான் வேண்டும்

முரளிகுமார் பத்மநாபன் said...

///கலகலப்ரியா said...
ஆதங்கம் நல்லாருக்கு...!///

:-( நிறைய பேர் ஈழப்பிரச்சனைகளையும் மற்ற பிரச்சனைகளையும் நிறைய எழுதியபோதும், நான் எழுதாததற்கு காரணம், நான் இதுவரை இந்த விசயத்தில் ஒரு சின்ன கல்லைகூட நகர்த்தியதில்லை.

வெட்டியாக எழுதுவதிலேயோ ஆதங்கப்படுவதிலேயோ ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை என்று உறுதியாக நம்புபவன்.

இப்போது இதை எழுதக்காரணம், ஆற்றாமையின் உச்சம்தான்.
:-(

முரளிகுமார் பத்மநாபன் said...

கோபி, பார்த்தேன். :-(
ச்சே, என்னதான் இவர்களின் தேவை?

ஜீவன்பென்னி said...

நல்ல இடுக்கை. பயம் இருந்தால்தான் மனிதன் ஒழுங்காக இருப்பான். இங்கு அரசியல்வாதிகளை பார்த்து மக்கள் பயப்படிகிறார்கள். இதுதான் தான் காரணம். பொதுவாக சுயநலம் சார்ந்து செயல்படுபவர் பெரும்பான்மையாக இருக்கும் போது எதுவுமே செய்யமுடியாது.

முரளிகுமார் பத்மநாபன் said...

//பயம் இருந்தால்தான் மனிதன் ஒழுங்காக இருப்பான்.//

சரிதான், ஆனா காலையில வேலைக்கு போறவன் திரும்ப வீடு வந்து சேருவமாங்கிற பயம் தேவையில்லாதது.

ஏதோ மீண்டும் கற்காலத்துக்கே போயிட்ட உணர்வு.. :-(

ரோஸ்விக் said...

அப்பா....சரியான கோபம் தான். எப்போது மாறும் இந்த நிலை என்ற ஆதங்கம் நம்மில் பலருக்கும் உள்ளது...

இது ஒரு சவுக்கடி பதிவு....வரிக்கு வரி...வாஞ்சையோடு பாராட்ட வேண்டும் போல் உள்ளது...

இது போல் ஒரு ஆதங்கம்....முடிந்தால் படிக்கவும்.

http://thisaikaati.blogspot.com/2009/11/thandanaigal-1.html

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி, நண்பா ரோஸ்விக், //வரிக்கு வரி...வாஞ்சையோடு பாராட்ட வேண்டும் போல் உள்ளது...//
வேறென்ன வேண்டும் எனக்கு. உண்மையில் புளங்காகிதப்பட்டு போயிருக்கிறேன். :-) நன்றி

☼ வெயிலான் said...

நல்ல பதிவு முரளி!

முரளிகுமார் பத்மநாபன் said...

தலைவரே! நன்றி

பேரரசன் said...

தாமததிற்கு மன்னிக்கவும் முரளி..

மிக மிக அருமையான பதிவு...
என் முன்னோர் எனக்கு இந்தியா என் தாய் நாடு, இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள் என்று அல்லவா சொல்லிகொடுத்து வளர்த்தார்கள். இனி என் குழந்தைகளுக்கு நான் என்ன சொல்லி வளர்ப்பேன்? இந்தியா என் தாய் நாடு என்றா? அல்லது இந்தியர்கள் என் உடன்பிறந்தவர்கள் என்றா? அப்படி சொன்னால் என் மன்சாட்சிக்கு நான் பொய் சொன்னவனகிப்போவேனே? இனி என் செய்வேன்?

இந்த கேள்வி எனக்குள்ளும் உண்டு...

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.