ஒரு தந்தை, 3000 மகன்கள்

ஒரு மனிதர் தனியாளாக 3000 மரங்களுக்கும் மேல் நட்டு, பராமரித்து, வளர்த்திருக்கிறார் என்ற செய்தியை 03.12.2009, புதியதலைமுறை இதழில் பக்கம் 28-ல் மரங்களின் மகாத்மா என்கிற கட்டுரைப்படித்தேன். அடுத்தநாள், சென்னையிலிருந்து நண்பர் பெரியசாமியிடமிருந்து போன் வந்தது. நண்பா, கட்டுரை படித்தீர்களா? அவர் சத்தியமங்கலம்தானாமே? ஒரு நடை போய்பார்த்துவிட்டு வரலாமா? யோசிச்சு சொல்லுங்க, என்றார். இதில் யோசிக்க என்ன இருக்கிறது, போகலாம் என்றேன்.

சனிக்கிழமை, நேற்று காலை பத்துமணிக்கு திருப்பூரிலிருந்து கிளம்புதவதாகத் திட்டமிட்டோம். சென்னையிலிருந்து பெருந்துறை, பெருந்துறையிலிருந்து அவினாசி வந்து காத்திருந்த பெரியசாமியை அவினாசியிலிருந்து கிளாம்பும்போது மணி 10.30. அவரை பார்க்கப்போகும்போது என்ன வாங்கிச்செல்வது என்று யோசித்தோம். ஒருவழியாக மரக்கன்றுகளையே வாங்கிப்போவதென்று முடிவு செய்தோம். இரண்டு வேப்பங்கன்றுகளும், ஒரு புங்கை, ஒரு மாமர நாத்தும் வாங்கிகொண்டோம். வழிநெடுக பெரியவரைப் பற்றியே பேசிக்கொண்டே சென்றோம். 3000 மரங்களை நட்டுவைப்பது, வளர்ப்பது என்பது நீரும் நீர் சார்ந்த இடங்களில் சாத்தியமான ஒன்றுதான் என்பதில் ஆரம்பித்து, இல்லை ஒரு மரம் வளர்க்க குறைந்தது எட்டிலிருந்து பத்து மாதங்களாவது அதை சரிவர பராமரிக்கத் தேவையிருக்கும் என்பதில் நின்றது. ஆக 3000 மரங்கள் என்பது நிச்சயம் ஒரு தனி மனிதனைப் பொருத்தவரை, சாத்தியமற்ற ஒன்றுதான். அப்படியே சாத்தியப்படுத்தினால், அது சாதனைதான்.

ஒருவழியாக சத்தியமங்கலம் சென்று சேரும்போது மணி 12ஐ தொட்டுவிட்டிருந்தது. மேலும் அவருக்கு பழங்கள் ஏதாவது வாங்கிப் போகலாமென முடிவு செய்து, கடை தேடினோம். அரசு மானியத்தை மட்டுமே நம்பி வாழும் ஒரு சாமனியனுக்கு, ஒரு கிலோ பழம் என்பது வைத்து சாப்பிடக்கூடிய விஷயமல்ல, என்பதாலும், கட்டுரையில் அவர் சட்டை அணிவதில்லை என்று படித்த ஞாபகத்திலும் அவருக்கு ஒரு வேட்டியும், துண்டும் வாங்கலாமென முடிவு செய்து, கதர்பவனைத் தேடி. அதை வாங்கி முடிக்கவும், அவரது பக்கத்துவீட்டில் வசிக்கும் விஜி என்கிற விஜயகுமார் ( எங்களை அழைத்துச் செல்லவந்தவர்) எங்களுக்கு செல்போனில் அழைக்கவும் சரியாக இருந்தது. சத்தியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் வேட்டுவன்புதூர் என்கிற கிராமத்தில், இருந்தது அவரது வீடு, விஜி அவர்கள் எங்களை முதலில் மரங்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

ஆகா, எத்தனை மரங்கள். ஒரு காலத்தில் தண்ணீர் தழும்பி ஓடியிருக்கும் என கருதப்படுகிற ஒரு வாய்க்காலின் இருமருங்கிலும் வேப்பமரம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள்தான். எல்லா மரங்களும் சுமார் 15 வயதுக்கும் மேற்பட்ட மரங்கள்தான். அகண்டு விரிந்து கிளை பரப்பி சுதந்திரமாக வளர்ந்திருக்கின்றன, மரங்கள்.

கொஞ்சம் மரங்களை எண்ணலாமென்று தோன்றவே, மனதிற்குள் மரங்களை எண்ணத்தொடங்கினேன். 172 மரங்களை ஒரு நூறு மீட்டர் தொலைவு நடப்பத்ற்குள், பார்த்துவிட்டேன். இன்னும் இப்படியே எவ்வளவு தூரம் நடக்கனும் என்று விஜியிடம் கேட்டோம். இரண்டரையிலிருந்து மூணு கிலோமீட்டர் வரை இருக்கும் அதுபோக இங்கே உள்ள பள்ளி மைதானத்தில், சுடுகாட்டிலும் நிறைய மரங்கள் வைத்திருக்கிறார், என்றார். எங்களுக்கு அவ்வளவு தொலைவு நடந்து மரங்களை எண்ணுவதென்பதே ஆயாசமாக இருந்தது. சரி போகலாம் போய் பெரியவரைப் பார்க்கலாம், என்றோம். சில புகைப்படங்களை பதிவிற்க்காக படம்பிடித்துக்கொண்டு கிளம்பினோம்.

வீட்டிற்கு வந்த்தும், ஆறடி உயரத்தில் மெலிந்த தேகத்தோடு அந்த மனிதர் எழுந்துவந்து வணக்கம் சொல்லி அழைத்து சென்றார். தன் பேரனிடம் கலர் (கோலி சோடா) வாங்கிவரச் சொல்லி எங்களுக்குக் கொடுத்தார். ஐந்தடி உயரக்கூரை, என்போன்றவர்கள் உள்ளே குனிந்தே நிற்க வேண்டும். ஒரு சுவர் முழுக்க அவருக்கு கொடுக்கப்பட்ட மரியதைகள், புகைப்படமாக தொங்கிக்கொண்டிருந்தது. மரங்களின் மகாத்மா என்ற விருது, ஒரு ஓரமாக சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. இதற்குமுன் வந்து சந்தித்த செய்தியாளர்கள், நண்பர்கள் இவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இவருக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டி, அந்த நினைவுகளை எங்களோடு பகிர்ந்துகொண்டார். எப்படி உங்களுக்கு இவ்வளவு மரங்களை தனிஒருவராக வளர்த்தீர்கள்? இதில் உங்களுக்கு சிரமம் ஏது இல்லையா? என்றதற்கு விதைகளை எடுத்து வீட்டிலேயே நாத்துசெய்துகொண்டும் ஒவ்வொருமுறை ஆடுமேய்க்கும்போது அப்படியே நட்டுவைத்து விடுவேன், முட்களை பிடுங்கி வேலிமாதிரி கட்டிவிடுவேன், கொஞ்ச நாளைக்கு தண்ணிவிடுவேன், அப்புறம் அதுதானா கிடுகிடுன்னு வளர்ந்திடும் என்றார், மிக எளிமையாக. மரங்கள் சின்னதா இருக்கும்போதுகூட சிரம்மில்லை, பெரிதாக வளர்ந்த பின் ஆளாளுக்கு அதை வெட்டத்தொடங்கினார்கள். புள்ளைங்க மாதிரி வளர்த்த ஒவ்வொண்னையும் கண்ணுமுன்னால வெட்டி எடுத்துட்டு போகும்போது மனசு ரொம்ப கஸ்டமா இருக்கும். ஊர் மணியக்காரரிடம், இதுகுறித்து சொன்னபோது “நீயா தண்ணி ஊத்தி வளர்த்த, எல்லாம் அதுவா வளர்ந்தது” என்று சொல்லி அனுப்பிவிட்டதை, வருத்தத்தோடு நினைவுகூர்ந்தார்.

சரிங்கையா, இப்போ என்ன வருமானம் உங்களுக்கு என்றோம், ஒரு வருடம் முன்பு வரை பக்கத்திலுள்ள உரக்கம்பேனிக்கு வேலைக்குபோனதாகவும், தற்சமயம் இளைப்பு அதிகமானதால், வேலைக்குப்போக முடிவதில்லை என்றும் சொன்னார். மேலும், ஒரே பொண்ணு திருப்பூர்ல கட்டி கொடுத்தோம், மருமகனும் இப்போ செத்து போயிட்டாரு, அவ இப்போ இங்க ஒரு ஸ்பின்னிங் மில்லுக்கு வெலைக்கு போறா, அவ ரெண்டு படங்களுக்குப் போக எங்களையும் சேர்த்து கவனிக்கனும். அப்புறம் அரசாங்கம் மாதாமாதம் முதியோர்களுக்கென கொடுக்கும் ரூ.400ம் என்று வாழ்க்கை ஓடுகிறது என்றார். அதுவரை அவருக்கு பணம் எதுவும் கொடுத்தாம் தவறாக எடுத்துக்கொள்வாறோ என்று யோசித்துக்கொண்டிருந்த எங்களுக்கு, ஏதாவது கொடுத்தே ஆகவேண்டுமென்று தோன்றியது. அவருக்கென வாங்கிய வேட்டித்துண்டோடு ஒரு ஐநூறு ரூபாயையும் வைத்து, காசு கொடுக்கிறோமென்று தவறாக நினைக்காமல் வாங்கிக்கொள்ளுங்கள், என்று அவரிடம் கொடுத்தோம். மிகவும் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார்.

தன் பேரனுக்கு நல்ல படிக்கசொல்லி அறிவுரை சொல்லச் சொன்னார், பிறகு அவராகவே ரெண்டு பேரையும் நல்லா படிக்க வைக்கனும்ன்னு பாவம் அவ கஸ்டப்படுறா, சரி யார் சொல்லி என்ன, அவனுக்கு ஏறுனாதானே அவன் படிப்பான், என்றார் எதார்த்தமாக. விடைபெறும்போது, அவரோடும் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். அடுத்தமுறை வரும்போது அவசியம் எங்கள் வீட்டில் சாப்பிடும்படியாக வாங்க, என்றார்.

விஜி மற்றும் தேவேந்திரன் என்ற இருவரும் அவரது பக்கத்து வீட்டுக்கார்ர்கள், அவர்கள்தான் இப்போது பெரியவரை அனுசரனையாக கவனித்துகொள்கிறார்கள் மற்றும் மரங்களை பராமரிப்பதிலும், புதிதாக மரங்களை நட்டு வளர்ப்பதையும் செய்து வருகிறார்கள். எங்களை வழியனுப்ப வந்த விஜி மற்றும் தேவேந்திரன் இருவரிடமும் “அந்த பெரியவரைவிட நல்ல காரியம் செய்துவருகிறீர்கள், வாழ்த்துக்கள், உங்களுக்கோ பெரியவருக்கோ எதாவது உதவி தேவைப்பட்டால் தொடர்புகொள்ளுங்கள், என்று அலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு, அவர்களுக்கென கொண்டுவந்திர்ந்த டி-ஸர்ட்டுகளை கொடுத்துவிட்டு, அடுத்தமுறை அவரும்போது 50 மரக்கன்றுகள் கொண்டுவருவதாகச் சொல்லிக்கிளம்பினோம்.

டிஸ்கி : நான்கு மாதங்களாக வராமலிருந்த முதியோர்களுக்கான அரசின் உதவித்தொகை ரூ.400, புதியதலைமுறை கட்டுரைக்குப் பின் நான்குமாதத்திற்குமாக சேர்த்து நேற்றுதான் வந்த்து என்றார், பெரியவர். வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள், புதியதலைமுறைக்கு.

மற்ற புகைப்படங்களுக்கு இங்கே செல்லுங்கள்
தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

50 கருத்துரைகள்:

Sangkavi said...

சபாஷ்.....

3000 மரங்கள் வளர்த்த பெரியவருக்கும்....

அவருக்கு தினமும் உதவி செய்யும் விஜி, தேவந்தரனுக்கும்.....

சென்னையில் இருந்து வந்து அவரை நீங்கள் சந்தித்து வாழ்த்து சொல்ல வேண்டும் என நினைத்த உங்களுக்கும்

எனது வாழ்த்துக்கள்...........

என் நினைவில் நிற்கும் பதிவு..................

ராமலக்ஷ்மி said...

தலைப்பே அருமை. அந்தப் பெரியவருக்கு என் வணக்கங்கள். பத்திரிகையைப் படித்ததும் அவரை நேரில் சென்று சந்தித்து விவரம் தந்திருக்கும் உங்களுக்கு என் பாராட்டுக்கள். அரசு ஓய்வூதியம் அவருக்கு கிடைக்க ஆரம்பித்திருப்பது சந்தோஷம். புதிய தலைமுறையை அதற்காக வாழ்த்துவோம்.

கேசவன் .கு said...

/// "ஒரு தந்தை, 3000 மகன்கள்" ///

வாழ்த்துக்கள் நண்பரே, இயற்கையை ஆதரிக்கும் அந்த அய்யாவிற்கும் எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

// சென்னையில் இருந்து வந்து அவரை நீங்கள் சந்தித்து வாழ்த்து சொல்ல வேண்டும் என நினைத்த உங்களுக்கும்//

நண்பா, சென்னையிலிருந்து வந்தது என் நண்பர் பெரியசாமி, நான் திருப்பூர்தான். உங்கள் வாழ்த்துக்களை பெரியசாமிக்கு சொல்லிவிடுகிறேன். :-)

நன்றி.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி ராமலக்‌ஷ்மி மேடம், :-)

ஈரோடு கதிர் said...

மிக நல்ல இடுகைக்கு கோடானுகோடி நன்றிகள்

//அடுத்தமுறை அவரும்போது 50 மரக்கன்றுகள் கொண்டுவருவதாகச் சொல்லிக்கிளம்பினோம். //

அடுத்த முறை போகும் போது என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள்... நானும் 50+ மரக்கன்றுகளில் பங்கு கொள்கிறேன்

butterfly Surya said...

நானும் புதிய தலைமுறை படித்து மகிழ்ந்தேன்.

உங்கள் செயல் கண்டு நெகிழ்ந்தேன்.


கல்க்கிட்டீங்க மக்கா. சூப்பர்.

கலகலப்ரியா said...

அருமையான அனுபவம்..! தொடரட்டும்...!

க.பாலாசி said...

அவரை அடையாளப்படுத்திய புதிய தலைமுறை பத்திரிக்கைக்கு முதலில் நமது பாராட்டினைச் சொல்லவேண்டும்.

இதுபோன்ற மாமனிதரை மேலும் ஊக்குவிப்பது நமது கடமையென்றாலும் நாமும் அவரை முன்மாதியாகக் கொண்டு செயல்படவேண்டும் என்பதே இதன்மூலம் நான் பெற்றுக்கொண்ட கருத்து.

நல்ல இடுகை நண்பா...

அமிர்தவர்ஷினி அம்மா said...

பத்திரிக்கை செய்தியாக எண்ணி விட்டுவிடாமல் நேரில் சென்று அவரைப்பார்த்து உதவியும் செய்துவிட்டு வந்திருப்பதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சி + நெகிழ்ச்சி. பதிவின் தலைப்பு மிகப்பொருத்தம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கேசவன்.கு, முதல்முறை வருகிறீர்கள். தொடர்ந்து படிங்க...

:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

அடுத்த முறை போகும் போது என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள்... நானும் 50+ மரக்கன்றுகளில் பங்கு கொள்கிறேன்//

நிச்சயம் தெரியச்செய்கிறேன் நண்பரே! இந்தமுறையே அதை நான் யோசித்தேன். ஆனால் நேரம் சரியாக அமையவில்லை. :-(

முரளிகுமார் பத்மநாபன் said...

மிக்க நன்றி வண்ணத்துப்பூச்சியாரே!

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கலகலப்ரியா, புகைப்படத்தில் எழுதியபோது இந்த பதிவை எழுதவே இல்லை. அதனால்தான் அந்த பிழை. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

//அவரை அடையாளப்படுத்திய புதிய தலைமுறை பத்திரிக்கைக்கு முதலில் நமது பாராட்டினைச் சொல்லவேண்டும்.//

நிச்சயமாக நண்பா...

முரளிகுமார் பத்மநாபன் said...

//பதிவின் தலைப்பு மிகப்பொருத்தம்.//

நன்றி அமிர்தவ்ர்ஷினி அம்மா... :-)

தோழி said...

Great man Murli. I should also meet him when i come to Tirupur next time.

நிகழ்காலத்தில்... said...

//அடுத்த முறை போகும் போது என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள்... நானும் 50+ மரக்கன்றுகளில் பங்கு கொள்கிறேன்//

நிச்சயம் தெரியச்செய்கிறேன் நண்பரே! இந்தமுறையே அதை நான் யோசித்தேன். ஆனால் நேரம் சரியாக அமையவில்லை. :-(//

அடுத்த முறை ஒரு மெயிலைத் தட்டி விடுங்க அவ்வளவுதான்..

வாய்ப்பு உள்ளவர்கள் சேர்ந்து கொள்ளமுடியும்...

முரளியை மனமாரப் பாராட்டுமிறேன்.,
பெரியசாமியையும் சேர்த்துதான்..

டவுசர் பாண்டி said...

ரொம்ப குஜாலா கீதுபா !! இது போல மன்சால அல்லாம் நம்ப ஏரியால பாக்கவே முடியாது ,!! இத்தினி மரம் நட்ட பெரியவருக்கு ஒரு ராயல்
சல்யுட்டு !!
இது மேரி ஊருக்கு ரெண்டு பேரு இருந்தாக்கா போதும் !! எங்கப் பாத்தாலும் பச்ச பசேலா இருக்கும் !! வாழ்க அவரோட பணி !!

Anonymous said...

// ஒரு தந்தை, 3000 மகன்கள் //

பெருங்குடும்மபத் தலைவரைச் சந்திது வந்துள்ளீர்கள், மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்!

☼ வெயிலான் said...

அய்யன் செய்த செயலுக்கு தகுந்த மரியாதை செய்திருக்கிறீர்கள் முரளி!

கனிமொழி said...

தனிஒரு மனிதன் 3000 நட்டு பராமரிப்பது உண்மையில் எவ்வளவு பெரிய விஷயம், என் முதல் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அந்த தாத்தாவிற்கு...

பெரியவர் அய்யாசாமி,
அவருக்கு உதவுபவர்கள்,
ஊக்கம் அளிப்பவர்கள்,
புதிய தலைமுறை...
நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்.....
அனைவரும் பாராட்டிற்கு உரியவர்கள்.

மிக்க நன்றி நண்பா, அவரை பார்த்தால் எனக்கு என் மறைந்த தாத்தா நினைவிற்கு வருகிறார்.

விக்னேஷ்வரி said...

நல்ல மனிதரை நன்றாக மரியாதை செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

☼ வெயிலான் said...
அய்யன் செய்த செயலுக்கு தகுந்த மரியாதை செய்திருக்கிறீர்கள் முரளி!
//
வழிமொழிகிறேன்.

பிரியமுடன்...வசந்த் said...

மிக சந்தோஷம் முரளி..!

தங்களின் எண்ணம் போலவே வலைப்பூவின் தலைப்பு

பெரியவரின் பொது நலமும்
அதற்க்கேற்ற இடுகையின் தலைப்பும் மிகப்பொருத்தம்...!

பாராட்டுக்கள்...!

கமலேஷ் said...

உங்களோட இந்த பதிவிற்கே முதலில் ஒரு பெரிய நன்றி...
இதை படிக்கும் போது அந்த பெரியவரை போல நாமும் செய்ய வேண்டும்...முடியவில்லை என்றால் அவர்களை போன்றவர்களுக்கு நம்மால் ஆனா உதவியை செய்யவேண்டும் என்று படித்த உடன்தான் புத்தியே என்னக்கு வந்தது....இந்த பதிவை படித்த எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் நிச்சயமாக சில மாறுதல்களை ஏற்படுத்தி இருக்கும்...உங்களை போன்ற நல்ல உள்ளங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் என் மனமார்ந்த் வாழ்த்துக்கள்....

என் நடை பாதையில்(ராம்) said...

தெரிஞ்சிருந்தா உங்க கூட நானும் வந்திருப்பேனே boss

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி அனு, சொல்லுங்கள் அவசியம் அடுத்தமுறை போகலாம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

அடுத்த முறை ஒரு மெயிலைத் தட்டி விடுங்க அவ்வளவுதான்..
வாய்ப்பு உள்ளவர்கள் சேர்ந்து கொள்ளமுடியும்...//

நிச்சயம் செய்கிறேன் , சிவா அண்ணா.

முரளிகுமார் பத்மநாபன் said...

//ரொம்ப குஜாலா கீதுபா !! இது போல மன்சால அல்லாம் நம்ப ஏரியால பாக்கவே முடியாது ,!! இத்தினி மரம் நட்ட பெரியவருக்கு ஒரு ராயல்
சல்யுட்டு !!//
அண்ணாத்தே, வண்கோம், குஜாலான்னு ப்ட்சவுட்னே மெர்சலாயிட்சுபா..அப்பாலிக்கா கீழ படிக்க சொல்லோ, கிளியராயிட்சு,
தேங்க்ஸ்பா...

முரளிகுமார் பத்மநாபன் said...

பெருங்குடும்மபத் தலைவரைச் சந்திது வந்துள்ளீர்கள், மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்!///

நன்றி அனானி.

முரளிகுமார் பத்மநாபன் said...

//அய்யன் செய்த செயலுக்கு தகுந்த மரியாதை செய்திருக்கிறீர்கள் முரளி!//

நன்றி தலைவரே! பா.ரா. புத்தகம் வேணுமே...

முரளிகுமார் பத்மநாபன் said...

//பெரியவர் அய்யாசாமி,
அவருக்கு உதவுபவர்கள்,
ஊக்கம் அளிப்பவர்கள்,
புதிய தலைமுறை...
நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்.....
அனைவரும் பாராட்டிற்கு உரியவர்கள்.//

நன்றி கனிமொழி

முரளிகுமார் பத்மநாபன் said...

//நல்ல மனிதரை நன்றாக மரியாதை செய்துள்ளீர்கள். மகிழ்ச்சி.//
நன்றி அக்கா... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்...

முரளிகுமார் பத்மநாபன் said...

//தங்களின் எண்ணம் போலவே வலைப்பூவின் தலைப்பு

பெரியவரின் பொது நலமும்
அதற்க்கேற்ற இடுகையின் தலைப்பும் மிகப்பொருத்தம்...!//

நன்றி நண்பா.... வசந்த். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

//இந்த பதிவை படித்த எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் நிச்சயமாக சில மாறுதல்களை ஏற்படுத்தி இருக்கும்...//

நன்றி நண்பா, அதற்காகத்தான் எழுதினேன். விதைத்தே முளைத்ததால், மிக்க மகிழ்ச்சி.

முரளிகுமார் பத்மநாபன் said...

//தெரிஞ்சிருந்தா உங்க கூட நானும் வந்திருப்பேனே boss//

போன் நம்பரை சொல்லுங்க, அடுத்தமுறை அவ்சியம் போகலாம்.
murli03@gmail.com

பட்டாம்பூச்சி said...

வாழ்த்துக்கள் பெரியவருக்கும்,உங்களுக்கும்.

அகல்விளக்கு said...

இயற்கையை ஆதரிப்பவரைப்பற்றி படித்தவுடன் நேரில் சென்று உங்கள் ஆதரவையும் தெரிவித்தது நன்று நண்பா...

நிச்சயம் உங்களை பாராட்டியாக வேண்டும்...

மிக முக்கியமாக அய்யா-வை நினைவில் வைக்க வேண்டும். அவர் ஒரு மரம் வளர்ப்பிற்கு முன்னுதாரணம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி பட்டாம்பூச்சி, தொடர்ந்து படிங்க :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி நண்பா அகல்விளக்கு, :-)

aazhimazhai said...

படிக்கும் போதே மனசுக்கு நிறைவா இருக்கு !!!! ஒரு விஷயம் ரொம்ப கஷ்டமா இருக்கு " மரங்களை வெட்டறது " மரங்களை நட்டுவைக்க முன்வராம வெட்டறதுக்கு மட்டும் இவ்வளோ உரிமை எங்கே இருந்து தான் வருதோ !!!!!!!

அன்பரசன் said...

வாழ்த்துக்கள்
உங்கள் அனைவருக்கும்

பாலகுமார் said...

மிக்க நன்றி முரளி... என்னோடோ நண்பர்கள் கூட பெரியவரை சந்திக்கும் ஐடியாவில் உள்ளனர்... எல்லாம் உங்களோட எழுத்துகள் மூலமாக தான்..

தேசாந்திரி said...

SUPER பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே.

Anonymous said...

manasuku romba sandosatha tharuthu..

Vazthukkal Mudhiyorukum, Ungalukum!!

Raj

banu said...

1.Publishing this article in the magazine is great and thanks to them.

2.Really a mahatma of trees.I should also meet him and also we should organise trip for school childrens to inculcate this great effort.

3.Creating the awareness among the individual will help thro this article

4.There are many people woh are interested in doing this and they on't know how to do it.

5.Can this be organised thro the lttle effort in their own zones of living.

guru said...

இது போன்ற கட்டுரை படித்து, நாமும் ஏதேனும் ஒரு சிறு பங்காவது இச்சமுதாயத்திற்கு நல் சேவை ஆற்றினால், அதுவே நாம் பெற்ற இப்பிறவி பயன்..இப் பெரியவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
மாயவரம் குருமூர்த்தி

baskar said...

Kalyan sir

hands of u sir and ur team members

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.