நான்கு குறும்படங்கள்


எய்ட்ஸ் தினமான இன்று, இரண்டு நல்ல விஷயங்களை கவனித்தேன். இதோ உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒன்று
ஏற்கனவே கமல் எய்ட்ஸ் விழிப்புணர்வு விளம்பரம் ஒன்றில் ”இவர்கள் நலம்பெற இனி எத்துனை விதிகள் வேண்டுமோ, அத்தனையும் செய்வொம், அதை எந்த நாளும் காப்போம் என உளமாற உறுதிகூறுகிறேன்” என்று சொன்னது அனைவருக்கும் நினைவிலிருக்கும்.
அதற்கு முன்னுதாரணமாக அவரே ஒரு விதியை செய்து, அதை காக்கும் விதமாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 1000 குழந்தைகளை தத்தெடுத்திருக்கிறார். முதன்முதலில் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றி பலருக்கும் முன்னோடியாக இருந்த இவர், இப்பொழுது இத்தகைய நல்ல விஷயத்தின் மூலமாக, நடிகர்கள் மற்றும் அவர்களின் நற்ப்பணி இயக்கங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சித்திருப்பது வரவேற்கத்தக்கது.
கமல் அவர்களுக்கு ரசிகனாகவும் சாமனியனாகவும் எனது வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்.


இரண்டு

மேலும் எய்ட்ஸின் பாதிப்பை மெல்ல உணரச்செய்யும் மூன்று குறும்படங்கள், மூன்றுமே சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லியிருக்கிறது. அவசியம் பாருங்கள். கிருத்திகா உதயநிதி, இயக்குனர் மிஸ்கின் மற்றும் சசிகுமார் ஆகிய மூவரும் கொடுக்கப்பட்ட நான்கு நிமிடங்களில் மனதை அசைத்துப்பார்க்கும் விதமாக எடுத்துள்ள மூன்று குறும்படங்கள். இதில் ஒன்றின் தொடர்ச்சியாக இன்னொன்று இருப்பது கூடுதல் சிறப்பு.

LIFE - கிருத்திகா உதயநிதி
LOVE - சசிகுமார்
HOPE - மிஸ்கின்
மேலும் ஒளிப்பதிவாளர், இயக்குனர் சந்தோஷ்சிவன் அவர்களின் ஒரு குறும்படம் இங்கே,

17 கருத்துரைகள்:

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி முரளி..

கோபிநாத் said...

தல....

மிக்க மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு..!!!

ஒவ்வொரு குறும்படங்களும் மிக அருமையாக வந்திருக்கு ;)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி வண்ணத்துபூச்சியாரே! :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

கோபி ஆம் குறும்படங்கள் உண்மையிலேயே அருமை. குறிப்பாக கிருத்திகா அவர்களின் படத்தில் காட்சியமைப்பும் கோணங்களும் மிக அருமை. இதுக்குமேல கேபிள் வந்து சொல்லுவார்.

கமலேஷ் said...

உங்களுடைய பதிவுக்கு நன்றி...
மிக நல்ல முக்கியமான பதிவும் கூட...

அன்புடன் அருணா said...

பூங்கொத்து பதிவுக்கும்,பகிர்வுக்கும்!

கனிமொழி said...

பகிர்வுக்கு நன்றி.
குறும்படங்களும் அருமை.

ரசிக்கும் சீமாட்டி said...

அருமையான படங்கள் நண்பா... பகிர்தலுக்கு நன்றி

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கமலேஷ், ஆம் எனக்கும் முக்கியமானதாகப் பட்டது , எனவே எடுத்து இங்கே போட்டச்சு. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி அருணா மேடம், ரொம்ப நாளைக்குபிறகு உங்களிடமிருந்து ஒரு பூங்கொத்து, மிக்க மகிழ்ச்சி. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கனிமொழி, நல்லா இருக்கில்லையா?

முரளிகுமார் பத்மநாபன் said...

ரசிக்கும்சீமாட்டி, நன்றி தோழி.

அகல்விளக்கு said...

பகிர்விற்கு நன்றி நண்பா...

குறும்படங்கள் அருமை

செ.சரவணக்குமார் said...

பகிர்விற்கு நன்றி.

கலகலப்ரியா said...

appaalikkaa vanthu parkkaren..! aapees.. avv..!

கலகலப்ரியா said...

தேவையான பதிவு..! குறும்படம் வீக்கெண்ட்லதான் பார்க்க முடியும் போல... :((

ஆதிமூலகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.