எட்டுத் திக்கும் மதயானை

எட்டுத் திக்கும் மதயானை
ஆசிரியர் - நாஞ்சில் நாடன்
விலை – ரூ.100/-
விஜயா பதிப்பகம்,
20, ராஜவீதி,கோவை

// நண்பர்களின் சற்று ஆறுதலான தோள்தட்டல்,
அபூர்வமான வாசக ரசனைப் பூச்சொரிதல்… கையைத்
தூக்கிப் பிடித்து நாயிக்குக் காட்டும் பிஸ்கெட் போலைச் சில
பரிசுகள். நோக்கம் நாயின் பசியாற்றுதலா அல்லது
துள்ளித் துள்ளி ஏமாந்து, பாய்ந்து சாடி விழுங்குவதைக்
கண்கொள்ளாமல் கண்டு களித்தலா என்று
தெரியவில்லை

படைப்பாளி என்பவர் பங்களாவின் சொகுசு வளர்ப்பல்ல.
போரிடும் திறனற்ற, கால்களுக்கிடையில் வால்
நுழைத்துப் பல்லிளித்து ஒடும் நாட்டு நாய் போலும்.
பசித்தால் மனித மலமும் அதற்கு உணவு கார்த்திகை
மாத்த்துக் கனவு என்பதோர் தோற்றுப் போகும் இனப்போர்
இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது இந்த
இருபத்தைந்தாண்டு எழுத்து வாழ்க்கை படைப்பாளி
என்பவன் வேலிக்கு வெளியே நிற்பவன், போற்றுதலும்
கவனிப்பும் மறுக்கப் பெற்று

படைப்பென்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப்
பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக்
கொள்கிறார் எந்த நாணமும் இன்றி.

பொதுசொத்து என்பதாலேயே அது மரியாதை இழந்தும்
போனதாகிறது. எனவே அசலைத் தூக்கி அந்தரத்தில்
வீசிவிட்டு நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பல்லக்கு, பவள மணிப்பூக்கள், பரிவட்டங்கள்...

என்றாலும் அலுத்துப் போகவில்லை, எழுதுவது.
உங்களுக்கும் அலுத்துப் போகாதவரக்கும் எழுதலாம்,
தொடர்ந்து. அலுப்பின் வாசனையை எளிதாக முகர்ந்து
கொள்பவந்தானே நல்ல வாசகன்!////


இது நாவலின் அறிமுக உரையாக ஆசிரியர் எழுதியது. எவ்வளவு பட்டவர்த்தனமான உண்மை. பூரணம், பரிபூரணம், ஆசை, நிராசை, வெட்கம், கோவம் என எழுத்தின் மீதான அவரது அத்துணை வெளிப்பாடுகளையும் கொட்டி தீர்க்கும் வார்த்தைகள். எழுதாளர்களின் கோபங்களையும் இயலாமையையும் வெகு இயல்பாகவும், எதார்த்தமாகவும் அதே சமயம் பொட்டில் அறையும் வேகத்துடன் வந்து விழுந்த வார்த்தைகள், இந்த முன்னுரை. முன்னுரையில் ஆரம்பித்த இந்த வேகம் நாவலின் கடைசி பக்கம் வரை நீடிக்கிறது.


எட்டுத் திக்கும் மதயானை, ஒரு 270 பக்க புத்தகம், நாவல். நாவல் வழியே வாழ்க்கை. அதுவும் எந்த மாதிரியான வாழ்க்கை. பணம் துரத்தும் வாழ்க்கை, சோகம் துரத்தும் வாழ்க்கை, வன்மமும் குரோதமும் துரத்தும் வாழ்க்கை, காமம் துரத்தும் வாழ்க்கை, பாசம் துரத்தும் வாழ்க்கை, பசி துரத்தும் வாழ்க்கை, செய்நன்றி துரத்தும் வாழ்க்கை, பழி துரத்தும் வாழ்க்கை, ஒற்றை துரத்தும் வாழ்க்கை. வாழ்க்கை ஏதேனும் ஒன்று துரத்த அல்லது ஏதேனும் ஒன்றை துரத்தியபடியே ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி வாழ்க்கை எனும் காட்டாற்று வெள்ளம் அடித்த திசையில் இலக்கின்றி பயணிக்கும் பூலிங்கமும், அவன் வாழ்வும்தான் இந்த நாவல்.


நாவல் நெடுக வாசகர்களுக்கு நிறைய கேள்விகளை விதைத்துக்கொண்டே போகும் பாங்கு அருமை. படித்துமுடித்ததும் விடைகளற்ற எண்ணற்ற கேள்விகள் நிச்சயம் வாசகர் மனதில் எழும். அந்த கேள்விக்கான விடைகளை தேடியலையும் மனம், தேடல்தானே வாழ்க்கையை அழகாக்குகிறது. மற்றவர்களின் பிழைகளிலிருந்து கற்றுக்கொள்பவன் அறிஞனாகிறான், தன் பிழைகளிலிருந்து கற்றுக்கொள்பவன் மனிதனாகிறான் என்று ஒரு சொலவடை உண்டு. அந்தவகையில் இது ஒரு மனிதனை பற்றிய கதை.


எது தவறு, கொலை செய்வதா? கொலை செய்தவன் இரண்டு நொடி தாமதித்திருந்தால் கொலை செய்யப்பட்டிருப்பானென்கிற நிலையில் ஒரு கொலை, தற்காப்பாகிறது. திருட்டு, குற்றமா? அப்படியானால் அதை இங்கே செய்யாதவன் யார்? அரசாங்கம் திட்டம் போட்டு செய்கிறது. திருட்டு, கொலை, கொள்ளை, கற்பு, காதல், காம்ம், பாசம், துரோகம் எல்லாம் வெரும் வார்த்தைகள். வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு அர்த்தம் கொடுக்கும் வெரும் வார்த்தைகள்.

இருக்கப்பட்டவனின் தப்புகள், தவறாக்கப்படுகிறது. மன்னிக்கப்படுகிறது இல்லாதவனின் தவறுகளும், தப்புக்களாக்கப்பட்டு, தண்டனையும் கொடுக்கப்படுகிறது. சில சமயங்களில் செய்யாத தவறுகளுக்காகவும். அப்படிப்பட்ட செய்யாத குற்றத்திற்க்காக அனுபவித்த தண்டனைக்கு பரிகாரமாக செய்யும் குற்றங்களுக்கான தண்டனைகள், என வாழ்க்கை புரட்டிப்போட்ட ஒரு சாமனியனின் கதை, எட்டுத் திக்கும் மதயானை. அவசியம் ஒருமுறை படித்துவிடுங்கள். இந்த நாவல் இதுவரை இரண்டே பதிப்புகள் மட்டுமே வந்திருப்பது, சாபம்.

டிஸ்கி 1: கற்றது தமிழ் படத்தின் மூலக்கதை என்று சொல்லப்பட்ட நாவல், எனக்கு கேபிள்சங்கரின் ரேணிகுண்டா விமர்சனம் படித்ததிலிருந்து பரமுவின் கிளைக்கதைதான் நியாபகம் வருகிறது. தல ஒருமுறை படிச்சிருங்க...

டிஸ்கி 2: நாஞ்சில் நாடன் - இப்படி ஒரு எழுத்தை, எழுத்தாளரை எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கிறேன் (மன்னிக்கனும், சகா. கார்க்கி, எனக்கும் தெரியலை-ரொம்ப மிஸ் பண்ணுறேங்கிறத தமிழ்ல என்ன சொல்லலாம்). இவருடைய இதற்கு முந்தைய ஐந்து நாவல்களையும் பதிவு செய்துவிட்டேன்.

27 கருத்துரைகள்:

ரசிக்கும் சீமாட்டி said...

இதோ வந்துட்டேன்.... மீ first அஹ்????

ரசிக்கும் சீமாட்டி said...

//கையைத்
தூக்கிப் பிடித்து நாயிக்குக் காட்டும் பிஸ்கெட் போலைச் சில
பரிசுகள். நோக்கம் நாயின் பசியாற்றுதலா அல்லது
துள்ளித் துள்ளி ஏமாந்து, பாய்ந்து சாடி விழுங்குவதைக்
கண்கொள்ளாமல் கண்டு களித்தலா என்று
தெரியவில்லை//

நாஞ்சில் நாடன் புத்தகங்கள் இது வரை படித்து இல்லை....
கண்டிப்பா இந்த புத்தகத்தை படிக்கிறேங்க....

நல்ல புத்தக அறிமுகம்..... :)
நன்றி சகா...

Mrs.Dev said...

அருமையான நாவல்,வாசித்து வெகு நாட்கள் ஆனா பின்னும் தீராத தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வெகு சில நாவல்களில் இதுவும் ஒன்று,

சமீபத்தில் வெளிவந்த "கற்றது தமிழ்" படம் கூட கொஞ்சம் இந்த நாவலின் சாயலில் இருப்பதாக நினைத்ததுண்டு .அந்தக் கதை வேறு ,இந்தக் கதை வேறு,ஆனாலும் சில சாயல்கள் தரும் படைப்பு. நல்ல அறிமுகம்

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி முரளி. எழுத்தும் உங்கள் நடையும் மிளிர்கிறது.

வாழ்த்துகள்.

கலகலப்ரியா said...

பகிர்வுக்கு நன்றி முரளி..! படிக்க ட்ரை பண்றோம்..

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி தோழி, யேஹ் நீங்கதான் பர்ஸ்ட், எனக்கும் இதுதான் அவருடைய முதல் புத்தகம். இப்போ இஅருடைய என்பிலதனை வெயில் காயும் என்ற புத்தகம் வாங்கியிருக்கிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

சமீபத்தில் வெளிவந்த "கற்றது தமிழ்" படம் கூட கொஞ்சம் இந்த நாவலின் சாயலில் இருப்பதாக நினைத்ததுண்டு .அந்தக் கதை வேறு ,இந்தக் கதை வேறு,ஆனாலும் சில சாயல்கள் தரும் படைப்பு. நல்ல அறிமுகம்///

ஆம் திருமதி தேவ், எனக்கும் அதுபோன்றதொரு அறிமுகத்தின் பெயரிலேயே வாங்கினேன், அது பெரிய தவறு. இல்லையா? :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

//எழுத்தும் உங்கள் நடையும் மிளிர்கிறது.
வாழ்த்துகள்.///

இதை நீங்க சொல்லி கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. :-) நன்றி.

முரளிகுமார் பத்மநாபன் said...

பகிர்வுக்கு நன்றி முரளி..! படிக்க ட்ரை பண்றோம்..///

பண்றோம்னா..... ரஜினி ஸ்டைலா இது? இல்லை படிக்க யாராவது கூட்டு வச்சிருக்கிங்களா?:-)

அன்புடன் அருணா said...

நல்ல பகிர்வு! பூங்கொத்து!

கனிமொழி said...

நல்ல பகிர்வு, நண்பா.

அகல்விளக்கு said...

பகிர்விற்கு நன்றி நண்பா...

அறிமுக உரை போன்றே, உங்கள் புத்தக விமர்சனமும் அருமை..

கமலேஷ் said...

மிகவும் அழகான அறிமுக படுத்தல்...
உங்களின் எழுத்துக்களே வாசிக்க
வைத்து விடும் வரும் நாவலை..
பகிர்வுக்கு மிக்க நன்றி....

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்தல் முரளி.ஆ.மாதவனும்,நாஞ்சில் நாடனும் வட்டார மொழியின் பிரதானர்கள் என சொல்லலாம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

அருணா மேடம், இந்த மாதத்தில் இரண்டாவது பூங்கொத்து. ஹையா....
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கனிமொழி, முடிஞ்சா படிங்க...

முரளிகுமார் பத்மநாபன் said...

ராஜா, படிங்க. நல்ல புத்தகம். என மனுசன்யா இவரு நினைக்க வச்ச புத்தகம்

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி நண்பா கமலேஷ், தொடர்ந்து வாசித்து ஊக்கமளித்து வருவதற்கு.....
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

மகாப்பா, நாஞ்சில் நாடனின் வட்டார மொழியின் அழகை சொல்லாமல் விட்டோமே என்று நினைத்தேன், நீங்க சொல்லிட்டிங்க.... நன்றி.
:-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நல்ல பகிர்வு நன்றி.

வடகரை வேலன் said...

நல்ல பதிவு முரளி.

நாஞ்சில் நாடன் தமிழில் மிக முக்கியமான எழுத்தாளர். தன் அனுபவங்களிலிருந்து எழுதுபவர். இரவல் வார்த்தைகளோ அல்லது மிகை நடையோ எதுவம்ற்று எழுதுபவர். வைரமுத்து போன்றோரைப் போல தன்னை மார்க்கெட்டிங் செய்து கொள்ளத் தெரியாதவராகவும் ஆளுபவர்களை அண்டிப் பிழைக்கும் தொழில் நேர்த்தி அற்றவராகவும் இருப்பது அவரது குறைபாடு.

அவரது கட்டுரைத் தொகுப்பு மிக முக்கியமானது; நஞ்சென்றும் அமுதென்றும் கட்டுரை குறிப்பாக.

நேரில் பழகுவதற்கு எளிதானவர். அடுத்த முறை கோவை வரும்போது சொலுங்கள் அவரைச் சந்திக்கலாம்.

அவரது தலைகீழ் விகிதங்கள் கதைதான் சொல்ல மறந்த கதையாக தங்கரின் இயக்கத்தில் வந்த திரைப்படம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி ஆதிமூலகிருஷ்ணன். படிச்சதில்லைன்னா அவசியம் படிங்க....

முரளிகுமார் பத்மநாபன் said...

//ஆளுபவர்களை அண்டிப் பிழைக்கும் தொழில் நேர்த்தி அற்றவராகவும் இருப்பது அவரது குறைபாடு//

அண்ணாச்சி, சத்திய வார்த்தைகள்.

விகடனில் வந்த தீதும் நன்றும் படித்திருக்கிறேன். அமுதென்றும் நஞ்சென்றும்.... வாங்கிவிடுகிறேன்.

//நேரில் பழகுவதற்கு எளிதானவர். அடுத்த முறை கோவை வரும்போது சொலுங்கள் அவரைச் சந்திக்கலாம்//

தற்சமயம் கோவையிலா இருக்கிறார்? ஜனவரியில் நிச்சயம் வருகிறேன். கூட்டிட்டுபோங்க அண்ணாச்சி.....

கலகலப்ரியா said...

//முரளிகுமார் பத்மநாபன் said...

பகிர்வுக்கு நன்றி முரளி..! படிக்க ட்ரை பண்றோம்..///

பண்றோம்னா..... ரஜினி ஸ்டைலா இது? இல்லை படிக்க யாராவது கூட்டு வச்சிருக்கிங்களா?:-)//

இது நம்ம ஸ்டைலு...! (ஹூ இஸ் ரஜினி..?)

☼ வெயிலான் said...

// அவரைச் சந்திக்கலாம் //

இதைத் தான் நானும் சொல்ல வந்தேன். அண்ணாச்சி சொல்லிட்டார். போகும் போது சொல்லுங்க முரளி.

shortfilmindia.com said...

நிச்சயம் படிக்கிறேன் முரளி

கேபிள் சங்கர்

SiSulthan said...

நாஞ்சில்நாடனின் அனைத்து எழுத்துக்களையும் படிக்க http://nanjilnadan.wordpress.com

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.