ஆம், விருது நிச்சயம் சும்மா இல்லை
நிச்சயமா நாலு பேர் படிக்கனும், பேர் வாங்கனும்ன்னு எழுத்த்தொடங்கலை,. ஆனாலும் என் பதிவுலகின் என் ஆரம்பக்காலத்தில், பதிவெழுதியவுடன் விமர்சங்களையும் பாராட்டுகளையும் எதிர்நோக்கிக் காத்திருப்பேன், எத்தனையோ பேர் படிக்கிற பதிவுலகத்தில் ஒருத்தருக்கு புடிக்கிற மாதிரிகூடவா என்னால எழுத முடியலைன்னு ரொம்பவே விசனப்பட்ட, காலம். என் திருப்திக்கு எழுத ஆரம்பித்தபின் அதை ஏன எதிர்பார்க்கனும்? அப்படீன்னு நானே என்னை சமாதானப்படுத்திகொண்டு, இன்னமும் தொடர்ந்து எழுதிகொண்டிதான் இருக்கிறேன்.


ஒரு பொது ஊடகத்தில் எழுதுபவன், பாராட்டுக்களைப்போல் விமர்சனங்களையும் சந்திக்கும் பக்குவம் கொண்டிருக்கவேண்டும். விமர்சன்ங்கள் நிச்சயம் உங்கள் எழுத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதனால் இன்றளவில் நான் ஒரு சிலர் படிக்குமளவிற்கு எதோ எழுதுகிறேன் என்றால், இன்றுவரை என் எழுத்துக்களில் தவறிருந்தால் விமர்சித்து சுட்டிக்காட்டி தட்டிகொடுத்த நண்பர்களும், கொஞ்சமாய் நன்றாக இருக்கும்போதே மனம்திறந்து பாராட்டும் நண்பர்களினாலும் மட்டுமே.

அப்படியாக மனம்திறந்து அன்பை பிதுக்கியெறிந்திருக்கிறார், பதிவுலகில் சித்தப்பூ, மகாப்பா என அறியப்படும், பா.ரா எனப்படும் பா.ராஜாராம். தன் அன்பை ஒரு விருதாகக் கொடுத்திருக்கிறார். கொடுத்ததுமில்லாமல், விருது சும்மா இல்லை என்று வேறு சொல்லிவைத்திருக்கிறார். ஆம், உண்மைதான். எனக்கு இந்த விருது சத்தியமாக சும்மா இல்லை. கருவேலநிழல் என்ற பதிவின் சொந்தக்காரர், இவர் அன்பின் வெளிப்பாடு, இவரது புரையேறும் மனிதர்களில் அப்பட்டமாக வெளியேறும். வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் கவிதையாக அணுகத்தெரிந்தவர், அதை பதிவாக படிப்பவர்களை அந்த நொடியை அதே பாங்கோடு அனுபவிக்கும்படி பதியத்தெரிந்தவர்.

என் பதிவிற்கு இவர் பின்னூட்டமிடுகிற போதெல்லாம், எனக்கு வராத ஆங்கிலத்தை சொல்லிகொடுத்த என் ஆங்கிலஆசிரியர் என் ஆங்கிலகட்டுரை படித்து பாராட்டியது நினைவில் வந்துபோகும். இன்றளவில் நான் எழுதிய எதையும் கவிதை என்று சொல்லிக்கொள்ளும் தைரியம் எனக்கு இருந்ததில்லை. இனி தைரியமாக காலரை உயர்த்தி சொல்லிக்கொள்ளலாம், ஏனெனில் பா.ரா. என்கிர கவிஞர் நான் எழுதியதை கவிதை என்று சொல்லியிருக்கிறார் மேலும் இந்தா மக்கான்னு ஒரு விருதையும் கொடுத்திருக்கிறார். மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.

நன்றி, மகாப்பா...

இனி என் அன்பை என் சகபயணிகளான இவர்களோடுதான் பகிர்ந்துகொள்ளப்போகிறேன். ஏற்கனவே சொன்னதுபோல உண்மையான அன்பு பகிர்ந்துகொள்வதிலேயே இருக்கிறது என்பதில் அசாத்ய நம்பிக்கை கொண்டவன் நான். உங்க எழுத்து நல்லா இருக்கு, இல்லைன்னு சொல்ற அளவீட்டின் குறியீடு அல்ல இந்த விருது. நண்பர்களே! இது வெறும் என் அன்பின் வெளிப்பாடு மட்டுமே. மகிழ்ச்சியோடு கொடுக்கிறேன், என் மகிழ்ச்சி உங்கள் மூலமாக பரவட்டும். நன்றி.

க.பாலாசி, பழக இனிமையான மனிதர். வெளிப்பகட்டு அறியாத வெள்ளந்தியான நண்பர். இவரது எழுத்து ஒரு தனித்தன்மையோடேயிருக்கும். இந்த விருது இவரை அடுத்த உயரத்திற்கு கொண்டுசெல்லும் ஏணியாய் இருக்குமென நம்பிக்கையுடன்.
அகல்விளக்கு, நண்பன். ரொம்ப சீக்கிரமே எழுதவந்திருக்கிறார். இப்போதே கதை, கவிதையென பல பகுதிகளில் இயங்கி வருகிறார், அனுபவமும் கைகொடுக்கும் பட்சத்தில் இன்னும் பல நல்ல எழுத்துக்களை இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
 

வெயிலான், பதிவர்களின் அடையாளம். எல்லோரும் சொல்வது போல வருடத்திற்கு இரண்டு பதிவுகள் போட்டாலும் இவரைத் தெரியாத பதிவர்கள் இருக்க முடியாது. இவரும் ஒரு ஊர்சுற்றி. என் பொறாமைக்குரிய மனிதர்களில் மிக முக்கியமானவர்.கலகலப்ரியா, அறிமுகம் தேவையில்லாத ஒரு பெண். தேநீர் குடித்ததைப்பற்றி எழுதினதை படிக்கும்போது, தேநீர் மணமறிவதுபோன்றதொரு எழுத்து இவருடையது, இவரது அனுபவத்தை படிப்பவர்களின் மனதில் இறக்கிவைக்கிறார். என் கனத்த மனதிற்கு காரணமான, பாரதியின் பரம விசிறி.


தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)36 கருத்துரைகள்:

ஹாலிவுட் பாலா said...

வாழ்த்துகள்... தல!! அருமையா எழுதியிருக்கீங்க! :) :)

கிடைத்தவர்களுக்கு... 2 டைம்ஸ் வாழ்த்துகள்! :)

பலா பட்டறை said...

ஆம் சும்மா இல்லை நிச்சயம் விருதின் மதிப்புகள் கூடிக்கொண்டே போகிறது... வாழ்த்துக்கள்..உங்களுக்கும் நீங்கள் பகிர்ந்தவர்களுக்கும்.

பா.ராஜாராம் said...

//இனி என் அன்பை என் சகபயணிகளான இவர்களோடுதான் பகிர்ந்துகொள்ளப்போகிறேன். ஏற்கனவே சொன்னதுபோல உண்மையான அன்பு பகிர்ந்துகொள்வதிலேயே இருக்கிறது என்பதில் அசாத்ய நம்பிக்கை கொண்டவன் நான். உங்க எழுத்து நல்லா இருக்கு, இல்லைன்னு சொல்ற அளவீட்டின் குறியீடு அல்ல இந்த விருது. நண்பர்களே! இது வெறும் என் அன்பின் வெளிப்பாடு மட்டுமே. மகிழ்ச்சியோடு கொடுக்கிறேன், என் மகிழ்ச்சி உங்கள் மூலமாக பரவட்டும்.//

இதுதான் வேணும்...

ரொம்ப சந்தோசம் முரளி.ஆம்,பரவட்டும்.

அருமையான மனிதனின் மூலமாக அன்பை பெற்ற என் மனிதர்களுக்கு,அன்பும் வாழ்த்தும் மக்கா!

கலகலப்ரியா said...

பா.ரா. கையால் விருது வாங்கியமைக்குப் பாராட்டுகள் முரளி... எதிர்காலத்தில் இன்னும் பல விருதுகள் உங்கள் வீடு தேடி வரும்...

அன்பை என்னுடனும் பகிர்ந்து கொண்டது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.... ஆரம்பத்திலிருந்து அடிக்கடி என்னை நினைவில் நிறுத்துவது ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு... :)

Gowripriya said...

வாழ்த்துகள்

ரசிக்கும் சீமாட்டி said...

எனக்குலாம் அவார்ட் கிடையாதுங்களா??!!!

(கேட்டு வாங்குறது நல்ல பழக்கம் இல்லைன்னு நீங்க திட்றது கேக்குது... ரைட்டு விடுங்க )

என் திருப்திக்கு எழுத ஆரம்பித்தபின் அதை ஏன எதிர்பார்க்கனும்? இப்பிடி நானும் நினைச்சுகிட்டேன்!!! :)

கனிமொழி said...

வாழ்த்துக்கள் நண்பா...
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு...
:-)

கார்க்கி said...

வாழ்த்துகள் சகா..

வெயிலான். நானும் பொறாமைப்படும் நபர்தான்

Romeoboy said...

\\\எத்தனையோ பேர் படிக்கிற பதிவுலகத்தில் ஒருத்தருக்கு புடிக்கிற மாதிரிகூடவா என்னால எழுத முடியலைன்னு ரொம்பவே விசனப்பட்ட, காலம். என் திருப்திக்கு எழுத ஆரம்பித்தபின் அதை ஏன எதிர்பார்க்கனும்?///


உங்களுக்காவது யாராவது இருக்காங்க இந்த மாதிரி எல்லாம் விருது குடுக்க, எனக்கு பின்னுடம் வருவதே பெரிய வேலையா இருக்கு என்ன மாதிரியான ஆளுங்க நிறையபேரு இருக்கோம் பாஸ்.

விருதுக்கு வாழ்த்துக்கள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

தல நன்றி, இங்க எல்லோரும் வேட்டைக்காரனை கிழிப்பதுபோல,அங்க அவதாரை கிழித்து தொங்கபோடுவீர்கள் போல.... ம்ம்... நடத்துங்க

முரளிகுமார் பத்மநாபன் said...

@பலாபட்டறை
நன்றி நண்பரே!

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி மகாப்பா... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

//பா.ரா. கையால் விருது வாங்கியமைக்குப் பாராட்டுகள் முரளி... //

நிச்சயம் அந்த சந்தோசம் எனக்கும் இருக்கு....

//அன்பை என்னுடனும் பகிர்ந்து கொண்டது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.... ஆரம்பத்திலிருந்து அடிக்கடி என்னை நினைவில் நிறுத்துவது ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு... :)//

இது தொடரும்...
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றிங்க கெளரிபிரியா.... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

// எனக்குலாம் அவார்ட் கிடையாதுங்களா??!!!//
மன்னிக்கனும் தோழி, உங்களை மறந்ததற்கு.. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

தேங்க்ஸ் கனி :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

வெயிலான். நானும் பொறாமைப்படும் நபர்தான்///

கட்டாயமாக சகா..

முரளிகுமார் பத்மநாபன் said...

//உங்களுக்காவது யாராவது இருக்காங்க இந்த மாதிரி எல்லாம் விருது குடுக்க, எனக்கு பின்னுடம் வருவதே பெரிய வேலையா இருக்கு என்ன மாதிரியான ஆளுங்க நிறையபேரு இருக்கோம் பாஸ். //
அப்படியெல்லாம் இல்லை பாஸ், நீங்க எதையும் கவனிக்காம எழுதிகிட்டே இருங்க...

☼ வெயிலான் said...

// வெயிலான். நானும் பொறாமைப்படும் நபர்தான் //

யோவ்! எத்தனை பேருய்யா இப்படி கெளம்பியிருக்கீங்க........

☼ வெயிலான் said...

விருதுக்கு நன்றி முரளி!

aazhimazhai said...

வாழ்த்துக்கள் முரளி நீங்க இன்னும் நிறைய விருதுகள் வாங்கணும் !!!!

Sindhan R said...

எனக்கு முரளி அண்ணாவை தெரியும், அவரது சிறுகதைகள் சிலவற்றை தெரியும், கொஞ்சம் பேசியிருக்கிறேன். ஆனால் பதிவர் உலகத்தில் அவருடன் இணைந்த செயல்பாடு மிகவும் குறைவே. நல்ல அண்ணன் என்ற விருது நான் எப்பொதும் அவருக்காக கொடுத்திருப்பது.. இப்போது பதிவர் உலகின் பலரும் அவருக்கு விருது கொடுத்து சிறப்பு சேர்ப்பதை பார்க்கும்போது .. அவர் ”என் அண்ணன்” என்ற விருது பெற்ற எனக்கு பெருமையாஇ இருக்கிறது ... [:)]

தாரணி பிரியா said...

வாழ்த்துகள் முரளிகுமார்

தண்டோரா ...... said...

வாழ்த்துக்கள் பாஸ்..(நமக்கு யாரும் தரமாட்டேங்கிறாங்க)

க.பாலாசி said...

//இது வெறும் என் அன்பின் வெளிப்பாடு மட்டுமே. மகிழ்ச்சியோடு கொடுக்கிறேன், என் மகிழ்ச்சி உங்கள் மூலமாக பரவட்டும்//

நிச்சயம் பரவும்...

தங்களின் அன்பில் என்றும் நெகிழ்கிறேன்...

தங்களுக்கு இவ்விருது கிடைத்தமைக்கும், தங்கள் மூலம் இவ்விருதினை பகிரும் என்போன்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்....

நன்றி நண்பரே...

அன்புடன் அருணா said...

பூங்கொத்து உங்களுக்கும் ....விருது வாங்கிய அனைவருக்கும்!

அகல்விளக்கு said...

//இது வெறும் என் அன்பின் வெளிப்பாடு மட்டுமே. மகிழ்ச்சியோடு கொடுக்கிறேன், என் மகிழ்ச்சி உங்கள் மூலமாக பரவட்டும்//

நிச்சயம் பரவும் நண்பா...

விருது வாங்கியமைக்கும், பகிர்ந்தமைக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்...

முரளிகுமார் பத்மநாபன் said...

வெயிலான் : யோவ்! எத்தனை பேருய்யா இப்படி கெளம்பியிருக்கீங்க........////

இப்போதைக்கு நானும் கார்க்கியும்.. ஹி ஹிஹி

முரளிகுமார் பத்மநாபன் said...

வாழ்த்துக்கள் முரளி நீங்க இன்னும் நிறைய விருதுகள் வாங்கணும் !!!!///

நன்றி தோழி ஆழிமழை, :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@சிந்தன்
டச் பண்ணிட்ட தம்பீ......
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@தாரணிபிரியா
நன்றிங்க பிரியா, :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@தண்டோரா
அண்ணா வணக்கம், னமக்குன்னு என்னையும் சேர்த்துதானே சொன்னிங்க...

முரளிகுமார் பத்மநாபன் said...

@க.பாலாசி
நன்றி நண்பா.

முரளிகுமார் பத்மநாபன் said...

@அன்புடன் அருணா
வணக்கம் அருணா மேடம், நன்றி உங்கள் பூங்கொத்துக்கும், வாழ்த்துக்கும்.
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி ராஜா

கிருஷ்ண பிரபு said...

Nice remembering Murali… happy to all…

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.