முன்பெல்லாம் கட்சிக்காக, கொள்கைகளுக்காக, தலைவனுக்காக அல்லது நாட்டுப்பற்றின் காரணமாக அரசியலில் இருந்தவர்களை காணலாம். இப்பொழுது பேர், பணம், புகழ் இவற்றை மையமாகக் கொண்டே அரசியல் நடக்கிறது. புதிதாக அரசியலில் ஈடுபட நினைப்பவர்களும் கூட, இதே போன்றதொரு எண்ணங்களின் பிரதிபலிப்பாகத்தான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். இளைஞர்களின் மத்தியில் கூட இதேபோன்றதொரு பார்வை இருப்பது மிகவும் கேவலம். கூட்டணி, இந்த வார்த்தை அரசியல் உலகின் மிக கேவலமான ஒன்றாகி போயிருக்கிறது. கட்சிக்காக, கொள்கைகளுக்காக என்றிருந்த காலம்போய் எனக்கு இத்தனை சீட்டு கொடுக்கின்றாயா? நாம் இருவரும் கூட்டணி, இல்லை அவன் எனக்கு இன்னும் ஒரு சீட்டு சேர்த்து தருகிறேன் என்று சொல்கிறான் என்று பேரம் பேசி சீட்டுக்களுக்காக கூட்டணி என்ற நிலையில் வந்து நிற்கிறது.
ஒருவர் பிரதமராக வேண்டுமென்றால் பத்து எம்.பீக்களை வாங்கவேண்டியிருக்கிறது, ஒருவர் முதலமைச்சராக வேண்டுமென்றால் அவசியம் பத்து கட்சிகளின் கூட்டணி தேவைப்படுகிறது. கூட்டணிக்கு இத்துணை கோடிஎன மொய் எழுதவேண்டியிருக்கிறது. மதவாதிகள், சாதிசங்கங்கள், பிற்படுத்தப்பட்டோர் என அனைவரோடும் நடப்பு பாராட்ட வேண்டியிருக்கிறது, அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கவேண்டியுள்ளது. இவை அனைத்திற்குமாக இவர்கள் தேர்தலுக்காக கோடிகணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. சொந்தபணம், மக்களின் வரிப்பணம், கோடீஸ்வரர்களின் அன்பளிப்பு மற்றும் பெரிய தொழிலதிபர்களிடமிருந்து கட்டாயமாக அல்லது உவந்தளிக்கக்கூடிய பணம் என்று சம்பாதித்த எல்லா பணத்தையும் இன்வெஸ்ட் செய்ய வேண்டியிருக்கிறது. பாவம் அரசியல்வாதி என்னதான் பண்ணுவார், விட்டதை பிடிக்க. ஜெயிச்சவன் தன்னுடைய முதலீடை எடுக்கத்தானே முயற்சி பண்ணுவார். இதுல எப்போ பார்த்தாலும் அரசியல்வாதியையே குறை சொல்லிக்கிட்டு.
அரசியால்வாதிங்கறது யாரு சார்? கடவுளா? இல்ல வானத்துல இருந்து நேரா மக்களின் குறைகளை மட்டுமே போக்க வந்த தேவ தூதனா? இல்லையே அவனுக்கும் வீடு, பசி, துக்கம்ன்னு எல்லாமே இருந்துதானே தொலைக்கிறது.
எல்லாருடைய காரணமும் இன்றைய அரசியல் சரியில்லை, அரசியல் வாதிகள் சரியில்லை என்பதாகவோதான் இருக்கிறது. இப்படி சொல்பவர்களில் எத்தனை பேர் தாங்களே சொந்தமாக அரசியலில் ஈடுபட முன்வருவார்கள். ஒருவரும் இல்லை. தவறி ஒருஅடி எடுத்து வைத்த ஒருசிலரும் கூட கோரமான வன்முறைக்கு இரையாகி போயிருக்கின்றனர்.
ஒருமுறை எனது நண்பனின் மாமா ஒருவர் கவுன்சிலர் பதவிக்காக தேர்தலில் சுஎட்ச்ச்யாக நின்றார். அவருக்காக தேர்தல் பணிகளையும், ஓட்டு சேகரிப்பு பணிகளையும் செய்து வந்தோம். அப்போது கூட ஒரு நண்பன் சொன்னான் " மச்சான், இவரு மட்டும் கவுன்சிலர் ஆயிட்டா நமக்கு பிரச்சனையே இல்லடா" நமக்கு ஒரு காரியம்னா....என்று அவனுடைய தேவைகளை பட்டியலிட தொடங்கி விட்டான். ஆக, இப்படி ஒரு கவுன்சிலர் பதவிக்கே அவரை சுற்றியுள்ளவர்கள் ஒருவித சுயநல முனைப்புடனே உடனிருக்கின்றனர் என்றால், அரசியல் அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இதே போன்று அவர்களின் அரசியல் செல்வாக்கை காட்ட வேண்டிய நிர்பந்தத்தை அவர்களின் உறவினர்களும், சுற்றியுள்ளவர்களும் கொடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள்.
அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அதிகாரம் உள்ள எவருமே செய்யக்கூடியதுதான், செய்துகொண்டிருப்பதுதான். ஒரு தப்பையே தொடர்ந்து செய்வதால் அது தப்பு என்பதயே மறந்து யாரவது ஒருவர் அதை சரியாக செய்ய முற்படும்போது அதுவே தவறாக தோன்றுமளவிற்கு தவறுகள் புளித்து போயிருக்கின்றன. அதிகாரம் உள்ளவரோ அல்லது அவரை சுற்றியுள்ளவரோ அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
சமீபத்தில் ஒரு நண்பரிடம் பேசிகொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு விஷயம், " சுமார் 100 குடும்பங்கள் வசிக்கக்கூடிய அவரது குடியிருப்போர் சங்கத்தில் ஒரு முடிவு செய்து வைத்திருப்பதாகவும். அதை வருகிற தேர்தலின்போது உபயோகப்படுத்த இருப்பதாகவும் சொன்னார். சுமார் 180 முதல் 200 வரை அவர்களின் குடியிருப்பில் ஓட்டுகள் இருப்பதாகவும் பிரச்சாரத்திற்கு வரும் வேட்பாளர்களிடம் தலா ஒரு ஓட்டுக்கு ரூ.1000/- கேட்க்க இருப்பதாகவும், எப்படியும் மூன்று நான்கு கட்சிகள் வரை இருப்பதால், ரூ.4000/- வரை வசூலிக்க இருப்பதாகவும். அதில் அவர்களுக்கு தேவையான சாலை வசதி, தெருவிளக்கு, தண்ணீர் தொட்டி முதலிய வசதிகளை தாங்களே செய்துகொள்ள இருப்பதாகவும் சொன்னார். இவர்களுக்கு ஓட்டையும் போட்டு நாலு வருஷம் அஞ்சு வருசம்ன்னு ரோடு போட்டுக்குடு, லைட்ட போட்டு குடுன்னு மனுவை கைல பிடிச்சிகிட்டு அளயரதுக்கு பதிலா, இப்போ இவனுங்க நம்மள தேடி வருபோது பணத்தை கறந்து வேணும்கிறத செஞ்சிக்கிறதா இருக்கோம்ன்னு சொன்னார்.
இது சரியா? தவறா? எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர்கள் உட்கார்ந்து பேசியிருக்கிறார்கள், ஒரு அசோசியேசன் மூலமாக இதற்க்கு தீர்வு காண நினைத்திருக்கிறார்கள். அதுதான் வேண்டும் அது சரியில்லை, இது சரியில்லை எவேனுக்கு ஒட்டு போட்டாலும் நாடு நாறத்தான் போகுதுன்னு பேசாம இப்படி அதற்கான மாறுதல்களை பற்றி பேசுங்கள். நாலு பேர் சேர்ந்தா நிச்சயம் முடியும். அதுவும் நல்லதாய் முடியும்.
இன்றைய அரசியலை குறைகூறும் எத்தனை பெற்றோர் தன் மகனை அல்லது மகளை ஒரு நல்ல அரசியல்வாதியாக ஆக்க நினைப்பார்கள். அல்லது எத்துனை இளைஞர்கள் நேரடி அரசியலில் ஈடுபட ஆர்வமாய் இருப்பார்கள். நாலு பேர் சேர்ந்தால் எதுவுமே சாத்தியம். ஆகவே நீங்கள் செய்யாததை உங்கள் வாக்குகள் செய்யும் முடிந்தவரை நண்பர்களிடம் அரசியல் பேசுங்கள், அரசியல் ஒரு சாக்கடை, அரசியல்வாதிகள் அதில் பன்றிகள் என்று பழைய பஞ்சாங்கததையே பாடிக்கொண்டிருக்காமல் நம்பிக்கையோடு வாக்களியுங்கள்.
ரோடு சரியில்லை என்பதால் யாரும் அதை உபயோகப்படுத்தாமல் இல்லை. ஓட்டுனர் உரிமம் இல்லாதவரை கூட போலீஸ் லஞ்சம் வாங்கிக்கொண்டு விட்டுவிடுகின்றனர் என்பதால் தெருக்களில் பயணிக்காமல் இருப்பதில்லை. சம்பளம் சரியாக கொடுக்காத கம்பெனிக்குகூட ஆட்கள் வேலைக்கு சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். ஓட்டுபோடுவது கூட அப்படித்தான், உங்கள் ஒரு ஓட்டு என்ன செய்துவிடப்போகிறது என்று நினைக்காதீர்கள். நம் கடன் பணி செய்து கிடப்பதே. நம்பிக்கைதான் வாழ்க்கை. முயன்றவர் நேரடி அரசியலில் ஈடுபடுங்கள், இல்லையென்றால் நம்பிக்கையோடு வாக்களியுங்கள். எல்லா அரசியல்வாதிகளும் கெட்டவர்கள் இல்லை. யோசித்து வாக்களியுங்கள் உங்களின் வாக்கு இந்த நாட்டின் தலை விதியை மாற்றலாம்.
விளைவை பற்றி அறியாத மலர்கள் இன்னும் பூத்து கொண்டுதான் இருக்கின்றது. இன்னமும் அழகாக.
வெயிலோடு விளையாடி ....
சென்ற வருடம் ஜூன் மாதம் நான் எழுதிய வெயிலும் மழையும் என்ற பதிவில் எழுதியது. " எந்த வருடத்தையும் போல் இல்லாமல் இந்த வருடம் வெயில் மிகவும் அதிகம். (வெயிலின் சூடு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம் ஆனால் இனி இந்த செய்தி மிகவும் பழக்கமானதொன்றாக ஆகிப்போகும்). அதே போல இந்தவருடமும் வெயில் கொஞ்சம் அல்ல ரொம்பவே அதிகம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரலின் பிற்ப்பாதிகளில் தலையெடுக்கும் கோடைகாலம் இந்தவருடம் எங்கள் ஊரில் அல்லது அநேக தென்னிந்திய மாவட்டங்களிலும் பிப்ரவரி இறுதியிலிருந்தே ஆட்டிப்படைக்க ஆரம்பித்து விட்டது.
சிறுவயதில் தேடித்திரிந்த வெயில் எங்கே? அதன் மீது ஏனிந்த வெறுப்பு? எப்போதிலிருந்து வெயிலை வெறுக்க ஆரம்பித்தேன்? ம்ம்ம்ம்.. எனக்கு தெரியவில்லை. வெயில்..... குழந்தைகளின் நண்பன். எனக்கு இன்னமும் நியாபகமிருக்கிறது என்னுடைய சிறு வயதில் தொட்டாமுட்டா ராயிக்கால் என்று ஒரு விளையாட்டு, ஒரு சிறிய குச்சியை எங்களின் கைகளில் உள்ள பெரிய கம்புகளால் தள்ளிக்கொண்டே ஓடுவோம். சாட் பூட் திரியில் தோற்றவன் எங்களை தொட வேண்டும். அப்படி அவன் தொட வரும்போது நாங்கள் எங்களின் கொம்புகளை ஏதாவதொரு கல்லின் மீது வைத்திருந்தால் நாங்கள் அவுட் இல்லை. இப்படியே அவுட் ஆகியிருப்பவனை ஆட்டம் துவங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக்கொண்டே போவோம். இதில் உச்சகட்டம் என்னவென்றால் ஆட்டத்தின் ஏதாவதொரு நிலையில் யாரவது அவுட் ஆகிவிட்டால் அந்த இடத்திலிருந்து ஆட்டம் ஆரம்பித்த இடத்திற்கு நொண்டியடித்து கொண்டே வரவேண்டும். இதற்க்கு "வாட் எடுப்பது" என்று பெயர். சில நேரங்களில் நாங்கள் ஐந்து கிலோமீட்டர் தூரம் வரையில் கூட வாட் எடுத்திருக்கிறோம். பாவம் அந்த சமயங்களில் பரமசிவம்தான் எங்களில் அதிகம் நோன்டியடித்திருக்கிறான். பல சமயங்களில் அழுதுகொண்டே நொண்டுவான், துவங்கிய இடம் வந்தவுடன் இன்னும் சப்தமாக அழுதபடியே திரும்பிப்பார்க்காமல் ஓடுவான். நாங்கள் அனைவரும் கைகொட்டி சிரித்தபடியே மறுபடியும் விளையாடுவோம்.
மறுபடியும் அவனை எங்களோடு விளையாட வைக்க நாங்கள் படாதபாடு பட வேண்டியிருக்கும். ஆனாலும் சளைக்காமல் மீண்டும் மீண்டும் நொண்டியடித்த பரமா! நீ எங்கடா இருக்க... நியாபகம் இருக்கா? ஓனான் பிடிச்சது, உண்டிவில் வைத்து குரிவியடித்து கூட்டஞ்சோறு செய்தது எல்லாமே இந்த வெயிலின் துணையோடுதானே.. அப்படிப்பட்ட வெயிலை நான் எப்போது வெறுக்க துவங்கினேன்?
அதற்க்கு பிந்திய வயதுகளில் கிரிகெட் கிரிகெட் என்று விளையாடி தீர்த்த காலமும் வெயிலோடுதான் போனது. ஒரு நாளைக்கு குறைந்தது ஆறிலிருந்து ஏழு மணிநேரம் வரை விளையாடிகொண்டே இருப்போம். ஆறுமணிக்கெல்லாம் இருட்ட தொடங்கிவிடும் இன்னும் எனக்கு பேட்டிங் கிடைக்கவில்லை இன்னும் கொஞ்சநேரம் வெயில் இருந்தால் நாளா இருக்குமேன்னு ஏங்கின காலம்போய் வெயில் என்றாலே வெறுத்து ஒதுங்கிக்கொள்ளும் மனபக்குவம் எப்போது வந்தது?

எந்த கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை, உடல்தான் வெயிலை வெறுத்து ஒதுக்குகிறது. ஆனால் மனம் இன்னும் வெயிலை விரும்பத்தான் செய்கிறது. சிறுவயதில் எனக்கும் வெயிலுக்கும் இருந்த உறவில் என்னை ஒருமுறை கூட சுட்டதை தெரியவில்லை. அல்லது சுட்டதே தெரியவில்ல. உனக்கு நான் வேண்டாமென்றால் எனக்கு நீ வேண்டாமென்று சொல்வது போல இன்று வெயில் சுட்டெரிக்கிறது அதை என்னால் உணரவும் முடிகிறது.
குழந்தை பருவம்தான் எத்தனை அழகானது. நமக்கு யாரோடும் பகையில்லை வெயிலோடும் விளையாடித்தானே போயிருக்கிறோம்.
ஆயிரம் கரங்கள் நீட்டி,
அணைக்கின்ற தாயே போற்றி...
Labels:
அனுபவம்
Subscribe to:
Posts (Atom)