அழகான மாதங்கள் - கார்த்திகை, மார்கழி
கிறுக்கல்கள் 20

மக்கிய ஓலையும் மக்காத மனமும்
கட்டமுடியலை வாங்கின கடனை,
தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே!
நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும்.
:-)
கிறுக்கல்கள் 19
வெயில் வழிந்தோடிய
வீதிகளின்
திண்ணையிலின்னும்
மிச்சமிருக்கிறது
வெக்கை.
----------------------------------------------------------------------------------------------
கொஞ்சம் உயரம்
பறக்கும்போதே
வால்முளைத்துப் பறக்கிறதே
இந்த பட்டம்.
----------------------------------------------------------------------------------------------
தேடிப்பிடித்து
வாங்கிப்போட்டாயிற்று
பால்கனி ஓரமாய்
ஒரு சாய்வு நாற்காலி,
தூறக்கூட மறுக்கிறது.
இந்த சனியன் பிடித்த
மழை.
ஆம், விருது நிச்சயம் சும்மா இல்லை
தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)
கிறுக்கல்கள் 18
பட்டும் படாமல்
என் காதலின் சாபத்திற்கு
தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)
ஒரு தந்தை, 3000 மகன்கள்
மற்ற புகைப்படங்களுக்கு இங்கே செல்லுங்கள்
தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)
கிறுக்கல்கள் 17
காலை மணி ஏழு, அன்று
ரசம் விட்டுப்போன கண்ணாடியில்
முகம்தேடிச் சவரம் செய்துகொண்டிருப்பார்,
தம்ளர் தவிர்த்து டபராவில் காபிகுடித்தபடி
தினசரி வாசித்துக்கொண்டிருப்பார்,
எப்போதாவது அழைக்கும் பால்யகால
நண்பரோடு உரக்க தொலைபேசிக்கொண்டிருப்பார்,
மண்ணெண்ணை தோய்த்த துணியில்
என் சைக்கிளை துடைத்துக்கொண்டிருப்பார்,
அம்மாவிற்கு ஒத்தாசையாய் பல நேரம்
காய்கறி நறுக்கிக்கொண்டிருப்பார்,
ஒத்தை சடை போட்டதற்காக
அக்காவிடம் சண்டை போட்டுக்கொண்டிருப்பார்,
புற்களை ஒழுங்குபடுத்தியபடியே
எதிர்வீட்டு ராமானுஜத்தோடு பேசிக்கொண்டிருப்பார்,
பக்கத்துவீட்டு பவித்ராகுட்டிக்கென - கொடி
ரோஜாவை பதியன் போட்டுக்கொண்டிருப்பார்,
ஈசி சேரில் அக்கடாவென
சில நேரம் படுத்துக்கொண்டிருப்பார்,
எப்போதாவது ஒருநேரம்
என்னோடு பேசிக்கொண்டிருப்பார்,
இன்னும் என்னவெல்லாமோ
செய்துகொண்டேதானிருப்பார்,
அப்பா!
அப்பா என்ன செய்துகொண்டிருந்தாலும்
ஆல் இந்தியா ரேடியோ
செய்திகளை வாசித்துக்கொண்டேதானிருக்கும்.
காலை ஏழுமணி, இன்று
சின்ன மருதூரில் சாலை விபத்து,
தங்கம், வெள்ளி விலை வரலாறுகாணாத சரிவு,
மத்திய அரசுக்கு நெருக்கடி,
இலங்கையில் மீண்டும் அவசரநிலை,
பாகிஸ்தானில் இன்னுமொரு மனித வெடிகுண்டு,
பங்குச்சந்தை முன்னேற்றம்,
வங்க கடலில் புயல் சின்னம்,
வானம் மேகமூட்டம்,
அரசு அதிகாரிகள் வேலைநிறுத்தம்,
பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை,
இன்னும் என்னவெல்லாமோ
சொல்லிக்கொண்டேதானிருக்கிறது,
ஆல் இந்தியா ரேடியோ!
ரேடியோ என்ன சொன்னாலும்,
அறைமுழுவதும், அப்பா வாசனை
மட்டுமே நிறைந்திருக்கும்
ரேடியோவை பார்க்கும்போதும்,
என்ன செய்தி கேட்கும்போதும்,
ஒரு மலரைப்போல
இதயத்தில் தொடங்கி
சில நேரங்களில் உதட்டிலும்
பல நேரங்களில் கண்களிலும்
பூக்கிறது
அப்பா நினைவுகள்!
உரையாடல் போட்டிக்கென எழுதியது
தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)
மூன்றாவது மனிதன் (கொஞ்சம் பெரிய சிறுகதை)
அரவம் கேட்டு எழுந்த கிருஷ்ணனுக்கு அதற்கு மேல் படுத்திருக்க பிடிக்கவில்லை. புது இடமாதலால் எதுவும் இருட்டில் எதுவும் விளங்கவில்லை. மெல்ல எழுந்து சாளரத்தின் அருகில் வந்தபோது சாளரத்தை திறந்து வைக்கலாமென்று தோன்றியது. காற்று வந்தால் மனப்புழுக்கமாவது குறையும். மழை நின்றிருந்ததால் காற்று விசுவிசுவென்றிருந்தது. குளிர் ஒரு ஊதுபத்தியின் மணம் போல அறைமுழுவதும் மெல்ல நிரம்பத்தொடங்கியிருந்தது. இனி தூங்கமுடியுமென்றும் தோன்றவில்லை, வெளியே நிற்கலாம் போலிருந்தது. திரும்பி லலிதாவின் பக்கம் பார்த்தான், குழந்தைமீது கையை பரப்பி அவளே ஒரு குழந்தையைப்ப் போல படுத்திருந்தாள். மடக்குக் கட்டிலை விரித்துப்போட்டு, கையை தலைக்கு முட்டுக்கொடுத்து ஒருசாய்த்துப் படுத்தான். காற்றின் ஈரம், மனதின் இறுக்கத்தை கொஞ்சமாய் தளர்த்துவதாய்பட்டது. நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.
ராகவனுக்காக ரயில் நிலையத்தில் காத்துகொண்டிருந்தான், கிருஷ்ணன். ராகவன், கிருஷ்ணன், லலிதா மூவரும் பால்ய நண்பர்கள். லலிதா, கிருஷ்ணன் காதலுக்கு ராகவனே எல்லாமுமாய் இருந்தான். வெளிநாடு சென்றிருந்தவன், அங்கேயே திருமணம் முடிந்து, பத்து வருடங்களுக்கு பிறகு ஊருக்குவருகிறான், மனைவியோடு. ஆச்சர்யமாய் ரயில் சரியான நேரத்திற்கே வந்தது. அதோ ராகவன், முன்மண்டை கொஞ்சம் முடியிழந்திருந்தது.
“ராகவா!....”
“டேய், கிருஷ்ணா..... அப்படியே இருக்கடா”
கட்டிப்பிடித்துக் கொண்டோம், அதுவே போதுமானதாக இருந்தது. வெளிநாட்டு வாசம், அவன் செழிப்பை காட்டியது. பேசிக்கொண்டே அருகிலுள்ள ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு ராகவனை கேட்க்காமலேயே இரண்டு காபி, ஒன்னுல ஸ்ட்ராங்கா சக்கரை ஜாஸ்த்தியா என்றேன்.
”இன்னும் என்னோட டபுள் ஸ்ட்ராங் காபியை மறக்கலையாடா, நீ” என்றான்.
பில் கொடுக்க எத்தனித்தபோது, தன் பர்ஸில் உள்ள புகைப்படத்தை காண்பித்து ”இவதான் என் மனைவி, காவ்யா, இவ என்னோட ஒரே இன்வஸ்ட்மெண்ட், என்பொண்ணு ராஹா” என்றான்.
காபி குடித்துவிட்டு, பேசியபடியே நடந்தோம். ராகவனுக்கு பத்து வருடங்களுக்கு முந்தைய திருவாரூர், கண்ணில் படுமா? என்று தேடியபடியே நடந்தான். திடீரென நினைவு வந்தவனாய் “ஆமா, நீயேன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்க?, இன்னும் லலிதாவையே நினைச்சுகிட்டு இருக்கியா?” என்றான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல டா, டிப்ளமோ முடிக்கும்போதே அப்பா இறந்துட்டார்ல, அப்புறம் அதுக்குமேல அக்காதான் என்னை படிக்க வச்சா, ஆனா எனக்கென்னமோ அவளுக்கு சிரமம் கொடுக்குறமாதிரி இருந்த்து. அதனால படிப்பை அப்படியே விட்டுட்டு வேலைக்கு வந்துட்டேன். கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிச்சு, என்னோட பொருளாதார நிலையை இந்தளவுக்கு உயர்த்த எனக்கு இவ்வளவு காலம் பிடித்த்து. வயசும் நாற்பதை தொடப்போகுது, இனியென்ன கல்யாணம்ன்னு இருந்துட்டேன்”
“எனக்கென்னமோ, அப்படி தெரியலை”
“ஏன்?”
” ...... ...... .....”
”ஏன்டா”
”சரி அதை விடு, லலிதா எப்படி இருக்கா?”
“ம்ம் ... இருக்கா...”
“நானும் கேள்விப்பட்டேன், கல்யாணம் ஆன மூனு வருஷத்துலயே,புருஷனை செத்துட்டான்னு, பாவம்டா, அவ...”
“நீயோ, நானோ நினைச்சு என்ன ஆகப்போகுது சொல்லு” என்றேன்,
நடந்ததில் வீடு வந்திருந்தோம். வாசலில் அபி உட்கார்ந்திருந்தாள், என்னைப் பார்த்ததும் “எங்க மாமா போனிங்க?, நான் எவ்ளோ நேரமா வெயிட் பண்றது?” என்றாள்.
“அச்சசோ, ஸாரிடா, குட்டி. இந்த அங்கிள் வந்த்துல உன்னை மறந்தே போயிட்டேன்”
ராகவன், ”யாருடா குட்டி”
“ஆங், நம்ம லலிதாவோட பொண்ணுடா, அவ ஸ்கூலுக்கு போயிட்டு இருக்கா, அவ வரவரைக்கும் மேடம் இங்கதான் இருப்பாங்க, இல்லையா மேடம்”
”அங்கிள், உங்களுக்கு எங்கம்மாவைத் தெரியுமா? அங்கிள்” என்றாள், அபி ராகவனிடம்.
“ம்ம். நல்லா தெரியும், உன் அம்மா உன்னைபோல இருந்த்திலிருந்தே.. “ என்றான், அபியின் தலைமுடியை கலைத்தவாறே.
லலிதா வந்ததும், ராகவனைப் பார்த்ததும், மகிழ்ச்சியில் சில நிமிடங்கள் பேசவே முடியாமல் நின்றாள், பின் ப்ரஸ்பர குசலவிசாரிப்புகள் முடிந்து ஏன், ராகவா, வீட்ல அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல, என்றாள். எனக்கு அட, நாம இதை கேட்கவேயில்லையேன்னு தோணியது. சரி, எவ்ளோ நாள் இருப்ப? என்றாள்.
”ம்ம்.. இருப்பேன், இந்த வாரம் முழுவதும்”
“சரி, அப்போ காலையில பார்க்கலாம், வேலை நிறைய இருக்கு, வாடி போகலாமென்று அபியை அழைத்துக்கொண்டு சென்றாள். அபி கைகாட்டியபடியே சென்றது.
இரண்டொரு நாட்களுக்கு பிறகு, இரவு சாப்பிட்டு விட்டு சமையல் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தேன். ராகவன் எனக்கு உதவுவதாய், கழுவிய பாத்திரங்களை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தான்.
“ஏன்டா, நீயேன் இப்படி தனியா கிடந்து கஸ்டப்படுற, பேசாம ஒரு கல்யாணத்தை பண்ணிக்க வேண்டியதுதானே” என்றான், வேலையினூடாய்.
“எனக்கு பொண்ணு பார்க்கத்தான் சார், பிளைட்டை புடிச்சு வந்திங்களாக்கும்?”
“அப்படியே வச்சிக்கோ, பதிலை சொல்லு, மழுப்பாம”
“.........”
“லலிதாவையே கல்யாணம் பண்ணிக்கோயேன்”
“என்னடா சொல்ற...”
“நீ இன்னும் அவளை மறக்கலைன்னு எனக்கு தெரியும், இல்லைன்னு பொய் சொல்ல முயற்சிக்காதே, எனக்கென்னமோ அவளுக்கும் அப்படிதான்னு தோனுது. எதிரெதிர் வீட்ல மனசுல அவள நினைச்சுகிட்டு, தனித்தனியா இன்னும் எத்தனை நாள் ஒருத்தரை இருத்தர் ஏமாத்திக்கப்போறீங்க?” என்றவன் தொடர்ந்தான் “ஊர்ல மத்தவங்க என்ன சொல்வாங்கன்னெல்லாம் யோசிக்காத, இது உன்னோட லைஃப்” என்றான்.
வேஷம் கலைந்தது போல இருந்தது. சரி இவனை விட்டால் வேறு யாரால் என்னை இவ்வளவு புரிந்திருக்க முடியுமென்று தோன்றியது, சிறிய மௌனத்திற்கு பிறகு “உண்மைதான், எனக்கும் அந்த நினைப்பு உண்டு, அவகிட்டகூட ஒருமுறை பேசினேன், சொந்தபந்தங்களின் பேச்சுக்கு பயப்படுகிறாள், அதனால் அவளை நான் வற்புறுத்தவில்லை” என்றேன்.
“அம்போன்னு விட்டுட்டு போன அந்த சொந்தங்களுக்கா பயம்? சரி அதைவிடு, நீ, அவ வீட்ல யாரிடமும் பேசுனியா?”
“ஊகும், இல்லை”
“சரி, நானே பேசுறேன்”
ஞாயிறு காலை, அடுத்த ஊரிலுள்ள அவள் தாய்மாமன் வீட்டில் இருந்தோம். ராகவந்தான் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான், நானும், லலிதாவும் எதிரெதிரில் அமர்ந்திருந்தோம். எதும் பேசவில்லை. பேச்சில் உஷ்ணம் அதிகரித்துக்கொண்டே போனது.
லலிதா, இப்படியெல்லாம் நடக்கும்ன்னு எனக்கு ஏற்கனவே தெரியும், அதான் இதெல்லாம் வேண்டாம்ன்னு சொன்னேன், என்பதுபோல ஒரு பார்வை பார்த்தாள்.
”இந்த பாருங்க, தம்பி, அவ நண்பனா, இங்க வந்து பேசுறது, சந்தோஷம், ஆனா இத் எங்க குடும்ப பிரச்சனை, இதுல தயவு செய்து நீங்க தலையிடாதிங்க” என்றார், அவள் தாய்மாமன்.
“இப்போ நீங்க இருக்கிங்க, பார்த்துப்பிங்க, உங்களுக்கு பிறகு அந்த பெண்ணோட நிலைமையை நினைச்சு பாருங்க, சார்” என்றான், ராகவன்.
“அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம், நீங்க கிளம்பலாம்” என்றார் அவர்.
”இங்க பாருங்க சார், திருமணமாகி கணவனை இழந்த பெண்ணை, இந்த சமூகத்தைப்போலவே பாவம்ன்னும், பரிதாபம்ன்னும் பார்க்குறதை நிறுத்துங்க, உங்களோட அடக்குமுறையையும் அந்த அனாதரவான பெண்மீது சுமத்தாதீர்கள்” என்று கோபமாக கத்தியபடி “வாடா, போகலாம்” என்றான் என்னிடம்.
எனக்கும் என்ன சொல்வதென்று தெரியாமல் மெல்ல எழுந்து வெளியே நடந்தேன். ராகவனிடம் “அவர்களுக்கு எதுவும் புரிஞ்சமாதிரியே தெரியலையேடா” என்றேன்.
“கிருஷ்ணா, இது நிச்சயம் அவர்களுக்கு புரியும், ஆனால் அவர்கள் அதை புரிந்துகொள்ள தயாராயில்லை அல்லது அது அவர்களுக்கு தேவையுமில்லை”
விடுப்பு முடிந்து ராகவன் நாடி திரும்பும் நேரம் வந்தது, அன்று மாலை என்னையும் லலிதாவையும் அழைத்து. ராகவன் “இதோ பாருடா கிருஷ்ணா, நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே, உங்க ரெண்டு பேருக்குள்ளயும் இருந்த கங்கை ஊதி எரியவைத்து விட்டேன். இதை இப்படியே விட்டுப்போனால் என்னால் அங்கே நிம்மதியாய் வேலை செய்ய முடியாது, நான் ஏற்ப்பாடு பண்றேன், நீ அவளையும் குழந்தையையும் கூட்டிட்டு நெய்வேலி போயிடு, என் வொய்போட தம்பி அங்க இருக்கான், நான் என் மனைவியிடமும், அவ தம்பியிடமும் எல்லாம் பேசி விட்டேன். யோசிக்காதே” என்றான்.
” என்ன சின்ன பசங்களாட்டம், ஓடிப்போகச்சொல்றியா?” என்றேன்.
“ஆமாம் சின்ன புள்ளதான், உனக்கு இன்னும் அவ அப்படியே பழைய ல்லிதாவா இருக்குறப்போ, எனக்கு நீயும் அப்படித்தான்” என்றான் தீர்க்கமாக. இன்னும் ஏதேதோ பேசினான், இதமாக இருந்தது இருவருக்கும். முடிவெடுக்க முடியாத இதுபோன்ற சில நேரங்களில், ராகவன் போன்ற மூன்றாவது மனிதனின் தலையீடு எவ்வளவு முக்கியம் என்று தோன்றியது.
எல்லாம் கனவுபோல நடந்தது, இதோ இங்கே நெய்வேலியின் அறிமுகமில்லாத வீட்டின் வெளியே கட்டிலில் படுத்திருக்கிறேன். ஏதோ ஒரு அவசரத்தில் தவறேதும் செய்துவிடோமோ என்றும் தோன்றியது. வெளியில் பனி அதிகம் கொட்டியது, மறுபடியும் உள்ளே சென்ற கிருஷ்ணனுக்கு இருட்டில் எதுவும் விளங்கவில்லை. தட்டு தடுமாறி சென்று அபியின் அருகில் படுத்துக்கொண்டான், அபி, அனிச்சையாய் கால்களை தூக்கி மேலேபோட்டு கட்டிக்கொண்டதும் மெல்ல விடியத்துவங்கியது. வெளிசம் பரவ பரவ ஒவ்வொன்றாக விளங்கத்துவங்கியது.
தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)
எட்டுத் திக்கும் மதயானை
// நண்பர்களின் சற்று ஆறுதலான தோள்தட்டல்,
அபூர்வமான வாசக ரசனைப் பூச்சொரிதல்… கையைத்
தூக்கிப் பிடித்து நாயிக்குக் காட்டும் பிஸ்கெட் போலைச் சில
பரிசுகள். நோக்கம் நாயின் பசியாற்றுதலா அல்லது
துள்ளித் துள்ளி ஏமாந்து, பாய்ந்து சாடி விழுங்குவதைக்
கண்கொள்ளாமல் கண்டு களித்தலா என்று
தெரியவில்லை
படைப்பாளி என்பவர் பங்களாவின் சொகுசு வளர்ப்பல்ல.
போரிடும் திறனற்ற, கால்களுக்கிடையில் வால்
நுழைத்துப் பல்லிளித்து ஒடும் நாட்டு நாய் போலும்.
பசித்தால் மனித மலமும் அதற்கு உணவு கார்த்திகை
மாத்த்துக் கனவு என்பதோர் தோற்றுப் போகும் இனப்போர்
இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது இந்த
இருபத்தைந்தாண்டு எழுத்து வாழ்க்கை படைப்பாளி
என்பவன் வேலிக்கு வெளியே நிற்பவன், போற்றுதலும்
கவனிப்பும் மறுக்கப் பெற்று
படைப்பென்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப்
பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக்
கொள்கிறார் எந்த நாணமும் இன்றி.
பொதுசொத்து என்பதாலேயே அது மரியாதை இழந்தும்
போனதாகிறது. எனவே அசலைத் தூக்கி அந்தரத்தில்
வீசிவிட்டு நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பல்லக்கு, பவள மணிப்பூக்கள், பரிவட்டங்கள்...
என்றாலும் அலுத்துப் போகவில்லை, எழுதுவது.
உங்களுக்கும் அலுத்துப் போகாதவரக்கும் எழுதலாம்,
தொடர்ந்து. அலுப்பின் வாசனையை எளிதாக முகர்ந்து
கொள்பவந்தானே நல்ல வாசகன்!////
இது நாவலின் அறிமுக உரையாக ஆசிரியர் எழுதியது. எவ்வளவு பட்டவர்த்தனமான உண்மை. பூரணம், பரிபூரணம், ஆசை, நிராசை, வெட்கம், கோவம் என எழுத்தின் மீதான அவரது அத்துணை வெளிப்பாடுகளையும் கொட்டி தீர்க்கும் வார்த்தைகள். எழுதாளர்களின் கோபங்களையும் இயலாமையையும் வெகு இயல்பாகவும், எதார்த்தமாகவும் அதே சமயம் பொட்டில் அறையும் வேகத்துடன் வந்து விழுந்த வார்த்தைகள், இந்த முன்னுரை. முன்னுரையில் ஆரம்பித்த இந்த வேகம் நாவலின் கடைசி பக்கம் வரை நீடிக்கிறது.
எட்டுத் திக்கும் மதயானை, ஒரு 270 பக்க புத்தகம், நாவல். நாவல் வழியே வாழ்க்கை. அதுவும் எந்த மாதிரியான வாழ்க்கை. பணம் துரத்தும் வாழ்க்கை, சோகம் துரத்தும் வாழ்க்கை, வன்மமும் குரோதமும் துரத்தும் வாழ்க்கை, காமம் துரத்தும் வாழ்க்கை, பாசம் துரத்தும் வாழ்க்கை, பசி துரத்தும் வாழ்க்கை, செய்நன்றி துரத்தும் வாழ்க்கை, பழி துரத்தும் வாழ்க்கை, ஒற்றை துரத்தும் வாழ்க்கை. வாழ்க்கை ஏதேனும் ஒன்று துரத்த அல்லது ஏதேனும் ஒன்றை துரத்தியபடியே ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி வாழ்க்கை எனும் காட்டாற்று வெள்ளம் அடித்த திசையில் இலக்கின்றி பயணிக்கும் பூலிங்கமும், அவன் வாழ்வும்தான் இந்த நாவல்.
நாவல் நெடுக வாசகர்களுக்கு நிறைய கேள்விகளை விதைத்துக்கொண்டே போகும் பாங்கு அருமை. படித்துமுடித்ததும் விடைகளற்ற எண்ணற்ற கேள்விகள் நிச்சயம் வாசகர் மனதில் எழும். அந்த கேள்விக்கான விடைகளை தேடியலையும் மனம், தேடல்தானே வாழ்க்கையை அழகாக்குகிறது. மற்றவர்களின் பிழைகளிலிருந்து கற்றுக்கொள்பவன் அறிஞனாகிறான், தன் பிழைகளிலிருந்து கற்றுக்கொள்பவன் மனிதனாகிறான் என்று ஒரு சொலவடை உண்டு. அந்தவகையில் இது ஒரு மனிதனை பற்றிய கதை.
எது தவறு, கொலை செய்வதா? கொலை செய்தவன் இரண்டு நொடி தாமதித்திருந்தால் கொலை செய்யப்பட்டிருப்பானென்கிற நிலையில் ஒரு கொலை, தற்காப்பாகிறது. திருட்டு, குற்றமா? அப்படியானால் அதை இங்கே செய்யாதவன் யார்? அரசாங்கம் திட்டம் போட்டு செய்கிறது. திருட்டு, கொலை, கொள்ளை, கற்பு, காதல், காம்ம், பாசம், துரோகம் எல்லாம் வெரும் வார்த்தைகள். வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு அர்த்தம் கொடுக்கும் வெரும் வார்த்தைகள்.
இருக்கப்பட்டவனின் தப்புகள், தவறாக்கப்படுகிறது. மன்னிக்கப்படுகிறது இல்லாதவனின் தவறுகளும், தப்புக்களாக்கப்பட்டு, தண்டனையும் கொடுக்கப்படுகிறது. சில சமயங்களில் செய்யாத தவறுகளுக்காகவும். அப்படிப்பட்ட செய்யாத குற்றத்திற்க்காக அனுபவித்த தண்டனைக்கு பரிகாரமாக செய்யும் குற்றங்களுக்கான தண்டனைகள், என வாழ்க்கை புரட்டிப்போட்ட ஒரு சாமனியனின் கதை, எட்டுத் திக்கும் மதயானை. அவசியம் ஒருமுறை படித்துவிடுங்கள். இந்த நாவல் இதுவரை இரண்டே பதிப்புகள் மட்டுமே வந்திருப்பது, சாபம்.
டிஸ்கி 1: கற்றது தமிழ் படத்தின் மூலக்கதை என்று சொல்லப்பட்ட நாவல், எனக்கு கேபிள்சங்கரின் ரேணிகுண்டா விமர்சனம் படித்ததிலிருந்து பரமுவின் கிளைக்கதைதான் நியாபகம் வருகிறது. தல ஒருமுறை படிச்சிருங்க...
டிஸ்கி 2: நாஞ்சில் நாடன் - இப்படி ஒரு எழுத்தை, எழுத்தாளரை எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கிறேன் (மன்னிக்கனும், சகா. கார்க்கி, எனக்கும் தெரியலை-ரொம்ப மிஸ் பண்ணுறேங்கிறத தமிழ்ல என்ன சொல்லலாம்). இவருடைய இதற்கு முந்தைய ஐந்து நாவல்களையும் பதிவு செய்துவிட்டேன்.
கிறுக்கல்கள் 16
உனக்காக காத்திருந்த என்னிடம் “வாடா, போகலாம்” என்று
சொன்ன அதே புன்னகையுடன் என் அம்மாவிடம்
“போயிட்டு வரோம் அத்தை” என்கிறாய்.
மனதில் எந்த சுமையுமின்றி ஒருகையில் உன்னையும்,
மறுகையில் சாப்பாட்டுகூடையும், புத்தகபாரத்தை முதுகிலும்
சுமந்து உன்கரம் பற்றி பள்ளி சென்ற –
அந்த நேரம் ஏதும் தோன்றவில்லை.
உன் பாவடைக்கும், சட்டைக்கும்
தாவணியெனப் பூ பூத்தபோதும்
என் மொட்டை உதட்டின்மேல்
மீசையென செடி முளைத்து, பரு காய்த்தபோதும்,
உனக்காய் காத்திருக்கவில்லையென்றாலும்
சந்தித்தவேளைகளிலும், பேச்சுகளினூடும்
உன் கண்பார்த்தே கதைபேசிய –
அந்த நேரம் ஏதும் தோன்றவில்லை.
உனக்கு உன் கல்லூரி, எனக்கு எனது
என படிப்பு பிரித்துவைத்தபோதிலும்
பேருந்துகளில் எதேட்சயாய் பார்த்துகொண்டபோதும்,
பண்டிகைக் கால கோவில்களிலும்,
ஞாயிறு மாலை விடுகளிலும்,
நூலகத்தின் புத்தகத்தேடல்களின்போதும்,
தண்ணீர்குடத்தோடு என்வீடு கடந்த நேரத்திலும்,
இன்னும் எங்கெல்லாமோ........
அந்த நேரம் ஏதும் தோன்றவில்லை.
ஊர் கிணற்றில், என் குடத்திற்கும் சேர்த்தே
நீர் இறைத்த ஒரு மாலை நேரம்,
இறைத்தநீரை குனிந்து குடத்தில்வார்த்தபடி
”எனக்கு வீட்ல மாப்ள பாக்குறாங்கடா”
என எனக்கு மட்டும் கேட்க கிசுகிசுத்த
அந்த நேரம் ஏதும் தோன்றவில்லை.
பிரிதொரு நேரம், உன் அம்மா
மகளுக்கு கலியாணம் வச்சிருக்கோம்ன்னு
சொல்லிப்போன அந்தநேரம்,
காரணமின்றி வழிந்த கண்ணீரின்
காரணமறிய முற்பட்டபோது, காரணமறிந்தபோது
உனக்கு திருமணமாகிவிட்டிருந்தது.
ச்சே! இந்த காதல் எப்போது வந்தது
அந்த நேரமும் தோன்றவில்லை.
நான்கு குறும்படங்கள்

ஒன்று
மேலும் எய்ட்ஸின் பாதிப்பை மெல்ல உணரச்செய்யும் மூன்று குறும்படங்கள், மூன்றுமே சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லியிருக்கிறது. அவசியம் பாருங்கள். கிருத்திகா உதயநிதி, இயக்குனர் மிஸ்கின் மற்றும் சசிகுமார் ஆகிய மூவரும் கொடுக்கப்பட்ட நான்கு நிமிடங்களில் மனதை அசைத்துப்பார்க்கும் விதமாக எடுத்துள்ள மூன்று குறும்படங்கள். இதில் ஒன்றின் தொடர்ச்சியாக இன்னொன்று இருப்பது கூடுதல் சிறப்பு.

LIFE - கிருத்திகா உதயநிதி
LOVE - சசிகுமார்
HOPE - மிஸ்கின்
மேலும் ஒளிப்பதிவாளர், இயக்குனர் சந்தோஷ்சிவன் அவர்களின் ஒரு குறும்படம் இங்கே,
சந்தோஷ்சிவன் அவர்களின் குறும்படம் பாகம் 1
சந்தோஷ்சிவன் அவர்களின் குறும்படம் பாகம் 2







