மனங்கவர்ந்த பாடல்கள்

PATHIVARKAL ANAIVARUKKUM ENATHU INIYA ANGILA PUTHTHAANDU VAAZHTHUKKAL
                வருடாவருடம் சபரிமலைக்கு செல்லும்பொழுது பொதுவாக வாடகை கார்களில் செல்வதுதான் வழக்கம், இந்தமுறை நண்பரின் காரிலேயே செல்ல முடிவெடுத்ததாலும், நாங்களே கார் ஓட்டிசெல்ல வேண்டியிருந்தாலும் ஏதாவது நல்ல பாடல்கள் இருந்தால் செல்லும்பொழுது நெடிய பயணத்தை தோதாக்கிக்கொள்ள வசதியாக இருக்குமென பழைய பாடல்கள் அடங்கிய இசைதட்டுக்களை வீட்டில் தேடிக்கொண்டிருந்தேன். எப்பொழுதோ பதியப்பட்டு கிடந்த GOLDEN HITZ என்ற சிடி கண்ணை உறுத்தவே அதையும் எடுத்துகொண்டேன்.

                 போகும்போதும் வரும்போதும் நிறைய பாடல்கள் கேட்டோம், ஆனால் ரொம்ப நாளைக்கு பிறகு கேட்ட சில ஆங்கில, ஹிந்தி ஆல்பங்கள், அப்படியே மனதை குளிரச்செய்தது. ஏழெட்டு ஆண்டுகளுக்குமுன்பு அந்தப்பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தபோது நடந்த நிகழ்வுகள், நினைவுகளாய் வந்துபோனது. அதிலிருந்து சில பாடல்கள் உங்களுக்காக,
                 1977 களின் முற்பகுதியில் வெளிவந்த ஈகிள்ஸ் குழுவினரின் ஹோட்டல் கலிபோர்னியா என்ற ஆல்பத்தின் தலைப்புப் பாடல் இது. 1978 ஆம் ஆண்டு இசைக் கலைஞர்க்கான உயரிய விருதான கிராமி விருதினை வென்றது. இன்றளவும் உலகின் தலை சிறந்த நூறு பாடல்களில் முதல் முப்பது இடங்களில் இடம்பெறுகின்றது இந்த பாடல். பொதுவாக ஈகிள்ஸ் குழுவினரின் பாடல்களில் அதிக ஆடம்பரமான இசையை நீங்கள் காணமுடியாது. பாடலை தெளிவாக கேட்க்கும் அளவுக்கு மெல்லிய இசை பாடலோடு பொருந்தியிருக்கும். Strings Guitar எனப்படும் தந்தி கிடார் மற்றும் Basic Drum மூலமாகவே ஒரு தெளிவான இசையை கொடுத்திருப்பார்கள். இசை பிரியர்கள் அனைவரும் நிச்சயம் கேட்க வேண்டிய பாடல். நீண்ட பயணத்தின் போது ரம்மியமான இசையை கேட்க்க விரும்புபவர்களுக்கு இந்த பாடல் என்னுடைய சிபாரிசு.

பாடலைப்பார்க்க இங்கே சொடுக்கவும்

               அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பாடகர். பழைய ஹிந்தி நகைசுவை நடிகர் மெகமுத் அவர்களின் மகன். லக்கி அலி ஒரு பாடகர், இசையமைப்பாளர், தற்சமயம் ஒரு நடிகரும் கூட. லக்கி அலி இதுவரை ஆறு தனி ஆல்பங்கள் பாடியுள்ளார், எல்லா ஆல்பங்களும் பலத்த வரவேற்பிற்குட்பட்டவையே.

              இவரது ஸ்பெசல் இவரது குரலில் உள்ள சோகம், அதுதான் இவரது பலமும் கூட. பொதுவாக இவரது பாடல்களும் மெலடி வகைகளே. நான் பள்ளியில் படிக்கும்போது, வெளியான இந்த பாடல், அடிக்கடி எம் டீவியில் பார்த்துகொண்டிருப்பேன். இவரது எல்லா தனிப்பாடல்களும் ஒரே ஒரு கருவியிலான மெல்லிய இசையோடு தொடங்கி முடிவதைப் பார்க்க முடியும். பாடல் ஆரம்பிப்பதற்கு முன்பும் சரி பாடல் முடிந்த பின்னரும் சரி குறைந்தது 30 வினாடிகளாவது பாடலோடு சம்பந்தப்பட்ட ஒரு மெல்லிய இசை தொடர்ந்து கொண்டேயிருக்கும். காட்சியமைப்பிலும் பாடலிலும் நம்மை உட்புகுத்திக் கொள்ளவும், மெல்ல வெளியே வரவுமே இந்த யுக்தி என்பது என் கருத்து.

பாடலைப்பார்க்க இங்கே சொடுக்கவும்


                  சோனு நிகம், ஜீன்ஸ் படத்துல வரும் வாராயோ தோழி வாராயென் தோழின்னு ஒரு பாட்டு வருமே அந்த பாடலை பாடியவர் இவர்தான். அனேகமாக அதுதான் இவரது முதல் தமிழ்பாடல் இதுவாக தான் இருக்கும். இவர் எளிதாக திரைத்துறைக்கு வந்தவர் இல்லை, முதலில் திருமணங்களில் பாடிவந்தார் பிறகு தொலைகாட்சிகளில் இசை சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்திவந்தார், இசையின் மீது இவருக்கிருந்த ஈடுபாடு தொடர்ந்து சினிமாவில் பாட முயற்சி செய்துகொண்டே இருக்கச்செய்தது. இன்று 300 திரைப்பாடல்களுக்கும் மேலாக பாடியிருக்கிறார். பத்துக்கும் மேற்ப்பட்ட தனி ஆல்பங்கள் வெளியிட்டிருக்கிறார். மிகவும் மென்மையான குரல் இவருடையது. இவரது பாடலகள் பொதுவாக மெலடியாகவே இருக்கும்.

பாடலைப்பார்க்க இங்கே சொடுக்கவும்

இணைப்பாக இன்னுமொரு முக்கியமான பாடல் எல்லோரும் கேட்டிருப்பீர்கள், கல் ஹோ நா ஹோ பாடலைப்பார்க்க இங்கே சொடுக்கவும்.              இவரை அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும், பாய்ஸில் நெஞ்சமெல்லாம் காதல் பாடல் உட்பட தமிழிலில் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார். வேகமாக கீபோர்ட் வாசிப்பதில் கில்லாடி, ஆசியாவின் ஃபார்ஸ்டஸ்ட் கீபோர்ட் ப்ளேயர் இவர் என்று விருதுகூட வாங்கியிருக்கிறாரென சொல்ல கேட்டிருக்கிறேன். இந்த பாடலில்கூட அவரது கீபோர்ட் பகுதி ஒன்றிருக்கிறது பாருங்கள், கேளுங்கள்.

பாடலைப்பார்க்க இங்கே சொடுக்கவும்                  ஹிந்துஸ்தானி பாடகர், கஜல் குரு, பாடலாசிரியர் இன்னும் நிறைய அறியப்பட்டவர். இவரது பாடல்கள் பற்றி ஒரு தனிப்பதிவே போடலாம். அவ்வளவு பாடல்கள் இருக்கிறது. இருந்தாலும் நேற்றுக்கேட்ட அந்தப்பாடல் இங்கே. பாடலைப்பார்க்க இங்கே சொடுக்கவும்

                 இன்னும் சில பாடல்கள் இருக்கிறது. பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன். உங்களின் வரவேற்ப்பையும் பின்னூட்டங்களையும் கொண்டே இதை தொடரலாமென்றிருக்கிறேன். உங்கள் ரசனையோடு ஒத்துபோகும் பட்சத்தில் இந்த பாடல்கள், எந்த ஒரு வெறுமையான சூழ்நிலையிலும் மனதிற்கு கூழாங்கல்லின் குளுமையை தரக்கூடியது.


தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

21 கருத்துரைகள்:

சங்கர் said...

உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் !!!


வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

கார்த்திகைப் பாண்டியன் said...

வாவ்.. முரளி, நீங்கள் எனக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியமாகத் தருகிறீர்கள் .. ஹிந்தி பாப் பாடல்கள் கூட கேட்பீர்களா? எனக்கும் லக்கிய ரொம்பப் பிடிக்கும்.. அவரோட ஓ சனம், ஆ பி ஜா கேட்டுப் பாருங்க.. லூசே பிடிக்கும்.. அதே மாதிரி இப்போ கடைசியா வந்திருக்கிற அத்னானின் கிசிதின் ஆல்பமும் சூப்பர்.. உங்க டெஸ்ட் எனக்கு நெறையவே ஒத்துப் போகுது நண்பா.. :-))))

பலா பட்டறை said...

ஹோட்டல் கலிபோர்னியா//

ஆஹா.. ஆஹா.. அமுத கானமல்லவா அது.. கிடார் இசையை கேட்கும்போதே கரைந்து போய்விடும் மனது ...:))

Cable Sankar said...

andnam samiயின் பாடலும், அவர் குரலும்.. டிவைன்..

கனிமொழி said...

:-)
நீண்ட இடைவேளைக்கு பின் ஒரு இசை பகிர்வு, இல்லையா நண்பா
தொடருங்கள்...

கலகலப்ரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...! நல்ல பகிர்வு..!

கார்க்கி said...

சகா, ஹோட்டல் கலிஃபோர்னியாவைத்தான் வெறித்தனமா பிராக்டிஸ் பண்றேன். கூடிய சீக்கிரம் நான் வாசிச்சு காட்றேன் :)))

கார்க்கி said...

//உங்க டெஸ்ட் எனக்கு நெறையவே ஒத்துப் போகுது நண்பா.//

பேராசிரியர்ன்னு காட்றாரு பாருங்க. அது டேஸ்ட்தானே வாத்யாரே?

//பலா பட்டறை said...
ஹோட்டல் கலிபோர்னியா//

ஆஹா.. ஆஹா.. அமுத //

இவர் அதை ஏதோ சாப்பிடற ஹோட்டல்ன்னு நினைசுட்டாரோன்னு பயந்துட்டேன் சகா :))

//Cable Sankar said...
andnam samiயின் பாடலும், அவர் குரலும்.. டிவைன்//

அவர் ஆண் என்பதால் டி வேணாம் சகா. அதனால் போதையேற்றும் வைன்னு சொன்னாலும் சரிதான்

பலா பட்டறை said...

கார்க்கி said...
ஆஹா.. ஆஹா.. அமுத //

இவர் அதை ஏதோ சாப்பிடற ஹோட்டல்ன்னு நினைசுட்டாரோன்னு பயந்துட்டேன் சகா :))//

இப்போ அத ஹோட்டல்ல விக்க ஆரம்பிச்சிட்டாங்களா?

ஹும்ம் அந்த காலத்துல பார் (milkku) கடலெல்லாம் கடஞ்சி .... தேவை இல்லாம தொண்டையில ஒரு உண்டை அடையாளம் வேற ...::)) சிவ சிவா ...

முரளிகுமார் பத்மநாபன் said...

@சங்கர்
நன்றி நண்பரே!

முரளிகுமார் பத்மநாபன் said...

@கார்த்திகைப்பண்டியன்

நன்றி நண்பா, ஆம் உங்களைப் போலவே உணர்கிறேன். மகிழ்ச்சியாயிருக்கிறது. விரைவில் சந்திப்போம்

முரளிகுமார் பத்மநாபன் said...

@பலா பட்டறை
ம்ம் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஒரு கையை ஸ்டியரிங்கிலும் இன்னொரு கையை ஜன்னலிலும் வைத்தவாறு, பயணக்காற்று முகத்தில் தெரிக்க கேட்க்கவேண்உம் இதுபோன்ற பாடல்களை.....

முரளிகுமார் பத்மநாபன் said...

@கேபிள் சங்கர்
அதேதான் தல

முரளிகுமார் பத்மநாபன் said...

தேங்க்ஸ் கனி

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி ப்ரியா, உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

முரளிகுமார் பத்மநாபன் said...

@சகா, எனக்கும் கிடார் கத்துக்க ஆசையாயிருக்கு. சரியான வாத்தியாரை தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களின் வாசிப்பை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

விக்னேஷ்வரி said...

சுட்டிகளுடன் நல்ல இசைப் பகிர்வு. நல்ல ரசனைங்க உங்களுக்கு.

ரங்கன் said...

நல்ல பகிர்வு பாஸ்..அழகான பாடல்கள்..!!

நல்ல ரசனைக்காரரா இருக்கீங்க ..!!

க.பாலாசி said...

பாடல்களை கேட்பதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. (ஆபீஸ்ல ஸ்பீக்கர் இல்லை) ஆனாலும் கேட்கவேண்டும் என்ற ஆர்வம் வருகிறது.

பேரரசன் said...

முரளி ...இதை இதை தான் ரொம்ப நல்லா பெயர் மறந்து தேடிக்கிட்டு இருந்தேன் ..ஆனா இது கொஞ்சம் ஸ்லோவா இருக்கு...

நன்றி நண்பா... ஆடியோ வேணும்

கார்த்திக் said...

//பாய்ஸில் நெஞ்சமெல்லாம் காதல்//

அது ஆயுத எழுத்து தல

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.