மூன்று ஏமாற்றங்களும் ஒரு சமாதானமும்                     பதிவர் அனு அவர்களின் மூலமாக வம்சி பதிப்பகத்தின் உரிமையாளர் பவா.செல்லத்துரை அவர்களை சந்திப்பது, திருவண்ணாமலையில் அவரது வீடு பற்றி பேசிக்கொண்டிருப்பது, “மரப்பாச்சியின் சில ஆடைகள்” புத்தகத்தின் மூலமாக, பிரபல பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்களின் எழுத்துக்களினிடையே என் எழுத்தையும் பதியச்செய்த தோழர்.மாதவராஜ் அவர்களை நேரில் சந்தித்து, அவர் கைகளை பற்றி நன்றி என்று சொல்லவேண்டுமென்பது, எனது ஆதர்ச எழுத்தாளரான எஸ்.ராவை சந்திப்பது, ஆதி, தண்டோரா, நர்சிம், அப்துல்லா என பதிவுலகமே அறிந்த இந்த நட்பு வட்டத்தினூடே சில மணிகளை செலவழித்தல், கேபிள் சங்கருடன் திரைப்படம் மற்றும் சிறுகதைகள் குறித்து பேசவும், வண்ணத்துபூச்சியாருடன் சேர்ந்து ஒரு உலக படமாவது பார்ப்பது, மகாபலிபுரம் கடற்கரை கோவிலுக்கு செல்வது, பப்பி அக்கா வீட்டில் தங்குவது என இந்த வருடம் புத்தகத்திருவிழாவிற்கான சென்னை பயணத்தின் திட்டங்களை வெகு அருமையாக வகுத்து வைத்திருந்தேன்.

                          நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்குமென்பது போல, இதற்கு தகுந்தாற்ப்போல பொங்கலுக்கு வெகுமுன்னதாகவே முடிகப்பட்ட புத்தகத்திருவிழா அட்டவணையோடு சேர்ந்து சதி செய்தது என் அலுவலக ஆணிகள். எப்போதுமில்லாதபடி அலுவலகத்திலிருந்த ஏகப்பட்ட ஆணிகளை புடுங்கியபிறகுதான் தெரிந்தது நான் புடுங்கியது பூராவுமே தேவையில்லாத ஆணிகள்தானென்று. ம்ம்… . ஆக போட்டுவைத்த அனைத்து திட்டங்களும், புஸ்சென்றானது. இங்க இருந்ததுக்கு அங்கயே போயிருக்கலாம்னு, எப்போதும்போல சமாதான பேச்சுக்களினூடே கடந்துபோனது, இந்த வருடத்திற்கான முதல் ஏமாற்றம், மிகப்பெரியது.

-------------------------------------------------------------------------------------------

                         தொன்னைமரமென்று எழுதியதற்க்காக மடங்க பிடித்த புறங்கை முட்டிகளில் ஸ்கேலால் அடித்தேனும் குறைக்கச் செய்த மேரி டீச்சர்கூட ஒருகட்டத்தில் அயற்ச்சியால் விட்டுவிட்ட, எவ்வளவு முயற்சி செய்தும் அடியோடு விடமுடியாத என் எழுத்துப்பிழையை, ஒவ்வொரு முறையும் அதை கவனத்தோடு படித்து இது தவறு, இங்கே இப்படி இருந்திருக்கலாம் என அர்ச்சனைகளையும் அலோசனைகளை நிறையத்தரும் இனிய நண்பர்களில் மிகமுக்கியமான ஒருவர், ஆதிமூலகிருஷ்ணன். ஏனைய இருவர் வெயிலான் மற்றும் கிருஷ்ணபிரபு. இதில் ஆதி அவர்கள் கடந்த சனி இரவு திருப்பூர் வந்திருந்தார். இப்படி ஒரு சந்திப்பு, எந்த திட்டமிடலுமின்றி வெகு எளிதாக அமையபெற்றது, அனுபவமிக்க பதிவர்கள் பரிசல், வெயிலான், ஆதி ஆகியோரின் கூட இருந்து அவர்களின் அனுபவத்தை, பகிர்வை, நிச்சயம் பாட்டு பாடியிருப்பார்கள் அதை என எல்லா இனிய நிகழ்வுகளையும் நிகழ்வின் நெருக்கத்தையும் ஒருசேரக் கெடுத்தது, அவதார் 3D ( 3D இதை அவசியம் சொல்லித்தான் ஆக வேண்டும்). யோசிக்காமல் புக் செய்துவைத்த டிக்கெட்டுகளால் விட்டுப்போனது, இன்னுமொரு பெரிய ஏமாற்றம்.

                       மிகவும் வருத்தமாக இருந்தது. திருப்பூரிலேயே இருந்துவிடுவதா? இல்லை அவதார் பார்க்க கோவை செல்வதா என்ற முடிவெடுக்க முடியாமல் சிரமப்பட்ட வேலையில், உங்களை மிஸ் செய்வதும் கஸ்டமாயிருக்கு அதே நேரம் உங்களை இருக்கச்சொல்லி கட்டாயப்படுத்தவும் விருப்பமில்லை, ஏனேனில் நானும் ஒரு சினிமா காதலன் என்று பெருந்தன்மையாக சொல்லி அனுப்பிய பரிசல்காரனுக்கும், இதுவரை படம் பார்க்கவில்லையெனில் அவசியம் பாருங்கள், இது ஒரு நல்ல எக்ஸ்ப்பீரியன்ஸா இருக்குமென சொல்லியனுப்பிய ஆதிக்கும் எனது நன்றிகள்.

                   அதிலும் உங்களை ஏன் அதிகம் கட்டாயப்படுத்தவில்லையென்றால், நீங்கள் போகவிருந்த தியேட்டரில் பணிபுரியும் நண்பருக்கு போன் செய்து கேட்டேன், வருகிற 14ஆம் தேதியிலிருந்து பொங்கல் ரிலீஸ் படங்கள் வெளியிட இருப்பதாக சொன்னார்கள், ஆக நீங்க இன்னைக்கு பார்க்கலைன்னா அப்புறம் பார்க்கவே முடியாதுன்னு தோணுச்சு அதான்.. என்று என்னிடம் சாட்டிய பரிசல் சொன்னார். ரியலி தேங்க்ஸ் தல. உண்மையில் அந்த இரவை இழந்தது மிகப்பெரிய ஏமாற்றம்.

--------------------------------------------------------------------------------------

                ஆதி அவர்களை ஈரோடிலிருந்து திருப்பூரில் விட்டுச்செல்வதற்க்காக வந்திருந்த பதிவர்கள் வால்பையன், கார்த்தி மற்றும் அவரது நண்பர் பூபதி (இவருக்கான அறிமுகம் பூபதி போன்ற உற்சாகமான மனிதரை நான் சமீபத்தில் சந்தித்ததில்லை. பார்த்த மாத்திரத்தில் நண்பராகிறார் எல்லோரிடமும். பரிசலின் இந்த பதிவில் இருக்கிறது) அனைவரையும் சந்தித்துவிட்டு ஒருவழியாக கோவையில் பத்துமணிக்கு ஆரம்பிக்கப்போகும் அவதார் படத்திற்கு திருப்பூரிலிருந்து 9.10 மணிக்கு கிளம்பினேன்.

                   அவசர அவசரமாக வண்டியோட்டி எப்படியோ படம் ஆரம்பித்த பதினைந்து நிமிடங்களுக்குள் போய் சேர்ந்து விட்டேன். படம் வெளியாகி கிட்டதட்ட ஐம்பது நாட்களை நெருங்கிவிட்டதாலோ அல்லது படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் சிலாகித்து எழுதியிருந்த எல்லா பதிவுகளையும் படித்ததாலோ என்னவோ, படத்தோடு ஒன்றவே முடியவில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் CG செய்யப்பட்ட பொய் பிம்பங்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வை மாற்றவே முடியவில்லை.

                  சில வருடக்களுக்கு முன் அனிமேஷன் கற்றுக்கொள்ளும் ஆசையில் 3D Studio Max என்ற ஒரு டிசைனிங் சாஃப்ட்வேரை படித்தேன். மூன்றுமாத அரைகுறை அறிவில் ஒரு பந்து தரையில் பட்டு மேலே எழும்புவதை ஒரு காட்சியாக செய்ய நினைத்தேன். தரையில் ரப்பர் பந்துமோதும்போது ஏற்படும் நெளிவுகளுக்காக என் ஒருவார உழைப்பு தேவைப்பட்டது என்பதை நினைவில் வரவே என் கவனம் முழுவதும் படத்தின் டெக்னிக்கல் பகுதியிலேயே இருந்தது. எத்தனை பெரிய உழைப்பு ஒழிந்துகொண்டிருக்கிறது ஒவ்வொரு காட்சியின் பின்னும் என்பதை நினைக்கும்போது ஆயாசமாக உணர்கிறேன். என்ன இருந்தாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் சென்ற எனக்கு அவதார் ஒரு ஏமாற்றமே.
-------------------------------------------------------------------------------

                  பதிவர் கிருஷ்ணபிரபு வாங்கி அனுப்பிய புத்தகங்கள் என் கைக்கு வந்து சேர்ந்தது. அவசர அவசரமாக பிரித்துப்புரட்டினேன், மரப்பாச்சியின் சில ஆடைகளை. பட்டாம்பூச்சி பார்த்தல்…, முரளிகுமார் பத்மநாபன்…. என் கதை… என் பெயர் புத்தகத்தில் அச்சாகப்பார்க்கும்போது என் மகிழ்ச்சியினை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. கடந்த ஒரிரு நாட்களாக ஏமாற்றங்களினுடே பயணப்பட்டவனுக்கு யாரிடம் இதை சொல்லி சந்தோஷப்படுவது எனத்தெரியாமல் மனதிற்குள்ளேயே சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டேன். மனசு சங்கடப்பட்டு் கிடக்கும் நேரத்தில் இதுபோல ஏதாவது சின்ன சின்ன சந்தோஷங்களில் தானகவே ஆசுவாசப்பட்டுக் கொள்ளும் மனிதமனம், ஒரு விஷேசம்.
தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

22 கருத்துரைகள்:

butterfly Surya said...

சின்ன சின்ன ஏமாற்றங்களில் தான் வாழ்க்கை இன்னும் சுவாரசியத்தை நோக்கி ஒட வைக்கிறது.

வருத்தம் தான். ஆனால் புத்தக காட்சி போனால் என்ன..?? நேரம் கிடைக்கும் போது சென்னை வரலாம். தங்கலாம். உலக சினிமா பார்க்கலாம். கும்மி அடிக்கலாம். Cool my dear.

நீங்க இங்கே வரவில்லையென்றால் நாங்க அங்கே வருவோம்.
Be careful..

☼ வெயிலான் said...

படிக்கும் போது முன்னிலும் வித்தியாசத்தை உணர்கிறேன் முரளி!

பொங்கலுக்குப் பின்னும் அதே திரையரங்கில் அவ்தார் தான் ;)

மரப்பாச்சியின் மகிழ்வில் நானுமோர் பட்டாம்பூச்சி....

வானம்பாடிகள் said...

பாராட்டுகள் முரளி:)

பலா பட்டறை said...

ஏதோ ஒரு வருத்தம் பதிவு பூராவுமே..

இதுவும் கடந்து போகும்..

இனியாவது சந்தோஷங்களை நோக்கியதாக இருக்கட்டும். ::))

முரளிகுமார் பத்மநாபன் said...

// நேரம் கிடைக்கும் போது சென்னை வரலாம். தங்கலாம். உலக சினிமா பார்க்கலாம். கும்மி அடிக்கலாம். Cool my dear. நீங்க இங்கே வரவில்லையென்றால் நாங்க அங்கே வருவோம். Be careful..//

ஐ இது நல்லயிருக்கே, :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

//படிக்கும் போது முன்னிலும் வித்தியாசத்தை உணர்கிறேன் முரளி!//

தேங்க்ஸ் தல

முரளிகுமார் பத்மநாபன் said...

//பாராட்டுகள் முரளி//

நன்றி வானம்பாடிகள் ஐயா! :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

//இனியாவது சந்தோஷங்களை நோக்கியதாக இருக்கட்டும். ::))//

நன்றி நண்பா, கட்டாயம் எப்பொழுதுமே சந்தோஷங்களை நோக்கித்தான் எனது பயணம்..... :-)

சங்கர் said...

பயனுள்ள வார்ப்பு வாழ்த்துக்கள் நண்பரே !

கனிமொழி said...

ஒரு விஷயத்தை மறந்துடிங்க... :-(

க.பாலாசி said...

//இதுபோல ஏதாவது சின்ன சின்ன சந்தோஷங்களில் தானகவே ஆசுவாசப்பட்டுக் கொள்ளும் மனிதமனம், ஒரு விஷேசம்.//

சரிதான்...நண்பா...வாழ்த்துக்கள்...பொங்கல் திருநாளுக்கும்....

ஹாலிவுட் பாலா said...

///உழைப்பு ஒழிந்துகொண்டிருக்கிறது ///

ஆதி-யோடு நானும் சேர்ந்துக்கவா முரளி?! :) :)

---

அவதாரில் உங்க மனம் ஒட்டாமல் போனது எனக்கு பெரிய ஆச்சரியதான்.

மூணு தடவை பார்த்துட்டேன். அத்தனையும் டெக்னிகல் சமாச்சாரத்திற்கு மட்டும்தான். ஆனா.. மூணு முறையும்.. அதை சிஜி-யா பார்க்கணும்னு முயற்சி பண்ணியும்... ரியல் கேரக்ட்ராதான் பார்க்க முடிஞ்சது! :) :)

--

மத்தவங்க எல்லாம் எந்த கவலையை பத்தி பேசினா.... நான் எதைப் பத்தி பேசுறேன் பாருங்க! :)

கமலேஷ் said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள் தோழரே...பதிவு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள்...

பேரரசன் said...

மரப்பாச்சியின் மகிழ்வில் நானுமோர் பட்டாம்பூச்சி

வாழ்த்துக்கள் முரளி .... தொடரட்டும் ....

கலகலப்ரியா said...

வாழ்த்துகள் + பாராட்டுகள்....

எதிர்பார்ப்பு... ஏமாற்றம்... ரொம்ப சகஜம்.. சரி ஆய்டும்..

அவதார்... பார்த்தேன்... ஒரு இடுகை போடுறேன்... :)

கோபிநாத் said...

தல என்ன போட்டு தாக்கிட்டிங்க போல...நானும் புத்தக காட்சியில் உங்கள் புத்தகத்தை வாங்கினேன். உங்கள் பெயர் பார்த்ததும் உங்கள் எண்களை மறந்து போனோன். இங்க வந்தவுடன் சரியாக நேரமே கிடைக்கவில்லை.

மனமார்ந்த பாராட்டுக்கள் தல..கூடிய விரைவில் நீங்கள் ஒரு முழு புத்தகம் போட வாழ்த்துக்கள் ;))

நான் நோட் பண்ணிட்டு சொல்லாமுன்னு வந்தேன் பாலா முந்திடாட்டாரு.

மயில் said...

முரளி .. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சொல்லவே இல்லை உன் புத்தகம் வருவதை...

வாழ்த்துக்கள் :))

புலவன் புலிகேசி said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

விக்னேஷ்வரி said...

ஏகப்பட்ட ஆணிகளை புடுங்கியபிறகுதான் தெரிந்தது நான் புடுங்கியது பூராவுமே தேவையில்லாத ஆணிகள்தானென்று. //
எப்போவும் இது தான் நடக்குதுன்னாலும் ஒவ்வொரு தடவையும் நீங்க ஏன் மறந்து போறீங்க?

எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்பட வேண்டிய விஷயம் தான் முரளி. வாழ்த்துக்கள்.

Rajalakshmi Pakkirisamy said...

வாழ்த்துகள்!!!

கார்த்திக் said...

வாழ்துக்கள் தல

ஈரோடு வாங்க ஒரு சிட்டிங்போட்டிருவோம்

பொதுவா நான் படம் பாக்குரதுக்கு முன்னாடி அந்தப்படத்தப்பத்துன விமர்சனத்த படிப்பதில்லை உலக சினிமாவத்தவிற :-))

பாத்திமா ஜொஹ்ரா said...

இதுவும் .........
அருமை

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.