இசை அறிமுகம் - ஸ்டரைக்கர்
ரங் தே பஸந்திக்கு பிறகு சித்தார்த் நடித்திருக்கும் ஒரு முழுமையான ஹிந்தி படம். ஸ்ட்ரைக்கர். ஒரு கேரம்போர்டு விளையாட்டு வீரனாக சித்தார்த் நடித்திருக்கிறார். மேலும் பொக்கிஷம் பத்மப்ரியாவும் நடித்திருக்கிறார்கள். பத்மப்ரியா சத்தமில்லாமல் நடித்து முடித்துவிட்ட படம். பட்த்துல பொண்ணு சாரயம் விக்கிற பொண்ணா வருதாம், அம்மணியோட நடிப்புக்கு அவார்டு நிச்சயமென ஏற்கனவே விகடனில் செய்தி வெளியாகியாகிவிட்டது. அப்புறம் ரொம்ப நாளைக்கு பிறகு ஆதித்யா பஞ்சோலி நடித்திருக்கிறார். அனுபம்கேர் இருக்கார் இப்படி எத்தனையோ எதிர்பார்ப்புகள் படத்தை பார்க்கனும்ங்கிற ஆசையை அதிகப்படுத்தியபடியே இருந்தாலும் ஒரு விஷயம் எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டு விட்டது.

நிக்கோலெட்டி பேர்ட்(Nicolette Bird ) என்கிற இந்த குருவிதான். சமீபகாலமா கார்னியர் ஃபேசியல் க்ரீமின் விளம்பரத்தில் இந்த பொண்ணை பார்த்த முதலே தேடிக்கொண்டிருந்தேன். எங்கேயோ பாத்திருக்கேனே? என்று. முதல் முறையாக இந்த பாடலின் ப்ரமோவை பார்த்ததிலிருந்து அடிக்கடி மனசுக்குள் அமர்ந்து கொன்னுட்டு இருக்கு இந்த பொண்ணோட சிரிப்பு. ஸ்மைல்ன்னா இது ஸ்மைல்.

இந்த லின்க்ல பாருங்க. அதுவும் விடியோவின் முடிவில் வரும் அந்த காட்சியில் பொண்ணோட ஸ்மைலையும் ரியாக்க்‌ஷனையும் பாருங்க. இப்பவே சொல்லிட்டேன் எனக்கு புடிச்சிருக்கு, எல்லாருக்கும் பிடிக்குமான்னு தெரியலை. :-)

மெளலா.... மெளலா.... பாடல், பாம்பே...பாம்பே... பாடல் மற்றும் ச்சம் ச்சம் பாடல் பாருங்கள், நிச்சயம் பிடித்துபோகும். எனக்கு தெரிந்து இந்த் பட்த்திற்க்கான ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் செய்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் அழகாக வந்திருக்கிறது. குறிப்பாக சம் சம் பாடல், என் அபிமான பாடகரான சோனு நிகம் பாடியிருக்கிறாராம். என்னால் நம்பவே முடியலை. என்ன ஒரு வாய்ஸ் மாடரேஷன்.

சொல்ல மறந்த ஒரு விஷயம் , நம்ம யுவன் கம்போஸ் பண்ணி சித்தார்த்தோடடு சேர்ந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார். குத்து.
அந்த பாடலுக்கு இங்கே கிளிக்கவும்

படம் எப்படி இருக்கோ தெரியலை. இல்லை எப்படி இருந்தாலும் பரவாயில்லை. பாடல்களை கேளுங்கள். கேளுங்க நல்லா இருந்தா என்ஜாய் பண்ணுங்க.

பாடல்களுக்கு இங்கே சொடுக்குங்கள்

படத்தின் ட்ரெய்லர் பார்க்க இங்கே சொடுக்குங்கள்.

தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

8 கருத்துரைகள்:

க.பாலாசி said...

நீங்க சொல்லுறதப்பாத்தா நல்லாதானிருக்கும்போல... இருங்க..ட்ரைலர பாத்துட்டு வர்ரேன்...

Mathan elango said...

yeah..i downloaded it today only. sobgs are very nice..thanks for the intro to that heroine..he.he..he

கார்க்கி said...

சுமாரான ஆல்பம் என்றே தோன்றுகிறது சகா

ஷங்கர்.. said...

இப்பவே சொல்லிட்டேன் எனக்கு புடிச்சிருக்கு,//

இது போதும் முரளி..:))

எல்லாருக்கும் பிடிக்குமான்னு தெரியலை. :-)
//

இதுலயே புரிஞ்சிரிச்சு..உங்களுக்கு நல்லா பிடிச்சிருக்குன்னு. :))

கேட்டுடலாம்.. நன்றி. :)

முரளிகுமார் பத்மநாபன் said...

@க.பாலாசி...
ம்ம் நிச்சயம் பாடலை பாருங்கள். பிடிக்கும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@மதன் இளங்கோ
வணக்கம், நண்பரே! நீங்க சரியா புடிச்சிடிங்க நண்பா.... ஹீரோயினை சொன்னேன். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கார்க்கி
ம்ம்.. இருக்கலாம் சகா. மேக்கிங்கோடு பாடலை பார்க்கும்போது நன்றாக இருக்கிறதென்பது என் கருத்து. அந்த பொண்ண பாருங்க சகா, எனக்கு அந்த சிரிப்புக்கு முன்னாடி அதுவுமே தோணலை. ;-)

அதுவும் சுமார்தான்னு சொல்லி என் மனசை கசக்கிடாதிங்க சகா..
அவ்வ்வ்
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க.. அகா இது வேற மாதிரி ஆயிடுச்சே...
:-)

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.