என் புத்தகபட்டியலும் வண்ணதாசனும்

                 இந்த வருடம் புத்தக சந்தை. திருப்பூரின் 7வது புத்தக திருவிழா.

              ஒவ்வொரு வருட புத்த்க்கண்காட்சியின் போதும் ஏதோவொரு எழுத்தாளரை தேர்ந்தெடுத்து அவர்களின் பெரும்பான்மையான புத்தகங்களை ஒருசேர வாங்குவது என் பழக்கம். கடந்த முறை அசோகமித்ரன், அதற்குமுன் இந்திரா பார்த்தசாரதி..

                ஏசுவின் தோழர்கள், குருதிபுனல், தந்திரபூமி, சுதந்திர புமி, வேதபுரத்து வியாபாரிகள், கிருஷ்ணா கிருஷ்ணா, ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன என வாங்கிய எல்லா இ.பா வின் புத்தகங்களையும் படித்தாகிவிட்டது. ஆனால் அசோகமித்ரனின் ஆகாசத்தாமரை, மானசரோவர், கரைந்த நிழல்கள் படித்துவிட்டேன், இன்னும் மிச்சமிருக்கிறது தண்ணீரும் பதினெட்டாவது அட்சகோடும். அதற்குள்ளாக அடுத்த புத்தக கண்காட்சி வந்தேவிட்டது.

                 ஒரு முறை வாங்கு புத்தகம் எனக்கு ஓராண்டுக்கு போதுமானதாக இருக்கிறது. பொதுவாக நான் ஒரு புத்தகத்தை படிக்க ஏழு முதல் பத்து நாட்கள் பிடிக்கும். வேலை நேரம் போக காலை மாலை இரு நேரமும் சேர்த்து ஒரு நாளைக்கு நாலைந்து மணி நேர ஓய்வே கிடைக்கிறது. அதிலும் நண்பர்கள், வீடு, சினிமா, இசை இதெல்லாம் போக கிடைக்கும் சொற்பமான நேரங்களிலேயே எழுதவும் படிக்கவும் முடிகிறது. ஆனால் அப்படியும் இரண்டு பக்கங்களையாவது தினமும் படித்துவிட வேண்டும் என்பதை சிரமத்துடன் கடைபிடித்து வருகிறேன்.
 
           இந்தமுறை வண்ணதாசனை முழுமையாக வாசிக்க நினைத்திருக்கிறேன். எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். இடதுசாரி அல்லது வேறு ஏதோ ஒரு கொள்கைபிடிப்புள்ளவன் எங்கள் நண்பர்களின் மத்தியில் அவனின் வாதங்கள் மிகவும் பிரசித்தி. பன்றி காய்ச்சலுக்கு எய்ட்ஸ்க்கு உண்டான மருந்தே கொடுக்கப்படுகிறது, எய்ட்ஸ் கிருமியே மனிதன் உண்டாக்கிய செயற்கை கிருமிதான் (ப்யோ வெப்பன்) என்பான். தசாவதாரம், உன்னைபோல் ஒருவன் பார்த்துவிட்டு பார்ப்பனீயம் பற்றி பேசுவான், வாழ்வு குறித்த எந்த விஷயத்திலும் எதிர்மறையான கொள்கை பிடிப்புள்ளவன், எஸ்.ராமகிருஷ்ணனை, வாசிக்க முடியாது என்பான். மரத்திலிருந்து இலை உதிர்வது இயல்பு, அதையெல்லாம் சிலாகித்துக்கொண்டிருக்க முடியாது. இன்றைய அவசர உலகத்தில் இதற்கெல்லாம் சாத்தியமில்லை என்பான். பொதுவாக என்னுடைய எந்த கருத்தும் அவனோடு ஒத்துபோவது கிடையாது, ஆனால் அவன் எனக்கு பிடித்தமானவனாயிருக்கிறான். அவனை பற்றிய எனது ஒரே பயம், அவன் எதையுமே பாஸிட்டிவாக பார்க்க மாட்டானா என்பதுதான்.

                மரத்திலிருந்து இலை உதிர்வதை பார்க்க முடிந்தவன், அதிர்ஸ்டசாலி. இலை உதிர்வதையோ, பூ மலர்வதியோ ரசிக்க முடிந்தவனின் இதயத்தில் வன்மதிற்கும் எதிமறை கண்ணோட்டத்திற்கும் இடமேது. இந்த வருடம் அவனது பிறந்த நாளுக்கு அவனுக்கு ஒரு புத்தகம் கொடுக்கவேண்டும். எனக்கு பிடித்த எஸ்.ராவை அவனுக்கு பிடிக்காதெனினும் எஸ்.ராவுக்கு பிடித்த வண்ணதாசனை அவனுக்கு பிடிக்ககூடும் என யோசித்துவைத்திருக்கிறேன்.

               வண்ணதாசன் பற்றியும், அவர் ஒரே மாதிரியான எழுத்து நடை கொண்டவர், ஒரு கட்ட்த்தில் அலுப்பு தட்டகூடியது அவரது எழுத்துக்கள், நல்லா கதை சொல்லியபடியே வருவார் அவருக்கு போதுமென படுகிற இட்த்தில் கதை முடித்துக்கொள்வார் என பல எதிர்மறை கருத்துக்கள் உண்டு.

               29 வருசங்கள் ஆனாலும் அம்மா வைக்கிற சாம்பார் அலுக்க வில்லை எனக்கு. எத்தனை முறை கேட்டாலும் அலுப்புதட்டாத என் பாட்டி சொன்ன தவளை இளவரசனின் கதைகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லை, வண்ணதாசனின் கதைகள். வால் விடைத்து தென்னைமரமேறுகிற அணில்கள், காம்பு நனைந்த பசுக்களின் சாந்த்தின் வாசனை, விருந்தினர் மாளிகை தோட்டத்து போகன் வில்லா மரம், நாகலிங்க பூ, நந்தியாவட்டை இதையெல்லாம் வெறு யார் சொல்லப்போகிறார்கள். அவரது புத்தகத்தில் படித்த ஒரே காரணத்திற்காக மனோரஞ்சித பூவை தேடி பத்து நாட்களுக்கும் மேல் அலைந்திருக்கிறேன். அப்படியென்ன வாசனை என்று அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இன்னும் என்னுடைய 2006ஆம் வருட டைரியில் இருகிறது மனோரஞ்சிதம். எஸ்.ரா சொல்லுவதுபோல வாசகர்களை கையை பிடித்து கதைக்குள் கூட்டி செல்லும் உரிமை தெரிந்தவர் வண்ணதாசன். அவரது கதை மாந்தர்களும் அப்படியே.

             தமிழ் சினிமாவில் வயலினை இளையராஜா அளவிற்கு யாரலும் கொண்டாடியிருக்க முடியாது என்பதுபோல தமிழ் எழுத்துக்களில் பூவை, செடியை, மண்ணை, மண்புழுவை வண்ணதாசனை தவிர கொண்டாடியவர்கள் யாருமில்லை. ஆக இந்த வருடம் வண்ணதாசன் வருடம்

நான் வாங்கவிருக்கும் புத்த்கங்களின் பட்டியல் இது.

1. என்றும் நன்மைகள் - க.சீ.சிவக்குமார்

2. குணசித்தர்கள் – க.சீ.சிவகுமார்

3. புலி நகக்கொண்றை – பி.ஏ.கிருஷ்ணன்

4. வாசகர் பர்வம் – எஸ்.ராமகிருஷ்ணன்

5. ஏற்கனவே – யுவன் சந்திர சேகர்

6. எல்லொருக்கும் அன்புடன் – கல்யாண்ஜி

7. பெய்தலும் ஓய்தலும் – வண்ணதாசன்

8. கலைக்க முடியாத ஒப்பனைகள் – வண்ணதாசன்

9. சமவெளி – வண்ணதாசன்

10. தோட்ட்திற்கு வெளியிலும் சில பூக்கள்– வண்ணதாசன்

11. பெயர் தெரியாத ஒரு பறவை – வண்ணதாசன்

12. கனிவு – வண்ணதாசன்

13. நடுகை – வண்ணதாசன்

14. உயரப்பறத்தல் – வண்ணதாசன்

15. கல்யான் ஜி கவிதைகள் - கல்யாண்ஜி

           நண்பர்கள் யரேனும் இந்த புத்தகங்களின் பதிப்பகங்களை தெரிந்திருந்தால் பின்னூட்டங்களில் தெரியசெய்யவும். உதவியாய் இருக்கும். பதிப்பகம் தவிர விலை, குறிப்பிட்ட சில கதைகள் உட்படபுத்தகம் சார்ந்த வேறு ஏதேனும் சுவாரஸ்யமான செய்திகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.


தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

42 கருத்துரைகள்:

கலகலப்ரியா said...

அருமையான பகிர்வு முரளி.. !

முரளிகுமார் பத்மநாபன் said...

ப்ரியா எங்கே சில நாட்களாக சாரி சில பதிவுகலாக காணோமே? :-)

சங்கர் said...

புலி நகக் கொன்றை - காலச்சுவடு - Rs 145
வாசக பாவம் - உயிர்மை - ??
குண சித்தர்கள் - கிழக்கு - Rs 125
என்றும் நன்மைகள் - கிழக்கு - Rs 80

சங்கர் said...

என் பட்டியல் இங்கே

பா.ராஜாராம் said...

எதை செய்தாலும் திருத்தமாக செய்கிறீர்கள் முரளி.இந்த பத்தி நடை ரொம்ப பிடிச்சிருக்கு.வண்ணதாசன் கூட காரணமாக இருக்கலாம்.

வண்ணதாசனின் மிக சிறந்த புகைப்படம் இது.என் கல்யாணி என சொல்வது போல்.

KarthigaVasudevan said...

//எஸ்.ரா சொல்லுவதுபோல வாசகர்களை கையை பிடித்து கதைக்குள் கூட்டி செல்லும் உரிமை தெரிந்தவர் வண்ணதாசன். அவரது கதை மாந்தர்களும் அப்படியே.//
வண்ணதாசன் சொல்லித் தான் நான் அபிதா வாங்கினேன் .ஆனா இன்னும் வண்ணதாசனை முழுசா வாசிக்கலை,விகடன்ல வாசிச்ச வரைக்கும் அருமையான நடை,
அம்மாவின் கர்ப்ப பைக்குள் அமிழ்ந்து மிதக்கும் பிஞ்சின் புனிதம் அவரது படைப்புகளின் வரி தோறும் வாசம் பரப்பும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி சங்கர், உயிர்மை கிழக்கு இரண்டுமே இங்கே முகாமிட்டிருக்கிறார்கள். ஆக அது பிரச்சனையாக இருக்காதென நினைக்கிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

//எதை செய்தாலும் திருத்தமாக செய்கிறீர்கள் முரளி.இந்த பத்தி நடை ரொம்ப பிடிச்சிருக்கு.வண்ணதாசன் கூட காரணமாக இருக்கலாம்.//

மிக்க நன்றி மகாப்பா..

முரளிகுமார் பத்மநாபன் said...

வாங்க கார்த்திகா, முதல் தடவையா நம்ம க்டைக்கு வறீங்க.

//வண்ணதாசன் சொல்லித் தான் நான் அபிதா வாங்கினேன் //
அபிதா, லா.ச.ரா தானே? உயிர்மைதானே?
அதையும் சேர்த்து கொள்கிறேன்.
நன்றி, தொடர்ந்து படிங்க

செ.சரவணக்குமார் said...

வண்ணதாசன் பற்றிய உங்கள் பார்வை மிக அருமை.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

முரளி நல்லபதிவு..
திருப்பூர் புத்தக கண்காட்சியில் நானும் வண்ணதாசன் படைப்புகளை தேடி விட்டேன்.
ஒன்றுமே என் கண்ணில் சிக்கவில்லை..
நீங்கள் பிடித்துவிட்டால் தெரிவிக்கவும்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

முரளி நல்லபதிவு..
திருப்பூர் புத்தக கண்காட்சியில் நானும் வண்ணதாசன் படைப்புகளை தேடி விட்டேன்.
ஒன்றுமே என் கண்ணில் சிக்கவில்லை..
நீங்கள் பிடித்துவிட்டால் தெரிவிக்கவும்.

நிலாரசிகன் said...

கிருஷ்ணன் வைத்த வீடு வாசித்து விட்டீர்களா? பட்டியலில் இல்லை.
அவருக்கு மிகப்பித்தமான தொகுப்பு அது :)

குப்பன்.யாஹூ said...

good post, ask Leka, yaalisai oru ilakkiya payanam. (you will get more books of vanna daasan)

Its Me The Monk said...

புதுமைப்பித்தன் பதிப்பகம் அவருடைய மொத்த கதைகளின் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்..
நான் மீண்டும் மீண்டும் விரும்பி வாசிக்கும் தொகுப்பு அது...

மோகன் குமார் said...

வண்ண தாசன் அற்புதமான எழுத்தாளர். ஏனோ அவருடனான எனது சந்திப்பு(கள்) சற்று கசப்புடன் முடிந்தது. இயலுமானால் பின் என் ப்ளாகில் இது பற்றி எழுதுகிறேன்

||| Romeo ||| said...

பட்டியல் எல்லாம் சூப்பர் தலைவரே ..

கிருஷ்ண பிரபு said...

க.சீ.சிவக்குமார் - திருப்பூர்காரரை மறக்காம வாங்கியிருக்கீக...

அவருடைய பதிவுகள் இங்க இருக்கு பாருங்க:

http://www.sivakannivadi.blogspot.com

ரங்கன் said...

லிஸ்டு பெருசா இருக்கு..!!

அழகான தேர்ந்தெடுப்புகள்..!!

அந்த புத்தகங்களை பற்றிய விமர்சனங்கள் இனி வரும் காலத்தில் பதிவேற்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி..!!

முரளிகுமார் பத்மநாபன் said...

//வண்ணதாசன் பற்றிய உங்கள் பார்வை மிக அருமை//
நன்றி சரவணகுமார். இன்னும் நிறைய படிக்க வேண்டும் அவரை

விக்னேஷ்வரி said...

இரண்டு பக்கங்களையாவது தினமும் படித்துவிட வேண்டும் என்பதை சிரமத்துடன் கடைபிடித்து வருகிறேன். //
என்னால் முடிந்ததும் அவ்வளவே.

நானும் இப்போது தான் வண்ணதாசனை வாசிக்க ஆரம்பித்தேன். அப்படியே கிராமத்திற்குக் கூட்டி சென்று விட்டார், எழுத்திலேயே. மயக்கும் நடை.

உங்கள் எழுத்து நடை ரொம்ப நல்லாருக்கு முரளி.

முரளிகுமார் பத்மநாபன் said...

//திருப்பூர் புத்தக கண்காட்சியில் நானும் வண்ணதாசன் படைப்புகளை தேடி விட்டேன்.//

முதலில் போன் நம்பரை குடுங்க தலைவரே! murli03@gmail.com

முரளிகுமார் பத்மநாபன் said...

//கிருஷ்ணன் வைத்த வீடு வாசித்து விட்டீர்களா? பட்டியலில் இல்லை.
அவருக்கு மிகப்பித்தமான தொகுப்பு அது//

ஓ அதுதான் அவரது முதல் தொகுப்பு நான் வாசித்தது. கதாவிலாசம் மூலம் அறிமுகப்பட்டது.

இவ்வளவு பூவும் உதிர்ந்தா கிடந்தது........ ஆகா,...

கோபிநாத் said...

\\குருதிபுனல்,கிருஷ்ணா கிருஷ்ணா,\\

இந்த ரெண்டு புத்தகம் இருக்கு தல...இன்னும் ஓபன் பண்ணல தல ;))

☼ வெயிலான் said...

//முதலில் போன் நம்பரை குடுங்க தலைவரே! murli03@gmail.com //

திரு நம்ம சங்கத்து மெம்பரு :)

☼ வெயிலான் said...

நீங்க கொடுத்த பட்டியல்ல திருப்பூர் புத்தகக் கண்காட்சியில நம்ம தலைவரோட வாசகர் பர்வம் மட்டும் தான் இருக்கு. என்கிட்டயும் இருக்கு :)

வேற புத்தகங்கள் இல்லை.

முரளிகுமார் பத்மநாபன் said...

good post, ask Leka, yaalisai oru ilakkiya payanam. (you will get more books of vanna daasan)

Thanks dude, i already quired leka, will try yaalisai.
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

புதுமைப்பித்தன் பதிப்பகம் அவருடைய மொத்த கதைகளின் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்..
நான் மீண்டும் மீண்டும் விரும்பி வாசிக்கும் தொகுப்பு அது..///

நிச்சயம் ஒருமுறையில் திருப்தியடையாத எழுத்துக்களதாம் அவை. நன்றி நண்பரெ உங்கள் கருந்த்துக்கும் வருகைக்கும்

முரளிகுமார் பத்மநாபன் said...

வண்ண தாசன் அற்புதமான எழுத்தாளர். ஏனோ அவருடனான எனது சந்திப்பு(கள்) சற்று கசப்புடன் முடிந்தது. இயலுமானால் பின் என் ப்ளாகில் இது பற்றி எழுதுகிறேன்//

என்னாச்சு தல, 98433 41223

முரளிகுமார் பத்மநாபன் said...

பட்டியல் எல்லாம் சூப்பர் தலைவரே //

தேங்க்ஸ் ரோமியோ, முடிஞ்சா படிங்க

முரளிகுமார் பத்மநாபன் said...

அவருடைய பதிவுகள் இங்க இருக்கு பாருங்க://

பார்த்தேன் கிருஷ்ணா, ஆனால் அதில் அவர் அதிகம் எழுதுவதில்லை போலும்

முரளிகுமார் பத்மநாபன் said...

அந்த புத்தகங்களை பற்றிய விமர்சனங்கள் இனி வரும் காலத்தில் பதிவேற்வீர்கள் என்று நம்புகிறேன்.///

கிடைத்தால் நிச்சயமாக :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நானும் இப்போது தான் வண்ணதாசனை வாசிக்க ஆரம்பித்தேன். அப்படியே கிராமத்திற்குக் கூட்டி சென்று விட்டார், எழுத்திலேயே. மயக்கும் நடை///

என்ன படிக்கிறிங்க விக்கி?

முரளிகுமார் பத்மநாபன் said...

குருதிபுனல்,கிருஷ்ணா கிருஷ்ணா,\\

இந்த ரெண்டு புத்தகம் இருக்கு தல...இன்னும் ஓபன் பண்ணல தல ;)//


ஏன் கோபி, படிக்காட்டி பரவாயில்லை ஓப்பன் பண்றதுல எந்த தப்புமில்லையே :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

திரு நம்ம சங்கத்து மெம்பரு :)//

அது தெரியும் தல , நம்பர்தான் தெரியாது. :-)

நீங்க கொடுத்த பட்டியல்ல திருப்பூர் புத்தகக் கண்காட்சியில நம்ம தலைவரோட வாசகர் பர்வம் மட்டும் தான் இருக்கு. என்கிட்டயும் இருக்கு :)

க.சீ.சிவகுமாரின் இரண்டு புத்தகங்களும் கிழக்கில் சொல்லி வாங்கிவிட்டேன், நேற்று.

ராகவன் said...

அன்பு முரளிகுமார்,உங்கள் பத்திகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். திருப்பூரில் இருந்து என்றது கூடுதல் பிரியம் ஒட்டிக்கொண்டது... வசீகரமாய் இருக்கிறது உங்கள் நடை, நிறைய வண்ணதாசன் படிக்கிற காலகட்டத்தில், அவர் நடையின் சாயல் நம்மையே அறியாமல் ஒட்டி கொண்டு விடும். உங்கள் பட்டியலில் உள்ள வண்ணதாசனின் புத்தகங்கள் பலவற்றை படித்து பைத்தியமாய் கிடந்திருக்கிறேன் கொஞ்ச காலம்... மகோன்னதானமான எழுத்து அவருடையது...

வாழ்த்துக்கள்,

அன்புடன்
ராகவன்

குகன் said...

// 5. ஏற்கனவே – யுவன் சந்திர சேகர்
//

உயிர்மை பதிப்பகம்.

லா.ச.ராவின் 'அபிதா' கிழக்கு வெளியீட்டுள்ளது.

கார்த்திக் said...

தல வண்ணநிலவன் புத்தகம் நானும் பல தட தேடிப்பாத்தேன் இதுவரைக்கும் கிடைக்கல அவறுடைய தீவிர வாசகர்கிட்ட கேட்டுப்பருங்க

முரளிகுமார் பத்மநாபன் said...

உங்கள் பத்திகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். திருப்பூரில் இருந்து என்றது கூடுதல் பிரியம் ஒட்டிக்கொண்டது... வசீகரமாய் இருக்கிறது உங்கள் நடை, நிறைய வண்ணதாசன் படிக்கிற காலகட்டத்தில், அவர் நடையின் சாயல் நம்மையே அறியாமல் ஒட்டி கொண்டு விடும். உங்கள் பட்டியலில் உள்ள வண்ணதாசனின் புத்தகங்கள் பலவற்றை படித்து பைத்தியமாய் கிடந்திருக்கிறேன் கொஞ்ச காலம்... மகோன்னதானமான எழுத்து அவருடையது...
வாழ்த்துக்கள்,//
அன்புடன்
ராகவன்///

நன்றி தலைவரே!
என் மின்னஞ்சல் murli0@gmail.com. தொடர்பிலிருங்கள், நாம் பேசலாம், வண்ணதாசன் பற்றி.....

முரளிகுமார் பத்மநாபன் said...

/ 5. ஏற்கனவே – யுவன் சந்திர சேகர்
//உயிர்மை பதிப்பகம்.
லா.ச.ராவின் 'அபிதா' கிழக்கு வெளியீட்டுள்ளது.

இரண்டுமே வாங்கி விட்டேன், நன்றி குகன். பிப்-14ல் சந்திப்போம். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

தல வண்ணநிலவன் புத்தகம் நானும் பல தட தேடிப்பாத்தேன் இதுவரைக்கும் கிடைக்கல அவறுடைய தீவிர வாசகர்கிட்ட கேட்டுப்பருங்க//

யாழிசை - லேகா மேடம்தானே, அவங்களை ஏற்கனவே தொடர்புகொண்டுவிட்டுதான் பதிவிட்டேன். அவருடைய புத்தக அலசல்கள், அருமையாயிருக்கிறது

GADHA said...

I saw all your photographs. Many of them are professional. I enjoyed them. take care..

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.