மைத்ரியும் கண்ணாமூச்சியும்
தினமும் தெருக்களில், வயதான, உடல் ஊனமுற்றவர்களை, மனநலம் குன்றியவர்களை, ஆதரவற்றவர்களை என எத்தனையோ மனிதர்களை பார்க்கிறோம். தொலைந்துபோனவர்கள், தொலைக்கபட்டவர்கள், வாழ்க்கையை தொலைத்தவர்கள் இப்படி.

இவர்கள ஏன் இப்படியிருக்கிறார்கள்? அவர்களின்  சிறுவயதிலிருந்தே இப்படித்தான் இருந்திருப்பார்களோ? ஒருவேளை யாராவது சிறுவயதில் இவர்களை கவனித்திருந்தால் இப்படியாகியிருக்க மாட்டார்களோ? என ஆயிரம் கேள்வி மனதில் எழுவது இயல்புதான். வண்டியை நிறுத்தி ஒவ்வொருவருக்காய் உதவி செய்து கொண்டிருக்க மனம் நினைத்தாலும், தாளும் காலமும் அனுமதிப்பதில்லை. இருந்தாலும் எதிர்படும் ஒவ்வொருவருக்கும் நம்மால் ஆன ஏதாவது உதவியை செய்தபடிதானிருக்கிறோம்.


எதோவொரு காலத்தில் மறுக்கபட்ட உதவிதான் அவர்களின் இன்றைய நிலைக்கு காரணம் என்று நினைத்துக் கொள்வேன். ஒரு நேர உதவி அவர்களை அவர்களின் குறையை நிவர்த்தி செய்திருக்க முடியும். ஆக என்னால் முடிந்தவரை உதவி என்று வருபவர்களுக்கு, எதையாவது செய்துவிட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய ஒரே ஆசை. அதற்காகவாவது பணம் நிறைய வேண்டும் எனக்கு.

என் அப்பா அடிக்கடி சொல்லுவார் "நம்மால் முடியாததை செய்பவர்கள் நம் மரியாதைக்குரியவர்கள். அவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் நம்மால் ஆன உதவிகளை செய்யணும்" என்று. என்னால் ஒரு போதும் மனநலம் குன்றிய குழந்தைகளை இவ்வளவு அன்போடு பராமரித்து வளர்த்து வர முடியுமா என்றால் நிச்சயம் முடியாது என்பதுதான் என் பதில். 

              தேர்ந்த அனுபவமும், பொறுமையும், கனிவும் நிரம்ப பெற்றவர்களால் மட்டுமே அதை வெற்றி கரமாக செயல்படுத்த முடியும் அப்படி ஒரு அமைப்புதான் மைத்ரி, நேரடி அனுபவம் இல்லாவிடிலும் நண்பரின் இந்த பதிவு புரியச்செய்யும். ///இலாப நோக்கில்லாமல் அன்பளிப்புகளால் மட்டுமே நடக்கும் நிறுவனம் என்பதை கடந்த சில மாதங்களாக நானும் இணைந்து பணியாற்றுவதால் நன்கறிவேன். இந்நிறுவனத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு என்னால் இயன்ற சிறு உதவிகளையும் செய்து வருகிறேன். அதனால் வலைப்பூவிலும் அதிகம் நேரம் ஒதுக்க முடியவில்லை.///


வாழ்த்துக்கள் வண்ணத்துபூச்சி சூர்யா


////இன்றைய சமுதாய ஓட்டத்தில் இது போன்ற பணிகளி நம்மால் முழு நேரமும் ஈடுபட முடியுமாதென்பது ஒப்பு கொள்ள வேண்டியதே எனினும் இதை முழுமூச்சுடன் முனையும் இவர்களுக்கு தோள் கொடுக்கவும் இயன்ற உதவியை செய்யவும் வாருங்கள் என சக பதிவர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடனும் உரிமையுடனும் வேண்டுகிறேன்.////

அண்ணன் சூர்யா அவர்களின் சார்பாக நானும் அதே அன்புடனும் உரிமையுடனும் வேண்டுகிறேன்.

****************************************************திருப்பூரை சேர்ந்த சக பதிவர், நண்பர் ரவிகுமாரின் குறும்படம் கண்ணாமூச்சி . ஏற்கனவே தோழர். மாதவராஜ் இந்த குறும்படத்திற்கு அறிமுகம் செய்துவிட்டாரெனும்போதும், இது என் நண்பருடைய குறும்படம் என்று நான் அறிமுகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நண்பர்களோடு நிறைய திரைப்படங்கள் பார்க்கும்போது அதிலுள்ள நிறை குறைகளை பற்றி நெடு நேரம் பேசிக்கொண்டிருப்போம், சில படங்களை பார்க்கும்போது இதைவிட நாமே நல்லா செய்திலுக்கலாம்டா என்று பேசிக்கொள்வதுண்டு. ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. சில புகைப்படங்களுக்கு நான் வேண்டிய லைட்டிங் கிடைக்கும் வரை பொருமையாக காத்திருக்கும்போது நினைத்துகொள்வேன். நிச்சயம் திரைப்படம் என்பது அவ்வளவு எளிதான சமாச்சாரம் அல்ல.

ரவியின் இந்த குறும்படத்தை பார்க்கும்போதும் அதுபோன்றதொரு நினைவே வருகிறது. தன்க்கு கிடைத்த வாய்ப்புகளில் இப்படி ஒரு படம் எடுப்பது என்பது நிச்சயம் பாராட்டப்படக்கூடிய ஒரு விசயம்தான். இதில் நடித்துள்ள சிலர் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள்தான். அவர்களையும் இப்படி பார்க்க சந்தோஷமாக உணர்கிறேன்.

ஒரு தாத்தாவிற்கும் பேரனுக்குமிடையேயான ஒரு மெல்லிய உறவை சொல்லும் படம். அனேகமாக எல்லா வீட்டிலும் இப்படி ஒரு தாத்தா இருப்பது நிச்சயம். எனக்கு தாத்தா இல்லை. பக்கத்து வீட்டு தாத்தா, அவர் பள்ளியில் படிக்கும்போது பின்னால் வந்த நரியை தனது தூக்குவாளியை வைத்தே அடித்து துரத்தியதையும், சைக்கிளை பெரிய மலைப்பாம்பின்மீது ஏற்றி அதை கொன்றதையும் வாயைபிளந்து கொண்டு கேட்டிருக்கிறேன். அதே தாத்தா வீட்டில் பாம்பு நுழைந்ததற்காக அலறியதும் திடீரென நினைவுக்கு வருகிறது.

இங்கே தாத்தா ஒரே வாரத்தில் செஸ் கத்துகொள்வார். ஏனென்றால் அவர் பேரன்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடும், அவர்மீது, அவரது தன்னம்பிக்கையின்மீது கொண்டுள்ள பார்வை, இவை இரண்டும் அவரை கிரிகெட்டையும் கற்றுக்கொள்ள செய்யும்.

வாழ்த்துக்கள் ரவிக்குமார்!


தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

14 கருத்துரைகள்:

கலகலப்ரியா said...

ரொம்ப அவசியமான, நெகிழ்வான பதிவு.. ம்ம்..

ஷங்கர்.. said...

பதிவும், பகிர்வும் அருமை முரளி..:)

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்ல விசயம் சொல்லி இருக்கீங்க..

||| Romeo ||| said...

சுவாரசியமா இருக்கு பாஸ் பதிவு ..

முரளிகுமார் பத்மநாபன் said...

ரொம்ப அவசியமான, நெகிழ்வான பதிவு.. ம்ம்..///

ப்ரியா என்னாச்சு? பயங்கர பிஸி போல?
எவ்வளவு பிஸியா இருந்தாலும் முதல் ஆளா பின்னூட்டமிட வறீங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கு, நன்றி ப்ரியா.

முரளிகுமார் பத்மநாபன் said...

பதிவும், பகிர்வும் அருமை முரளி..:)//

தேங்க்ஸ் நண்பா! இந்த ரெண்டு விசயமுமே அவர்கள் இருவரும் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே எழுதியிருக்கிறேன். எனக்கா தோணலை..
:-(

முரளிகுமார் பத்மநாபன் said...

நல்ல விசயம் சொல்லி இருக்கீங்க..//

நன்றி தலைவரே! வருகைக்கும் தொடர்வதற்கும். தொடர்ந்து படிங்க

SanjaiGandhi™ said...

முதல் விஷயம் சூர்யா ப்ளாகில் படித்தேன்.. நல்ல விஷயம்.. குறும்படம் நல்ல பகிர்வு..

கார்த்திகைப் பாண்டியன் said...

மைத்ரிக்கு நம்மால் இயன்ற உதவியை செய்வோம்.. உங்கள் நண்பருக்கு வாழ்த்துகள் தல..

மோகன் குமார் said...

நல்ல விஷயம் நண்பா.. கேபிள் விழாவுக்கு வர்றீங்களா? வந்தால் சந்திப்போம்

my few drops said...

kurumpadam paarthu konduirukiraen

butterfly Surya said...

Sorry. இன்றுதான் பார்க்கிறேன். பகிர்விற்கு நன்றி முரளி.

குறும்படமும் அருமை. நண்பருக்கு வாழ்த்துகள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ ||| Romeo |||
சுவாரசியமா இருக்கு பாஸ் பதிவு ..///

// தேங்க்ஸ் மச்சி//

----------------------------
@ SanjaiGandhi™
முதல் விஷயம் சூர்யா ப்ளாகில் படித்தேன்.. நல்ல விஷயம்.. குறும்படம் நல்ல பகிர்வு..//
நன்றி தலிவரே!
----------------------------
@கார்த்திகைப் பாண்டியன்
//நம்மால் இயன்ற உதவியை செய்வோம்.. உங்கள் நண்பருக்கு வாழ்த்துகள் தல..//
கட்டாயமாக நண்பா!
---------------------------
@மோகன் குமார்
நல்ல விஷயம் நண்பா.. கேபிள் விழாவுக்கு வர்றீங்களா? வந்தால் சந்திப்போம்//
கேபிள் விழாவில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, மோகன் ஜி
---------------------------------

@my few drops
kurumpadam paarthu konduirukiraen////

பார்த்துவிட்டு சொல்லுங்க YP
----------------------------------
@ butterfly Surya
Sorry. இன்றுதான் பார்க்கிறேன். பகிர்விற்கு நன்றி முரளி.
குறும்படமும் அருமை. நண்பருக்கு வாழ்த்துகள்.//
சாரியெல்லாம் எதுக்குண்ணா? சொன்னா செஞ்சிட்டு போறேன். அவ்ளோதான். 

TechShankar @ டெக்‌ஷங்கர் said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.