பறவையின் பாடல்

SONG OF SPARROWS (சாங்ஸ் ஆஃப் தி ஸ்பேரோஸ்)
                  மஜீத் மஜீதி. இரானின் தலைசிறந்த இயக்குனர். உலகதிரைப்பட பிரியர்களின் பட்டியலில் முக்கிய இடம்பெறும் சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தை இயக்கியவர். வாழ்வின் விளிம்பு நிலை மனிதர்களை, அடித்தட்டு மக்களின் வாழ்வை சொல்லும் நகைசுவையோடு கூடிய மென்சோக கதைகளே, இவரது . திரைப்படங்கள். ஒரு கதைக்கு தேவையான எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற வரையறைக்குள் அடங்காமல் ஒரு நிகழ்வை, ஒரு சராசரி மனிதனை, அவன் வாழ்வின் ஒரு சில நாட்களை, அவன் வாழ்வின் சில மணிதுளிகளை எந்த ஒரு பாசங்கும் இல்லாமல் அப்படியே சொல்லுவது இவரது பாணி. இன்னும் பொதுவாக சொல்லபோனால் இயலாமையால் குறிவைக்கப்படும் எளிய மனிதர்களின் மனவோட்டத்தை பிரதிபளிக்கும் இவரது திரைப்படங்கள்.

               நான் பதிவெழுத முடிவெடுத்தபிறகு முதலில் எழுதியதே இவரது Children of Heaven பற்றிதான். இந்த படத்தின் கடைசி காட்சியில் கிழிந்த காலணியுடன் ஓடி பந்தயத்தில் வென்ற சிறுவனின் ரணப்பட்ட கால்களை, அவனது காயங்களை மீன்தொட்டியிலுள்ள மீன்கள் மெல்ல கடிப்பதுபோல அமைத்திருப்பார். இந்த காட்சியைபற்றிய வேறு மாதிரியான பல பார்வைகள் இருந்தாலும் சிறுவனின் ரணப்பட்ட மனதிற்கு அவன் கால்களின் வழி, ஒத்தடமாகவே உணர்கிறேன். பொதுவாகவே இவரது திரைப்படங்களில் பின்னணி இசை ஒரு முக்கியாம்சம். ஒரு நல்ல திரைபடத்திற்கு இசை, அதிலும் குறிப்பாக பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பது இவரது படங்களை பார்க்கும்போது, எளிதில் விளங்கும்.

             சரி இந்த படத்திற்கு வருவோம், கரீம், இரண்டு பெண் குழந்தைகள், மற்றுமொரு மகனுக்கு தந்தை, ஒரு கணவன், ஒரு நடுத்தர குடும்பத்தின் தலைவன். அவன் ஊரில் இருக்குமொரு நெருப்புக்கோழிப்பண்ணையில் பராமரிப்பு பணி செய்து வருகிறான். கோழிகளுக்கு தீவணமிடுவது, அதன் முட்டைகளை ஒருங்கிணைப்பது இப்படி. ஒரு நாள் அவனது பராமரிப்பிலிருக்கும் கோழி ஒன்று பண்ணையிலிருந்து தப்பி விடுகிறது. அதற்கு கரீமின் கவனக்குறைவே ஒரு காரணமெனசொல்லப்பட, எப்படியும் வேலை பரிபோய்விடுமென நினைக்கிறான், பின் வேலையிலிருந்தும் விலகுகிறான். வீட்டிற்கு வரும் கரீம், தனது காது கேளாத பெரிய மகளின் காது கேட்க்கும் கருவி தொலைந்து போனதை அறிகிறான்.

                அது எங்கே தொலைந்தது என்று தேடப்போக, அது அவனது மகன், மகள்கள் மற்றும் அவன் வயதை ஒத்த சில சிறுவர்களும் சேர்ந்து அவர்களின் வீட்டின் அருகில் உள்ள ஒரு பெரிய பாழடைந்த கிணறு போன்றதொரு பெரிய தொட்டியை சுத்தம் செய்து அதில் தங்க மீன்களை வளர்க்க செய்யும் முயற்சியில் அந்த தொட்டியில் விழுந்திருப்பதை அறிகிறான். இனி இந்த மாதிரி குப்பையில் விளையாட்தீர்கள், அப்புறம் அது இதுன்னு வந்து படுத்துகிட்டா, என்று சராசரி தகப்பனாக பேசிவிட்டு, தானும் அதில் இறங்கி ஒருவழியாக கருவியை கண்டுபிடிகின்றனர். ஆனால் அது வேலை செய்யாமல் போனதை அறிந்து, மகன் மீது கோபம் கொள்கிறான்.
                 அருகிலிருக்கும் நகரத்திற்கு சென்று அதனை சரிசெய்ய முயலும் அவனுக்கு அதை சரிசெய்ய இரண்டு மாதங்களாகும் என்று பதில்வருகிறது. சரி புதிதாக வாங்கலாமென்றாலும் விலை அவனுக்கு விண்ணைமுட்டி நிற்கிறது. வேலையுமில்லை, என்ன செய்வது என்று சோகமாக வெளியே வரும் கரீமின் வண்டியில் ஒருவர் ஏறிக்கொண்டு ரயில் நிலையத்தில் இறக்கிவிடுமாறு சொல்கிறார். அதற்கு பணமும் தருகிறார். அந்த நகரத்தில் அதையே ஒரு தொழிலாக செய்யப்பட்டு வருவதை கவனிக்கிறான். அதையே தொடர்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக நகரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களையும் பணத்தையும் கொண்டு தனது வீட்டை சிறிது சிறிதாக புனரமைத்து வருகிறார். இதற்கிடையில் ஏற்படும் விபத்தில் சிக்கி படுக்கைக்கு தள்ளப்படுகிறார்.                   இதற்க்கிடையில் மகன் வேலைக்கு போகிறான்., மனைவியும் காது கேளாத மகளும் கீரைகளை பறித்து அருகிலுள்ளவர்களுக்கு விற்று சம்பாதிகின்றனர். ஆசையாய் செய்து வைத்த கதவு விலைபோகிறது. எல்லாவற்றையும் படுத்தபடியே பார்த்து கண்ணீர்விட்டபடியே கரீம். சூழ்நிலை ஒரு மனிதனை புரட்டி எடுக்கும் காலம். மைத்துனன் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றுவரும் வழியில், கரீமுடன் அவனது மகனும் அவனது நனபர்களும் பிரயாணப்படுகிறார்கள். அந்த வண்டியிலிருக்கும் பூந்தொட்டிகளை வீடுகளில் இறக்கிவைக்க அவர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. அதை வைத்து தங்க மீன்களை வளர்ப்பது அவர்களின் கனவு. தந்தையின் நிலை அறிந்து மகன் வேலைக்கு செல்கிறான் என்று மேதாவித்தனமாக நான் யோசித்த வேளையில், அது அப்படியில்லை சிறுவர்கள் உலகம் வேறு, அவர்களைன் கனவுகள் வேறு என்று சொல்லும் காட்சியமைப்பு.                   அதே வண்டியில் ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் அவர்கள் மீனையும் வாங்கிப்போட்டுக்கொண்டு வருகிறார்கள், வழியில் ஒரு வீட்டில் தொட்டிகளை இறக்கும்போது அந்த பிளாஸ்டிக் தொட்டி உடைந்திருப்பதை கவனிக்கிறார்கள். மற்றதொட்டிகளை தூக்கிப்போட்டுவிட்டு விழுந்தடித்துக்கொண்டு அருகிலுள்ள வாய்க்காலில் உள்ள நீரை அள்ளி நிரப்பும் நோக்கில் அங்கே தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள், சிறுவர்கள். பிடிநழுவி கீழே விழுந்த பிளாஸ்டிக் தொட்டியிலிருந்து அனைத்து மீன்களும் கீழே சிதறித்துடிக்கிறது. கூடவே சிறுவர்களின் கதறல். ஆசை ஆசையாஇ சம்பாதித்து சேர்த்த காசில் வாங்கிய கனவு மீன்கள் தரையில் துடிப்பதைப்பார்த்த சிறுவர்கள் அழுதுகொண்டே கைகளால் வாய்க்காலில் தள்ளிவிடும்காட்சி கவிதை. சோகத்தை உணர்த்த வலிய திணிக்கப்பட்ட காட்சியாய் தோன்றினாலும் மென்சோக கவிதை அந்த காட்சி.                 பின் ஒரேயொரு மீனை ஒரு பையில் போட்டுக்கொண்டு சோகமாய் திரும்பும் சிறுவர்களை தெம்பாக்க கரீம் ஒரு பாடல் பாடுகிறார். பாடலினூடே ஊர் வந்து சேர்கின்றனர். கரீமின் மகன் ஒற்றைமீனை தங்களது சுத்தம் செய்து வைத்திருக்கும் தொட்டியில் விட ஓடுகிறான். தனியே அமர்ந்திருக்கும் கரீமிற்கு அவனது பழைய நெருப்புகோழி பண்ணையிலேயே மறுபடியும் வேலையில் சேர அழைப்பு வருகிறது. எழுந்து கதவை திறக்க முடியாத கரீம் உள்ளே இருந்தபடியே செய்தியை கேட்கிறார். வெளியே நிற்கும் மனிதன் சுற்றுசுவரின் மீது ஒரு இனிப்பு பொட்டலத்தை வைத்துவிட்டு செல்கிறான். கரீமின் முகத்தில் நம்பிக்கை ஒரு ஒளியைப்போல மெல்ல பரவுகிறது. இசையோடு எழுத்துக்கள் மேல் நோக்கிநகர எதோ நம் நண்பன் ஒருவனின் துயரம் மெல்லத் தோய்ந்து நம்பிக்கை துளிர் விடுவதைப்போல ஒரு ரிலீஃப் ஃபீலிங் வருவது, நிஜம்.                 இவ்வளவுதான் இந்த படம், வெறும் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தில் இன்னும் நீங்கள் ரசிக்க எத்தனையோ காட்சிகள் உண்டு, இங்கே சில காட்சிகள்.
                தொலைந்த நெருப்புக்கோழியைத் தேடி அதேபோல வேடமணிந்து செல்லும் கரீம், அவரது தேடலும் அதை தொடரும் காட்சியும், அப்பாவின் மனது குளிர காதுகேட்கிறது என்று சொல்லும் பெண்ணும் அதனால் மகிழும் கரீம் அடுத்த வினாடியிலேயே இன்னும் மகளுக்கு காது கேட்கவில்லை எனத்தெரிந்து குமுறும் காட்சி, நகரத்தில் கரீமின் ஒவ்வொரு நாட்களும், கதவை எடுத்துக்கொண்டு வயலில் வரும் காட்சி, கிளைமாக்ஸில் அந்த சிறுவர்களின் நடிப்பு இன்னும் எவ்வளவோ சொல்லலாம். எல்லோரும் பாருங்க, இது ஒரு MUST SEE FLIM வகையறாதான். உலகத்திரைப்படங்கள் மந்தமாக இருக்கும், புரியாது இப்படி ஒரு பார்வை உங்களுக்கு இருந்தால் இவரது பட்த்திற்கு பிறகு நிச்சயம் மாறிவிடும், அதற்கு நான் பொறுப்பு.
தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

28 கருத்துரைகள்:

தியாவின் பேனா said...

ஆகா நல்லாய் இருக்கு

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி தியாவின் பேனா, இதுதான் முதல்முறை பதிவிட்ட மூன்றாவது நிமிடத்தில் வருகிற முதல் பின்னூட்டம். நன்றி நண்பரே!

:-)

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்வு முரளி.நல்ல நடை.

பதிவிட்ட அரைமணி நேரத்திற்கு மேலாகிப் போச்சு.இல்லையா?

:-)

த‌மிழ் said...

மஜீத் மஜிதி எனது பிரியமான இயக்குனர்.. அவரது படத்தைப் பற்றி இங்கு படிக்கையில் மிகவும் நெகிழ்வாயிருக்கிறது..

க.இராமசாமி said...

நல்ல பகிர்வு.

butterfly Surya said...

அருமை முரளி.

வாழ்த்துகள்.

மோகன் குமார் said...

அருமையான பகிர்வு முரளி; நான் இன்னும் Children of Heaven படமே பார்க்கலை; ஒரு முறை வீட்டில் பெண்ணும், ஹவுஸ் பாசும் பார்த்து விட்டு பாராட்டி பேசினாங்க; அந்த படம் அவர்களை ரொம்ப பாதிச்சது; I need to see both films. How do you get these films??

திருநாவுக்கரசு பழனிசாமி said...

கரீமின் மனைவி தனது உறவினருக்கு தரும் கதவினை, கரீம் திரும்ப எடுத்து வரும் காட்சி ஒளிப்பதிவின் அற்புதம்.

நல்ல பதிவு.

க.பாலாசி said...

படத்தவிட நீங்க சொல்ற விதமே ஒரு ஆர்வத்தை உண்டாக்குது நண்பரே....பாக்கணும்...

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

பகிர்வுக்கு நன்றி முரளி. படத்தை பார்க்கும் வாய்ப்பிருப்பதால் பதிவை முழுதாக படிக்கவில்லை மன்னிக்க.
பார்த்துவிடு வருகிறேன்.

செ.சரவணக்குமார் said...

அருமையான பார்வை சார்.

முரளிகுமார் பத்மநாபன் said...

அருமையான பகிர்வு முரளி.நல்ல நடை. பதிவிட்ட அரைமணி நேரத்திற்கு மேலாகிப் போச்சு.இல்லையா?
:-)///


ஆமா மகாப்பா நீங்க சொல்றது சரிதான்

முரளிகுமார் பத்மநாபன் said...

மஜீத் மஜிதி எனது பிரியமான இயக்குனர்.. அவரது படத்தைப் பற்றி இங்கு படிக்கையில் மிகவும் நெகிழ்வாயிருக்கிறது..///

வாங்க தமிழ் , வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

முரளிகுமார் பத்மநாபன் said...

நல்ல பகிர்வு.///

மிக்க நன்றி இராமசாமி, தொடர்ந்து படியுங்கள்.
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

அருமை முரளி.
வாழ்த்துகள்///

உங்க பதிவை படிச்சிட்டுதான் இந்த படத்தை பார்க்கவே முடிவு செய்தேன். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

ஒரு முறை வீட்டில் பெண்ணும், ஹவுஸ் பாசும் பார்த்து விட்டு பாராட்டி பேசினாங்க; அந்த படம் அவர்களை ரொம்ப பாதிச்சது; I need to see both films. How do you get these films??///

தலைவரே என்ன் இது உங்க பொண்ணு பார்த்திருக்காங்க, நீங்க இன்னும் பார்க்கலையா?

முதல் வேலையாக இந்த ஞாயிறே பாருங்கள். வண்ணத்துபூச்சியாரிடம் கேளுங்கள், கேபீளிடமும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

கரீமின் மனைவி தனது உறவினருக்கு தரும் கதவினை, கரீம் திரும்ப எடுத்து வரும் காட்சி ஒளிப்பதிவின் அற்புதம்.
நல்ல பதிவு.//

நல்ல படத்தை பார்த்தா சொல்லனும், இல்ல..... :-)
சொல்லுங்க பாஸ் எனக்கு படம் பார்ப்பது ரொம்ப பிடிக்கும். நல்ல படம் எதுனா இருந்தா சொல்லுங்க, நம்ம லிஸ்ட அப்டேட் பண்ண மாதிரியாவது இருக்கும்

முரளிகுமார் பத்மநாபன் said...

படத்தவிட நீங்க சொல்ற விதமே ஒரு ஆர்வத்தை உண்டாக்குது நண்பரே....பாக்கணும்...///

பாலாசி, நன்றி அவசியம் பாருங்கள், உங்க போனை எதிர்பார்க்கிறேன். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

பகிர்வுக்கு நன்றி முரளி. படத்தை பார்க்கும் வாய்ப்பிருப்பதால் பதிவை முழுதாக படிக்கவில்லை மன்னிக்க.
பார்த்துவிடு வருகிறேன்.//வாங்க வாங்க பொருமையா பார்த்துட்டு, ஆனா அவசியம் வாங்க.

முரளிகுமார் பத்மநாபன் said...

அருமையான பார்வை சார்.///

சாரா? என்ன தல இது. யாருடைய பதிவுக்கோ போட்ட பின்னூட்டமோ என்று யோசிக்க வைக்கிறது.

ஜெகநாதன் said...

இதே படத்துக்கு நான் விமர்சனம் எழுதியதும், அதன் தொடர்ச்சியாக நீங்கள் அழைத்து CD கிடைக்குமா ​கேட்டதும் நினைவுக்கு வருகிறது முரளி.

அருமையா எழுதியிருக்கீங்க!

முரளிகுமார் பத்மநாபன் said...

இதே படத்துக்கு நான் விமர்சனம் எழுதியதும், அதன் தொடர்ச்சியாக நீங்கள் அழைத்து CD கிடைக்குமா ​கேட்டதும் நினைவுக்கு வருகிறது முரளி.

அருமையா எழுதியிருக்கீங்க!///

ஆமா ஜெகன் ஜி, ரெண்டுவாரம் முன்னாடிதான் கிடைச்சது. :-)

விக்னேஷ்வரி said...

ம், நல்லாருக்கு முரளி.

கலகலப்ரியா said...

ivlo periiiya post... hmm... appuram mudinja padikkaren... =))

btw... pazhikkup pazhi... namma post la antha pathinmathodarukku azhaippu.... paarthukkunga...

ஆதிமூலகிருஷ்ணன் said...

கலைப்படங்கள் மெதுவானவை, புரியாதவை என்பதெல்லாம் மஜித்தின் படங்களுக்குப் பொருந்தாது. நல்லதொரு பகிர்வு.

மயில்ராவணன் said...

ரொம்ப நல்ல படம்.நீங்களும் நல்லா எழுதியிருக்கிறீங்க.கலக்குங்க தோழரே..சென்னையில் சந்தித்தோம்! நினைவிருக்கா?

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Aravindan said...

மிகப்படித்த படம். நெருப்புக்கோழி slow-moவில் ஆடும் அந்த கடைசி ஷாட் இன்னும் கண்ணில் நிற்கிறது.

அழகாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள் :)

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.