என் நாட்குறிப்பிலிருந்து சில பக்கங்கள்


பிப்டீன் போனது சிக்ஸ்டீன் வந்தது
தாவணி பார்த்தேன் மீசை வந்தது
தடவிப்பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே!.

சென்ற வாரம் கலகலப்ரியாவிடமிருந்து தொடர்பதிவிற்காக ஒரு அழைப்பு வந்தது. தலைப்பு சரியாக புரியாமல் என்ன எழுதனும் என்று அவர்களையே கேட்க, ப்ரியாவும் அதானே, நானும் எழுதிட்டேன், இந்தாங்க இந்த பதிவுகளை பாருங்க அப்புறம் எழுதுங்க, என்றார். அவர் சுட்டிய பதிவுகளை படித்ததில் பதின்ம வயது டைரி குறிப்புகள் போல என்று முடிவுக்கு வந்தேன். ஏதாவது விஷயம் கிடைக்குமா என என் பதின்மவயதில் நான் உபயோகித்த நாட்குறிப்புகளை தேட முதல் பக்கத்திலேயே கிடைத்தது. அவளுக்காக நான் எழுதிய முதல் கவிதை. இனி அதை தவிர வேறு எதை எழுதினாலும், பாவம் பீடிக்குமென என முதல் காதலை எழுதியிருக்கிறேன். சுவாரஸ்யத்திற்காக எதையும் கூட்ட குறைக்கவில்லை. உள்ளது உள்ளபடி.(ஆக, மொக்கையா இருந்தாலும் வேற வழியில்லை, படிங்க)

 பள்ளி முடிந்தது, வீடு திரும்பியதும் மாலை ஐந்து மணிக்கெல்லாம் ஒருமுறை குளித்து ஆறு மணிக்கு கோவிலுக்கு சென்றுவிடுவேன். எங்கள் காலனியிலுள்ள எல்லா தேவதைகளும் கோவிலுக்கு வரும் நேரம். கூடவே அவளும். பரீட்சையில் நல்ல மதிப்பெண்களுக்காக எல்லா பெண்களும் கோவிலை 108 சுத்து சுத்துவாங்க, தினமும்.  நாங்கள் அவர்களையே சுற்றுவோம்.

தேவதைகள் வரம் வேண்டும் அரிய காட்சி அங்கே தினமும் நடக்கும். பொதுவாக இது உன் ஆள், இது என் ஆள் என்று பிரித்துகொள்ளும் நண்பர்கள், (சும்மானாச்சுக்கும், ஒரு கிக்குக்காக, இது அந்த தேவதைகளுக்குகூட தெரியாது. ஒருத்தன் ஆளை இன்னொருத்தன் பார்க்க கூடாதுங்றது எங்களுக்குள்ள ஒரு ஜெண்டில்மேன் (?) அக்ரீமெண்ட்) சுமாராக இருக்கும் எனக்கு சூப்பராகவே இருக்கும் அவளை விட்டு வைத்தது ஆச்சர்யம். ஆக அவள் என் ஆள் என்பது தானாகவே அமைந்த்து.
       
      ஒரு நாள், நண்பனின் பட்டறையில் வெள்ளி கிழமை பூஜை முடிந்து அன்று கோவிலுக்கு வரும்போது மணி ஏழு இருக்கும். அவள் தங்கை என்னிடம் ‘எவ்ளோ நேரமா அக்கா வெயிட் பண்ணிட்டு இருக்கா தெரியுமா? சீக்கிரம் போங்க என்றாள். ஏன் வெயிட் பண்ணனும்? என்ன இது புதுசா? இப்படி மனசு நிறைய கேள்விகளோடு கோவிலுக்கு போனேன். எல்லாரும் பிரகாரத்தை சுத்திகிட்டு இருக்க இவள் மட்டும் பத்தாவது விக்ரகமா உக்கார்ந்திருந்தா,நவகிரத்து பக்கத்தில். எப்போதும்போல மொக்கையாய் சிரித்து வைத்தேன். அதுக்கு ரொம்ப அழகா ஒரு சிரிப்பை கொடுத்தாள், என்றைக்கும் இல்லாத சிரிப்பு அது. எனக்கு மெல்ல விளங்க ஆரம்பித்தது.

சென்னையில் ஏற்பட்ட வியாபார நொடிப்பில் இடம்பெயர்ந்த ஒரு கேரளகுடும்ப பிண்ணனி கொண்ட பெண், கோவிலில் என் கையைப் பிடித்துக்கொண்டு,. அப்பா குடிக்கிறார், அம்மா சண்டை போடறாங்க, கடன்காரங்க வீட்டுக்கி வந்துபோயிட்டே இருக்காங்க, இப்படி என்னென்னவோ பேசிக்கொண்டிருப்பாள். நான் சந்தித்த எல்லா அழகான பெண்களும் ஒரு துயரப்பின்னணி கொண்டிருப்பதன் அதிசயம் விளங்கவில்லை. அம்மா டீச்சர் என்பதால், பொதுவாக இரவு நேரங்களில் குரூப் ஸ்டடி என்கிற பெயரில் நண்பர்கள் அனைவரும் என் வீட்டில்தான் இருப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் என் அம்மாவிடம் பேசி ஆண்ட்டி, ஆண்ட்டின்னு சந்தேகம் கேட்கும் சாக்கில் அவள் என் வீட்டிற்கு வர சில நாட்களிலேயே மற்ற பெண்களும் வர ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் எங்கள் வீடே ஒரு சின்ன ட்யூசன் செண்டர் மாதிரி ஆகிவிட்டிருந்த்து. அம்மாவும் அவர்களில் குடும்ப சூழ்நிலையை தெரிந்திருந்தால் அவளிடம் சற்று அன்யோன்யமாக இருப்பார்கள்.

வீட்டிற்குள்ளேயே படுக்கவும், படிக்கவும் ஆயிரம் வசதிகள் இருந்தாலும், ஆயுத எழுத்துபோன்ற முன்பக்க வேப்பமரம் மற்றும் கொள்ளையிலுள்ள இரண்டு தென்னை மரங்களின் நடுவே மொட்டை மாடியில்தான் படுத்திருப்பேன், காலை நாலரை மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்து கிழக்கு நோக்கி தவம் இருப்பேன், ஐந்து மணிக்கு மெல்ல வெளிச்சம் வர நான் தயாரகிவிடுவேன், ஐந்து மணிக்கு எப்படி வெளிச்சம் வருமென்று கேட்காதீர்கள், அது வரும் அவள் அறையிலிருந்து. பல் விளக்கியபடியே வெளியே வருவாள். என்னுடைய டேபிள் லேம்ப்பை அணைத்து, எரித்து அவளுக்கு, நான் உனக்காக காத்திருக்கிறேன் என்பதை உணர்த்துவேன். அவளும் அங்கிருந்து கையை காட்டும்போது விடிந்திருக்கும். குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி படித்துக்கொண்டிருப்பாள். நான் படிப்பதுபோன்ற பாவ்லாவில் அவளையே பார்த்துக்கொண்டிருப்பேன்.

அம்மாவோ, கீழே எதிர்வீட்டு ராஜியிடம் வருஷம் பூரா விளையாடிகிட்டேதான் இருப்பான். எக்ஸாம்ன்னு வந்துட்டா அந்த ஒரு வாரம்தான் புக்கை எடுத்து வச்சி உக்காந்தான்னா, மளமளன்னு எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணிடுவான்என்று பெருமையாக பீற்றிக்கொண்டிருப்பார்கள்.

நட்பா, காதலா என்று ஒரு முடிவுக்கு வரமுடியாத உறவு. நண்பர்கள் அனைவரும் சொல்வார்கள், டேய் மச்சான், அவ நிஜமாவே உன்னை லவ் பண்றாடாஎன்று.  மெல்ல எனக்குள்ளும் சொல்லிக்கொள்ளாமலே காதல் வளர்ந்தது, ஆம் நான் காதலித்துக்கொண்டுதான் இருந்தேன். அறிவுமதி, தபூ சங்கரின் கவிதைகளை படித்து அவளுக்கு புரியச்செய்துகொண்டிருப்பேன், கவிதையோடு என் காதலையும்.

காலையில் பள்ளி செல்லும்போது அப்பாவோடு ஸ்கூட்டரில் போவாள், நான் தெருமுனையில் உள்ள டெய்லர் கடையில் சைக்கிளோடு நின்றுகொண்டிருப்பேன். அப்பாவுக்கு தெரியாம “பை டாந்னு சொல்லிட்டு போவா. ம்ம்.... இன்னும் பாசி பச்சையாய் அத்தனையும்.

ப்ளஸ் டூவிற்கு எங்கள் பள்ளியின் அருகிலேயே உள்ள பெண்கள் பள்ளிக்கு மாறிக்கொண்டாள். அதன் பின் தினமும் இருவரும் ஒரே பஸ்ஸில் தான் காலையிலும் மாலையிலும் போவோம், வருவோம். எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை ஆரம்பித்த நேரம். எல்லோரும் விடுமுறைக்கு ஊருக்கு கிளம்பிவிட்டிருந்தனர். ஒரு நாள், அவசர அவசரமாக வீட்டிற்கு ஓடி வந்தாள், அம்மாவிடம் ஆண்ட்டி நாங்க ஊருக்கு போறோம், சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன், முர்ளி எங்கே? என்றபடி என் அறைக்குள் வந்தாள். (இன்னமுமென் மின்னஞ்சல் முகவரி ஏன் முர்ளீ03 என்று கேட்பவர்களுக்கு இதுதான் என் பதில்).
 நாங்க ஊருக்கு போறோண்டா, அனேகமா திரும்பி வரமாட்டோம்ன்னு நினைக்கிறேன். இந்தா இது என்னோட கேரளா அட்ரஸ், கண்டிப்பா லெட்டர் போடு. சுமதி பேர்ல என்று சொல்லிவிட்டு ஓடினாள், பிறகு திரும்பி வந்து கையைப்பிடித்துக்கொண்டு “ நான் கிளம்பறேண்டா, கண்டிப்பா லெட்டர் போடுடா, இங்லீஷ்லயே எழுது, நான் புரிஞ்சிக்குவேன்என்றாள். எனக்குதான் ஒண்ணுமே புரியலை.

ரெண்டு பேரும் ஒரு முறைகூட “ஐ லவு யூன்னு சொல்லிகிட்ட்தில்லை. ஆனா அவ என்னை காதலிக்கிறாளா என்கிற சந்தேகம் மட்டும் இருந்துகொண்டே இருக்கும். அன்று முதல் அது இல்லாமல் போனது. நானும் காதலித்திருக்கிறேன். காதலிக்கப்பட்டிருக்கிறேன்.

இரண்டு வருடங்களுக்கு பிறகு அவளுக்கு திருமணமாகிவிட்டது என்றும் செய்தி வந்தது. எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்திக்கொள்ளாமல் இன்றுவரை ஓடிவிட்டது, முதல் காதல். அவளுக்காக எழுதிய முதல் கவிதை (?)

மின்மினி,
இரவில் மட்டும்
தெரியும் அவள்
என் கண்களுக்கு மட்டும்
எப்போதும் தெரிகிறாள்!


என்னை வாசிக்கும் எல்லோரையும் அழைக்கிறேன். விருப்பமானவர்கள் தொடருங்கள், உங்களின் பதின்ம வயதின் அனுபவங்களை. இன்னும் அகலமாகட்டும் மனது.

 தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

32 கருத்துரைகள்:

கார்த்திகைப் பாண்டியன் said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நன்பனே..:-))))

கனிமொழி said...

//மின்மினி,இரவில் மட்டும்தெரியும் அவள் என் கண்களுக்கு மட்டும் எப்போதும் தெரிகிறாள்!//
கவிதை நல்லா இருக்கு...

//பதின்மவயதில் நான் உபயோகித்த நாட்குறிப்புகளை தேட //
அஹா தொலைக்காம வெச்சிருக்கிங்களே... ஆச்சரியம்...

நல்லா இருக்கு குறிப்பு......
:-)

கோபிநாத் said...

தல...இன்னா தல செம பீலிங்க எழுதியிருக்கிறிங்க....உண்மை தானே இது..!?

மன்சுல இருக்கிறதை வார்த்தைகளில் கொண்டு வந்திருக்கப்பாரு...சும்மா கலக்கலாகீதுப்பா..!

இத்த படிச்சிட்டு அப்படியே நம்ம டாவுங்க எல்லாம் ஒன்னுஒன்னா கண்ணுக்கு முன்னாடி வாரங்கப்பா..

வானம்பாடிகள் said...

அழகான, மெல்லிய வலியோடு நனவோடை. :)

திருநாவுக்கரசு பழனிசாமி said...

//எல்லாரும் பிரகாரத்தை சுத்திகிட்டு இருக்க இவள் மட்டும் பத்தாவது விக்ரகமா உக்கார்ந்திருந்தா,நவகிரத்து பக்கத்தில்//
இப்போ எந்த கோவில் முரளி...?

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நமக்குள்ளே இப்போவும் ஒரு ஜென்டில்மேன் அக்ரீமென்ட் போட்டுக்கலாமா?

க.பாலாசி said...

//தினமும். நாங்கள் அவர்களையே சுற்றுவோம்.//

அதானே நம்ம வேளையே... எங்க வேற மாதிரி செஞ்சிருப்பீங்களோன்னு நெனச்சிட்டேன்..

ஆனாலும் கடைசியா கொஞ்சம் ஃபீலிங்கோடத்தான் முடிச்சிருக்கீங்க... அவங்க நல்லாயிருந்தா சரிதான்... அந்த சின்ன (வயசு) கவிதையும் நல்லாருக்குங்க நண்பரே...

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க முரளிகுமார்! அந்த அக்ரிமெண்ட் நானும் கேள்விப்பட்டிருக்கேன்..+2 படிக்கும்போது!! :-))

☼ வெயிலான் said...

// என் பதின்மவயதில் நான் உபயோகித்த நாட்குறிப்புகளை தேட முதல் பக்கத்திலேயே கிடைத்தது. //

இத கொடுத்தா நாங்களே படிச்சுக்குவம்ல... :)

ROMEO said...

அருமை முர்ளி ......

ஜெகநாதன் said...

வீட்டுக்கே வந்து​போகும் ​தேவதைகளை காதலிப்பது எவ்வளவு சிரமம்.. அழகாக ​சொல்லியிருக்கீங்க முரளி! ​நெகிழ்ச்சியாயிருக்கு!!

தமிழ்ப்பறவை said...

நல்லா இருந்தது நண்பரே உங்கள் காகிதங்களில் குடி இருக்கும் காதல் வாசனை...

முரளிகுமார் பத்மநாபன் said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நன்பனே..:-))))///

நான் பார்த்த பெண்னை நீ பார்க்கவில்லை, நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை........

நண்பா எப்பூடீ.............

முரளிகுமார் பத்மநாபன் said...

//பதின்மவயதில் நான் உபயோகித்த நாட்குறிப்புகளை தேட //
அஹா தொலைக்காம வெச்சிருக்கிங்களே... ஆச்சரியம்...

நல்லா இருக்கு குறிப்பு......
:-)

எல்லாரும் ஒருமுறை ஜோரா கைதட்டுங்க. இந்த பொண்ணு ரெண்டு வரியில பின்னூட்டமிட்டிருக்குங்கோ.....

முரளிகுமார் பத்மநாபன் said...

தல...இன்னா தல செம பீலிங்க எழுதியிருக்கிறிங்க....உண்மை தானே இது..!?
மன்சுல இருக்கிறதை வார்த்தைகளில் கொண்டு வந்திருக்கப்பாரு...சும்மா கலக்கலாகீதுப்பா..!
இத்த படிச்சிட்டு அப்படியே நம்ம டாவுங்க எல்லாம் ஒன்னுஒன்னா கண்ணுக்கு முன்னாடி வாரங்கப்பா..//

அவ்வ்வ்... கோபி எனக்கும் அப்படித்தான், இந்த தொடரை ஆரம்பிச்சு வச்சவங்களுக்கு கோடி புண்ணியம்....

முரளிகுமார் பத்மநாபன் said...

அழகான, மெல்லிய வலியோடு நனவோடை. :)///

நன்றி ஐயா, வானம்பாடி. :-)

பா.ராஜாராம் said...

திரும்பிப் பார்த்தலே சுகம்தான் முரளி.திரும்பிப் பார்த்த தூரம்,கைக்கு எட்டும் தூரத்திலேயே வாய்த்து விட்டதால் பசுமையான பகிரலாக இருந்தது.அருமை!

அன்புடன் அருணா said...

அருமையான டைரி பக்கங்களின் புரட்டல்கள்.

கலகலப்ரியா said...

sorry... naan late.. :(... ippo vote mattum.. vanthu padichukkaren.. (kandippaa.. it's not murali's vaakku..:P)

முரளிகுமார் பத்மநாபன் said...

இப்போ எந்த கோவில் முரளி...?
நமக்குள்ளே இப்போவும் ஒரு ஜென்டில்மேன் அக்ரீமென்ட் போட்டுக்கலாமா?

நான் இப்பவும் ஜென்டில் மேனாதான் இருக்கேன், தேவதைகளுக்குதான் பஞ்சம்.:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

தினமும். நாங்கள் அவர்களையே சுற்றுவோம்.//

அதானே நம்ம வேளையே... எங்க வேற மாதிரி செஞ்சிருப்பீங்களோன்னு நெனச்சிட்டேன்..

ஆனாலும் கடைசியா கொஞ்சம் ஃபீலிங்கோடத்தான் முடிச்சிருக்கீங்க... அவங்க நல்லாயிருந்தா சரிதான்... அந்த சின்ன (வயசு) கவிதையும் நல்லாருக்குங்க நண்பரே...///

பாலாசி, இன்னும் நிறைய இருக்கு சந்திக்கும்போது பேசலாம். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க முரளிகுமார்! அந்த அக்ரிமெண்ட் நானும் கேள்விப்பட்டிருக்கேன்..+2 படிக்கும்போது!! :-))///

நன்றி சந்தனமுல்லை, ஓ எல்லா பக்கமும் இந்த அக்ரீமெண்ட்தானா?

முரளிகுமார் பத்மநாபன் said...

// என் பதின்மவயதில் நான் உபயோகித்த நாட்குறிப்புகளை தேட முதல் பக்கத்திலேயே கிடைத்தது. //

இத கொடுத்தா நாங்களே படிச்சுக்குவம்ல... :)///


தல ஏன் இப்புடி, எல்லா வண்டவாளமும் தெரிஞ்சிபொகுமே?

முரளிகுமார் பத்மநாபன் said...

அருமை முர்ளி ......///

வாட்ச் பண்ணிட்டாய்ங்களே!
அவ்வ்வ்வ்வ்

முரளிகுமார் பத்மநாபன் said...

வீட்டுக்கே வந்து​போகும் ​தேவதைகளை காதலிப்பது எவ்வளவு சிரமம்.. அழகாக ​சொல்லியிருக்கீங்க முரளி! ​நெகிழ்ச்சியாயிருக்கு!!///

புரியுதா? புரிஞ்சிருச்சா? தேங்க்ஸ் தல :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நல்லா இருந்தது நண்பரே உங்கள் காகிதங்களில் குடி இருக்கும் காதல் வாசனை...////

நன்றி தமிழ்.. :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

திரும்பிப் பார்த்தலே சுகம்தான் முரளி.திரும்பிப் பார்த்த தூரம்,கைக்கு எட்டும் தூரத்திலேயே வாய்த்து விட்டதால் பசுமையான பகிரலாக இருந்தது.அருமை!///

மகாப்பா, கவிதையை அங்கே எழுதுவது பத்தாதுன்னு இங்க வேறயா?

முரளிகுமார் பத்மநாபன் said...

அருமையான டைரி பக்கங்களின் புரட்டல்கள்.///


இன்னிக்கும் பூங்கொத்து இல்லையா? :-(

முரளிகுமார் பத்மநாபன் said...

sorry... naan late.. :(... ippo vote mattum.. vanthu padichukkaren.. (kandippaa.. it's not murali's vaakku..:P)

ஓக்கே, ஆனா ஏன் இப்படி குத்தி காமிக்கிறிங்க,,,, :-)

கலகலப்ரியா said...

அருமையான நினைவோடை முரளி... அலங்காரம் எதுவும் இல்லாமலே அழகா சொல்லி இருக்கீங்க... வலியுடனாயினும் தேவையான அனுபவம்தான்...

(ஐயோ.. குத்தி எல்லாம் கண்பிக்கல... உண்மைய சொன்னேன்... =)))

Riaz said...

Nalla nanbam\n enbathaiym thandi oru rasiganaga...... Arumai murali

my few drops said...

kurum padam maathiri irukuhu.....

ungae rangeku oru neenda padam pola eluthi iruka vendum......

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.