விண்ணைதாண்டி வருவாயா?             படத்திற்கு போவதற்குமுன் ட்ரெய்லர் பார்த்தேன், ட்ரெய்லரில் வழக்கம்போல ஹீரோ கதையை, நேரேட் செய்வதுபோல இருந்தது. போச்சுடா மறுபடியும் ஒரே ஸ்டைலில் அடுத்தபடத்தையும்  செய்கிறாரே என்று அலுப்பாய் இருந்தது. ஆனால்.....

             விண்ணைதாண்டி வருவாயா படம் பார்த்தாகிவிட்டது, படம் பற்றி நிறைய கருத்துக்கள் வந்த வண்ணம் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தமான மெலோ டிராமா வகையை சேர்ந்த படம். ரொம்பவே பிடித்துப்போனது. சிம்பு சான்ஸே இல்லைப்பா, கலக்கிட்டாரு மனுஷன். நல்ல மெச்சூரிட்டி, ஹேண்ட்சம்மாவும் இருக்கார். அடுத்தபடம் மணிரத்னம் படமாமே? ஜாமாய்ங்க, சிம்பு.

             எனக்கு இந்த படம் பிடித்துப்போக இரண்டு அதிமுக்கிய காரணம், ஒன்று ரகுமான் இன்னொன்று மனோஜ் பரமஹம்சா. ரெண்டு பேரும் இந்த பட்த்துக்கு அவ்ளோ மெனக்கெட்டிருக்கிறார்கள். பின்னணியில் ரகுமான் ஏரோமலே பாடலின் கிடார் இசையை மெல்ல வாசிக்க, கதாநாயகன் கார்த்திக்கின் பார்வையில் படம் விரிகிறது. ஒவ்வொரு ஷாட்டாக படம் தொடர தொடர இசை மெல்ல மனதிற்குள் வியாபிக்கிறது. ரகுமானுக்கு ஏன் ஆஸ்கார் குடுத்தாங்கன்னு புரியலைங்கிறவங்க இந்த படத்தை ஒருமுறை பாருங்கள். கேளுங்கள். படம் ஆரம்பித்த முதல் 30 நிமிடத்திலேயே முடிவு செய்துவிட்டேன், மறுபடியும் பார்க்கனும் என்று.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ ..

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே!

மேலும் மேலும் உருகி உருகி

உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்?

*****************************

வண்ணவண்ண பட்டுபூச்சி

பூத்தேடி பூத்தேடி அங்குமிங்கும் அலைகின்றதே
சொட்டுசொட்டாய் தொட்டுசெல்ல

மேகமொன்று மேகமொன்று எங்கெங்கோ அலைகின்றதே

பட்டுபூச்சி வந்தாச்சா?
மேகமுன்னை தொட்டாச்சா?
கிளிஞ்சலாகிறாய், நான் குழந்தையாகிறேன்.
உன்னை அள்ளி கையில்வைத்து பொத்திக்கொள்கிறேன்
என்மீது அன்பு கொள்ள, என்னோடு சேர்ந்து செல்ல
ம் என்று சொல்லு போதும்.

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறுஇதயம் தருவேன் நீ உடைக்கவே

                 (ரொம்ப நாளா பரிசல் கேட்டுகிட்டே இருந்தார், மறு இதயம்ன்னு ஏன் சொல்றாங்கன்னு, ஹீரோயின் ஜெஸி, ஒரு கிருத்துவ பெண் என்றதும், ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு என்ற பைபிளின் வாசகத்தைக் கொண்டு இவரிகளை அமைக்க ரகுமானே உதவியதாக கெளதம் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்)

           (விஜய் பிரகாஷ், பாடிய பாடல், முதலில் ரகுமான் தான் பாடியிருப்பரென நினைத்தேன், ஓம் சிவ ஓம் என்ற நான் கடவுள் பட பாடலை பாடியவர். என்ன ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன், நம்பவே முடியலை)

******************************************
                ஏரோமலே பாடல்வரிகளின் அர்த்தம் புரியவில்லை, ஆனால் இசையே ஒரு மொழியாகிற பொழுது அது அவ்வளவு முக்கியமாய் படவில்லை. மனுஷன் என்னமா ஃபீல் பண்ணி பாடியிருக்கிறார். இந்த பாடலை கேட்பவர்கள், ஆரம்பத்தில் வரும் கிடாரையும் பாடலின் கடைசி 20 வினாடிகளையும் தவறவிடாமல் கேளுங்கள்.

******************************************

              படத்தோட முதல் ப்ரேமிலேயே ராஜீவ் மேன்னுக்கு நன்றி சொல்கிறார்கள், விண்ணைதாண்டி வருவாயா என்ற கவித்துவமான தலைப்பிற்கு. முதல் ஷாட்டில் சிம்புவின் வசனம்

காதலை தேடிப்போக முடியாது, அது நினைக்கனும், அதுவா நடக்கனும்,

நம்ம போட்டு தாக்கனும், தலைகீழா போட்டு திருப்பனும்

எப்போதும் கூடவே இருக்கனும், அதான் ட்ரூ லவ்.

எனக்கு அது நடந்தது,

சோ, ஆக்ட்சுவலா நான் ஜெசிய ச்சூஸ் பண்ணேன்

என்னை அடிச்சது அந்த காதல்....

உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்க

நான் ஏன் ஜெசிய லவ் பண்ணேன்?


                     படம் முழுக்க இதை கேட்டுக்கொண்டே இருக்கிறார். அவர்களாய் அதை சொல்லவில்லை. ஆனாலும் புரிந்துகொள்ள முடிகிறது. பொதுவா கெளதமின் வசனங்கள் ரொம்பவே செயற்கையாக இருப்பதாய் தோன்றும். அவசியமாக திணிக்கப்பட்டதுபோல இருக்கும் அவரது வசனங்கள். விண்ணைதாண்டி வருவாயா படத்தில் வசனங்கள், அத்தனை பொருத்தம் படத்திற்கு. வாழ்த்துக்கள் கெளதம்.

*******************************************

                       இரண்டு நாட்களுக்குமுன்பு என் நாட்குறிப்பிலிருந்து சில பக்கங்கள் என்ற பதிவெழுதியிருந்தேன். முதல்காதலை நியாபகப்படுத்திய அந்த ஓரிரு தினங்களிலேயே இப்படி ஒரு படத்தைப் பார்க்கிறேன். என் வாழ்கையோடு ரொம்பவே ஒத்துபோகக்கூடிய காட்சி அமைப்புகள். ஒவ்வொரு காட்சியிலும் என்னை சம்பந்தப்படுத்தியே பார்த்துக்கொண்டிருந்தேன். சத்தியமா இது எனக்கு மட்டும் இல்லை. வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிமிடத்தில் காதலித்தவர்களுக்கும், காதலிக்கப்பட்டவர்களுக்கும் இப்படி ஒரு உணர்வு தோன்றுவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.முதல் பாதி ஓக்கே, இரண்டாவது பாதி ஸ்லோ, ஒரு தொய்வு இருக்கு என்பவர்கள். அந்த தொய்வின் பாதிப்பை படம் முடிந்து சில மணி நேரங்களியே உணரக்கூடும். நிச்சயம் இந்த படத்தை ஸ்லோவாகத்தான் செய்ய வேண்டும். பொதுவாகவே கெளதமின் கதை மாந்தர்கள் இண்டெக்ட்சுவலாக இருப்பர்கள். அவர்களின் பார்வையில் எதுவுமே புதிதாக இருக்கும். அது மறுபடியும் நடந்திருக்கிறது, இந்த திரைப்படத்தில்.

********************************************

கெளதம் மேனன், இந்த மனுஷனுக்கு மட்டும் பாட்டெல்லாம் எப்படி அமையுதுன்னு தெரியலைங்க, இவருடைய எல்லா படங்களும் மியூசிகல் ஹிட். BEFORE SUNRISE, SUNSET மாதிரியான படங்கள் தமிழில் வருமா? வந்தாலும் வெற்றிபெருமா? என்றிருந்த சந்தேகம் இந்த படத்திற்கு பிறகு குறைந்துவிட்டது.


தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

23 கருத்துரைகள்:

yoguji said...

m ... very close to ma heart
saw twice ,,,, will see again

Madurai Saravanan said...

நன்றாக வந்துள்ளது உங்கள் விமர்சனம். வாழ்த்துக்கள்.

கலகலப்ரியா said...

அருமையா, ரசிச்சு பார்த்திருக்கீங்க படத்த... .. ம்ம்.. உங்க கதை மாதிரி இல்லை... நிறைய பேரோட கதை மாதிரி இருக்கும்னு தோணுது... நாமளும் பார்ப்போமில்ல எப்போவாவது.. =))

மோகன் குமார் said...

ரொம்ப ரசிச்சிருக்கீங்க போல.. ம்ம்..

யூத்துங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன். நீங்க யூத் என confirm செஞ்சுட்டீங்க :))

ROMEO said...

என்ன பாஸ் படம் பார்க்கும் போது பக்கத்துல கொசுவத்தி சுருள் எதாவது வச்சி பார்த்திங்களா !!! பீலிங் அம்முது. .

அகல்விளக்கு said...

நீண்ட நாட்களுக்குப் பின் ரசித்துப் பார்க்க ஒரு படம்.....

அருமையான விமர்சனம் நண்பா....

:-)

க.பாலாசி said...

//என் வாழ்கையோடு ரொம்பவே ஒத்துபோகக்கூடிய காட்சி அமைப்புகள்.//

நேத்து செல்லுக்கு மெசேஜ் அனுப்பும்போதே நெனச்சேன்... ரொம்ப ரசிச்சிட்டீங்கன்னு...

shortfilmindia.com said...

சமீப காலங்களில் இரண்டு முறை ஒரு படத்தை பார்த்ததில்லை. க்யூட்.. மூவி

கேபிள் சங்கர்

முரளிகுமார் பத்மநாபன் said...

m ... very close to ma heart
saw twice ,,,, will see again//

இதைவிட அழகாய் சொல்லவே முடியாது, க்ளோஸ் டு மை ஹார்ட்.....
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றாக வந்துள்ளது உங்கள் விமர்சனம். வாழ்த்துக்கள்.///

நன்றி மதுரை சரவணன், தொடர்ந்து படிங்க :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

அருமையா, ரசிச்சு பார்த்திருக்கீங்க படத்த... .. //

கட்டாயமா... நம்மை நிறையவே இன்வால்வ் செய்துக்க முடிகிறது.

//ம்ம்.. உங்க கதை மாதிரி இல்லை... ///

அப்டியா? :-(

//நிறைய பேரோட கதை மாதிரி இருக்கும்னு தோணுது...

//

ஓ, அப்டியா? சரி சரி :-)

நாமளும் பார்ப்போமில்ல எப்போவாவது.. =))
//

சீக்கிரம் பாருங்க ப்ரியா. படம் பிடிக்காவிட்டாலும், பிடித்துப்போக நிறைய காரணம் இருக்கிறது, படத்தில்.

முரளிகுமார் பத்மநாபன் said...

ரொம்ப ரசிச்சிருக்கீங்க போல.. ம்ம்..

யூத்துங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன். நீங்க யூத் என confirm செஞ்சுட்டீங்க :))///

அப்படியெல்லாம் இல்ல தல, அழகி பார்த்துட்டு நிறைய பேர் சொன்னாங்க இல்லையா? நானும் என் பழைய காதலிய சமீபத்துல பார்த்தேன், அப்படீன்னு.....

அதுமாதிரி என்னுடைய வாழ்க்கையில் நடந்த நிறைய விஷயங்களை இங்கே விஷுவலாக பார்க்க முடிந்தது. இது மாதிரிஒரு குழப்பமான மனநிலையில் எடுத்த தவறான முடிவினால் காதலை இழந்தவர்களுக்கு இந்த படமும் அழகிதான்.

மத்தபடி நான் நிஜமாவே யூத்துதான்

முரளிகுமார் பத்மநாபன் said...

//என்ன பாஸ் படம் பார்க்கும் போது பக்கத்துல கொசுவத்தி சுருள் எதாவது வச்சி பார்த்திங்களா !!! பீலிங் அம்முது. //

யா யா, தி சேம் கொசுவத்தி சுருள். தி சேம் ஃபீலிங்.
:-))

முரளிகுமார் பத்மநாபன் said...

நீண்ட நாட்களுக்குப் பின் ரசித்துப் பார்க்க ஒரு படம்.....
அருமையான விமர்சனம் நண்பா....
:-)//

தேங்க்ஸ் ராஜா, அவ்ளோதானா? நான் இன்னும் எதிர்பார்க்கிறேன். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நேத்து செல்லுக்கு மெசேஜ் அனுப்பும்போதே நெனச்சேன்... ரொம்ப ரசிச்சிட்டீங்கன்னு...///

அண்ணனுக்கு லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சு, அவ்வ்வ்

முரளிகுமார் பத்மநாபன் said...

சமீப காலங்களில் இரண்டு முறை ஒரு படத்தை பார்த்ததில்லை. க்யூட்.. மூவி

கேபிள் சங்கர்//

நான்கூட இன்னைக்கு மறுபடியும் போறேன் தல, ஆமா என்னாச்சு நிதர்சன (?) கதை?

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நாளை சாப விமோசனம்..:)

கனிமொழி said...

What a movie nanba...
A blend of music, love, blue(my fav color)...
Aromale songla oru shot sky blue + sea blue varume, wow...

Sema Shots onnu onnum...


innoru murai first show pakkanum...
:-)

Nice review... :-)

திருநாவுக்கரசு பழனிசாமி said...

முரளி...நல்ல விமர்சனம்...
நான் போகும்போது சொல்லுகிறேன்..
இருவரும் சேர்ந்து இன்னொருமுறை பார்ப்போம்.

my few drops said...

***BEFORE SUNRISE, BEFORE SUNSET*** indha sunday naan athai thaan meendum paarthu kondu iruthaen **

hmm....... kadaisiyil... vinnai thandee vanthaagala ? illaya?

விக்னேஷ்வரி said...

ம், நல்ல படம்

அண்ணே, ஃபீலிங்க்ஸ்ல இருந்து வெளிய வாங்க. :)

கணேசமூர்த்தி said...

வெறும் காதல் என்ற ஒற்றை வார்த்தைக்கு உயிரையும் உணர்ச்சியையும் சேர்த்து அளித்திருக்கிறார் ரஹ்மான்.......கௌதம் படம் பார்க்க போனேன்.. பார்த்ததோ ரஹ்மானை மட்டுமே.... இது கௌதம் மேனன் படம் இல்லை....உயிரை உருக்கும் ஒரு இசை அரசனின் படம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

வெறும் காதல் என்ற ஒற்றை வார்த்தைக்கு உயிரையும் உணர்ச்சியையும் சேர்த்து அளித்திருக்கிறார் ரஹ்மான்.......கௌதம் படம் பார்க்க போனேன்.. பார்த்ததோ ரஹ்மானை மட்டுமே.... இது கௌதம் மேனன் படம் இல்லை....உயிரை உருக்கும் ஒரு இசை அரசனின் படம்.///


வணக்கம் கணேஷமூர்த்தி, மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள், சும்மா ஒரு படம் எடுத்து இப்படி பாடல்கள வாங்கிட முடியாது இல்லையா?

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.