தேவதைக்கு சரியான ஆண்பால் என்ன?அங்காடித்தெரு படம் பார்த்ததும், நல்ல படம் பார்த்தோம் என்கிற திருப்தியைவிட, ஓவர் எக்ஸாகிரேஸன் என்கிற அழுத்தித் திணிக்கப்பட்ட சோகம்தான் தெரிந்தது.

தேவதைக்கு சரியான ஆண்பால் என்ன? 

”எந்தவொரு குத்துசண்டை வீரனின் வாழ்வோடு ஒப்பிட்டாலும் ஜேம்ஸ் ப்ரடோக்கை போல ஒரு மனிதனை பார்க்கமுடியாது” என்கிற எழுத்தாளர் டேமன் ருன்யெனின் வார்த்தைகளோடு தொடங்குகிறது, படம். 


1928 குத்துசண்டை போட்டியில் ஒரு தலைசிறந்த வீரனாக, தொடர்ந்து பத்துமுறை நாக்அவுட் முறையில் ஜெயித்த, இப்படி ஒரு தவிர்க்கமுடியாத இடத்தில் இருக்கிறான், ப்ரடோக். ஆனால் அதே குத்துசண்டையினால் கையில் ஏற்பட்ட முறிவின் காரணமாய் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை. தொடர்ந்து நாட்டில் நிலவும் கடுமையான வேலையில்லா திண்டாட்டம், இரண்டும் சேர்த்து அடுத்த ஐந்து வருடங்களில் அவன் வாழ்க்கையை சூனியமாக ஆக்கிப்போகிறது. தொடர்ந்து குத்துசண்டையில் கலந்துகொள்ள அவனுக்கு அழைப்புகள் வந்தாலும் கலந்துகொள்ளமுடியாமல் தவிக்கிறான். ஒருபுறம் குடும்ப சூழ்நிலை மேலும் இறங்கிக்கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் தண்ணீருக்கும், மின்சாரத்திற்குமான பாக்கியைக்கூட கட்டமுடியாமல் போகிறது. பால்பாக்கியால் வீட்டிற்கு வரும் பாட்டில்பாலும் தடைபடுகிறது. மூன்று குழந்தைகளுடன், ப்ரடோக். 

அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையில் பளுதூக்கும் வேலைக்கு போகிறான். ஆனால் அங்கும் ஒரு நாளைக்கு பத்து பேருக்குமேல் வேலைக்கு எடுப்பதில்லை, ஆனால் அங்கு இவனோடு சேர்த்து தினமும் ஐம்பது பேராவது காத்திருக்கிறார்கள், வேலைக்காக. அதிர்ஸ்டம் இருந்தால் வேலை என்கிற நிலை, அன்றும் அவன் பெயர் அழைக்கப்படாததால் வெறுத்து வீடு திரும்புகிறான், நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை ஒண்ணரை லட்சமாக உயர்ந்தது, என்ற செய்தியுடன் நாளிதழ் தெருவில் கிடக்கிறது. வீட்டிற்குவரும் ப்ரடோக்கிடம் அவனது மகள், ”அண்ணன் திருடிட்டான்” என்கிறாள் உள்ளே ஆட்டிறைச்சி துண்டு மேசையில் இருக்கிறது. அவன் மனைவி மே “நான் எவ்வளவோ கேட்டுட்டேன் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறான்” என்கிறாள். ப்ரடோக் தன் மகனிடம் அதை எடுத்துகொண்டு என்னோடு வா என்கிறான். அதே கடையில் கொண்டு கொடுத்துவிட்டு கடைக்காரரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு திரும்புகின்றனர். வழியில் மகன் சொல்கிறான் “ என்னுடைய நண்பனை அவனது மாமா வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்” 

“ஏன்” 

”அவங்க அப்பா அம்மாவால அவனுக்கு சரியான உணவுகளை கொடுக்க முடியவில்லை”தன் மகனின் இந்த வார்த்தையில் கலங்கிப்போகிறான் ப்ரடோக். இருந்தும் மகனிடம் “ ஆம், நீ சொல்வது நிஜம்தான், இங்கும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது, நம்மை போன்றே இங்கு ஏராளமான மக்கள் சாப்பாட்டுக்கும் கஷ்டப்படும் நிலையில்தான் இருக்கிறார்கள், ஆனால் திருடுவதற்கு இதை காரணமாக்கக்கூடாது. என்ன நடந்தாலும், நம்முடையதல்லாத எதையும் நீ எடுக்கக்கூடாது, புரிகிறதா? எனக்கு சத்தியம் செய்து கொடு” என்கிறான். 

சத்தியமா இனி இப்படி செய்யமாட்டேன், ஜோ. 

”அப்பாவும் உனக்கு சத்தியம் செய்கிறேன், என்ன நிலைமை வந்தாலும் உங்களை எங்கும் அனுப்பிவிடமாட்டேன்” ப்ரடோக். 

மகன் அழுதபடியே கட்டிப்பிடித்துக்கொள்கிறான். 


அன்றிரவு, ஒரு போட்டியில் கலந்துகொண்டால் 75 டாலர் கிடைக்கும் என்பதால் மீண்டும் களமிறங்குகிறான். அவனுடைய மேனேஜராக, ப்ரடோக்கை சண்டைக்கான ஆயத்தங்களைசெய்யும்போது அவனது கை எலும்பின் முறிவு இன்னும் ஆறாமல் இருப்பதை கவனிக்கிறார். ஏன் என்னிடம் இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை, இப்படியே எப்படி விளையாடமுடியும்? என்கிறார். ”என்னால் முடியும், நான் சுத்தி கடனை வாங்கி வைத்திருக்கிறேன். என்னால் முடிக்கவேண்டிய கடன் நிறைய இருக்கிறது, நான் அவசியம் ஜெயித்தே ஆகனும்” என்கிறான். ஆனால் சண்டையின்போது அவனது கையில் மேலும் மூன்று முறிவுகள் ஏற்படுகிறது. போட்டி நட்த்துபவர் நீ சரியாக சண்டைபோடாத்தால் பார்வையாளர்களின் அதிருப்தியை பெற்றோம். இனி நீ குத்துசண்டைக்கு லாயக்கில்லை என்று அனுப்பிவிடுகிறார். போட்டியும் தடைபடுகிறது. விரக்தியோடு வீடு திரும்புகிறான். சம்பளமும் இல்லை. 

விதி அவனை நாலப்பக்கமும் சுழற்றி அடிக்கிறது. ஒருகட்டத்தில் மனைவி குழந்தைகளை தனது தங்கையின் வீட்டிற்கு அனுப்பிவைக்கலாம், நானும் ஏதாவது வேலை செய்கிறேன், இங்கு நிலைமை சரியானது குழந்தைகளை திரும்ப அழைத்துக்கொள்ளலாம், என்கிறாள். ப்ரடோக் என் கை உடைந்திருக்கிறது, ஆனால் மனது அப்படியில்லை, நான் ஷுவிற்கு பாலிஷ் போட்டாவது உங்களை காப்பாற்றுவேன், என்கிறான். ஆனால் இப்படி நிலையில் உங்களை வைத்திருப்பதற்குஎன்னை மன்னித்துவிடு, என்று கதறுகிறான். 

ஆனால் நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டே போகிறது, மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. குழந்தைகள் உடல் நிலை மோசமாகிறது. வேலைதேடி ப்ரடோக் வெளியே சென்றிருக்கும் நேரம், மே குழந்தைகளை அவளின் தங்கை வீட்டில் விட்டு வருகிறாள். வீட்டிற்கு வரும் ப்ரடோக் குழந்தைகள் இல்லாதது கண்டு மனமுடைகிறான், நான் எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளை எங்கும் அனுப்ப மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். என்னால் என் குழந்தைகளை காப்பாற்றமுடியும் என்று கத்திவிட்டு வெளியேறுகிறான். 

அரசு மிகவும் முடியாதவர்களுக்கு சிறுகடன் கொடுத்துவருகிறது, அங்கு 19 டாலர் கடன் வாங்குகிறான், மீண்டும் மின் இணைப்பு பெற இன்னும் 18 டாலர்கள் தேவைப்படுகிறது. குத்துசண்டை நடத்துபவரை காண கிளப்பிற்கு போகிறான். தன் நிலைமையை விளக்கிகூறி, என்னை நன்றாக தெரிந்தவர்கள் இங்குதான் இருக்கிறீர்கள், அதனால்தான் நான் இங்கே இருக்கிறேன். என்கிறான். தன் தொப்பியை கழற்றி காசு கேட்கிறான். ப்ரடோக்காக ரஸல் க்ரோ. மனுஷன் நடிப்புல பின்னியெடுத்திருப்பார், இந்த இடத்தில். இசையும், கச்சிதமான உடல் மொழி மற்றும் நடிப்பால் கண்ணில் ஈரம் கொள்ளும் காட்சி. 

அவனது நிலைமையை அறிந்த அவனது மேனேஜர், அவனுக்காக போராடி விளையாட ஒப்புதல் பெறுவதோடு ஒரு நல்ல போட்டிக்கும் ஏற்ப்பாடு செய்கிறார். அதில் ஜெயித்தால் 250 டாலர் கிடைக்கும். ப்ரடோக் ஒத்துக்கொள்கிறான். உலகின் இரண்டாம் நிலை வீரனுடனான அந்த போட்டியில் கடுமையான சண்டைக்குபின் ப்ரடோக் ஜெயிக்கிறான். மக்கள் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இவரது ஓவ்வொரு அடியும் அப்படியே இருக்கிறது என்று புகழ்கின்றனர். “இனி எப்போது விளையாட தகுதியில்லை என்றிருந்த ப்ரடோக் உலகின் இரண்டாம் நிலை வீரரை மூன்றாவது சுற்றில் ஜெயித்தார்” என்று நாளிதழ்கள் செய்தி வெளியிடுகின்றன, ஆக அடுத்தநாள் மூட்டைதூக்கும் வேலையிலும் கவனிக்கப்படுகிறான், அந்த முதலாளி ப்ரடோக்கை வேலைக்கு எடுப்பதோடு நல்ல சண்டை என்றும் பாரட்டுகிறார். மெல்ல அடுத்தடுத்த போட்டிகளில் ப்ரடோக்கின் ஆதிக்கம் தொடர்கிறது, அதே சமயம் அவனது விலாவில் இன்னொரு முறிவும் ஏற்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டே இருக்கிறான். 

ஒரு கட்டத்தில் உலகின் முதல்நிலை வீரனுடன் சண்டையிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவன் குத்துசண்டையின்போது களத்திலேயே இரண்டு பேரை கொன்றிருக்கிறான். அந்தபோட்டியில் ப்ரடோக் நிச்சயம் கொல்லப்படுவான் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகிறது. பிரடோக்கின் மனைவிக்கும் இந்த சண்டையில் துளியும் விருப்பமில்லை. பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் உங்கள் காயத்திலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள்? இந்த போட்டியில் ஜெயிப்பீர்களா? என்றும் கேட்கிறார்கள். அதற்கு ப்ரடோக் “ நான் மீண்டு, மீண்டும் சண்டைக்கு வர காரணம், ஒரு பாட்டில் பால்” என்கிறான். வெற்றியின் போதைக்காகவோ, பெருமைக்காகவோ நான் சண்டையிடவில்லை, என் உணவிற்காக சண்டையிடுகிறேன், எனவே நான் நிச்சயம் ஜெயிப்பேன். என்கிறான். 

போட்டி நடத்துபவர்கள், அவன் மேனேஜர், சக தொழிலாளிகள், அவன் முதலாளி, மனைவி, குழந்தைகள், நாட்டு மக்கள் அனைவரும் அவன் தோல்வி அடையப்போவது நிச்சயம் என்று தெரிகிறது. ஆனால் இதுவரை ஒருமுறை கூட நாக் அவுல் முறையில் தோற்காத அந்த வீரன் இந்த போட்டியில் முதல் சுற்றை தாங்குவானா? உயிர்பிழைப்பானா? என அனைவரும் ரேடியோவின் முன்பும், போட்டிகளத்திலும் திரள்கின்றனர். நம் அனைவருக்குமே தெரியும் கதாநாய்கன் எப்படியும் ஜெயிக்கபோவது நிச்சயமென்று, ஆனால் அது எப்படி? அதை எப்படி காட்சிபடுத்தியிருக்கிறார்கள்? இசையின் பயன்பாடு என்ன? அவசியம் நல்ல ஸ்பீக்கர் சிஸ்டத்துடன் பாருங்கள். பிரடோக்கிற்கு விழும் ஒவ்வொரு அடிக்கும் நமக்கு ஒரு உத்வேகம் பிறக்கும். இதயம் கனத்து எப்போது இந்த சண்டை முடியும் என்று தோன்றும். நம்முடைய நண்பன் ஒருவன் உயிருக்கும் உணவுக்கும் சண்டையிட்டுக்கொண்டிருந்தால் அதை நேரில் பார்க்கும் நம் மனவோட்டம் எப்படி இருக்கும்? அதை அப்படியே காட்சிகளாக்கியிருப்பார்கள். நல்ல படம் பாருங்க. 

இயக்குனர் ரான் ஹோவார்ட், டாவின்சி கோட் படத்தின் இயக்குனர். ஜேம்ஸ். ஜே. ப்ரடோக் என்கிற ஒரு குத்துச்சண்டை வீரனின் உண்மையான வாழ்க்கையை படமாக்கியிருக்கிறார். எதிர்பாராத திருப்பங்கள் எதுவும் இல்லை, அதிரிபுதிரி பரபர காட்சிகள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அடுத்து என்ன என்பதை எளிதாக பார்ப்பவர்கள் ஊகிக்கமுடியும். அப்புறம் என்ன ஸ்பெசல்? அவசியம் பாருங்கள். மேலும்  ரஸல் க்ரோவும் டாம் ஹேங்க்ஸும் எவ்வளவு மொக்கையான படங்களில் நடித்தாலும் பார்ப்பேன். அந்த அளவிற்கு அவர்களின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

இந்த பதிவின் ஆரம்பத்தில் அங்காடித்தெரு பற்றி ஏன் சொன்னேன் என்றால் கிட்டதட்ட ஒரே கதைக்களம். அவர்கள் பயணிக்கும் களம் மட்டும் வேறு. எக்ஸாகிரேஷன் நிச்சயம் ஒரு படத்திற்கு தேவைதான். ஆனால் அளவோடு. அங்காடித்தெருவில் இது மட்டும் கொஞ்சம் கவனமாக கையாளப்பட்டிருந்தால் தமிழ் சினிமாவில், ஏன் உலக சினிமாவிலேயே ஒரு முக்கியப்படமாக இருந்திருக்கலாம். ஆனால் வசந்தபாலனுக்கு அது எட்டும் இடம்தான். 

தேவதைக்கு சரியான ஆண்பால் என்ன? என்னவாகவோ இருந்துவிட்டு போகட்டும் இனி நான் சிண்ட்ரெல்லா மேன் என்றுதான் சொல்லப்போகிறேன்.

21 கருத்துரைகள்:

கோபிநாத் said...

தல

இந்த படத்தை பத்தி நான் படிக்கும் 2வது விமர்சனம் உங்களுது..செமயாக எழுதியிருக்கிங்க...ரூம்ல சிடி இருந்தும் இன்னும் பார்க்கல..ஆனா இதை படிச்சிட்டு....................

;))

\\மேலும் ரஸல் க்ரோவும் டாம் ஹேங்க்ஸும் எவ்வளவு மொக்கையான படங்களில் நடித்தாலும் பார்ப்பேன். அந்த அளவிற்கு அவர்களின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
\\

ஒரே இனம் ;)))

அகல்விளக்கு said...

அருமையான விமர்சனம் நண்பா...

நிச்சயம் பார்க்க வேண்டிய படம்...

Cable Sankar said...

அருமையான விமர்சனம்.. நிறைய எஸ்.ரா வாசனை அடிக்கிறது.:) இப்படத்தை பார்த்துவிட்டேன். மிக நல்ல படம்.

அங்காடித்தெருவில் இயக்குனரை வலித்து திணீத்ததாய் சொல்ல முடியாது. தமிழ் சினிமாவில் அவ்வளவு யதார்த்தை இன்னும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வரவில்லை அதனால் மெதுவாத்தான் வரும்.. :)

Bullet மணி said...

இந்த படத்த ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.
Russell Crowe & Paul Giamatti ரெண்டு பேரும் அழகா நடிச்சுருப்பாங்க.
உங்க விமர்சனமும் ரொம்ப நல்லா இருந்தது

இராமசாமி கண்ணண் said...

நல்ல விமர்சனம். நான் இன்னும் அங்காடி தெரு படம் பார்க்கவில்லை என்றாலும் உங்களுடைய அந்த வார்தை ஏற்புடையதாக இல்லை. நான் சென்னையில் தங்கி இருந்த போது சரவணா ஸ்டோர்ஸின் வேலை ஆட்களை படம் பார்ப்தற்ககாக பக்கதில் இருந்த தியேட்டருகு அனுப்புவார்கள். ஆட்டு மந்தையை மேய்ச்சலுக்கு மேய்பானுடன் அனுப்புவது மாதிரி கடை சூப்பர்வைசர்களுடன்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

Good film& good reviwe

Chitra said...

காட்சிக்கு காட்சி ரசித்து பார்த்து, எழுதப்பட்ட விமர்சனம்.

~~Romeo~~ said...

விமர்சனம் அருமை முரளி. படிக்கும் போதே கண்டிப்பா இந்த படத்தை பார்க்கணும் என்று தோன்றுகிறது. நன்றி .

அக்பர் said...

விமர்சனம் அருமை. பார்க்க தூண்டுகிற‌து பாஸ்.

முரளிகுமார் பத்மநாபன் said...

அவசியம் பாருங்க கோபி. நல்ல படம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

அவசியம் பாருங்க ராஜா, பார்த்துவிட்டு கூப்பிடுங்க.

முரளிகுமார் பத்மநாபன் said...

///அருமையான விமர்சனம்.. நிறைய எஸ்.ரா வாசனை அடிக்கிறது.:) ///

சத்தியமா இதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய காம்ப்ளிமெண்டாக நினைக்கிறேன்.


//அங்காடித்தெருவில் இயக்குனரை வலித்து திணீத்ததாய் சொல்ல முடியாது. தமிழ் சினிமாவில் அவ்வளவு யதார்த்தை இன்னும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வரவில்லை அதனால் மெதுவாத்தான் வரும்.. :)///

வரட்டும், வசந்தபாலனுக்கு என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி புல்லட் மணி
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி ராமசாமி கண்ணன்.

//நல்ல விமர்சனம். நான் இன்னும் அங்காடி தெரு படம் பார்க்கவில்லை என்றாலும் உங்களுடைய அந்த வார்தை ஏற்புடையதாக இல்லை.//

படத்தில் எடுக்கப்பட்ட எந்த காட்சிகளிலும் எனக்கு அந்த விமர்சனமும் கிடையாது. ஆனால் தொடர்ந்து சோகத்தை பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதாய் பட்டது. அவ்வளவுதான். அங்காடித்தெரு ஒரு நல்ல படம் என்பதில் எனக்கு எதிர் கருத்துக்கள் இல்லை. இன்னும் சில விஷ்யங்களை தவிர்த்திருந்தால் ரொம்ப நல்ல படமா வந்திருக்கும் என்பதுதான். இது ஒருவகையான கரிசனம்தான் நண்பரே!

முரளிகுமார் பத்மநாபன் said...

தேங்க்ஸ் திரு, :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி சித்ரா, உண்மையில் ஒவ்வொரு காட்சியாக ரசித்த்படம்தான்

முரளிகுமார் பத்மநாபன் said...

ஹாய் ரோமியோ, எப்படி தலைவரே இருக்கிங்க?

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி அக்பர். :-)

சக்தி said...

well i know about russel'a performance.. when i read your words i felt like watching movie.. just awesome..!

HariV is not a aruvujeevi said...

அன்பு முரளி குமார் பத்மநாபன், உங்களின் முன்று blogspot பார்த்து படித்து விட்டேன். அதனால், எங்கு இருந்து அரம்பிபத்து என்று தெரியவில்லை. danzel washington , ஹாரிசன் போர்ட் படங்களும் இந்த வரிசை தான். மொக்கை கதையில் கூட தனது அபாரமான நடிப்பால் பார்க்க செய்து விடுவார்கள். இந்த வயதில் சந்தோஷமா இருக்கீறோம் என்று பலருக்கு தெரிவதில்லை. எதை தொலைத்து விட்டோம் என்று தெரியாமலே இன்னும் நிறைய பேர் வாழ்ந்து கொண்டு வரும் உலகில் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். கமல்ஹாசன் - ரஸ்ஸல் crowe -ஒரு ஸ்டைல் of acting . கவனித்து பார்க்கவும். பீச் photos , மரம் வளர்க்கும் பெரியவர் போட்டோ எல்லாம் மிகுந்த ரசனையோடு எடுக்க பட்டு உள்ளது.

naga said...

Devan is the proper name.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.