இசை - அறிமுகம்

ஓரிரு தினங்களுக்கு முன் நண்பர் சிவகுமார், என் பதிவுகளின் மூலம் நான் திருப்பூரிலே இருப்பதை அறிந்து மெயிலில் தொடர்புகொண்டார். வாசிப்புகளிலும், திரைப்படங்களிலும் இருவருக்கும் ஒத்த கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பாக அங்காடித்தெரு பற்றிய என் கருத்து பற்றியும் பேசவேண்டும் என்று மெயில் செய்திருந்தார். அவரை தொடர்பு கொண்டபோது அவரும் திருப்பூரிலேயே இருப்பதையும், ஒரு பின்னாலாடை தொழில் பிண்ணனியில் இருப்பதையும் அறிந்து கொண்டேன்.  பின் இருவரும் பேசி நேற்று சந்தித்தோம்.

நிறைய வாசிப்பனுவம் உடையவராக இருக்கிறார், மேலும் நிறைய எழுத்தாளர்களுடன் அவரின் சந்திப்புகள் பற்றி, சினிமா பற்றி, இசை பற்றி இன்னும் என்னென்னவோ பற்றி வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். எனக்கு அவரோடு ஒப்பிடும்போது இன்னும் நிறைய படிக்கவேண்டும் என்று தோன்றியது. படம் பார்ப்பதில் வேண்டுமானால் நான்தான் சீனியராக (ம்க்கும்) இருப்பேனென்று தோன்றியது.

மேலும் ஞாயிறு காலை இரண்டு புத்தகங்களோடு என் அலுவலகத்திற்கு வந்திருந்தார். மீண்டும் நிறைய பேசினோம். அன்று படிக்க கொண்டுவந்த அபிதாவை ஒரே வீச்சில் அவர் படித்துவிட்டு, அதைப்பற்றிய சிறு விமர்சனத்தையும் வைத்துவிட்டு போனார். அவரோடு பேசிக்கொண்டிருந்ததில் எனக்கு ஒரு விஷயம் மட்டும் பிடிபட்டது. அவர் சொன்னதுபோல எங்களிருவருக்கும் நிறைய கருத்து ஒற்றுமைகள் இல்லை. சொல்லப்போனால்  புத்தக வாசிப்பாகட்டும், திரைப்படங்களின் பார்வையாகட்டும், இசை கேட்ப்பதாகட்டும் கிட்டதட்ட இருவரும் எதிர் துருவங்களில் வாசித்துவருகிறோம். ஆனால், அவரால் எனக்கு இன்னும் நல்ல புத்தகங்களும், திரைப்படங்களும் அறிமுகப்படப்போகிறது. ஒருவேளை அவருக்கும், என்னால்.

 நேற்று சிவக்குமாரோடு பேசிக்கொண்டிருந்ததில் அறியப்பட்ட இந்திய இசைக்குழு இண்டியன் ஓசியன் ( INDIAN OCEAN).  ஒரு தபேலா கலைஞர், ஒரு ட்ரம்மர், கார்ட்ஸ் மற்றும் பேஸ் கிடாருக்கு ஒருவர், லீட்ஸ் கிடார் வாசிக்க ஒருவர் என மொத்தம் நான்கு பேர். அவர்களே மாறி மாறி பாடிக்கொள்கின்றனர். பாடல்கள் அருமை, அற்புதம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் ஒரு மாறுதலான இசைக்கு நான் கியாரண்டி.
பெயருக்கேற்றார்ப்போல இந்தியாவின் பலதரப்பட்ட மாநிலங்களின் பாரம்பரிய இசையை பின்பற்றி ஆல்பங்கள் செய்கின்றனர். கூடவே நதிகள் காப்பு,  இயற்கை வளம் பற்றிய காட்சிகளை பின்புலமாக கொண்ட வீடியோ ஆல்பங்கள். இசை கருவிகளை இவர்கள் கையாளுவது பார்க்க அருமையாக இருக்கும் என்று சிவக்குமார் சொன்னார். ஆனால் அத்தகைய வீடியோ எதுவும் கிடைக்கவில்லை. யாராவது வைத்திருந்தால் தெரியச்செய்யுங்கள்.

இந்தியன் ஓசியன் குழுவின் சில பாடல்கள் இங்கே,

-----------------------------------------------------------------------

சங்கர் மகாதேவன், இந்த மனுஷன் என்ன பாடினாலும் அருமையா இருக்கு, அதுவும் ராஹத் பதே அலி கான் வேற கூட பாடியிருக்கார். அமன் கி ஆஷா. இந்தியா, பாகிஸ்தான் இடையேயான நட்புறவு மேம்பாட்டிற்காக எடுக்கப்பட்டது இந்த ஆல்பம்.

-----------------------------------------------------------------------

சென்றவாரத்தில் என் ஆர்குட் ஸ்கிராப்பில் நண்பர் நெய்தல் சந்துருவிடமிருந்து இப்படி ஒரு வாசகம்.  

“கைக்கொள்ளும் சித்திரங்கள் சிதறடிக்கப்பட்ட மனவெளியில் பிரம்மாண்டமாய் வடிவெடுத்து பதட்டத்தையும் விவரிக்க இயலாத பரவசத்தையும் ஒருங்கே தரும் தருணம் நான் என்னளவில் அடக்கிக்கொண்டுவிட்ட ஒரு மாயலோகத்தில் பித்தேறி சஞ்சரித்தேன். காதலின் கூப்பாட்டுக்கும், அரற்றலுக்கும், களிப்புக்கும் நடுவில் ஊசலென அலைவுறும் பாடலில் அல்போன்ஸ் 'ஆரோமலே' என்று உச்சஸ்தாயியில் கதறும்போது நெஞ்சுக்கூட்டுக்குள் பெருவெடிப்பை சாத்தியமாக்குகிறார். காதலின் உன்மத்தத்தை, புறக்கணிப்பின் வலியை, நெகிழ்வை வெகுமூர்க்கமான தொனியில் இப்பாடல் வெளிப்படுத்துவதாகவே நான் பார்க்கிறேன்... என்னளவில் விண்ணைத்தாண்டி வருவாயா ஆல்பத்தின் மிகச்சிறந்த பாடல் இதுதானென்பேன்”


என்னளவில் இந்தபாடலுக்கானா மிகச்சிறந்த பாராட்டு இதுவாகத்தானிருக்கும். அரோமலே... இந்த பாட்டை எவ்வளவு தூரம் அனுபவித்திருப்பேன் என்றால் உடனடியாக ஒரு கிடார் வாங்கி வகுப்புக்கு சென்றுகொண்டிருக்கிறேன். எப்படியும் இன்னும் ஓரிருவாரங்களில் மொட்டைமாடியில் நின்று கிடாரும் கையுமாக அரோமலேன்னு கத்தப்போறேன். இந்த பாடலை உருகி உருகி பாடி பாடலுக்கு உயிர் கொடுத்த அல்போன்ஸ் ஜோசப்பின் பாடல் திறமைக்கு இந்த வீடியோ. என்ன த்ரோ பாருங்க அவருடைய குரலில். எவ்வளவு உச்சஸ்தாயில் பாடிக்கொண்டிருக்கிறார்? கொஞ்சம்கூட பிசிறு தட்டாமல்.... பாருங்க...


இன்று மளையாளம் சினிமாவில் இவர் ஒரு வெற்றிகரமான இசையமைப்பாளர். ஆனாலும் இந்த பாடலை பாடியதற்கு நிச்சயம் பெருமைப்பட்டுக்கொண்டுதானிருப்பார்.


தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

13 கருத்துரைகள்:

திருநாவுக்கரசு பழனிசாமி said...

//உடனடியாக ஒரு கிடார் வாங்கி வகுப்புக்கு சென்றுகொண்டிருக்கிறேன். எப்படியும் இன்னும் ஓரிருவாரங்களில் மொட்டைமாடியில் நின்று கிடாரும் கையுமாக அரோமலேன்னு கத்தப்போறேன்//

ஆஹா..ரைட்டு..

கனிமொழி said...

இன்னும் "என் இனிய பொன் நிலாவே" வரலையே.........

;-)

வானம்பாடிகள் said...

பகிர்வுக்கு மிக மிக நன்றி முரளி. என்ன ஒரு சுகானுபவம். அல்ஃபோன்ஸ் கொஞ்ச நாளைக்கு மனசு ஃபுல்லா நிறைஞ்சிருக்கும் இது. :) தாங்க்யூ சோ மச்.

butterfly Surya said...

நல்ல புத்தகங்களும், திரைப்படங்களும் அறிமுகப்படப்போகிறது. ஒருவேளை அவருக்கும், என்னால்.////

எனக்கும் கொஞ்சம் சொல்லு முரளி.

பகிர்விற்கு நன்றி.

Chitra said...

நல்ல கதம்ப தொகுப்பு. :-)

Cable Sankar said...

ஆரோமலே வுக்காக இவ்வளவு எழுத வேண்டியதில்லை. தலைவரே.. அது காதலின் வலி.. இது போதும் என்று தோன்றுகிறது.

மோகன் குமார் said...

உங்களுக்கு பல விஷயத்தில் ஈடுபாடு உள்ளது நண்பா அசத்துங்க அப்படி தான் இருக்கணும்

siva said...

இப்படி திடுதிடுப்பெனெ என்னைப் பற்றி எழுதுவீங்கனு தெரியாது.ஆனால் நீங்க சொன்னது முற்றிலும் உண்மை.

இரண்டு விசயங்களைத் தவிர.

ஒன்னு..

INDIAN OCEAN

இரண்டு :

அரோமலே

veyilaan said...

என்னதிது? ஆளைச் சங்கத்துல சேக்கல. சங்கத்துக்கு தகவலே சொல்லல.

இதற்காக, அடுத்த சந்திப்பின் செலவுகள் அத்தனையும் செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது :)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

கிருஷ்ண பிரபு said...

அல்போன்ஸ் ஜோசப் - வாய்ப்பே இல்ல முரளி, நல்லா படுறாரே!?

ஜெகநாதன் said...

நல்ல அறிமுகங்கள்.. ஈதல் இசைபட வாழ்தல் என்றே இருங்கள் என்றும்.

suryesh said...

http://suryesh.blogspot.com/2010/04/blog-post.html

மறக்காம ஓட்டு போடுங்க

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.