வாழ்க்கை வாழ்வதற்கே!
கையில் நூறு ரூபாய் கூட இல்லை, இன்னும் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது, ஆனால் இந்தக்கணம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.போன மாதம் அப்பா சொன்னார். “என்னோட வேலை செய்த அட்டெண்டர் பசங்கல்லாம் BE, MCA ன்னு படிச்சிட்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு கை நிறைய சம்பாதிக்கிறார்கள். ஏதாவது கல்யாண வீட்லயோ விஷேசத்திலேயோ நண்பர்களை சந்திக்கும்போது, பையன் என்னடா பண்றான்னு கேட்டா, கொஞ்சமா யோசிச்சு, ம்ம் எதோ கம்ப்யூட்டர் பிசினஸ் பண்றான், நல்லா பண்றான்னு ஒரு பொய்யை சொல்ல வேண்டியிருக்கிறது” என்றார்.

கடனில்லாமல், கடன் கொடுக்காமல் இங்கு தொழில் செய்வது மிகவும் சிரமம். போதாக்குறைக்கு ஆற்க்காடு வீராசாமி வேறு அழையாத விருந்தாளியாய் தினமும் நாலு மணி நேரம் வந்துபோகிறார். காலை ஒன்பது மணியிலிருந்து இரவு பத்து மணி வரை வேலை. எல்லா நாளிலும் வேலை. எல்லா வாரங்களிலும், மாதங்களிலும், வருடங்களிலும் வேலை. வேலைக்கு ஒன்றும் குறைச்சலேயில்லை. ஆனால் பிரச்சனை அதுவல்ல, காகிதம். என்ன பசப்பினாலும் என் கையில் ஒட்டுவதேயில்லை, காகிதம். என் தகுதி என் கையில் பையில் ஒட்டியிருக்கும் காகிதத்தை பொருத்தது. எனக்காக இல்லை என்றாலும் அப்பா மற்றும் இன்ன பிறருக்காகவாவது, காகிதம் பொறுக்க வேண்டியிருக்கிறது.

வேலை முடிந்ததும் நண்பர்களோடு சிறிது நேரம் செலவழித்து பின் வீடு திரும்பவே பதினோரு மணியாகிவிடுகிறது. எனக்காக ஒரு பொழுதும் நிற்காத சூரியனால், மறுபடியும் விடியும் காலை. மறுபடியும் அதே வண்டி, அலைச்சல், ஓட்டம், பொய், காசு சொல்லிமுடிப்பதற்குள் இரவாகிவிடுகிறது. ஒரே மாதிரியான் இந்த வாழ்க்கை சுழற்சி, ஒரு வித அயற்சியையும், சலிப்பையுமே தருகிறது.

இதையெல்லாம் கொஞ்சம் விட்டு விலகி நிற்கலாமென அல்லது கொஞ்சம் மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்ளாமென பதிவுலகில்  கொஞ்சமாய் எழுதவும் படிக்கவும் தொடங்கினேன். ஆனால், இங்கும் பிரச்சனைகளும், வீண் விவாதங்களும், சச்சரவுகளுமே மிச்சமிருக்கிறது. இதுதான் நான் என்று சொல்லிக்கொள்ள முடியவில்லை.

தீர்வு நோக்கி நகரும் பயணம் இன்னும் புறப்படவே இல்லையா என்றிருக்கிறது. உலகம் ரொம்பவே அழகானது, அதனினும் வாழ்க்கை இன்னும் அழகு. அதை நொடி நொடியாய் அனுபவிக்க கற்றுக்கொடுக்கும் கவிதை இன்னும் எழுதப்படாமலேயே இருக்கிறது. யாரவது எழுதுங்கள், ஒவ்வொரு தனிமனிதனின் பார்வையும் அதைத்தேடித்தான் இருக்கிறது.

மனசை சந்தோசமாக வைத்துக்கொள்ளவே முய்ற்சிக்கிறேன். என் கிடார் வகுப்புகள் வெகு வேகமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது.  கீ போர்டும் கற்றுக்கொண்டிருக்கிறேன். இசையும் காதலும் வாழ்க்கையை இன்னமும் அழகாக்கும் மந்திர கருவிகள்.

கொஞ்சம் யோசித்து விட்டு அப்பாவிடம் சொன்னேன். “அப்பா!  இனி உங்கள் நண்பர்கள் யாரவது கேட்டால், இப்படி சொல்லுங்கள், என் மகன் எதோ பிசினஸ் செய்கிறான், ஆனால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறான்” என்று சொன்னேன். ஏனென்றால் நான் அதற்கான முயற்சியில்தான் இருக்கிறேன், ஆக இதைத்தவிர நீங்கள் எதை சொன்னாலும் அது பொய்தான் என்று. போனவாரம் மன்னார்குடிக்கு அவரது பள்ளி கல்லூரி நண்பர்களை சந்திக்க சென்றிருந்தார். திரும்ப வந்தபொழுது என்னிடம் சொன்னார் “முரளி, போன இடத்துல பசங்க கேட்டாங்க, நீ சொன்னமாதிரியே சொல்லிட்டேன்டா”, என்றார். அவரிடம் என்மீதான நம்பிக்கை தெரிந்தது.

சத்தியமாக நான் சந்தோசமாகத்தான் இருக்கிறேன். கையில் நூறு ரூபாய் கூட இல்லை, இன்னும் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது, ஆனால் இந்தக்கணம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

புது நம்பிக்கை ஒளி மனதிலே,
ஒரு புதுவழி உதயமாகுதே!
கைப்பற்றுவோம் ஸ்டாரை......... இப்படி ஒரு விளம்பரம் கேட்பரீஸ் டெய்ரிமில்க் சாக்லேட்டிற்கு வருமே, அந்த பாடல் நினைவிற்கு வருகிறது.

:-)


தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

32 கருத்துரைகள்:

செ.சரவணக்குமார் said...

நெகிழ்ச்சியான பதிவு சார். இந்த சந்தோஷம் உங்களுக்கு எப்போதுமே நிலைத்திருக்கட்டும்.

இராமசாமி கண்ணண் said...

ரொம்ப நல்லாருக்கு முரளி.

James Arputha Raj said...

Really Nice :)

நேசமித்ரன் said...

லேபிள் தலைப்பாகி இருக்கலாம்

:)

அதி விரைவானதொரு தொனி தெறிக்கிறது நடையில்....

இடைப்படும் உவமானங்கள் உயிர்ப்புடன்

நல் விதைகள் விருட்சமாகும்....!

வாழ்த்துகள்

Chitra said...

சத்தியமாக நான் சந்தோசமாகத்தான் இருக்கிறேன். கையில் நூறு ரூபாய் கூட இல்லை, இன்னும் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது, ஆனால் இந்தக்கணம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.


...... கையில் பணம் இருப்பதற்கும் மனதில் சந்தோஷம் இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்பதை பலர் புரிந்து கொள்வதில்லை.
அருமையான இடுகை. பணம் கையில் சேரும்போதும், சந்தோஷம் குறையாமல் இருக்க வாழ்த்துக்கள்!

Cable Sankar said...

நிறைய நேரங்களில் பணம் தான் சந்தோஷத்தை நிர்ணையிக்கும் அளவு கோலாய் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது. முரளி

padma said...

சிலசமயம் இப்படிதான் தோணும் முரளி .ஆனா எல்லாம் நல்லா மாறும். ஏன்னா நீங்க விரும்பறது சந்தோஷத்தை .நிச்சயம் அது வாழ்க்கையில் நிரம்பி வழியும் . வாழ்த்துக்கள்

malar said...

பதிவு அருமை...’’’இங்கும் பிரச்சனைகளும், வீண் விவாதங்களும், சச்சரவுகளுமே மிச்சமிருக்கிறது. இதுதான் நான் என்று சொல்லிக்கொள்ள முடியவில்லை. ’’


உண்மை.....

அகல்விளக்கு said...

அருமை நண்பா...

வாழ்க்கையின் நிலைப்பாட்டை, அழகை, உங்கள் எழுத்து வழி பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது..

மோகன் குமார் said...

சந்தோஷமாய் இருக்கேன் என்று எழுதினாலும் எதோ ஒரு வருத்தம் இருக்கு எழுத்தில்.. வருந்தாதீர்கள் நண்பா எல்லாம் சரியாகும்

RVC said...

பணத்துக்கும் சந்தோசத்துக்கும் சம்பந்தமில்லை நண்பா. மேற்கத்திய பழமொழி ஒன்று உண்டு "பணம் உங்கள் முன்வாசல் வழி வரும்போது உங்கள் நிம்மதி பின்வாசல் வழியாக வெளியேறிவிடுகிறது!". நிதி நிலைமை மாறும் - ஆனால் மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும் ;)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நல்லதொருபகிர்வு. நேசன் சொன்னது போல லேபிளை தலைப்பாக்கியிருக்கலாம்.

'எழுதப்படாத வாழ்க்கையை வாழச்சொல்லிக்கொடுக்கும் கவிதை' பதப்பிரயோகம் எங்கோ படித்தது நினைவுக்கு வந்தாலும் இந்த இடத்தில் இன்னும் அழகு.

கனிமொழி said...

நல்லா எழுதி இருக்கீங்க நண்பா.
இதற்கு பின்னால் இருக்கும் வலியை உணரமுடிகிறது.

க.பாலாசி said...

//அவரிடம் என்மீதான நம்பிக்கை தெரிந்தது.//

என்ன சொன்னாலும் புரிந்துகொள்ளாத அப்பாக்களுக்கு மகனாய் பிறந்தவர்கள் மத்தியில்..... கொடுத்துவைத்தவர் நீங்கள்...

மனதை பார்க்கிறேன்...

கிருஷ்ண பிரபு said...

/-- என் கிடார் வகுப்புகள் வெகு வேகமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது. கீ போர்டும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.--/
நான் முதலில் ஆறுமாதம் Keyboard கற்றுக்கொண்டு பிறகு கிடார் கற்றுக் கொண்டேன். நீ அப்படியே உல்டாவா... Enjoy முரளி. என்னால் கிடார் வகுப்பைத் தொடர முடியாமல் போனதில் வருத்தமே. நீ கற்றுக் கொள்வதில் மிக்க சந்தோசம்.

☼ வெயிலான் said...

நல்லா வந்திருக்கு முரளி!

காகிதம் பொறுக்குபவர்கள் தான் பல கோடீஸ்வரர்களை உருவாக்கியிருக்கிறார்கள். நான் சொன்னது குப்பைக் காகிதம் :)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ செ.சரவணக்குமார்
நெகிழ்ச்சியான பதிவு சார். இந்த சந்தோஷம் உங்களுக்கு எப்போதுமே நிலைத்திருக்கட்டும்//
நன்றி சரவணக்குமார்.
------------------

@ இராமசாமி கண்ணண்
ரொம்ப நல்லாருக்கு முரளி//
நன்றி கண்ணன்

-------------------
@ James Arputha Raj
Really Nice :) //
தேங்க்ஸ் பாஸ்
-----------------

@ நேசமித்ரன்
லேபிள் தலைப்பாகி இருக்கலாம், :)

அதி விரைவானதொரு தொனி தெறிக்கிறது நடையில்....

இடைப்படும் உவமானங்கள் உயிர்ப்புடன்

நல் விதைகள் விருட்சமாகும்....!

வாழ்த்துகள் ///
மிக்க நன்றி நேசமித்ரன், இந்த லேபிளில் நிறைய எழுதுவேன், அதானால் தலைப்புக்கு பஞ்சம். :)
---------------------------

@Chitra
சத்தியமாக நான் சந்தோசமாகத்தான் இருக்கிறேன். கையில் நூறு ரூபாய் கூட இல்லை, இன்னும் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது, ஆனால் இந்தக்கணம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.


...... கையில் பணம் இருப்பதற்கும் மனதில் சந்தோஷம் இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்பதை பலர் புரிந்து கொள்வதில்லை.
அருமையான இடுகை. பணம் கையில் சேரும்போதும், சந்தோஷம் குறையாமல் இருக்க வாழ்த்துக்கள்!///

உண்மைதான் சித்ரா ஜி, சந்தோஷமா இருக்க எவ்ளோ பணம் தேவையோ அதை சம்பாதிக்கலாம். :-)


@ Cable Sankar
நிறைய நேரங்களில் பணம் தான் சந்தோஷத்தை நிர்ணையிக்கும் அளவு கோலாய் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது. முரளி///
ஆமாம் தல, அதான் பிரச்சனையே.....

முரளிகுமார் பத்மநாபன் said...

@ padma
சிலசமயம் இப்படிதான் தோணும் முரளி .ஆனா எல்லாம் நல்லா மாறும். ஏன்னா நீங்க விரும்பறது சந்தோஷத்தை .நிச்சயம் அது வாழ்க்கையில் நிரம்பி வழியும் . வாழ்த்துக்கள் //
மிக்க நன்றி பத்மா, நிச்சயம் சந்தோஷமாகத்தான் இருப்பேன்
-----------------------
@ malar said...
பதிவு அருமை... ’’’இங்கும் பிரச்சனைகளும், வீண் விவாதங்களும், சச்சரவுகளுமே மிச்சமிருக்கிறது. இதுதான் நான் என்று சொல்லிக்கொள்ள முடியவில்லை. ’’ உண்மை..... ///
என்னால் இன்னொருவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியுமானால், அது எனக்கும் மகிழ்ச்சியே. நன்றி மலர்
-----------------------

@ அகல்விளக்கு said...
அருமை நண்பா...
வாழ்க்கையின் நிலைப்பாட்டை, அழகை, உங்கள் எழுத்து வழி பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது..///
நன்றி நண்பா!
-----------------------

@ மோகன் குமார் said...
சந்தோஷமாய் இருக்கேன் என்று எழுதினாலும் எதோ ஒரு வருத்தம் இருக்கு எழுத்தில்.. வருந்தாதீர்கள் நண்பா எல்லாம் சரியாகும் ///
ஆமாம் தல வருத்தம் இருக்கு, அதை எப்படி விரட்டுறேன்னு பாருங்க. : )
-----------------------

@ RVC said...
பணத்துக்கும் சந்தோசத்துக்கும் சம்பந்தமில்லை நண்பா. மேற்கத்திய பழமொழி ஒன்று உண்டு "பணம் உங்கள் முன்வாசல் வழி வரும்போது உங்கள் நிம்மதி பின்வாசல் வழியாக வெளியேறிவிடுகிறது!". நிதி நிலைமை மாறும் - ஆனால் மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும் ;)
ம்ம்.... தேங்க்ஸ் மச்சி.
-----------------------

@ ஆதிமூலகிருஷ்ணன் said...
நல்லதொருபகிர்வு. நேசன் சொன்னது போல லேபிளை தலைப்பாக்கியிருக்கலாம். 'எழுதப்படாத வாழ்க்கையை வாழச்சொல்லிக்கொடுக்கும் கவிதை' பதப்பிரயோகம் எங்கோ படித்தது நினைவுக்கு வந்தாலும் இந்த இடத்தில் இன்னும் அழகு.//

அண்ணா, இதுதான் முதல்முறை உங்களிடமிருந்து எனக்கு கிடைத்த பாரட்டு. மறக்கவே மாட்டேன்.
-----------------------

@ கனிமொழி said...
நல்லா எழுதி இருக்கீங்க நண்பா.
இதற்கு பின்னால் இருக்கும் வலியை உணரமுடிகிறது.//
நன்றி கனி
-----------------------

@ க.பாலாசி said...
//அவரிடம் என்மீதான நம்பிக்கை தெரிந்தது.//
என்ன சொன்னாலும் புரிந்துகொள்ளாத அப்பாக்களுக்கு மகனாய் பிறந்தவர்கள் மத்தியில்..... கொடுத்துவைத்தவர் நீங்கள்...
மனதை பார்க்கிறேன்...
என்னோட அப்பாகூட ரொம்பவே கொடுத்து வச்சவர்தான், பாலாசி.
-----------------------
@ கிருஷ்ண பிரபு said...
/-- என் கிடார் வகுப்புகள் வெகு வேகமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது. கீ போர்டும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.--/
நான் முதலில் ஆறுமாதம் Keyboard கற்றுக்கொண்டு பிறகு கிடார் கற்றுக் கொண்டேன். நீ அப்படியே உல்டாவா... Enjoy முரளி. என்னால் கிடார் வகுப்பைத் தொடர முடியாமல் போனதில் வருத்தமே. நீ கற்றுக் கொள்வதில் மிக்க சந்தோசம்//
விரைவில் அரங்கேற்றம், யூட்யூபில். ஹி ஹி ஹி
-----------------------

@ ☼ வெயிலான் said...
நல்லா வந்திருக்கு முரளி!
காகிதம் பொறுக்குபவர்கள் தான் பல கோடீஸ்வரர்களை உருவாக்கியிருக்கிறார்கள். நான் சொன்னது ..

தல, செல்வம் கொடுக்க சொன்ன பணம் என்னிடமே இருக்கிறது...

கோபிநாத் said...

தல வாங்க ஒரு டீ அடிச்சிட்டு வருவோம் ;)

முனைவர்.இரா.குணசீலன் said...

உலகம் ரொம்பவே அழகானது, அதனினும் வாழ்க்கை இன்னும் அழகு. அதை நொடி நொடியாய் அனுபவிக்க கற்றுக்கொடுக்கும் கவிதை இன்னும் எழுதப்படாமலேயே இருக்கிறது. யாரவது எழுதுங்கள், ஒவ்வொரு தனிமனிதனின் பார்வையும் அதைத்தேடித்தான் இருக்கிறது.
உண்மைதான்..

அருமையான பதிவு நண்பரே..
தொடர்ந்து எழுதுங்கள்.

பூந்தளிர் said...

//சத்தியமாக நான் சந்தோசமாகத்தான் இருக்கிறேன். கையில் நூறு ரூபாய் கூட இல்லை, இன்னும் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது, ஆனால் இந்தக்கணம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.//


பெரும்பான்மையோருக்கு இந்த வரிகள் சினிமாத் தனமாக தெரியலாம். ஆனால் அந்த மகிழ்ச்சியின் அருமை அதை இழக்கும் போதுதான் தெரியும்...

இழந்தபின் தான் தெரிகின்றது...

அருமையான பதிவு முரளி...

அன்புடன் அருணா said...

/கவிதை இன்னும் எழுதப்படாமலேயே இருக்கிறது. யாரவது எழுதுங்கள், /
அதற்கான தேடலில்தான் வாழ்வே கரைகிறது...
/கையில் நூறு ரூபாய் கூட இல்லை, இன்னும் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது, ஆனால் இந்தக்கணம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்./
MILES TO GO BEFORE YOU SLEEP!நினைவுக்கு வருகிறது....
காகிதத்துக்கும் சந்தோஷத்துக்கும் தொடர்பில்லையெனப் புரிந்து வைத்திருக்கிறீர்களே!அதுவே போதும்.

Vengat Raga said...

Very Nice murli.
Keep going with full happiness.
I think good answer for my monday's quest.

Vengat Raga said...

Nice Murli
Keep going.
I think, this is a good answer for my monday's quest.

butterfly Surya said...

முரளி, இதே தான்..

ரங்கன் said...

நீங்கள் இங்கே என் கமெண்டை படிக்க, இங்கே உங்கள் கணினி முன் இருக்கிறீர்கள் என்பதை கூட ஒரு சந்தோஷமான விஷயமாக நினைத்துகொள்ளுங்கள்..!!

சந்தோஷம் இன்னும் கூடும்..!!

வாழ்க சந்தோஷமாய்,
ரங்கன்

பேரரசன் said...

முரளி ....!
பணம் இருக்கின்ற போதும் ....நிம்மதி இருக்காது ..! ஆனா நிம்மதியா இருக்கும் போதும் கூட பணம் வரும்...!

அச்சடிச்ச பேப்பர் தான் , அவ்வளுதான் ....! ஒரு ர்ர்ர்ர்..... சாப்பிடலாமா..!

முரளிகுமார் பத்மநாபன் said...

கோபி, தேங்க்ஸ் மச்சி..
முதல்ல நீங்க ஊருக்கு வாங்கப்பூ...
:-)


நன்றி முனைவர்.இரா.குணசீலன், நிச்சயம் தொடர்கிறேன்.

தேங்க்ஸ் சாமி, :-)

ஆம், அருணாமேடம். புரிஞ்சிமட்டும் வச்சிருக்கேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

வெங்கி, ஹா ஹா ஹா வெல்கம் வெல்கம்....


தேங்க்ஸ் சூர்யாண்ணா!

ஆமா, ரங்கா நான் அடிக்கடி சொல்வேன் சின்னச்சின்ன சந்தோஷங்களின் தோரணம்தான் வாழ்க்கை என்று. அதுபோல நிச்சயம் உங்களின் பின்னூட்டமும் சந்தோஷமான ஒன்றுதான், நான் அப்படித்தான் பார்க்கிறேன்.


செந்தில் நீங்க மோர்-ங்கிறதத்தானே அப்படி (ர்ர்ர்ர்) ந்னு எழுதியிருக்கிங்க?
(எங்க பீர் அடிக்கலாம்ன்னு பப்ளிக்கா சொல்லிடுவிங்களோன்னு நினைச்சேன்)

தோழி said...

eppovume santhosama irnga Murli :-)

Arun Kumar. S said...

வாழ்க்கை அடுத்த நொடி ஆயிரம் ஆச்சர்யங்களை ஒளித்து வைத்திருக்கிறது! அதிகம் கவலை படாமல் தொடர்ந்து செல்லுங்கள் .,

மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை.......

- உபயம் : அன்பே சிவம்:)

பா.ராஜாராம் said...

கிளாஸ் முரளி!

இதுதான் வாழ்வு.நம்பிக்கை,அது தரும் சந்தோசம்.

வந்து,விடுபட்டதெல்லாம் வாசித்தேன்.

பின்னூட்டம்,

முன்னும் பின்னுமாக நகர்ந்ததில் இங்கு இடுகிறேன்.

நதியை,பெயர் சொல்லி அழைப்பது போல.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.