காற்று நின்று விட்டால்?

விண்ட் ஸ்ட்ரக் - மறுபடியும் இன்னொரு கொரியப்படம். எல்லா தமிழ்படங்களையும்போல ஒரு அழகான பாடலோடு படம் ஆரம்பிக்கிறது, எழுத்துக்கள் மறைந்து காட்சி நீளும்போது ஹீரோயின் யூ ஒரு பெரிய கட்டிடத்தின் உச்சியில் நின்றுகொண்டிருக்கிறாள், மெல்ல அவளது கால்கள் விளிம்பை நோக்கி நகர்கிறது. மேலிருந்து கீழே விழும் அவளது நினைவுகளில் தொடங்குகிறது படம். 

அவள் ஒரு காவல் அதிகாரியாக இருக்கிறாள், தற்செயலாக ஒரு பிக்பாக்கெட் விவகாரத்தில் தவறுதலாக கதாநாயகனை  கைது செய்கிறாள். அவன் தான் ஒரு இயற்பியல் ஆசிரியர் என்றும், நான் அந்த திருடனை துரத்திக்கொண்டிருந்தேன், நீங்கள் என்னை தவறுதலாக பிடித்துவிட்டீர்கள், வேண்டுமானால் அவனை வரைந்து தருகிறேன் என்கிறான். மற்ற அதிகாரிகள் ஒத்துகொண்டபோதிலும் அவளால் தான் தவறு செய்திருக்கமுடியாது என நினைக்கிறாள். அங்கிருந்து வெளியேறும் அவனை பின்தொடருகிறாள். வழியில் அந்த திருடன் விட்டுச்சென்ற பொருட்களை பார்க்கவே அங்கே நிற்கிறான். மீண்டும் அவள் அவனை கைது செய்கிறாள். எனக்கு தெரியும் நீ நேரா இங்கதான் வருவேன்னு, என் கணிப்பு என்னைக்குமே பொய்யானதில்லை, என்கிறாள்.

ஆனால் அவனை ஸ்டேசனுக்கு கொண்டுவரும்போது அங்கே நிஜ திருடன் பிடிபட்டிருக்கிறான். உடனே அவள் அவனை விட்டுவிட்டு வெளியேறுகிறாள். கடுப்பாகிப்போன அவன் “தப்புதான் பண்ணிட்ட ஒரு சாரி கூட கேட்கமுடியாதா? உன்னால” என்று கத்துகிறான். அவள் மிகவும் சாதாரணமாக “சாரி என்ற சொல்லுக்கு என் வாழ்க்கையில் இடமேயில்லை, வேண்டுமானால் உன் பெயரை சாரி என்று மாற்றிக்கொள். பிறகு வேண்டுமானால் முயற்சி செய்கிறேன்” என்கிறாள்.

கடினமான மனதுடன் வெளியேறும் அவனுக்கு அவனது பள்ளியில் மாணவிகளுக்கு பாதுகாப்புக்காக அவளையே நியமிக்கிறார்கள். ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டு வரும்போது சிலர் ரோட்டில் புகைப்பிடித்தவாறே வருகின்றனர். ஒரு காவல் அதிகாரியாக அவர்களை இது தவறு என்று சொல்கிறாள், அவர்கள் இதுகென்ன ஃபைனோ அதை சொல்லு வாங்கிட்டுப்போ என்று சொல்லி சிகரெட்டை எறிகிறார்கள். கோவமடையும் அவள் அவர்களை அடித்து அதை சுத்தம் செய்ய வைக்கிறாள். அடிபட்ட அவர்கள் இதுக்கு நீ எங்கப்பாவுக்கு பதில் சொல்லியே ஆகனும் என்கிறார்கள்.

இதேபோல ஒரு  போதை மருந்து கும்பலிடம் தனியாக போராட வேண்டிய நிலைவருகிறது. என்னுடன் துணைக்கு வருகிறாயா? என்கிறாள்.  மறுக்கும் அவனை தன் கையோடு விலங்கால் கட்டிக்கொண்டு அழைத்து செல்கிறாள். அவனது வெகுளித்தனம் அவளுக்கு பிடித்திருக்கிறது. தன்னோடு அவன் இருப்பதை விரும்புகிறாள். ஒருவழியாக எல்லாம் முடிந்து வெளியே வருகிறார்கள். இப்பொழுதாவது என்னை இந்த விலங்கிலிருந்து விடுவிப்பாயா?  என்கிறான். இல்லை என்னால் முடியாது சாவி அங்கே நடந்த களேபரத்தில் தொலைந்து போய்விட்டது என்கிறாள். வேறுவழியின்றி இருவரும் கரங்கள் பிணைக்கப்பட்ட நிலையிலேயே தொடர்கின்றனர். அன்றிரவு இருவரும் தனித்தனி கட்டிலில் படுத்திருக்கின்றனர். ஆனால் இருவரின் கரங்களும் இணைந்திருக்கின்றது, அதிலும் மங்வாவின் சுண்டுவிரல் அவளின் சுண்டு விரலை பற்றியிருக்கிறது. காலையில் முதலில் எழுந்துவிடும் யூ, அனிச்சையாய் தன் கைகளை விலங்கிலிருந்து விடுவித்து தன் தலைமுடியை சரிசெய்துகொண்டு மீண்டும் தன் கைகளை விலங்கிலேயே இணைத்துக்கொள்வாள். இருவருக்குள்ளும் காதல் வந்த விஷயத்தை வெகு அழகாக காட்டியிருப்பார்கள். அழகான இசையுடன் கவிதை போன்ற காட்சி இது.


பள்ளிவிடுமுறையின்போது தன் சொந்த ஊருக்கு அவளை அழைத்துசெல்கிறான். எங்கும் பச்சை விரிந்திருக்கும் அழகிய மலையுச்சியில் இருக்கும் அவனது பூர்வீகவீடு. மலையுச்சியில் நின்றுகொண்டு இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு நான் இப்போது பறப்பதைப்போல உணர்கிறேன், நிச்சயம் நான் என் முன் ஜென்மத்தில் காற்றாகத்தான் இருந்திருப்பேன். இனி இறந்தாலும் காற்றாகவே மாறி சுதந்திரமாய் இந்த உலகை சுற்றி சுற்றி வருவேன் என்கிறான். யூவும் அதை ஆமோதிக்கிறாள். பிறகு அன்றிரவு அவள் ஒரு கதை சொல்கிறாள். மங்வா நீயூம் அந்த கதையில் வரும் இளவரசி போல நான் இறந்தபிறகு இறந்துவிடுவாயா என்கிறான். இல்லை நான் சாக மாட்டேன் என்கிறாள். இதி சற்று வருத்தமடையும் அவன் காரை வேகமாக ஓட்டுகிறான். அப்போது  ஏற்படும் விபத்திலிருந்து யூ, மங்வாவை காப்பாற்றுகிறாள்.


மருத்துவமனையில் இனி உன்னை எப்போதும் பிரிய மாட்டேன் என்கிறான். அதைத்தொடர்ந்து எப்போதும் அவளுடனே இருக்கிறான். அப்படி ஒரு சமயத்தில் ஒரு துப்பாக்கி சூட்டில் தவறுதலாக சுடப்பட்டு மங்வா இறந்துபோகிறான்.  அதில் மிகவும் மனமுடைந்துபோகும் அவள் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறாள். ஒவ்வொரு முறையும் காப்பாற்றப்படுகிறாள். ஒருமுறை மருத்துமனையில் இருக்கும் அவள் ஒரு காற்றாடி பறப்பதைப் பார்த்து அதை தொடருகிறாள். அதை பார்க்கும்போது அது முன்பொரு நாள் மங்வா செய்துகொடுத்ததைப்போலவே இருப்பதால், அதை வீட்டுக்கு கொண்டுவருகிறாள். அந்த காகிதம் அவன் செய்துகொடுத்த அதே காகிதமாக இருக்கிறது.

ஆக, மங்வா தான் முன் சொன்னதுபோல தன் இறப்பிற்கு பிறகு காற்றாக மாறி தன்னுடன் இருப்பதாகவே கருதுகிறாள். காற்றோடு பேசுகிறாள். தன் அறைமுழுவதும் காற்றாடிகளை செய்து வைதுக்கொண்டு மங்வாவின் வருகைக்காகவே காத்துகொண்டிருக்கிறாள். அவள் வாழ்வினை ஒவ்வொரு நொடியிலும் மங்வா கூடவே இருக்கிறான். அவளுக்கான புதிய துணையையும் அவனே சொல்கிறான்.

நிஜத்தில் இப்படி நடக்க முடியாது என்றாலும், தொய்வின்றி  பார்க்கமுடிகிறது. படத்தின் பாதிக்குமேல் காற்று ஒரு கேரக்டராகவே வருகிறது. ரம்மியமான இசையும், காதலும் படம் நெடுக நிரம்பியிருக்கிறது. தொடர்ந்து கொரியத்திரைப்படங்களாக பார்ப்பதற்கு இதுவும் ஒரு காரணம். கொஞ்சம் நேரமிருக்கிறது, ஒரு ஃபீல் குட் மூவி பார்க்கணும்ங்கிற யோட்சனை இருப்பவர்களுக்கு என்னுடைய சாய்ஸ் இந்த படம். MY SAASY GIRL, 500 OF SUMMER இந்த இரண்டு படங்களும் இன்னும் மிச்சமிருக்கிறது, என்னுடைய 10 SENSATIONAL ROMANTIC MOVIES  என்கிற லிஸ்டில். பார்த்துவிட்டு பதிவிடுகிறேன்.

படத்தின் ட்ரெய்லருக்கு இங்கே சுட்டவும்


தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

28 கருத்துரைகள்:

~~Romeo~~ said...

விமர்சனம் அருமை முரளி. MY Sassy Girl படம் பத்தி எழுதுங்க .. அழகான கவிதை அது ..

ஆதவா said...

அப்படியே எல்லா படங்களையும் பார்த்துவிட்டு பார்சல் செய்யவும்..........

உங்கள் விமர்சனம் ஏற்ற இறக்கங்களற்று நன்றாக இருந்தது. ஒரு சில இடங்களில் படத்தின் தலைப்பை போன்றே நானும் இடைநின்றது உண்மைதான். காற்றோடு பேசுவது எனும்பொழுது எனக்கு ஒரு பெரியவர் ஞாபகம் வருகிறது. நான் படித்துக் கொண்டிருக்கும் சமயங்களில் நண்பன் வீடருகே ஒரு பெரியவர் இப்படித்தான் காற்றோடு பேசிக் கொண்டிருப்பார்.

இயற்கை எப்பொழுதும் நம்முடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறது. நாம் தான் பேசுவதில்லை.

விமர்சனத்திற்கு நன்றி!

அன்புடன்
ஆதவா

ஈரோடு கதிர் said...

நல்ல விமர்சனம்

நேசமித்ரன் said...

நல்ல பகிர்வு !

திருநாவுக்கரசு பழனிசாமி said...

முரளி..." notebook " படம் பார்த்தாச்சா?

கோபிநாத் said...

ROMANTIC MOVIES படங்களை பத்தி விமர்சனம் போடும் போது செம அட்டகாசமாக இருக்கு ! ;)

மிக அழகான விமர்சனம் மாப்பி ;)

\\MY SAASY GIRL\\\ நான் பார்த்துட்டேன் ;) (எப்படியே உனக்கு முன்னாடி ஒரு படமாச்சும் பார்த்துட்டேன்) ;)

லிஸ்ட்டை சீக்கிரம் வெளியிடும் ;)

Sangkavi said...

விமர்சனம் அருமை....

Chitra said...

படத்தின் பாதிக்குமேல் காற்று ஒரு கேரக்டராகவே வருகிறது. ரம்மியமான இசையும், காதலும் படம் நெடுக நிரம்பியிருக்கிறது.


..... true. nice review.

padma said...

முரளி ரொம்ப அழகா எழுதிருக்கீங்க .short and sweet .

☼ வெயிலான் said...

ஆதவா said...
அப்படியே எல்லா படங்களையும் பார்த்துவிட்டு பார்சல் செய்யவும்..........

ம்..... அது!

butterfly Surya said...

தமிழ் / தெலுங்கு போலவே கொரிய படங்களில் நிறைய மொக்கையும் உண்டு. இது feel good ரகம்.

விமர்சனம் அருமை முரளி.

மோகன் குமார் said...

நல்ல அறிமுகம் முரளி நன்றி

முரளிகுமார் பத்மநாபன் said...

தேங்க்ஸ் ரோமியோ, இந்த படத்தோட இரண்டாம் பாகம்மாதிரி ஸாசி கேர்ள் இருக்கும்ன்னு யாரோ சொன்னாங்க அதனால இதுக்கு பிறகு பார்க்கலாம்ன்னு இருக்கேன். ஆனா ஸாசி கேர்ள் முன்னாடியே வந்துடுச்சு... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

அப்படியே எல்லா படங்களையும் பார்த்துவிட்டு பார்சல் செய்யவும்..........///


ஆகட்டும் அமைச்சரே!

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கதிரண்ணே! :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி நேசமித்ரன்!
முடிஞ்சா பாருங்க, ஜாலி டைம் பாஸ்

முரளிகுமார் பத்மநாபன் said...

திரு, நோட்புக் பார்த்தாச்சு....

முரளிகுமார் பத்மநாபன் said...

\\MY SAASY GIRL\\\ நான் பார்த்துட்டேன் ;) (எப்படியே உனக்கு முன்னாடி ஒரு படமாச்சும் பார்த்துட்டேன்) ;)

ஹா ஹா ஹா... இதெல்லாம் சும்மா...

லிஸ்டை மெயில்ல போடட்டுமா?

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி சங்கவி ஜி,
படம் பாருங்க

முரளிகுமார் பத்மநாபன் said...

படத்தின் பாதிக்குமேல் காற்று ஒரு கேரக்டராகவே வருகிறது. ரம்மியமான இசையும், காதலும் படம் நெடுக நிரம்பியிருக்கிறது.
..... true. nice review//

அப்போ பார்துட்டிங்க.... ரைட்.
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

//முரளி ரொம்ப அழகா எழுதிருக்கீங்க .short and sweet .//

ஆனா படம் கொஞ்சம் இழுவையாதான் இருக்கும், ஆனா நல்ல டைம்பாஸ்

முரளிகுமார் பத்மநாபன் said...

ஆதவா said...
அப்படியே எல்லா படங்களையும் பார்த்துவிட்டு பார்சல் செய்யவும்..........

ம்..... அது!///
ரைட்டு தல..

முரளிகுமார் பத்மநாபன் said...

தமிழ் / தெலுங்கு போலவே கொரிய படங்களில் நிறைய மொக்கையும் உண்டு. இது feel good ரகம். ///

ஆமாண்ணா! நானும் அப்படி ரெண்டு மூணு மொக்கைய பார்த்திருக்கேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

மோகன் ஜி, கூர்க் கட்டுரை அருமை, இன்னும் படங்கள் தேவை.

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

ஆதிமூலகிருஷ்ணன் said...

ரொம்ப டச்சிங்காக இருக்கிறது. என் ரசனைக்குரியதாக உணரமுடிகிறது. பார்க்கவேண்டும்.

(ஓட்டுப்போடுங்க வசனத்தைத் தூக்கிவிடலாமே.. நல்லாயில்லை. எப்படியும் யாரும் போடப்போறதில்லை. நீங்க போட்டீங்களாங்கிறீங்களா? ஹிஹி)

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.