ரெண்டு பல்பும், நானும்

எனக்கும் ஹாரர் படங்களுக்கும் குறைஞ்சது ஒரு பத்து கிலோமீட்டர் தூரமாவது இருக்கும். ஒரு தெரிஞ்சவரோட பொண்ணு:-) கேட்டுச்சேன்னு சொல்லி, ஏற்கனவே  டவுன்லோட் பண்ணி வச்சிருந்த சில படங்களை கொடுக்கலாமென நினைத்தேன். பொதுவா டவுன்லோடட் மூவீஸ் அன்கட் வெர்ஸனாக இருக்கும் என்பதால், படத்தை ஒருதபா பார்த்துட்டு குடுக்கலாம்ன்னு நினைச்சேன். சில படங்களில் அருவருப்பாகவும் ஆபாசமாகவும் நிறைய காட்சிகள் இருந்து தொலைக்கும்.

நாம் டிவிடி-ய குடுத்த நேரம் ஏடாகூடமா ஏதாவது ஆகித்தொலைக்கப்போகுதுன்னு, ஒவ்வொரு படமா போட்டு பாத்துகிட்டிருந்தேன்.  எல்லா ப்டமும் ஒரே மாதிரிதான் இருக்கு. சொல்லப்போனால் படத்தின் ஆரம்ப காட்சியும் இறுதிக்காட்சியும் கிட்டதட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. எல்லா படங்களையும் முழுமையாக பார்க்கமுடியாது என்பதால் 8X-ல் ஓடவைத்து பார்த்துக்கொண்டிருந்தேன்.  இருந்தாலும் காட்சியமைப்புகள் ஒவ்வொரு படத்தையும் முழுமையாக பார்க்க வைத்து விட்டது.

SAW (வரிசையா மூணு படம் பார்த்தேன், மொத்தம் 5 பாகம் இருக்கு),

WRONG TURN (இது மொத்தம் மூணு, நான் ரெண்டாவதுதான் பார்த்தேன்),

HOSTEL (இது எத்தனின்னு தெரியலை ஒண்ணையே பார்க்கமுடியலை)

MIDNIGHT MEAT TRAIN ( நல்ல வேளையா ஒரே பாகம்தான், பின்னால வருமோ என்ன்வோ?).

இந்த படங்களின் மேலதிக விபரங்களுக்கு ஹாலிவுட் பாலாவின் 18+ ஐ தொடர்புகொள்ளுங்கள்.

ஒருவழியா ஒரு ஆறு படத்தை பார்த்துவிட்டு அந்த பெண்ணுக்கு கொடுப்பதற்கென படங்களை தேர்வு செய்துவிட்டு, இன்னொரு டிவிடீயில் காப்பி செய்து கொடுத்தேன். நேரம். சோனி ப்ளேயரில் AVI ஃபைல்ஸ் ரீட் ஆகாதாமே? எதுவுமே ஓடலைண்ணான்னு சொல்லி எல்லா டிவிடியையும் கொண்டுவந்து திரும்ப கொடுத்துவிட்டாள்.

அண்ணாவா!?  இப்படி சொல்லி கேட்டிருந்தா இவ்ளோ ரிஸ்க் எடுத்திருக்க மாட்டேனேன்னு மனசுக்குள்ளயே சொல்லிகிட்டேன். அப்படி இப்படின்னு இந்த வாரம் முழுக்கவே இதே மாதிரி படங்களா பார்த்துவிட்டேன். அவ்வ்வ்வ்வ். முடியலை சாப்பாட்டை பார்த்தாகூட ஒருமாதிரியா குமட்டிகிட்டு வருது. இப்போ இருக்கிற என் மனநிலைக்கு பொருந்துற மாதிரி யாராவது மனசுக்கு இதமா ரெண்டு படங்களை சிபார்சு செய்யுங்களேன். புண்ணியமா போகும்.
  

24 கருத்துரைகள்:

ஹாலிவுட் பாலா said...

சா படத்தில் மொத்தம் இதுவரை ஆறு பார்ட் வந்திருக்குங்க தல.

அப்புறம் ஹாஸ்டல்ல ரெண்டு பார்ட்தான்.

உங்களுக்கு மனசுக்கு இதமா படம் வேணும்னா.. இதில் எதுனா ஒன்னை ட்ரை பண்ணிப் பாருங்க.

Murder Set in Pieces
Cutting Moments
Salo
Men Behind the Sun
Nanking
Rape of Nanking.

நீங்க பார்த்ததெல்லாம் ஜுஜுபின்னு அடுத்தப் பதிவு எழுதுவீங்க. :)

க.பாலாசி said...

//அண்ணாவா!? இப்படி சொல்லி கேட்டிருந்தா இவ்ளோ ரிஸ்க் எடுத்திருக்க மாட்டேனேன்னு மனசுக்குள்ளயே சொல்லிகிட்டேன்.//

என்ன கொடும பாருங்க நண்பரே.... நல்லதுக்கே காலமில்லைங்க....

//இதமா ரெண்டு படங்களை சிபார்சு செய்யுங்களேன். புண்ணியமா போகும். //

நான் ஒரு பாட்டு சொல்றேன் கேளுங்க நண்பா... சிச்சுவேஷன் சாங்க்ஸ்...

அவளா சொன்னாள்.???... இருக்காது.....

நேசன்..., said...

Pl.Give the site address to download this movies.Thanks

veyilaan said...

// மனசுக்கு இதமா ரெண்டு படங்களை சிபார்சு செய்யுங்களேன் //

ஹி.... ஹி... குருவி, சுறா

நேசமித்ரன் said...

A beautiful Mind

You have got a mail

:)

சென்ஷி said...

// veyilaan said...

// மனசுக்கு இதமா ரெண்டு படங்களை சிபார்சு செய்யுங்களேன் //

ஹி.... ஹி... குருவி, சுறா//

வில்லு, வேட்டைக்காரன்

நாடோடி இலக்கியன் said...

மனசுக்கு இதமா இப்போ ஒரு படம் கே டி.வியில் போய்கிட்டு இருக்கு. பாருங்க நண்பா,....(என்ன படமா? ரஜினி - ரோஜா-மீனா+ விக்ரம்-த்ரிஷா இதான் க்ளூ)

முரளிகுமார் பத்மநாபன் said...

எப்புடீ ஹாலிவுட்பாலாவை வெளிய கூட்டிட்டு வந்துட்டேனா? ஹே ஹே ஹே.....

நன்கிங் பார்த்திருக்கேன் தல மத்ததெல்லாம் புதுசு. டவுன்லோட் பண்ணிவச்சிடுவேன், இதுக்குன்னு ஒரு கோஷ்டியிருக்கு அவங்ககிட்ட குடுத்தா பார்துட்டு கதை சொல்லிடுவாங்க...... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

அவளா சொன்னாள்.???... இருக்காது.....

ஹா ஹா ஹா....

ஒருவேளை அப்ப்டியும் இருக்குமோ?

முரளிகுமார் பத்மநாபன் said...

Pl.Give the site address to download this movies.Thanks ///

இது எல்லாமே www.rslinks.org ல கிடைக்கும், கோ கெட் இட்.

முரளிகுமார் பத்மநாபன் said...

// மனசுக்கு இதமா ரெண்டு படங்களை சிபார்சு செய்யுங்களேன் //
ஹி.... ஹி... குருவி, சுறா....

ஏன்? ஏன் தல இப்புடி?

முரளிகுமார் பத்மநாபன் said...

A beautiful Mind
You have got a mail
:)////

கரெக்ட்டு ரெண்டுமே பார்த்துட்டேன் தல, எனிவே தேங்க்யூ, இரண்டுமே இதமான படங்கள்தான், ஆனா நான் உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்.

:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

வில்லு, வேட்டைக்காரன்////

அண்ணே! இந்த கொடுமையை எல்லாம் நேரிலே அனுபவிச்சாச்சு..... விடுங்க விடுங்க.... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

மனசுக்கு இதமா இப்போ ஒரு படம் கே டி.வியில் போய்கிட்டு இருக்கு. பாருங்க நண்பா,....(என்ன படமா? ரஜினி - ரோஜா-மீனா+ விக்ரம்-த்ரிஷா இதான் க்ளூ)///

என்ன தல? தெரியலையே?

அகல்விளக்கு said...

//// மனசுக்கு இதமா ரெண்டு படங்களை சிபார்சு செய்யுங்களேன் ////

kaanch pona poomiellam vaththa nathiya paathu yeangum...

antha nathiyeeeeeeeeeee vaththi poyitta.......

:-)

அன்புடன் அருணா said...

ஹஹாஹாஹாஹா!
பாசமலர் பாருங்க!

கலகலப்ரியா said...

வாழ்வே மாயம்

திருவிளையாடல்

|| முரளிகுமார் பத்மநாபன் said...
A beautiful Mind
You have got a mail
:)////

கரெக்ட்டு ரெண்டுமே பார்த்துட்டேன் தல, எனிவே தேங்க்யூ, இரண்டுமே இதமான படங்கள்தான், ஆனா நான் உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்.

:-)||

கேட்டுச் சொல்லுவாங்க..

ILLUMINATI said...

Try to see Life is beautiful.It's a film to laugh and feel....

ILLUMINATI said...

Try to see Life is beautiful.It's a film to laugh and feel....

ஆதிமூலகிருஷ்ணன் said...

இதெல்லாம் சும்மான்னு பாலா சொல்லியிருக்கிற லிஸ்ட பாத்தாலே பயம்மா இருக்குது.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////சோனி ப்ளேயரில் AVI ஃபைல்ஸ் ரீட் ஆகாதாமே? எதுவுமே ஓடலைண்ணான்னு சொல்லி எல்லா டிவிடியையும் கொண்டுவந்து திரும்ப கொடுத்துவிட்டாள்/////////


அடப்பாவமே . சுறா படம் எதுவும் பார்த்து இருப்பாங்களோ !

raasu said...

taare zameen par..

விக்னேஷ்வரி said...

பேசாம இன்னிக்கு ராத்திரி ரெண்டு தபா “விண்ணைத் தாண்டி வருவாயா” பாருங்க முரளி. எல்லாம் சரியாகிடும்.

padma said...

ஹாய் முரளி உங்களுக்கு குமட்டல் படம் பாத்ததால இல்ல .யாரோ அண்ணன்னு கூப்டதாலதான் .கிராஸ் கட் ரோட்ல போய் எதாவது மால்ல கொஞ்ச நேரம் சுத்திட்டு வாங்க .மனசு லேசா ஆகிடும்

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.