கல்யாண்ஜியுடன் சில நிமிடங்கள்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தும் கவிஞர் கலாப்ரியாவின் படைப்புக்களம் பற்றிய விவாதம் மற்றும் அவருக்கான பாராட்டுவிழாவிற்க்கான அழைப்பிதழ், நண்பர் செல்வேந்திரனிடமிருந்து கிடைத்தது. இதழில் ஒவ்வொரு பெயராக வாசிக்கும்போது அன்பின் அழைப்பில் வண்ணதாசனும், வண்ணநிலவனும் என்றிருந்தது. வண்ணதாசனா?....... எவ்வளவு வேலை இருந்தாலும், அந்ததினம் அந்தநேரம் அங்கே இருக்கவேண்டுமென, படித்தமாத்திரம் முடிவு செய்துவிட்டேன்.

நான், ராமன், சிவகுமார், வெயிலான் மற்றும் நண்பர் பிரதீப்போடு விழாவிற்கு சென்றிருந்தோம். நாங்கள் சென்றபொழுது விழா ஆரம்பித்திருந்தது. வா.மணிகண்டன், கவிஞர் சுகுமாரன், நாஞ்சில் நாடன், கவிஞர் வெண்ணிலா, மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் கலாப்ப்ரியாவின் படைப்புகளை சிலாகித்து பேசினர். இதுவரை அவரது படைப்புகளை படித்ததில்லை என்றாலும் அங்கே கேட்ட சில கவிதைகளிலேயே அவரது ஆளுமையை புரிந்து கொள்ள முடிந்தது. கவிதைகள் மீதிருந்த புரியாது என்ற பிம்பம் உடைந்து, வெகு எளிமையாக இருந்தது, அவரது கவிதைகள். குறிப்பாக பழுதைடைந்த பஸ்ஸும், அதில் விளையாடும் குழந்தைகளும் சம்பந்தப்பட்ட அந்த கவிதை. அவசியம் வாசிக்கவேண்டும்.

விழா ஒருங்கிணைப்பாளரில் ஒருவரும் நண்பருமான அரங்கசாமி அவர்களோடு முன்னமே பேசியிருந்ததில் வண்ணநிலவன் அவர்களின் வருகை சந்தேகமே என்று சொல்லியிருந்தார். நான் சென்றதிலிருந்து விழா மேடையில் வண்ணதாசன் அவர்களை பார்க்க முடியவில்லை. ஒருவேளை இவரும் வரமுடியாமல் போயிருக்குமோ என்ற எண்ணம் வந்தபோது, ஏமாற்றமாக இருந்தது. ஆனால் கலாப்ரியா அவர்கள் ஏற்புரை வழங்கும்போது என்னை வளர்த்ததில் பெரும்பங்கு வண்ணதாசனுக்கும் என்று முன்வரிசையை கை காட்டினார். எட்டி முன்பார்த்ததில், ஆம். வண்ணதாசன்.

விழா முடிந்தபின் வடகரைவேலன் அண்ணாச்சி ஜெ.மோவிடம் எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அவரோடு பேசிக்கொண்டிருந்த போது அங்கே வண்ணதாசன் வந்தார். நானாக சென்று அறிமுகம் செய்து கொள்வதில் சிறு கூச்சம் இருந்தது. அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். பின்  நான் சிறிதாக செய்த ஒரு புன்னகையின் பதிலாக அவரது பளிரென்ற சிரிப்பு, அவரின் அருகாமையை எளிமையாக்கியது. நான் முரளி, சார். திருப்பூரிலிருந்து வருகிறேன், நல்லா இருக்கிங்களா? என்றேன். என் கைகளை பற்றியபடி நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கிங்க? என்றார். மேலும் என்ன பேசுவது என் தெரியாது, நான் உங்களை படித்திருக்கிறேன் என்று சொல்வது சம்பிரதாயமானதாக ஆகிப்போகும் என்பதால் யோசித்துகொண்டு நின்றிருந்தேன். பலரும் அவரை சந்தித்துபேசுவதில் முனைப்பாக இருக்கவே, விலகி நின்று கொண்டேன்.


சிறிது நேரத்திற்கு பின் சற்று ஓய்வாக கவிஞர் சுகுமாரனிடம் பேசிக்கொண்டிருந்தார். மெதுவாக அங்கே செல்லவும், வாங்க என்றார், சிரித்தபடி. மறுபடியும் கைகளை பற்றிக்கொண்டார். அவருடைய கதைகளில் வருகிற ஒரு சாதாரணமான மனிதர். வாஞ்சையான அவருடைய அந்த பற்றுதலிலேயே அதை புரிந்துகொள்ள முடிந்தது.

சார், உங்க கையெழுத்து வேண்டும், என்றபடி நான் எடுத்து சென்றிருந்த எஸ்.ராவின் வாசகபர்வம் புத்தகத்தை நீட்டினேன். என்ன புத்தகம்? என்று அட்டையை பார்த்துவிட்டு ஓ... எஸ்.ராவா என்றபடி புத்தகத்தை புரட்டினார். அவரிடமிருந்து புத்தகத்தை வாங்கி எழுத்தில் ஓடும் ஆறு என்ற அவரை பற்றிய கட்டுரை பக்கத்தை எடுத்து நீட்டினேன். சிரித்தபடியே வாங்கிக்கொண்டார். கையெழுத்து என்னன்னு போடுவிங்க வண்ணதாசன்னா? கல்யாண்ஜின்னா? என்றேன். அதற்கும்சிரித்தபடி வாழ்த்துக்களுடன் கல்யாணி என்று போட்டுக்கொடுத்தார்.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு எழுத்தாளர்களை வாசிப்பது என் வழக்கம், சார். இந்த முறை உங்களுடைய புத்தகங்களைத்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன், எல்லா புத்தகங்களையும் வாங்கிவிட்டேன் என்றேன். மேலும் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக ஒருவரை படிக்கும்போது அவர்களை சந்திக்க வேண்டும் என்று நினைப்பேன். இந்த முறை அது அனிச்சையாக நடந்திருக்கிறது, அதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, என்றேன். அப்படியானால் அடுத்து நீங்க படிக்கனும்ன்னா நான் சீக்கிரமா ஏதாவது எழுதியாகனுமே, எழுதறேன் என்றார் சிரித்தபடியே. இதற்கிடையில் முத்தையா, கிளம்பளாங்களா? என்றபடி வந்தார். அவரிடம் சிரித்துக்கொண்டே “இருப்பா, எங்கிட்ட எப்பவாவதுதான் இந்தமாதிரி கையெழுத்தெல்லாம் வாங்கறாங்க, அத கெடுக்க வந்தியே...” என்றபடி சரி மறுபடியும் சந்திப்போம் என்று கையைப்பற்றி குலுக்கியபடி கிளம்ப எத்தனித்தார். சார் உங்ககிட்டதான் பேசிக்கிட்டு இருக்கேன்னு என்னால சட்டுன்னு நம்ப முடியலை,........... நீங்க வரலைன்னு நினைச்சிட்டேன், சார்..........., வெளியில அரசமரம் ஒண்ணு இருக்கு, பார்த்திங்களா.......? என்றேன். இன்னொரு கையால் என் கையை பொத்திய மாதிரி பிடித்துக்கொண்டார். அவர் கைகளின் வழியாக எழுத்தில் ஓடும் ஆறு எனக்குள்ளாகவும் ஓடியது.  காற்று மெல்ல வீசியது, சறுகுகள் மெல்ல புரண்டு புரண்டு படுக்க அவர் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்தேன். கனவு மாதிரி..........
 
 

39 கருத்துரைகள்:

கோவை அரன் said...

நல்ல பகிர்வு நண்பா

நிலாரசிகன் said...

நல்லதொரு பகிர்வு.. சில மாதங்களுக்கு முன்புதான் அவரது அறிமுகம் கிடைத்தது. வீட்டிற்கு சென்றிருந்தேன். நந்தியாவட்டை பூக்கள் உதிர்த்து வாசலை அழகாக்கியிருந்தது. அவரது எழுத்துக்களை போலவே எளிமையான மனிதர்.அற்புதமான இதயம் கொண்டவர்.

☼ வெயிலான் said...

இதெல்லாம் எப்ப நடந்தது? எனக்குத் தெரியாதே.... :(

நேசமித்ரன் said...

நெகிழ்வை மொழி வழி உடல் கடத்தி விட்டீர்கள் நண்ப!

வண்ணதாசன் என்னும் மாயதச்சரின்
கல்வெட்டுக் கையெழுத்துடன்

சொல்லித்தீராத பிரியங்கள் உங்கள் தேடலில் வாய்க்கட்டும் கல்யாணியின் வரிகளைப்போல ...

கிருஷ்ண பிரபு said...

Very nice writeup murali... enjoy & keep going on...

செ.சரவணக்குமார் said...

கல்யாண்ஜி என்ற வண்ணதாசனுடனான உங்கள் சந்திப்பை ரசித்து அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் முரளி. கல்யாண்ஜியுடன் நீங்கள் இருக்கும் அந்த புகைப்படம் வெகு அழகு. வாழ்த்துக்கள் முரளி.

சென்ஷி said...

நல்லாருக்கு தலைவரே..

padma said...

வாழ்த்துக்கள் .சில சமயம் தான் இப்படி பட்ட சந்திப்புகள் நிகழும் .உங்கள் உணர்வுகளை வார்த்தையில் வழிய விட்டு எங்களையும் ரசிக்க வைத்து விட்டீர்கள்
புகைப்படம் ,அதுவும் கருப்பு வெள்ளை மிக அருமை

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்வு முரளி. :-)

கனிமொழி said...

ம்ம்ம்... கொடுத்து வெச்சவங்க முரளி நீங்க....
:-)

Enjoyyyyyyyyyyyyy........

கலகலப்ரியா said...

அருமையான பகிர்வு மற்றும் எழுத்து முரளி... நான் இது வரைக்கும் யார் கிட்டயும் ஆட்டோக்ராஃப் வாங்கினதில்ல... முரளி புத்தகம் எழுதினா பார்க்கலாம்.. :)

செல்வேந்திரன் said...

நல்ல பகிர்வு முரளி!

ஆண்டுக்கு ஓர் எழுத்தாளர் - நல்ல கான்செப்ட்; ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய ஆளுமைகளால் நிரம்பி இருக்கிறது தமிழிலக்கிய உலகம் :))

மோகன் குமார் said...

பதிவு பின்னூட்டங்கள் ரெண்டுமே அருமை

க.பாலாசி said...

மிக நல்ல சந்திப்பு அனுபவம் நண்பரே...

கொஞ்சம் அந்த இடத்தில் உலவவிட்டது மாதிரியான உணர்வு வாசிக்கையில்.....

விக்னேஷ்வரி said...

சந்திப்பை விட சுவாரசியமான எழுத்து.

குசும்பன் said...

அருமை முரளி!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லாயிருந்துச்சுங்க உங்க ரைட்-அப்.

shortfilmindia.com said...

ரொம்பவும் எக்ஸ்சைட் ஆயிட்டீங்களோ.. தலைவரே.. நல்ல விவரிப்பு.

கேபிள் சங்கர்

லேகா said...

முரளி,

பகிர்தலுக்கு நன்றி.

வண்ணதாசன்...எழுத்தின் மீது தீரா காதல் உண்டு எனக்கு!!சந்திக்க விரும்பும் எழுத்தாளர் அவர்..பொறாம பட வச்சிடிங்க..:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

ஹா ஹா அரங்கசாமி சார், நன்றி நன்றி வாய்ப்பேற்படுத்தி கொடுத்த உங்களுக்கு என் பெரிய நன்றிகள், அப்படியே எஸ்.ராவை கூப்பிடுங்க புண்ணியமா போகும். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

மிக்க மகிழ்ச்சி நிலாரசிகன், நந்தியாவட்டை.....ம்ம்ம்ம்
மீண்டும் சந்திப்போம், சந்திக்க சலிக்காத மனிதர்

முரளிகுமார் பத்மநாபன் said...

தல நீங்க ஜெமோகிட்ட பேசிட்டிருந்தப்போ........... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நெகிழ்வை மொழி வழி உடல் கடத்தி விட்டீர்கள் நண்ப!///
அட இது எளிமையா இருக்கு தல, நன்றி.

முரளிகுமார் பத்மநாபன் said...

ஆமா கிருஷ்ணா, ரொம்ப சந்தோசமா இருக்கேன்

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி செ.சரவணகுமார், மிக்க மகிழ்ச்சி

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி சென்ஷி, :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

//வாழ்த்துக்கள் .சில சமயம் தான் இப்படி பட்ட சந்திப்புகள் நிகழும் .உங்கள் உணர்வுகளை வார்த்தையில் வழிய விட்டு எங்களையும் ரசிக்க வைத்து விட்டீர்கள்
புகைப்படம் ,அதுவும் கருப்பு வெள்ளை மிக அருமை//

உங்களின் காம்ப்ளீமெண்டுக்கு மிக்க நன்றி. :-)))

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி மகாப்பா, :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

தேங்க்ஸ் கனிமொழி

முரளிகுமார் பத்மநாபன் said...

அருமையான பகிர்வு மற்றும் எழுத்து முரளி... நான் இது வரைக்கும் யார் கிட்டயும் ஆட்டோக்ராஃப் வாங்கினதில்ல... முரளி புத்தகம் எழுதினா பார்க்கலாம்.. :)//

ஹா ஹா ..புரிஞ்சி போச்சு....புரிஞ்சி போச்சு.....

முரளிகுமார் பத்மநாபன் said...

நல்ல பகிர்வு முரளி!

ஆண்டுக்கு ஓர் எழுத்தாளர் - நல்ல கான்செப்ட்; ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய ஆளுமைகளால் நிரம்பி இருக்கிறது தமிழிலக்கிய உலகம் :))///

முடிஞ்சவரைக்கும் படிச்சிட்டு செத்துபோவோமே, என்ன நண்பா?
:-))

முரளிகுமார் பத்மநாபன் said...

மோகன் ஜீ மிக்க நன்றி, ரெண்டுகடைக்கு வந்திட்டிங்க...:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

மிக்க நன்றி பாலாசி, கொஞ்சம் ஒட்டிகிச்சு அந்த ஆத்து மண் அவ்ளோதான்

முரளிகுமார் பத்மநாபன் said...

தேங்க்ஸ் விக்கி, எழுத்தில் ஓடும் ஆறு, கொஞ்சம் அந்த மண் என் எழுத்திலும் இருந்துவிட்டிருக்கலாம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

குசும்பன்....?

தல, நீங்க...?

சாரி பயலே நீங்க..?
எனக்கு...?
பின்னூட்ட்....?

அவ்வ்வ்வ்
தேங்க்ஸ் தல..

முரளிகுமார் பத்மநாபன் said...

நல்லாயிருந்துச்சுங்க உங்க ரைட்-அப்///

மிக்க நன்றி சுந்தர் அண்ணே!

முரளிகுமார் பத்மநாபன் said...

கேபிள் ஜீ எக்சைட்டா..?
இன்னும் நம்பவே முடியாம் இருக்கேன் நீங்க வேற.... :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

வண்ணதாசன்...எழுத்தின் மீது தீரா காதல் உண்டு எனக்கு!!சந்திக்க விரும்பும் எழுத்தாளர் அவர்..பொறாம பட வச்சிடிங்க..:-)//

நன்றி லேகா!,
எனக்கு தெரியும், எப்போதும் உங்களை கிருஷ்ணாவை பார்த்து நான் பொறாமை பட்டுக்கொண்டிருப்பேன், எனக்கு ஒரு வாய்ப்பாவது கிடைத்ததே, அதிலும் மகிழ்ச்சியே!... :-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

மற்றோரைவிட வண்ணதாசனும், நாஞ்சிலும் எனக்கு மிகப்பிரியமானவர்கள்.

//மேலும் என்ன பேசுவது என் தெரியாது, நான் உங்களை படித்திருக்கிறேன் என்று சொல்வது சம்பிரதாயமானதாக ஆகிப்போகும் என்பதால் யோசித்துகொண்டு நின்றிருந்தேன். பலரும் அவரை சந்தித்துபேசுவதில் முனைப்பாக இருக்கவே, விலகி நின்று கொண்டேன். //
நானும் அதைத்தான் செய்திருப்பேன்.

யு லக்கி கய்.!!

(அப்புறம் அவர் கையெழுத்து கல்யாண்ஜிதான், கல்யாணி இல்லை என்றே நினைக்கிறேன்)

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.