சிதம்பர நினைவுகள்


சிதம்பர நினைவுகள்
கவிஞர். பாலசந்திரன் சுள்ளிக்காடு
விலை. ரூ.60/-

சிதம்பர நினைவுகள் - பாலசந்திரன் சுள்ளிக்காடு அவர்களால் எழுதபட்ட “சிதம்பர ஸ்மரண” என்ற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. தமிழில் கே.வி.ஷைலஜா அவர்கள் மொழியாக்கம் செய்துள்ளார். வம்சி புக்ஸ்- பவா செல்லத்துரை அவர்களின் மனைவி. இதுவே நான் படிக்கும் இவரது முதல் தொகுப்பு. வெறுமனவே இதைத்தொகுப்பு என்று மட்டும் சொல்வதிலும் காரணம் உண்டு, உண்மையில் இதை கட்டுரைத்தொகுப்பு என்பதா? கவிதைத்தொகுப்பு என்பதா? சிறுகதைத்தொகுப்பு என்பதா? படித்திருப்பவர்களுக்கு நிச்சயம் நியாமாக வரக்கூடிய சந்தேகம்தான் எனக்கும். ஏனெனில் இந்த தொகுப்பை அப்படி மூன்றிலும் அடக்கமுடியாது அல்லது மூன்றுமே இதில் அடக்கம் என்று சொல்லலாம். நண்பர் பதிவர் சிவக்குமாருக்கும் எனக்குமான முதல் சந்திப்பில், அவர் என்னிடம் கொடுத்த புத்தகம். 21 தலைப்புகளில், ஒவ்வொரு தலைப்பிலும் ஐந்து ஆறு பக்கங்கள் கொண்ட வெறும் 152 பக்க சிறுபுத்தகம். ஆனால் படித்துமுடிக்கும்போது அது ஏற்ப்படுத்திய அதிர்வலைகள் அடங்க வெகுநேரம் பிடிக்கும்.“வாழ்வின் சில நிகழ்வுகள்
மங்கி மறைந்து போகாமல் மனசில்
மீண்டும் மீண்டும் அலை மோதிக் கொண்இருக்கின்றன.
அந்த நிகழ்வுகளை வார்த்தைகளில் கோர்த்துப் பார்க்க தோன்றியது.
அப்படி உருவானதுதான் இந்த வாழ்க்கைக் குறிப்புகள்.
ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று.
ஒருபோதும் எதிர்பார்க்காத எதோ ஒன்றை,
அது உங்களுக்காக பொத்தி வைத்து காத்திருக்கும்.
எப்போதும்.”
- பாலசந்திரன் சுள்ளிக்காடு –
ஆசிரியர்இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு பெளர்ணமியின் முன்னிரவு என்று ஞாபகம். ஆரண்யம் சிறுபத்திரிக்கையில் யாரோ ஒருவரின் கட்டுரை என்ற அலட்சியத்தோடுதான் பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதியிருந்த சிவாஜிகணேசனுடனான அனுபவத்தைப்ப் படித்தேன். ஒரு மகா நடிகனோடான அந்த கவிஞனின் சந்திப்பும், அவர்களிருவரும் ஸ்காட்ச் விஸ்கியைப் பகிர்ந்து கொண்டதைக்கூட மிகக் கெளரவமாக கருதவைக்கும் எழுத்தும் என்னை உறைய வைத்தது. ஒரு சாதரண நிகழ்வைக்கூட இலக்கியத்தில் புறந்தள்ளிபோக முடியாதவாறு பதிவு செய்யமுடியும் என்ற அந்த எழுத்தின் வலிமைதான், கேரளத்து தெருக்களில் தன் பால்யத்தின் குரல் விற்றுப் பிழைத்த அந்த கவிஞனை தேட வைத்தது.
- கே.வி.ஷைலஜா –
மொழிபெயர்ப்பாளர் தமிழில்சிதம்பரம் என்றால் ரகசியம் என்றுதான் எண்ணத் தோன்றும். இது ஏறுக்குமாறானது, எல்லாமே அம்பலமாகிறது. தமிழ், மலையாளம் – திராவிடம் என்று முப்பரிமாணத்தையும் இவரது எழுத்துக்களில் கானமுடிகிறது. வறுமையும், காமமும், கர்வமும் இவரை புடம்போட்டு பொன்னாக்கி இருக்கின்றன. ஒரு சித்திரக்காரனைப்போன்று தன் மனசையும், உணர்வையும் கோடுகளாகவும், கோலங்களாகவும் தீட்டியுள்ளார்.
இதனை ஒரு மொழிபெயர்ப்பு என்று எண்ணிப்பார்க்க முடியாத வகையில் தமிழ்ப்படுத்தியுள்ளார் கே.வி,ஷைலஜா.
- காவ்யா சண்முகசுந்தரம் –
பதிப்பாசிரியர்

என்னுடைய வாசிப்பு பழக்கம் கொஞ்சம் விசித்திரமாக இருக்கும். ஒரு புத்தகத்தை படிக்கும்பொழுது மனதை பிசைகிற வரிகளில் நிறுத்திவிட்டு அந்த அனுபவத்திலேயே திளைத்துதிரிவேன். பல நேரங்களில் சில நிமிடங்கள், சில மணிநேரங்கள் என்றும் சில நேரங்களில் நாள் கணக்கிலும் நீண்டு விடுவதுமுண்டு. இது புத்தக வாசிப்பில் மட்டுமல்ல திரைப்படங்களை பார்க்கும்பொழுதும் இதுவே வாடிக்கை. ஆகவே ஒரு புத்தகத்தை படித்துமுடிக்க எனக்கு கொஞ்சம் நேரம் அதிகமாகவே பிடிக்கும். அந்த வரிசையில் நான் மிக அதிக நேரம் எடுத்துப்படித்த புத்தகம் இதுவாகத்தான் இருக்கும். இரண்டு பத்திகளுக்கு ஒருமுறை மனுஷன் அழ வைக்கிறார். சிரிக்க வைக்கிறார், யோசிக்க வைக்கிறார். பரிதாபம் கொள்ளச்செய்கிறார், கோபப்பட வைக்கிறார். இத்தனையும்.

என்றோ தன் கல்லூரி வாழ்வின் ஒரு அசட்டு திமிரில் ஒரு பெண்ணை மிரட்டி வாங்கிய முத்தத்தை பத்து வருடங்களுக்கு பின் அவளை ஒரு சங்கடமான சூழ்நிலையில் சந்திக்கும்போது திருப்பிக்கொடுப்பதும், ஒரு விலைமாதுவை சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டு “எதையெல்லாமோ எனக்காக சகித்துக்கொண்ட விஜயலெஷ்மி எனக்காக இதையும் சகித்துக்கொண்டாள்” என்பதிலிருந்தும் வாழ்வின் தினசரி நிகழ்வுகளும், மனிதனின் சூழ்நிலையுமே அவனை தட்டி தட்டி உருக்கொள்ள செய்கிறது என்பதை உணர முடியும்.

திருவோண தினத்தன்று, ஏற்கனவே மூன்றுவேளை பட்டினியோடு பிடிசோறுக்கும் கதியற்று ஒரு வீட்டில் யாசித்து திண்ணையிலிட்ட சோற்றில் கைபுரளும் நேரம் அந்த வீட்டுப்பெண் இவரை கவிஞர் பாலசந்திரனென்பதை கண்டுகொள்கிறாள். தன் வீட்டுப்பெரியவர்களிடம் இவர் பிச்சைக்காரனில்லை, இவர் மிகப்பெரிய கவிஞர், என் கல்லூரியில் கவிதை வாசித்திருக்கிறார், என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறாள். பாதி போஜனம் கழிந்த நிலையில் அந்த மனிதனின் நிலை என்னவாக இருக்கும்.

“கடவுளே! பாதிகூட சாப்பிடலயே, எழுந்து ஓடி விடலாமா? வேண்டாம்.
ஒரு இலை முழுக்க இருக்கும் சோற்றை தூக்கியெறியவா?
மதிப்பும் மரியாதையையும் விடப்பெரியது பசியும் சோறும்தான்.
நான் சலனமின்றி சாப்பிட ஆரம்பித்தேன்”

கண்ணிலிருந்து வழிந்த நீரை துடைத்துக்கொண்டு புத்தகத்தை மார்பில் கவிழ்த்துவிட்டு, விட்டத்தை வெரித்தபடியே பார்த்துக்கொண்டிருப்பேன். இதுபோல நெகிழ்ச்சியான தருணங்கள் புத்தகமெங்கும் விரவிக்கிடக்கிறது. பலதடவைகளில் அம்மா “ஏண்டா, அவ்ளோ கஸ்டமாவா இருக்கு படிக்க?” என்று கேட்ப்பார்கள். சிரித்துக்கொள்வேன். அழுதபடியே சிரிக்கும் பொழுதுகள்; கொள்ளை அழகு.

சில நொடிகளில், நாம் வாழ்வில் அற்பமாக நினைக்கும் பொழுதுகளைக்கூட கூர்ந்து கவனித்து தவிர்க்கமுடியாத வண்ணம் இல்லக்கியத்தரத்தில் பதிவுசெய்திருக்கிறார். இதில் புனைவுகளோ கற்பனைகளோ இருப்பதாய் தெரியவில்லை. தன் வாழ்வின் ஒரு பகுதியில் நடந்த நிகழ்வுகளை உள்ளது உள்ளபடி அப்பட்டமாக, பிச்சையெடுத்ததது முதல் இரத்தம் விற்றது வரை பட்டவர்த்தனமாக பதிவிட்டிருக்கிறார். ஆனால் அதை அவரது உணர்வுகளை தூக்கிப்பிடிப்பதோ இல்லை அதைப்பற்றிய தாழ்வுமனப்பான்மையோ இல்லாமல் விவரித்திருப்பதுதான், பாலசந்திரன் சுள்ளிக்காடின் எழுத்துக்கள்

NO EXCUSE, NO COMPROMISE என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. அதுபோலவே வாழ்ந்திருக்கிறார், மனுஷன். இது, ஒரு எழுத்தாளன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டுமென்கிற நியதியல்ல மாற்றாக ஒரு எழுத்தாளனால், கவிஞனால் இந்த கர்வத்தோடுதானிருக்க முடியும் என்பதுபோன்றது. தன்மீதான அசாத்திய நம்பிக்கையும் தன்எழுத்தின் மீதான கர்வமுமே, இந்த பாலசந்திரன் சுள்ளிக்காடும் அவரது சிதம்பர நினைவுகளும்.

புத்தகவாசிப்பில் ஆர்வமுடையவர்கள் அவசியம், வாழ்வில் ஒரு தடவையாவது படித்தே ஆக வேண்டிய ஒரு நல்ல புத்தகம். ஒவ்வொரு முறையும் இது போன்ற எழுத்துக்களை வாசிக்கும்போது இவர்கள் வாழும் அதே உலகில்தானே நானும் இருக்கிறேன். இவர்களோடு பேசிய காற்றுதானே என்னோடும் பேசிக்கொண்டிருக்கிறது, இவர்கள் நடந்துபோன பாதையில்தானே இன்று நானும் பயணித்துக்கொண்டிருக்கிறேன். இவர்கள் சந்தித்த அந்த அற்புத மனிதர்களும், தருணங்களும் எங்கே? அவை எனக்கும் வாய்ப்பதெப்பொழுதென காத்திருப்பேன். பூ மலர்வதை பார்க்க விடிய விடிய விழித்திருந்த சிறுவனை ஏமாற்றி அவன் கண் அசந்த நொடியில் பூத்த பூவைப்போல, எனை ஏய்த்துச்செல்கின்றன, பொழுதுகள்.

என்றாவதொரு நாள் நான் பார்க்க மலரும், பூ.

21 கருத்துரைகள்:

SIVA said...

முர்ளி, அந்த அற்புதமான கவிதையை விட்டுடீங்களே..ஒரு வேளை சோற்றுக்கும், மருத்துவச் செலவை அடைக்க முடியாமல் திண்டாடும் நிலையில் கூட எவ்வளவு பிரம்மாண்டமான நிகழ்வையும் எந்த ஒரு புகாருமின்றி பாசிட்டிவ் அப்ரோச்சில் எழுதப்படிருக்கும் கவிதைதான் சுள்ளிக்காட்டை “ஜீவிதம் மகா அற்புதமானது” என்று பேசவைப்பதாக உணர்கிறேன்.

ஸ்ரீவித்யா வோட இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட சொற்பமானவர்களில் சுள்ளிக்காடும் ஒருவர்.

நல்லவேளை எங்க "indian ocean" மாதிரி இதுவும் அவ்வளவு ஒன்னும் பிரமாதமா இல்லைன்னு சொல்லீருவீங்னோன்னு நினைச்சிட்டேன்.ஆனா என்னோட மனசில இருந்தத அப்படியே நீங்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

மணிஜீ...... said...

நானும் வாசித்தேன்.. அருமை

விக்னேஷ்வரி said...

அழுதபடியே சிரிக்கும் பொழுதுகள்; கொள்ளை அழகு. //
நான் உணர்ந்து ரசிக்கும் அழகு அது.

முரளி, நிஜமாவே ரொம்ப நல்லா எழுதுறீங்க இப்போல்லாம். வாசிக்க ரொம்ப ஆசையாய் இருக்கு. நல்ல, நெகிழ்ச்சியான புத்தக அலசல். கண்டிப்பாக வாசிக்கிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

அறிமுகத்துக்கு நன்றி முரளி.. இந்த புத்தக திருவிழாவில் வாங்கி விடலாம்.. நீங்கள் சொன்னது போல என்னை அழ வைத்த புத்தகம் என்றால் அது சோளகர் தொட்டி.. படித்து இருப்பீர்கள் என நம்புகிறேன்..

padma said...

முரளி அந்த புஸ்தகத்த படிக்கறத்துக்கு முன்ன உங்க எழுத்துக்கள் ...
இதுவே எதனை அழகாய் இருக்கு ? மெருகேறுது முரளி உங்கள் நடை .உள்ளத்தை வருடிக்கொண்டே போகிறது மொழி
அந்த புஸ்தகம் படிக்கணுமே!

கலகலப்ரியா said...

அருமை...

Anonymous said...

சென்னையில எங்க கிடைக்கிதுன்னு கேட்டு சொல்ல முடியுமா??

☼ வெயிலான் said...

என்ன மனுசன்ய்யா நீ?

ரசனைக்காரன்யா....

முரளிகுமார் பத்மநாபன் said...

Frist of all Murlikku Thanks, Siva. :-)

ஏங்க நான் எப்பங்க இண்டியன் ஓசியன் நல்லாயில்லைன்னு சொன்னேன். பதிவுகூட போட்டதா நியாபகம் இருக்கு.....

முரளிகுமார் பத்மநாபன் said...

நானும் வாசித்தேன்.. அருமை//

மணீண்ணா வாங்க செளக்கியமா?

முரளிகுமார் பத்மநாபன் said...

//முரளி, நிஜமாவே ரொம்ப நல்லா எழுதுறீங்க இப்போல்லாம். வாசிக்க ரொம்ப ஆசையாய் இருக்கு. நல்ல, நெகிழ்ச்சியான புத்தக அலசல். கண்டிப்பாக வாசிக்கிறேன்//

அவசியம் படிங்க, எனக்கு ரொம்ப சந்தோஷம் எப்போதும் எல்லோரையும் இப்படி சொல்ல வைக்கனும். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

//அறிமுகத்துக்கு நன்றி முரளி.. இந்த புத்தக திருவிழாவில் வாங்கி விடலாம்.. நீங்கள் சொன்னது போல என்னை அழ வைத்த புத்தகம் என்றால் அது சோளகர் தொட்டி.. படித்து இருப்பீர்கள் என நம்புகிறேன்..//

நன்றி கார்த்தி, ம்ம் சோளகர் தொட்டி படிச்சிட்டேன், நம்ம ஏரியா கதையாச்சே, விட முடியுமா?

முரளிகுமார் பத்மநாபன் said...

//முரளி அந்த புஸ்தகத்த படிக்கறத்துக்கு முன்ன உங்க எழுத்துக்கள் ...
இதுவே எதனை அழகாய் இருக்கு ? மெருகேறுது முரளி உங்கள் நடை .உள்ளத்தை வருடிக்கொண்டே போகிறது மொழி
அந்த புஸ்தகம் படிக்கணுமே//

மேடம், மறுபடியும் சொல்றேன் இதை காம்ப்ளிமெண்டா மட்டுமே எடுத்துக்குவேன். :-)

அவசியம் படிங்க.

முரளிகுமார் பத்மநாபன் said...

//அருமை...//

நன்றி ப்ரியா.
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

//சென்னையில எங்க கிடைக்கிதுன்னு கேட்டு சொல்ல முடியுமா??//

தெரியலைங்க அனானி, வம்சி-ல கேட்டுப்பாருங்க, வம்சி. பவா.செல்லதுரை அவர்களின் துணைவியார் ஷைலஜா அவர்களின் மொழிபெயர்ப்புதானிது. சோர்ஸ் செய்தாவது தருவார்கள். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

//என்ன மனுசன்ய்யா நீ?

ரசனைக்காரன்யா....//

என்னாச்சு தல, இப்ப என்ன நடந்துபோச்சுன்னு இப்படி அசிங்கமா அசிங்கமா திட்டறிங்க... :-)

~~Romeo~~ said...

முரளி அப்படியே எந்த பதிப்பகம். எங்கு கிடைக்கும், முகவரி எழுதவும். வாங்குவதற்கு வசதியா இருக்கும்

சென்ஷி said...

எனக்கு மிகப் பிடித்த புத்தகம்.

மூலத்தை மொழிபெயர்த்தலைப் பற்றிய ஒரு விமர்சனத்தில் - தொட்டி மீன்களை வலையால் மாற்றுகையில் கம்பி வலி அழுத்தது போன்று இல்லாமல் கையால் தண்ணீருடன் அள்ளி மீன்களை மாற்றுதல் - சொற்றொடரில் வெகுநேரம் வலையின் நுண் இழைகள் மீனாக மனதையும் அழுத்திக் கொண்டிருந்தன. அதற்கேற்றாற்போலவே மொழிபெயர்ப்பும் கவனமாக அமைந்திருந்தது சிறப்பான ஒன்று.

நாஸியாவிற்கு முத்தம் திருப்பித் தருதலும், தந்தையின் ஈமச் சடங்கிற்கு செல்லுமுன் கவிதை வாசித்தலும்...யேசு மாதாவின் புகைப்படம் சுமந்து பிச்சைக் கேட்கும் பாட்டியின் முகம் ஊடாக தாயின் நினைவைக் கொண்டுவரும் பாலச்சந்திரன், இவரது எழுத்துக்களை முழுமையாய் படிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கிவிட்டது.

சென்ஷி said...

@ ரோமியோ...

சிதம்பரநினைவுகள், வம்சி பதிப்பகம். திருவண்ணாமலை. சென்னையிலும் கிடைக்கும்.

சென்ஷி said...

அருமையான புத்தகம் பற்றிய சிறப்பான விமர்சனம்.. நன்றி முரளி பகிர்தலுக்கு...

நேசமித்ரன் said...

நல்ல புத்தகம் அது !

அறிமுகம் செய்திருக்கும் நடை நன்று

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.